வல்லன் (Vallan)

Romance

3.9  

வல்லன் (Vallan)

Romance

கைக்கிளை

கைக்கிளை

3 mins
3.4K


      ஏதோ ஒரு தனித்‌ தீவில் இருப்பது போன்ற‌ உணர்வு என்னை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. என்னதான் எல்லாரும் நம்மைச் சுற்றி இருந்தாலும் மனதுக்குள் ஏனோ தனிமை தாண்டவம் ஆடுகிறது நமக்கு நெருக்கமானவர்கள்/பிடித்தவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாமல் ஒதுக்கும் தருணங்களில். அவர்களுக்கு அது என்னவோ தூசி‌ தட்டுவது போல இருக்கிறது போல, ஆனால் நமக்குத் தான்‌ தெரியும் அடியோடு நகத்தைப் பிடுங்குவது போல இதயத்தை பிடுங்கும் அந்த வலியின் அவஸ்தை. அது என்னவோ நம்மால் அவ்வளவு எளிதில் அவர்களை கடந்து செல்ல முடிவது இல்லை, மனதில் கொடுத்த இடத்தையும் மீட்க முடியவில்லை. ஒருதலையாக அன்பு செலுத்துவது எளிது தான், அது நிராகரிக்கப்படும் போது வலி அதிகம் என்பதை இப்போது தான் உணர்கிறேன்.

           ஆசைகளுடன் யுத்தம் செய்து, மனதை துவம்சம் செய்து கிடைக்காத ஒன்றின் மீது பாலையில் மழை போல அன்பு செலுத்துவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அதைத்தான் இன்று நிறையபேர் செய்கிறோம்.

            அவள் என்னிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்ள தொடங்கினாள், இரண்டு மூன்று மெசேஜ்களுக்கு ஒரு ரிப்ளை வரும் ஹம் என்று. அப்போது எல்லாம் என்ன என்று நினைக்கத் தோன்றவில்லை. ஆனால் அவளின் தவிர்ப்பு என்னை மிகவும் பாதிப்பதை இப்போதே உணர்கிறேன். எனக்கே தெரியாமல் அவள் என்னை கொள்ளை கொண்டுவிட்டாள் என புத்திக்கு இப்ப தான் உறைக்கிறது. எனக்கு தெரியாத என் காதலை அவள் அறிந்திருக்கிறாள், ஆனால் விலகிச் செல்கிறாள். அவள் மனதில் என்ன எண்ணமோ தெரியவில்லை. அவளின் இடைவெளி என்னை பைத்தியம் ஆக்குகிறது. மனதில் பலவாறு கற்பனைக் குதிரைகள் இறக்கைகட்டி பறந்து கொண்டிருக்கின்றன. எனக்கு நல்ல தோழியாக இருக்கிறவள், ஏன் நல்ல துணையாக இருக்க முடியாது என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது எனக்குள். அவளோ முற்றிலும் ஒதுக்காமல், ஒதுக்கவும் முடியாமல் ஒட்டவும் முடியாமல் தத்தளிக்கிறாள். ஒரு நாள் நன்றாக பேசுகிறாள், இன்னொரு நாள் முறைக்கிறாள், அவளைப் புரிந்துக் கொளவதே பெரிய கம்ப சூத்திரமாக இருக்கிறது.

            எனக்கும் கேட்டுவிட உள்ளம் துடிக்கும், ஆனால் உதடு தான் ஒத்துழைக்காது. அவளைக் கண்டால், எல்லாம் அப்படியே உள்ளேயே அமிழ்ந்து அமைதியாகிவிடும். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது, முழுங்கவும் முடியாத பெரிய இம்சையாக இருக்கிறது. சில நேரங்களில் என் மனதுக்குள்ளேயே பெரிய பூகம்பங்கள் வெடிக்கும் அவளால். ஆனால் அவளோ எதையும் வெளிக்கு காட்டிக்கொள்ளாது அமுக்குனி போல இருப்பாள். சில நேரங்களில் அளவு கடந்த கோபமும் வரும் அவள் மேல், அந்த கோபம் சிறிது நேரத்தில் அன்பாக மாறிடும். எப்போ என்ன நடக்கும்னு ரெண்டு பேருக்குமே தெரியாது. ஆனாலும் இதுவும் நால்லா தான் இருக்கும். 

           

        எல்லாமும் தெரிந்தும் தெரியாதது போல அவள் எவ்வளவு பிரம்மாதமாக நடிக்கிறாள், இதற்கு அவளுக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்கணும். நான் மட்டும்தான் அவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறேன்.

        காதலில் எவ்வளவு கஷ்டங்கள், இருந்தாலும் அவை சில மறக்க முடியாத வாழ்வின் முக்கிய நொடிகளைத் தருகின்றது. அடியே சிவரஞ்சனி நீ மட்டும் என் கையில் கிடைச்ச அவ்வளவு தான், நீ செய்யும் கொடுமைக்கு எல்லாம் வட்டியும் முதலுமாய் அன்பைக் கொடுத்துவிடுவேன்.  இந்த பாழும் மனசு என்னவே உன்னையே சுற்றிச் சுற்றி வந்து என்னை கொன்று கொண்டே இருக்கறது, சிறிது கூட என்னைப் பற்றி நினைப்பது கிடையாது.

 

            காதலை எப்படியாவது உன்னிடம் சொல்லிவிடலாம் என்று தயார் செய்து கொண்டு வந்தாலும் உன் கண்களைக் கண்ட மறுநொடி என் வாய் மூடி விடுகிறது , எனக்கே சிரிப்பாக தான் இருக்கிறது. வாய் மூடாமல் வாயாடும் நான் உன்னைப் பார்த்தால் மட்டும் மூடிவிடுகிறேன். 

            அவ்வளவு கோபத்தில் இருப்பேன், இனிமேல் உன்னுடன் பேசக்கூடாது, நீயாக எப்போது பேசிகிறாயோ அப்போ பார்த்துக்கலாம் என்று வைராக்கியமா இருக்கும்னு மனசுககுள்ள நினைப்பேன். ஆனால் உன்னைப் பற்றி சிறு நினைவு வந்தாலும் உடனே எல்லாம் உருகி உற்றிடும், மறுபடி லூசு மாதிரி உன் பின்னாலயே வருவேன், நீ திருப்பிக்கிட்டு போவ. என்னாதான் பாழா போன காதலோ தெரியல இம்புட்டு பாடா இருக்கு உன்னோடு. ஒன் சைடா காதலிச்சா இவ்வளவு வலி வேதனை எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா அப்பவே விட்டுட்டு போயிருப்பேன். எல்லாம் என் தலையெழுத்து, யார்கிட்ட போய் சொல்லறது?

            எனக்கு வாழ்க்கையில ஒரே ஒரு ஆசை தான், உன்னை காதலிக்க வைத்து, கரம் பிடித்து எப்போதும் உன்னுடனே இருக்க மட்டும் தான். ஆனால் நீயோ பெரிய முரண்பாட்டு மூட்டையாக இருக்கிறாய். முரணை முறித்து எப்படி உன்னைச் சேருவது என நீயே வழி சொல்லிவிடு.

            அப்புறம் பார்த்துக்கோ இந்த அருணோட சாபம் உன்னை சும்மா விடாது. சாதாரண சாபம் எல்லா தர மாட்டேன், நீ என்கிட்டயே வந்து மாட்டனும்னு தான் கொடுப்பேன் பாத்துக்கோ. ஒழுங்கா நீயே வந்துடு அதுக்கு முன்னாடியே சொல்லிட்டேன்.Rate this content
Log in

Similar tamil story from Romance