Radha Radha

Romance

5  

Radha Radha

Romance

உள்ளத்தின் கதை

உள்ளத்தின் கதை

4 mins
523


படுக்கையை விட்டு இன்னும் எழவில்லை; கல்லூரி பேருந்து வர நேரம் ஆகிறது... என்ன தான் செய்து கொண்டு இருக்கிறாள் என்றபடி அம்மாவின் குரல் கேட்காதவளாய் ஆத்யா எதையோ பிரமித்து பார்த்த படி இருக்க....


உன்னை எவ்வளவு நேரம் அழைக்கிறேன் என்றபடி ஆத்யாவின் அருகில் வந்த தாய்க்கு அதிர்ச்சி...


ஆத்யாவை பார்த்து அல்லா ஆத்யா எதைப் பார்த்து கொண்டு இருந்தால் என்பதை பார்த்து...


தன் மகளின் பாலின விருப்பம் அறிந்து திகைத்து நின்ற அம்மாவின் இருதயம் துடிக்கின்றதா அல்லது நின்று விட்டதா என்று தெரியாமல் உறைந்து நிற்கின்றாள்.


நடப்பதை ஏதும் அரியாமல் தன் நெருங்கிய தோழியின் புகைப்படத்திற்கு ஆயிரம் இதழ் முத்தம் கொடுத்தபடி என்னை மன்னித்து விடு என்னால் எப்போதும் என் வீட்டில் சொல்ல இயலாது .... நம் காதல் உண்மை இந்த உலகமும் இந்த ஊரும் எப்போதுமே நம்மை ஏற்காது....

என்றபடி போர்வைக்குள் கை பேசியோடு சென்ற தனது மகளைப் பார்த்த விழிக்கு அழுவதை தவிர இப்போது வேறு ஆறுதல் இல்லை.....


கண்களின் கண்ணீர் ஏன் வழிகிறது என்ற அர்த்தம் புரியாமல்... கண்களை துடைத்துவிட்டு தன் மகளின் அரை கதவை தட்டி விட்டு நேரம் ஆய்விட்டது என்று சொல்லி விட்டு தன் அறைக்கு திரும்புகிறாள்..


அம்மாவின் அறை என்று அனைவரும் என்னும் அவளின் சமையல் அறை 


அம்மாவின் குரல் கேட்டு அதிர்ந்து எழுந்த ஆத்யா... நேரம் ஆனது விரைந்து கல்லூரி செல்ல வேண்டும்.... இன்று தான் கல்லூரின் கடைசி நாள் வேறு என்ற படி விரைந்து செயல்பட்டாள்.


கல்லூரிக்குச் சென்ற மகளை எண்ணி அவள் ஒரு பெண்ணை காதலிக்கிறாள் என்பதையும் எண்ணி மிகுந்த மனக்குழப்பத்துடன் இருந்த தாய்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..


கல்லூரி முடிந்து வந்த தன் மகளிடம் இதை பற்றி கேட்க நினைத்தாள்... 


ஆத்யாவை அழைத்து உன் கல்லூரி வாழ்கை முடிந்தது இனி தான் உண்மையான வாழ்கை உள்ளது என்றாள்.


அம்மா தன் திருமண வாழ்கையை தான் சொல்கிறாள் என்று தெரிந்து "தெரியும் அம்மா என் கல்யாணம் சம்மந்தமாக தானே சொல்ரீங்க 

அப்பா இறந்தில் இருந்து 3 வருடமா இதை தான் சொல்லிகிட்டே இருக்கீங்க; நீங்க எது செய்தாலும் எனக்கு நல்லது தான் நீங்க யாரை காட்டி கல்யாணம் பன்னி வச்சாலும் எனக்கு சரி தான்" என்றாள்.


அம்மா நான் யார சொன்னாலும் உனக்கு ஓக்கே தானா என்றாள்


எனக்கு ஓக்கே தான் மா என்று தன் அரை நோக்கி நகர்ந்தாள்...


அன்று இரவு 2 மணிக்கு மேல் ஆகிறது உறக்கம் வராமல் விழித்திருந்தால் அம்மா 


தன் மகளின் அறைக்கு சென்றாள் மகளின் அழகிய முகம் கண்டு அவளை பெற்றெடுத்த நேரத்தை நினைத்து மகிழ்ந்தால்... தலைக் கோதும் முடி கண்மீது இருக்க அதை விலக்கிய கைகளுக்கு தெரிந்தது வழிந்தோடிய கண்ணீரின் தடம்.... தலையணை கூட ஈரமாய் இருப்பதை கண்டு எத்தனை இரவுகள் இவ்வாறு கழிந்ததோ எண்ணி மனம் வேதனை அடைந்தது...


ஒரு மாதம் கடந்து...


ஆத்யாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தால் அம்மா...


ஒரு நாள் ஆத்யிவின் பெரியப்பா வீட்டிருக்கு வந்திருந்தார்...பெரியப்பா ஊரில் பெரியவர்...அனைத்து நல்லது கெட்டதுலயும் முன்னிற்பவர்....


"வாங்க ந! எப்படி இருக்கீங்க " அண்ணி எப்டி இருக்காங்க; வீட்ல எல்லாம் நலமா என்றாள் அம்மா


ம்ம்..எல்லாம் நலம்...ஆத்யா எங்க வீட்ல இல்லையா.. என்றார் பெரியப்பா


கல்லூரி முடிந்து வரும் நேரம் தான்..


சரி அவ வரதுகுள்ள உன்ட ஒரு முக்கியமான விசியம் சொல்லனும்...


சொல்லுங்க நா


எல்லாம் நம்ப ஆத்யா கல்யாணம் சம்மந்தமா தான்


அம்மாவிற்கு குபீர் என்றது... முகம் முழுவதும் வேர்க்க துடங்கியது...


நல்ல பையன் நல்ல உத்யோகம் நல்ல சம்பளம்... பொண்ண மட்டும் குடுங்க நல்லா பாத்துக்கிறோம் னு சொல்றங்க...இவ்வளவு நாள் பொண்ணு படிக்குதுனு காரணம் சொன்ன ...அதான் படிப்பு முடிஞ்சி போச்சில.... நல்லா யோசிச்சி நல்ல முடிவா எடு.... நான் கெளம்புற என்று பொரப்பட்டார் பெரியப்பா.


ஆத்யா வீட்டிற்கு வந்தார் அம்மா இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ...


உனக்கு கல்யாணம் அதான் ஸ்பெஷல் ..


ஆத்யாவிற்கு குபீர் என்று தூக்கி போட்டது....


பையன் உன் பெரியப்பாக்கு தெரிஞ்சவங்க தான் பேசி முடிக்க போரம் ... நீ என்ன சொல்ற ஆத்யா?


இடிந்து போன இதயத்துடன் சரி மா என்ற படி அரையை நோக்கி நகர்ந்தால் ஆத்யா


அன்றைய இரவு அவ்வளவு எளிதில் இருவருக்கும் கடந்து செல்லவில்லை...


 அழுதே சிவந்த கண்களுடன் கலங்கிய முகத்துடன் ஆத்யா படுக்கையை விட்டு எழும் போது அவள் அருகில் அவளின் காதலி இருந்தால்.... 


எப்போதும் வரும் கனவு தான் என்று திரும்பவும் கண்களை மூடினால் .... நீ எப்போது எழுவாய் ஆத்யா உன்னை காண தான் நான் காத்திருக்கிறேன் என்றாள் காதலி..


ஆத்யாவின் கண்கள் சட்டென்று திறந்தது.... பிரியா .... எப்ப வந்த மா... இங்க என்ன பன்ற.. அம்மா இருப்பாங்களே பாத்தியா.... என்றாள் ஆத்யா..


அம்மா தான் என்ன வர சொன்னாங்க உன் கல்யாணம் சம்மந்தமா பேச...


அம்மா அரைக்குள் நுழைய உங்க ரெண்டு பேரு கிட்டயும் பேசனும் ஹாலுக்கு ரெண்டு பேரும் வாங்க என்றாள்.


ஆதியாவும் பிரியாவும் ஹாலுக்கு செல்ல அம்மாவும் பின் செல்ல மூவரும் ஹாலில் அமர்ந்திருந்தார்கள்


ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி மூன்று பேரும் அமைதியாக சில நேரம் இருந்தார்கள்


நெடு நேரம் கழித்து முதலில் ஆதியா பேச தொடங்கினாள்


என்ன ஆச்சு மா என்ன விஷயமா ப்ரியாவை வர சொல்லி இருக்கீங்க


எல்லாம் உன் கல்யாண விஷயமா தான்


என் கல்யாண விஷயமா பிரியாட்ட பேச என்ன இருக்கு கல்யாண மா


கல்யாணம் பண்ணிக்க போற ரெண்டு பேரு கிட்ட கல்யாணத்தப்பத்தி பேசாம வேற யாரு கிட்ட பேசுவாங்க


என்ன சொல்ற அம்மா ஒன்னும் புரியல என்றால் ஆத்யா


நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா என்றால் அம்மா


உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு ப்ரியா நீ யாரையாவது காதலிக்கிறாயா உனக்கு யாரையாவது புடிச்சிருக்கா நீ எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லலாம் ஆத்தியாவ மாதிரி தான் நீயும் எனக்கு..


இல்ல மா அப்படிலாம் இல்ல என்றால் பிரியா தயக்கத்துடன்


எதா இருந்தாலும் சொல்லு பிரியா


இல்லம்மா அப்படிலாம் ஒன்னும் இல்ல


சரி ஆத்யா நீ யாரையாவது லவ் பண்றியா


ஏமா திடீர்னு இப்படி கேக்குறீங்க


எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு


அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா


சரி ஓகே, உங்க பெரியப்பா கிட்ட நான் ஓகே சொல்லிறேன் ரெண்டு பேரும் இங்கே இருங்க நான் பெரியபாட்டா போன்ல பேசிட்டு வரேன்..


ஆதியாவுக்கும் பிரியாவுக்கும் நடக்கிறது ஒன்னும் புரியல அம்மா ஏன் இப்படி திடீர்னு கேட்டாங்கன்னு தெரியல...


அப்பொழுது கொரியர்காரர் ஆத்யாவிற்கு ஒரு பார்சல் வந்து இருக்குனு சொல்ல ஆத்யா அத வாங்கி பிரிச்சு பார்த்த ...


ஆதியாவுக்கும் பிரியாவுக்கும் அளவுக்கு அதிகமான சந்தோஷம் ஏன்னா அந்த பார்சல் ல வந்தது LGBTQ Pride Flag ஆதியாவுக்கும் பிரியாவுக்கும் கண்கள் ஆனந்த கண்ணீர்.... அந்த பார்சல் ல Happy pride Month Adhya and Priya... have a great life together ...i always love u both i always trust you.... i love u both of you...

Happy to see u ...


Happy married life adhiya and Priya


By Mom


இத படிச்சு முடிக்கும் போது ஆத்யா அம்மா Happy pride month girls னு சொன்னதும் ஆத்யா ஒடி போய் அம்மா வ கட்டி புடிச்சிகிட்ட .... I m sry ma i really sry ma.... 


அம்மா ஆத்யா வ ஆர தழுவி பிரியா இங்க வா னு கூப்பிடு என் பொண்ண பத்தரம்மா பாத்துக்குவியா என்றார்...


Thank u ma thank u என்ற படி ஆத்யாவின் அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டாள்....


(ஆத்யா அம்மாவிற்கு LGBTQ என்றால் என்னவென்று புரியாத போது ஆத்திரமும் அழுகையும் வந்தது.... ஆனால் தற்போது LGBTQ தொடர்பான அனைத்தையும் தெளிவு செய்ய பல நல்ல வலைதளங்கள் உள்ளன)


காதல் காதல் தான்.....







Rate this content
Log in

Similar tamil story from Romance