Radha Radha

Drama

4  

Radha Radha

Drama

பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம்

2 mins
359


ரிங்... ரிங்....


ஹலோ.... 


பாரு என்ற பார்வதியிடம் கடைசியாக கேட்கிறேன் நாளைக்கு வரியா..... இல்லையா... எல்லாரும் வராங்க...


இல்ல... என்னால வரமுடியாதுனு நினைக்கிறேன்... ஸ்ரீ 


ஏன் என்ன ஆச்சு...


மனசு சரி இல்ல ஸ்ரீ....


என்ன ஆச்சு னு சொன்னா தான தெரியும் பாரு...


இல்ல.... மனசே சரி இல்ல ஸ்ரீ...


உனக்கு எப்போ தான் மனசு சரியா இருந்திருக்கு....

(ஆன உன்கிட்ட என்ன சொன்னா உன் மனசு சரி ஆகும் னு எனக்கு தெரியும்) என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் ஸ்ரீ..


யார் யாரெல்லாம் வராங்கனு தெரியுமா... நம்ப சிவா இல்ல...அவுங்க கூட வராங்க..


சிவா என்ற பெயரைக் கேட்டதும் யாரு....யாரு சிவா? என்றாள் பாரு



சிவா என்ற பெயரை கேட்டதும் பாரு முகத்துல எவ்வளவு சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டாள் ஸ்ரீ



நம்ம சிவா தான்..... அட ஞாபகம் இல்ல... நம்ம காலேஜ் டைம்ல.....



நம்ம காலேஜ் டைம்ல.....யாரு ......யாரு ஸ்ரீ......


நம்ப காலேஜ் டைம் கிரஷ் நம்ப Professor சிவகார்த்திகேயன் சார் வராரு.... நம்ப Womens College ல அவரு ஒருத்தர் மட்டும் Male... எவ்வளவு Sight அடிச்சி இருப்போம்....


சிவகார்த்திகேயன் சார்ரா...நா கூட வேற யாரோ னு நினைச்சேன்....


நீ நினைப்ப....இவள் இன்னும் சிவா வ மறக்க வில்லை போல் என்று நினைத்து கொண்டாள் ஸ்ரீ


சரி நாளைக்கு காலையில 10 கு உண்ண pickup பண்ண வருவேன்...


ஸ்ரீ..... சொன்ன கேளு... அவரு இதுக்கு எல்லாம் விட மாட்டாரு...


நீ இத சொல்லுவேன் னு எனக்கு தெரியும் ..... அண்ணா கிட்ட நான் முன்னாடியே கேட்டுட்டேன்... அவரும் சரி னு சொல்லிட்டாரு...


அடி பாவி ..... முன்னாடியே கேட்டுடியா....


அது எல்லாம் கேட்டுட்டேன்... நீ வந்துடு...


அவ்ளோ சீக்கிரம் ok லாம் சொல்லமாட்டாரே... ஆச்சிரியமா இருக்கு...


பாரு மறக்காம சக்தியை கூப்பிட்டு வா....


சக்தி வேண்டாம் டி... அவன் அறந்த வாலு... ஒரு இடத்துல நிக்க மாட்டான்.... அவன் பின்னாடியே போய்ட்டு இருக்கனும்.....



அது எல்லாம் பாத்துக்கெல்லாம் நீ சக்தி ய கூப்பிட்டு வா பாரு..


சரி ஸ்ரீ... 


தூங்கிடாத பாரு.... காலை 10 மணி...


எங்க தூங்க ...சக்தி தூங்க விட்டாதான... 


அதுவும் நல்லது தான்... நாளைக்கு சந்திப்போம்....


ஓக் கே.....


அம்மா.... அம்மா..... என்றபடி பார்வதியின் மகன் அவளின் மடியில் படுத்தான்...


என்னாச்சி குட்டி பையன் கு..


தூக்கம் வரல மா... நீ எப்போவும் பாடுவல அந்த பாட்டு பாடும் மா...


குழந்தையின் மழலை பேச்சில் மயங்கிய படி பாடத் தொடங்கினால் பாரு..


வரம் தந்த சாமிக்கு பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி


.....


பார்வதியின் பாடலில் அசந்து உறங்கினான் சக்தி.....


சக்தியை உறங்க வைத்து விட்டு அவன் தலையை கோதியபடி குழந்தைக்கு அருகில் அமர்ந்திருந்தாள் பார்வதி....



அந்த அறையில் மெல்லிய விளக்கு எறிந்து கொண்டு இருந்தது... அந்த மெல்லிய விளக்கின் வெளிச்சம் பல மறைந்து போன நினைவுகளுக்கு வெளிச்சம் தந்தது....


அறையின் சுவர்களில் லாவெண்டர் நிறம்.... அங்கு அங்கு குழந்தையின் அழகிய கிறுக்கல்கள்.. அம்மாவின் அழகிய தலாட்டில் அசந்து தூங்கினான் சக்தி... 


ரணமான மனத்திற்கு இதமான நினைவுகளை கொண்டிருந்தாள் பாரு.... தனது கல்லூரி நினைவுகளை நினைத்த படி அவளுக்கு மெல்லிய உறக்கம் வந்தது....



அப்பொழுது யாரோ ஒருவர் கதவை சத்தத்தோடு தட்டுவது போல் இருந்தது நெடுநேரம் யாரோ கதவை தட்டுவது போல் இருந்தது... மெல்லிய உறக்கம் சட்டென்று விலக்கி எழுந்தாள் பார்வதி..



கதவை சத்தத்தோடு தட்டுவது யார் என்று பார்வதிக்கு தெரியும்...



சக்தியின் அறையை மென்மையாக மூடி விட்டு கதவை திறந்தாள் பார்வதி....



(பாரு என்கிற பார்வதிக்கு திருமணம் ஆகி 3 வருடதிற்க்கு பிறகு சக்தி என்ற ஆண் குழந்தை பிறந்தது... பாருவின் கணவரை பொறுத்த வரை அவர் குடும்பம் விருத்தியாக வேண்டும் அதற்கு மட்டுமே பாரு தேவை... அவளின் உணர்வுகளை பற்றி எந்த கவலையும் இல்லை.... சுற்றத்தாருக்கும் மற்றவருக்கும் மத்தியில் பெரிய தலைகட்டு குடும்பமாக தெரிய வேண்டும்.... அவ்வளவு தான்..)


Rate this content
Log in

Similar tamil story from Drama