Radha Radha

Drama Romance

4  

Radha Radha

Drama Romance

என் தோழி என் காதலி பாகம் 2

என் தோழி என் காதலி பாகம் 2

3 mins
263


(விஜி தனது அலுவல் பணிக்காக தனது கல்லூரி தோழி வீட்டில் தங்கி உள்ளாள்)


விஜி தான் அணிந்து வந்த சுடிதாரை மாற்றி short top and shorts உடைகளை அணிந்து கொண்டு வந்தாள்..


அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது... வண்டியில் வரும் போது நேரம் பார்க்க கைகடிக்காரத்தை பார்த்தோம்... நேரம் இருட்டில் தெரியவில்லை.... ஆனால் கையில் கைபேசி இருந்ததே அதில் நேரம் பார்த்திருக்கலாமே.... எப்போவும் நேரம் பார்க்க கைகடிக்காரம் போட்டு இருந்தாலும் கைபேசியில் தான் பார்ப்போம்... ஆனால் பயத்தில் ஒன்றும் புரியாமல் போனது என்று மனதில் நினைத்து கொண்டு சிரித்தாள் விஜி....


சில நேரம் வீட்டை சுற்றி சுற்றி பார்த்தாள் விஜி...


ரமணி.... ரமணி.... எங்க இருக்கீங்க....


நான் இங்கே இருக்கேன் விஜி...


அவள் குரல் வந்த இடமான சமையல் அறை நோக்கி நடந்தாள் விஜி..


Hy.... Ramani wt doing ?


Cooking.....


Actually I'm not hungry ramani....


ஆன எனக்கு பசிக்குது விஜி...


Hoo ok kk..... என்று சொல்லிவிட்டு ஹாலில் உள்ள சோபாவில் போய் அமர்ந்து தனது கைபேசியில் எதையோ பார்த்து கொண்டு இருந்தாள் விஜி...


ரமணியின் முகத்தில் சிறு புன்னகை....


சாப்பாடு ரெடி.... விஜி வாங்க சாப்பிடலாம்....


எனக்கு தான் வேண்டாம் என்று சொன்னல ரமணி..


பரவல ஒரு கம்பெனி குடுக்கலாம் ல


விஜிக்கு உண்மையில் பசிக்கிறது... மதியம் சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலைகளை முடித்து விட்டு பஸ் ஏறினவள்.... ரமணி சமையல் செய்யும் போதே அதில் பாய்ந்து இருப்பாள்... ஆனால் அது நாகரிகமாக இருக்காது என்று நினைத்து I'm nt hungry என்று சொல்லிவிட்டாள்.. ரமணி சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவாள் என்று நின்னுத்தாள்... ஆனால் நடந்தது வேறொன்று....


ரமணியும் விஜியும் சாப்பிட அமர்ந்தனர்...


சென்னையில் சாப்பிட டைனிங் டேபிளில் விஜி சாப்பிட்டு பழக்கம்... ஆனால் ரமணி வீட்டில் தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்....


விஜி தயக்கத்தோடும் பசியோடும் தரையில் அமர்ந்தாள்...


ரமணி விஜிக்கு முன் ஒரு தட்டையும் தனக்கு ஒரு தட்டையும் வைத்தாள்...


விஜி "ஏதாவது சொன்னாள் தட்டை எடுத்தாலும் எடுத்து விடுவாள் எதையும் சொல்லாமல் இருப்போம்"


இருவர் தட்டிலும் சூடான தோசை... சட்னி போட்டாள் ரமணி...


விஜியின் வயிறும் வாயும் சாப்பிடு சாப்பிடு என்று சொல்ல..... அவள் சாப்பாட்டில் கை வைக்க போகும் போது... ரமணி ஏதும் புரியாதவள் போல் oooo.... yes ....yes.... I just forget... உங்களுக்கு பசி இல்லன்னு சொன்னிங்களே....


விஜி குழந்தை போல் ரமனியின் கண்களை பார்க்க ரமணிக்கு சிரிப்பு வந்து விட்டது.....


Hahahaha han....Hahahaha.....


நான் சும்மா சொன்னேன் விஜி எனக்கு தெரியும் நீங்க மதியம் கூட எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டிங்க.... நல்லா சாப்பிடுங்க... 

நீங்க சாப்பிட கொஞ்சம் வெக்கப்படுறீங்கனு நினிக்கிறேன்.....அப்படிலாம் இல்லாம எப்போவும் போல இருங்க....


தன்னை இவ்வளவு நன்றாக புரிந்த ஒரு பெண் தன் அம்மாவுக்கு அடுத்து ரமணி தான் என்று நினைத்துக் கொண்டாள்..... (பசியில் என்னென்னமோ தோணுது என்று நினித்துக் கொண்டாள் விஜி)


இருவருக்கும் நன்றாக இரவு உணவு முடிந்தது...


விஜியின் கண்களில் உறக்கம் வருவதை ரமணிக்கு தெரிந்தது... நீங்க போய் உங்க அரை ல தூங்குங்க விஜி...


Ok ரமணி நான் போய் தூங்குறேன்... நீங்க எங்க தூங்குவீங்க இங்க ஒரு பெட் ரூம் தான இருக்கு....


நீங்க போய் தூங்குங்க நான் பத்துக்குறேன்..என்றாள் ரமணி


Ok என்று சொல்லிவிட்டு gud night ரமணி.... Thank u for dinner.... Actually that's awesome taste..... Like my mom....


நன்றி விஜி.... Have a good night


Viji தனது அறையில் சென்று தூங்கினாள்...


நேரம் 10.30 .... ரமணிக்கும் தூக்கம் வந்தது... தனது சோபாவை தூங்கும் இடமாக்கி அங்கேயே தூங்கினாள்


ரமணி நன்றாக படிக்கும் பெண்... வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து படிப்பவள்... நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுபவள்....


விஜி படிப்பில் அவ்வளவு விருப்பம் இல்லை....உலகத்தை சுற்ற தான் அவளுக்கு விருப்பம்.... வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்பவள்.... 3 வருடம் படித்த கல்லூரியில் ரமணியும் விஜியும் பேசி கொண்டு இருந்த நாட்களை கை விட்டு எண்ணிவிடலாம்... அவ்வளவாக இருவரும் பேசியது இல்லை...காரணம் இருவரும் வெவ்வேறு குணம் கொண்டவர்...


ரமணியை அனைவரும் நேசிப்பர்... காரணம் அவள் எதையும் இல்லை என்று சொல்லாதவள்.... தன்னிடம் பழகுபவரை கூட அன்பானவராக மாற்றிவிடும் அவளது அன்பு.... தனது குடும்பம் தான் எல்லாம் என்று இருப்பவள்...


விஜி இதற்க்கு எல்லாம் நேர் எதிர்... யாரையும் அவ்வளவு எளிதில் நம்புவது இல்லை.... கேட்காமல் செய்யும் உதவி தனது மதிப்பை இழக்கும் என்பவள்.... அன்பாய் இருப்பவர் அவர் காரியம் முடிந்ததும் தனது உண்மை முகத்தை காட்டுவர் என்பாள்.. உலகம் ஒரு மாயை நாம் நமக்கானத்தை மட்டும் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவள்...... சுயநலமான உலகில் நாமும் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நினிப்பவள்...


(இருவர் குணங்களும் அவர் அவர் வாழ்ந்த சூழலால் வேறுபட்டது.... ஆனால் ரமணியின் அன்பு விஜியின் வாழ்வில் ஒரு அற்புதத்தை ஏற்படுத்த தான் போகிறது)


(தொடரும்)



Rate this content
Log in

Similar tamil story from Drama