Shan Ram

Drama Romance

3.5  

Shan Ram

Drama Romance

பெண்ணின் காதல் கதை

பெண்ணின் காதல் கதை

3 mins
453


ரயில் புறப்பட 15 நிமிடம் உள்ளது அதற்க்குள் அவள் வந்துவிடுவாள்...


யாராவது வராங்கலா மா இந்த சீட்டுல...


ஆமாம் ஒருதர் வராங்க....


வரடும் வந்ததும் எலுஞ்சிக்கிறேன்..


இல்ல இல்ல வந்துடுவாங்க பாட்டி இதோ வந்துடாங்க...


ஐய ரொம்ப தான்மா... யாரு உன் பாய் பிரண்டா..


இல்ல இல்ல என் கேல் பிரண்டு.


அவள் வந்துவிட்டாள் எப்போதும் போல் தன் இருக்கைக்கு முன்னால் அமரட்டும் அவளுக்கு தெரிவதற்குள் தன் பையை எடுத்துவிடுவோம்...


லோக்கல் ரயிலில் உக்கார இடம் எப்படி நமக்கு எப்போவும் கெடைக்குது.... எந்த பையனையும் பக்கத்துல காணோம் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்தாள் அந்த அழகி...


இதான் உன் கேல் பிரண்டா என்று கேட்ட அந்த சண்டையிட்ட பாட்டியின் வாயை டக்கென்று அடைத்து நீங்க எறங்கர இடம் மூனு ஸ்டாப் தள்ளி.. என்றபடி சைகை காட்டினாள்...


எஸ் கியூஸ் மி உங்க கிட்ட ஒன்னு கேக்கனும் என்று தன் முன்னால் அமந்த பெண்ணிடம் அதாவது என்னிடம் அந்த அழகி கேட்க்க ஆறு மாதமாக அவளிடம் எப்படி பேச வேண்டும் என்ற பயிற்ச்சி அனைத்தும் வீணாய் போனபடி அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சைகையால் தலையை ஆட்டவும் தான் ஒரு ஊமை போல் என்று எண்ணி கொண்டால் போல்..


இதுக்கு முன்னாடி யாராவது இந்த சீட்டுல இருந்தாங்கலா.... 


தெரியல மா..


இல்ல தினமும் எனக்கு இந்த சீட்டு கெடைக்குது.. அதான் யாராவது சீட்டு பிடிச்சு வச்சாங்கலானு தெரிஞ்சிக்க தான்..


தெரியல மா..


பக்கத்துலயும் எந்த பையனையும் காணம்....யார் அந்த பையனா இருக்கும்... என்னமோ... 


அந்த வார்த்தையை கேட்ட அந்த நொடி தான் ஒரு பெண் என்றும் தான் நேசிப்பது ஒரு பெண்ணைத் தான் என்பதும் புரிந்து இந்த சமூகத்தில் தன் காதல் ஏற்க்கப்படாது என்று எண்ணி தன் சுய கட்டுப்பாட்டையும் இழந்து கண்கள் கலங்க ஆரம்பித்தது...


சட்டென்று தன் இறுக்கையை விட்டு வெளியேரி தான் இறங்க கூடாத இடத்தில் இறங்கி சென்றாள்....


கிடைத்தது இடம் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்த பாட்டி சட்டென்று அமர்ந்தார்..


இந்த தூரம் வர தான் இந்த பேச்சி பேசினாள்... என்றபடி ஒய்யாரமாக அமர்ந்தாள்..


மறு நாள் ரயிலில் அந்த அழகிய பெண் ஏறினாள் இந்த முறை அந் இருக்கை வேறு ஒருவரால் நிரப்பப்பட்டிருந்தது...


ஒரு வாரமாக ரயில் பயணம் நின்ற படியே போனது...மனதில் ஏன்னென்று புரியாத சோகம்...இருக்கை இல்லை என்று இல்லை...ஏதோ நெடு நாள் இருந்து இப்போது இல்லை என்பது போல்....


மூன்று மாதம் கடந்தது ரயில் பயணம் நின்ற படியே போனது.....ஒரு நாள் அந்த பாட்டி இப்பெண்ணை பார்த்தால்...


என்னம்மா நின்னுட்டு வரா... உன் கேல் பிரண்டு இடம் பிடிச்சி வைக்கலயா என்றாள்..


என்ன சொல்றீங்க பாட்டி ...


அதான் மா அன்னிக்கு ஒரு பொண்ணு உனக்கு சீட்டு புடிச்ச வைத்திருந்தாலே.. யாரையும் ஒக்காரவிடுல...என்ன கூட உக்காரவிடுல தெரியும்மா...


ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றாள் அந்த அழகி...


ஏன்னு தெரியல அந்த வாயாடிய ரொம்ப நாளா காணோம்....


எவ்வளவு நாளா வராம இருந்துருப்பாங்க....


மூனு மாசம் இருக்கும்... ஏன்மா உனக்கு தெரியாதா... உன் கேல் பிரண்டு தான...


ஏதும் சொல்லாமல் அங்கிருந்து சென்றாள்...


அன்றைய இரவு பல கேள்வி தனக்குள்..


அந்த பெண் யார்? ஏன் எனக்காக? எங்கே சென்றாள்....?


கடைசி சந்திப்பை நினைத்து பார்த்தால்..


தான் அவலிடம் ஒரு பையனைப் பற்றி கேட்டதும் அவலின் முகம் மாறியதும் நினைத்து பார்த்தால்..


சில காலம் கடந்தது...


எப்போதும் போல் ரயிலில் அந்த அழகி ஏறினாள் எப்படியும் நாம் நின்று தான் போகப்போகிறோம் என்ற யோசனையோடு....


ஆனால் அன்று அவளுக்கு ஒரே ஆச்சர்யம்...


ஆறு மாதத்திற்க்கு முன் பார்த்த அதே பெண்ணின் முகம்...


தன்னை பார்த்தும் பார்க்காமல் தன் இருக்கைக்கு முன் உள்ள தன் பையை எடுத்தாள்... 


நானும் சென்று அமர்ந்தேன்...


ஆறு மாதத்திற்க்கு பிறகு அன்று மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி .... 


யாரை காண வேண்டும் என்று நினைத்தேனோ அந்த பெண் தன்முன்னால்


எப்போதும் போல் அந்த பெண் சன்னல் ஓரம் வெளியே பார்த்தபடி நான் வந்ததே தெரியாதபடி இருந்தால்..


அவள் அருகில் ஒரு கிழவன் அமர்ந்திருந்தான்..


எனக்கு ஒரு யோசனை அந்த தாதாவை என் இடத்தில் அமரச் சொல்லி நான் அவளருகில் அமர்ந்தேன்...


அவள் முகத்தில் மகிழ்ச்சி இருந்தாலும் என்னிடம் எதுவும் பேசவில்லை...


நானும் சிரிது தூரம் அமைதியாய் வந்தேன்


தான் இறங்கும் இடம் வரப்போகிறது... சட்டென்று வந்துவிட்டதே என்று எண்ணிணேன்...


அவளின் அருகே சென்று இனிமேல் எனக்காக உனது முன்சீட்டு பிடிக்க வேண்டாம் உனக்கு பக்கத்திலே இடம் பிடித்து வை... நான் பார்ப்பதற்குள் உன் பையை எடுக்க வேண்டாம்... என்று கூறி என் இடம் வந்ததும் இறங்கி சென்றேன்... 


சிரிது தூரம் இறங்கி சென்று திருப்பி பார்த்தேன் ... அவளும் ரயிலை விட்டு இறங்கிவிட்டாள்..


உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்...


கடைசியாக சொல்லப்போகிறாள் என்ற மனமகிழ்ச்சியுடன் சொல்லுங்க என்றேன்..


எனக்கு தெரியும் இது தப்பு தான்னு என்னால உங்களுக்கும் பிரச்சனை தான்... என்ன மன்னிச்சுடுங்க.. எப்பவுமே உங்களை சந்திக்க கூடாதுன்னுதான் நெனச்சேன் ஆனா முடியல அதான் கடைசியா ஒருமுறை உங்கள பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன் என்னை மன்னிச்சிடுங்க....

அப்புறம் ...அப்புறம் ...

ஐ லவ் யூ.... .. ஐ லவ் யூ சோ மச்..... ஐ அம் சாரி...... ஐ ரியலி ரியலி சாரி.... மா..


என்று சொல்லிவிட்டு சென்றாள்...


அப்பொழுது சட்டென்று தன் இதயம் நின்று மீண்டும் துடித்தது போல் இருந்தது..


" ஒரு நிமிஷம் உண்மையா !.... இப்போ இங்க நடந்தது எல்லாம் உண்மையா!.... நீ என்ன லவ் பண்றியா ! உண்மையாலும் தானா ! இப்ப நான் என்ன சொல்லணும் ! எனக்கு ஒன்னும் புரியல ! ஆனா ஒன்னு மட்டும் புரியுது இனி வாழும் வாழ்க்கை உன் கூட தான் புரியுது... உன்ன நான் பத்திரமா பாத்துக்குறேன் நீ என்ன பத்திரமா பார்த்துக்குவியா" என்று அந்த அழகி அப்பெண்ணை இருக்கி கட்டிக்கொண்டால்....


அந்த பெண் நடப்பது உண்மைதானா... அல்லது இது நான் கானும் கணவா என்றாள்....


இது நம் கனவு என்றாள் அழகி...


இரு உடல் ஒர் உயிராய் மாறியது.....


(பெண்ணிற்கு பெண்மீது வரும் காதல் உண்மையானது..... உணர்வுபூர்வமானது.... தவிர்க்க இயலாதது ஆகையால் பெண்ணைப் பெண் காதலிப்பது ஏற்றுக்கொள்ள கூடியது)



Rate this content
Log in

Similar tamil story from Drama