Salma Amjath Khan

Romance

5.0  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி -32

நீயே என் ஜீவனடி -32

4 mins
669


மகாலட்சுமியிடம் அவளுக்கான சம்மதத்தை கேட்டு நிற்க


"என்ன பதில் மாமா"என்று அரவிந்த் அரவிந்த் அருகில் வர,


"வாடா என் சிங்கக்குட்டி" என அரவிந்தை தூக்கி அவன் வண்டியில் அமர வைத்தவன்,


" நீ சொல்லு உன் அத்தைய நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு மா." என அரவிந்திடம் கேட்க அவனோ மகாலட்சுமியும் ஏறிட்டான்.


அவளின் மனதின் தவிப்பு அந்த சிறுவனுக்கு புரிந்ததோ என்னமோ, ஒரு நிமிடம் யோசித்தவன், சிவனேசனின் புறம் திரும்பி,


" அப்போ அத்தைக்கு குழந்தை பிறந்தா எனக்கு கட்டி வப்பேங்களா...." என கேட்க, சிவனேசன் மகாலட்சுமியை ஏறிட அவள் தலைகுனிந்தாள்.


அதை ரசித்தவன் மகாலட்சுமியை பார்த்துக்கொண்டு "உன் அத்த சரின்னு சொன்னா, இன்னும் பத்தே மாசத்துல என் பொண்ண பெத்து உன் கையில கொடுத்துடறேன்."


" சரி அப்போ நீங்க என் அத்தைய கல்யாணம் கட்டிக்கோங்க." என்றவன் மகாலட்சுமியின் புறம் திரும்பி,


" அத்தை நீ சிவா மாமாவயே கல்யாணம் பண்ணிக்கோ. அப்பதான் நானும் உன் கூடிய இருக்க முடியும். உன் குழந்தையையும் நான் கட்டிக்குவேன்."என மழலையாய் இறைச்சியை,


அவனின் வேண்டுகோளில் அவள் கன்னம் சிவந்து நிற்க, அவன் அருகில் வந்த சிவனேசன்,


" இப்ப சொல்லு. அரவிந்த்க்கு நம்ம கல்யாணம் பன்றதுல எந்த பிரச்சனையும் இல்ல." என்க,


அவளோ அவனை விட்டு விலகி அரவிந்தின் அருகில் சென்றவள், அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகிலிருந்த கொலுசை எடுத்து அவனிடம் நீட்ட, அவனோ தவித்து நின்றான்.


ஆனால் அவனின் தவிப்பை போக்கும் வண்ணம், அவளுடைய தாவணியை சற்று மேலேற்றி அவளின் கணுக்காலை சிவனேசனிடம் காட்ட, அவளது குறிப்பை உணர்ந்தவன்,கொலுசை கையில் ஏந்தி அவளின் காலை மடியில் தாங்கி கொலுசினை மறுபடியும் மாட்டி விட்டான்.


"நீ கொலுசு கலட்டுனது அதுவே கடைசி முறையாக இருக்கட்டும். இனி நீ இந்த கொலுச கழட்டவே கூடாது.


இந்த கொலுசு சத்தம் என் காதுல கேட்டுட்டே இருக்கணும். நீ என் பக்கத்துல இருக்கிற இந்த நிமிஷம் உண்மைன்னு நாம் உணரனும்."என கண்களை பார்த்து காதல் பேச, அவளோ மந்திரித்து விட்ட கோழி போல் தலையை மட்டும் ஆட்டினாள்.


"இப்படியே எவ்வளவு நேரம் தான் பேசிக்கிட்டு இருக்கிறது. இன்னைக்கு நாளும் நல்லதா இருக்கு. எல்லாம் ஒன்னும் மண்ணா இருந்தவங்க தான். பின்ன எதுக்கு யோசிக்கணும். இன்னைக்கியே தட்ட மாட்டிகிட்டா வர்ற முகூர்த்தத்தில் கல்யாணம் வச்சுக்கலாம்." என பெரியவர் ஒருவர் சபையில் கூற,


யோசனையுடன் இருந்த நடராஜான் சிதம்பரத்தை பார்க்க, சிதம்பரமும் சம்மதமென தலையசைக்க, நடராஜனும் "பெரியவங்க நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். இன்றைக்கே தட்டை மாற்றிக்கலாம்." என கூறவும் சிவ பெருமான் மகிழ்ச்சி அடைந்தான்.


மாலையில் முரளிதரன் இடம் மஹாவை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது இடையில் வந்த தாய்க்கு கூரியது நினைவில் வந்தது.


"ஏலேய் பெருமாள்..."


"மா... எத்தனை தடவை சொல்றது. பெருமாள்ன்னு கூப்பிடாதன்னு. ஒன்னு சிவான்னுகன கூப்பிடு. இல்ல சிவபெருமான்னு கூப்பிடு."


"அதுக்கு ஏன்டா இப்படி கோவப்படுற. மஹாலட்சுமியை பொண்ணு பார்க்க வராங்கலாம்ல." என கூறியதும்,


" என்னம்மா சொல்றீங்க." என பதட்டமாய் கேட்க,


" நீ ஏன் இம்புட்டு பதறுதே."


" நான்... நான்..." என திணற,


அவன் கன்னம் வருடியவர், 


"எல்லாம் எனக்கு தெரியும்டா. உன் மனசுல என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியாதா. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.


இப்பதான் அப்பாகிட்ட உன்ன பத்தி பேச போனேன். அப்பாவே உன்னையும் மகாலட்சுமியையும் ஜோடியா பார்த்துட்டு ஜோடி பொருத்தம் நல்லா இருக்குன்னு என்கிட்ட சொன்னாங்க.


அது மட்டும் இல்ல இன்னைக்கு நடராஜரையும் சிதம்பரத்தையும் பார்த்து பேசி அவங்க சம்மதிச்சுட்டா, இன்னைக்கு பொன்னையும் முறையா கேட்டு வந்து விடலாம் அப்படின்னு சொல்லிட்டாங்க." என கூற, சிவபெருமானின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் செல்ல, தன் தாயை கட்டி அணைத்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான். 


முரளீதரனும் வாழ்த்து கூற அவனையும் மங்கலம் அழைத்தாள்.


"பொண்ணை அழைச்சிட்டு வந்து மாப்பிள்ளை பக்கத்துல உட்கார வச்சு அதுக்கு அப்புறம் தட்ட மாத்துங்கப்பா.அது தானே முறை." என்ற குரலில் தன்னிலை வந்தவன் மகாவின் தரிசனத்திற்காக தயாரானான்.


அவனுக்கு அருகில் இருந்த சிவனேசன் மகாலட்சுமி வருகிறாள் என்றதும் எந்த வித சலனத்தையும் முகத்தில் காட்டாது இதழில் ஒட்டிய மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.


மொத்த வெட்கத்தையும் குத்தகைக்கு எடுத்தவள் அன்ன நடையிட்டு கூடத்திற்கு வந்து இரு கையினை கூப்பி வணக்கம் வைத்தாள். மகாலட்சுமி.


அவள் அருகில் வந்த மஞ்சுளா "இந்த மகாலட்சுமி யாரு வீட்டுக்கு போக குடுத்து வச்சிருக்கோ நினைச்சேன். கடைசில இந்த லட்சுமி எங்க வீட்டுக்கு வரத நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு." என்றவள் முகத்தை வருடி திருஷ்டி கழித்தாள்.


மஞ்சுளாவின் தந்தை ராமலிங்கம் மகாலட்சுமியின் அருகில் சென்றவர்,


" என் மகன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா." என கேட்க அவள் விழி அவளின் உடன் பிறப்பை நோக்க இருவரும் புன்னகையுடன் தலையசைக்க அவளும் வெட்கம் கலந்த புன்னகையில் தலையசைத்தாள்.


அவளின் சம்மதத்தை கேட்டதும் மங்கலம் அவளின் உச்சிமுகர்ந்து தனது அருகில் அமர வைத்தாள்.


"பொன்னு தான் சரின்னு சொல்லிருச்சுல்லப்பா. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள சட்டுபுட்டுன்னு தட்ட மாத்துங்க."என சபையில் இருந்தவர்கள் கூற


"அதுக்கு பொண்னையும் மாப்பிள்ளையும் சேர்ந்து உட்கார வைக்க."


மகாலட்சுமியின் கன்னங்கள் சிவக்க மங்கலமோ,


"சிவபெருமான் வாயா. இங்கே வந்து உட்காரு." என தனது அருகில் மகாலட்சுமிக்கு பக்கத்தில் இடமளிக்க, அவனும் புன்னகையுடன் வந்து அமர்ந்தான்.


ராமலிங்கமோ "அதான் மாப்பிள்ளை பக்கத்துல இடம் காலி ஆயிடுச்சே. நீ போய் உட்காரு மா." என மகாலட்சுமியிடம் கூற, அவளோ அவரின் வார்த்தைக்கு மதிப்பளித்து எழுந்து சிவனேசன் என் அருகில் உட்கார்ந்தாள்.


அவளது அழகில் தடுமாறியவனை அவனை சோதிக்க அவளின் வாசமும் தனது அருகே வர நாற்காலியின் கை வளைவை கையை அழுத்தி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான், சிவநேசன்.


மகாலட்சுமியின் இதயம் தாறுமாறாகத் துடிக்க,


சிவபெருமான் குழப்பமாக அமர்ந்திருக்க சபையில் இருந்த ஒருவன்,


" அதான் மாப்பிள்ளையும் பொண்ணையும் சேர்த்து உட்கார்ந்து ஆச்சுல்ல."என சிவபெருமானோ அனலாக கொதித்தது எழுந்தான். 


மஞ்சுளாவும் முரளிதரன் குழப்ப நிலையில் சுற்றி இருந்தவர்களை காண அனைவரும் சாதாரணமாக இருக்க, சூழ்நிலையை ஓரளவு யூகித்தவர்கள் சிவபெருமானே பார்க்க,


அவனோ அவர்களுடன் சண்டையிட தயாரானான்.அவனை கட்டுப்படுத்த மங்களம் அவனின் கைகளை அழுத்தி பிடிக்க முரளிதரனும் எழுந்து வந்து சிவபெருமானின் பின் நின்று அவளின் தோள்களை மெதுவாக தட்டிக் கொடுக்க, அவனோ இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தான்.


"என்னமா நடக்குது இங்க. எனக்கு கட்டி வைக்கிறேன்னு சொல்லிட்டு அவனுக்கு நிச்சயம் போட்டுட்டு இருக்கீங்க." என சீற,


" கொஞ்சம் பொறுமையா இருடா நா அப்பா கிட்ட பேசுறேன்."


"இனி நீ என்னத்த பேச நானே பேசி சரி பண்றேன்." என அவன் இடத்திலிருந்து எழ, அவனின் தோளை அழுத்தி உட்கார வைத்த முரளிதரன், குனிந்து அவன் காதருகே,


" எதுனாலும் கொஞ்சம் பொறுமையா இருடா அப்புறம் பாத்துக்கலாம். நீ எதையும் பேசி சண்டை போட்டு கெடுத்து விடாதே."


"அதுக்குன்னு என் மஹாவை இன்னொருத்தன் கூட உட்கார வச்சு அழகு பார்க்க சொல்றியா."


"இன்னொருத்தன் இல்லடா. அவன் உன் அண்ணன்."


" எவனா இருந்தாலும் மகா பக்கத்தில உட்கார உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு." என கூற அவனே அடக்கியவாறு யாரும் கவனிக்க வண்ணம் அவனை வெளியே அழைத்து சென்றான் முரளிதரன்.


மகாலட்சுமி சிவனேசன் இருவருக்கும் பெரியவர்கள் முன்னிலையில் தட்டை மாற்றி கல்யாணத்திற்கு தேதியையும் குறித்துக் கொண்டனர்.



Rate this content
Log in

Similar tamil story from Romance