Radha Radha

Drama Others

3  

Radha Radha

Drama Others

என் தோழி என் காதலி பாகம் 4

என் தோழி என் காதலி பாகம் 4

3 mins
155


காலை 8.30 மணிக்கு கல்லூரி Morning Shift தொடங்கிவிடும்...


விஜியை காட்பாடியில் இறக்கி விட்டுவிட்டு ரமணி கல்லூரிக்கு 15 நிமிடத்திற்கு முன்பே வந்துவிட்டாள்....


எப்போது கல்லூரிக்கு வரும் போதும் கல்லூரியில் இருக்கும் பிள்ளையார் கோவில்க்கு சென்று வருவது வழக்கம்...


கல்லூரி கிறிஸ்துவ மதத்தை சார்ந்தது என்றாலும் இந்து மாணவ மாணவிகள் பிராத்தனைக்காக அந்த கல்லூரி வளாகத்தில் பிள்ளையார் கோவில் இருந்தது....


பத்து நிமிட பிரார்த்தனைக்கு பின் கல்லூரி தொடங்க ஆரம்பித்தது...


ரமணி தனது வகுப்பறைக்கு சென்று பாடம் நடத்த ஆரம்பித்தாள்....


காலை 11.30 மணி 15 நிமிட இடைவெளி நேரம்...


ஆசிரியருக்கான அறையில் அமர்ந்திருந்தாள் ரமணி..."ஏன் இன்னும் விஜி ஒரு phone கூட பண்ணல!!! என்ற ஐயதோடு ரமணி விஜிக்கு phone செய்தால்...."


ரிங்... ரிங்....

ரிங்....ரிங்....


விஜி தொலைபேசி எடுக்கவில்லை....


ரிங்... ரிங்....

ரிங்....ரிங்....


விஜி தொலைபேசி எடுக்கவில்லை....


ரமணிக்கு படபடப்பாக இருந்தது....

கை கால் முகத்தில் வேர்க்க தொடங்கியது.... மனதில் எதை எதையோ நினைத்து பயம் தோன்றியது....


தப்பு பன்னிட்டமோ... விஜியையும் கையோட அழைச்சிட்டு வந்து இருக்கனும்.... ரொம்ப வருஷம் ஆச்சி அவ வேலூர் வந்து.... வழி தெரியாம இருக்காளோ....ஒரு வேலை போன்ன யாரோ திருடிட்டு போய்ட்டாங்களோ.... அதான் போன் பன்ன எடுக்களையோ....


ரமணியின் மனது எல்லாதையும் நினைத்து வேதனைப்பட்டது....


மீஸ் ரமணி .... மீஸ் ரமணி ....

பெல் அடிச்சிடுச்சு கிளாசுக்கு போகலையா...? என்றார் அருகில் இருந்த உமா டீச்சர்...


உமா டீச்சர் ரமணியோடு வேலை பார்ப்பவர்.... மாநிறம்... உறவுகளை மீறி காதல் திருமணம் செய்தவர்.... காதல் மீது அதீத நம்பிக்கை உள்ளவர்.... கல்யாணம் என்பது நாம் நேசிக்கும் ஒரு நபரோடு தான் என்பவர்... அவரது வகுப்பு என்றால் அனைத்து மாணவ மணைவியருக்கும் சந்தோஷம் தான்.... காரணம் அப்போ அப்போ காதல் கதைகளை, காதல் தொடர்பான பட்டிமன்றம், நடத்துவதால்.....


மீஸ் ரமணி .... மீஸ் ரமணி.....


ரமணி சட்டென்று சுய நினைவுக்கு வந்தாள்...


என்ன ஆச்சி ரமணி மிஸ்...


ஒன்னும் இல்ல உமா டீச்சர்.... 


என்ன ஆச்சினு சொல்லுங்க மிஸ்...


இல்ல... நம்ப காலேஜ்ல இன்டென்ஷிப் நடக்குது ல...


ஆமா...


அந்த இன்டென்ஷிப் நடத்தரத்துக்காக என் காலேஜ் பிரண்ட் ஒருத்தி இன்னிக்கி வரா.. என்கூட தான் தங்கி இருக்கா... இன்னிக்கி காலைல காட்பாடி ல அவள trop பன்னிட்டு வந்தேன்.. அவ வந்துடறேன் னு சொன்ன ஆனா இன்னும் வரல அதன் கொஞ்சம் டென்ஷன்ன இருக்கு....


ஹை என்ன மிஸ் இப்படி சொல்லறிங்க.... அவனுங்க என்ன சின்ன குழந்தையா... இன்டென்ஷிப் conduct பண்ற அளவுக்கு அவுங்க பெரியவங்க.... Don't worry miss she will be fine....


இல்ல உமா மிஸ் அவா ரொம்ப நாள் ஆச்சு வேலூர் வந்து அதன்....! கொஞ்சம்...



கவலைப்படாதீங்க மிஸ்... அவுங்க வந்துடுவாங்க....


சரி வாங்க நேரம் ஆயிடுச்சி... class கு போகணும்.... HOD பாத்த எதாவது சொல்லும்...


ஓக் கே உமா மிஸ்.. வாங்க போகலாம்...


நேரம் காலை 11.50 1st Year 

Real Analysis Class


குட் மார்னிங் மிஸ்.....


குட் மார்னிங் ஸ்டுடெண்ட்ஸ்.... பிலீஸ் சீட்..டவுன்...


Miss Abi இங்க வாங்க....


சொல்லுங்க மிஸ்...


இந்த Sums ச போர்டு ல எழுதி போடுங்க..... 


Everybody listen.... Write this sums in your note... i will explain ....tomorrow have test...So write properly...


Test என்று சொன்னதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு No.... என்று சொல்லிக்கொண்டு எழுத ஆரம்பித்தனர்....


ரமணிக்கு விஜி நினைவாக இருந்தது....


கடைசி பெஞ்சிருக்கு பின் இருக்கும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்...


ரமணி மிஸ்.... என்ன ஆச்சி உங்களுக்கு என்று ஒரு மெல்லிய குரல் கேட்டது....


ரமணி நிமிர்ந்து பார்த்தாள்...


மிஸ் இங்க பாருங்க.... இங்க..... என்ற குரல் வந்த இடத்தில் பார்த்தாள் ரமணி... அது ஒரு மாணவியின் குரல்...


அந்த மாணவி பெயர் இனியா..

ரமணி மிஸ் என்றாள் அவளுக்கு கொள்ளை பிரியம்... ரமணி மிஸ் எங்கு சென்றாலும் அவளையே பார்த்து கொண்டு இருப்பாள்.... ரமணி மிஸ்சிடம் நல்ல பெயர் வாங்குவதர்க்காக நன்கு படிப்பாள்... ஆனால் மதிப்பெண் தான் வராது.... வகுப்பறையில் குட்டி ரவுடி.... கடைசி பெஞ்சு.... ரமணி மிஸ் அப்படி ரமணி மிஸ் இப்படி என்று எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பாள்... ரமணி மிஸ் புடவை கட்டின அழகே அழகு என்பாள்.....


ரமணி மிஸ்க்கும் இனியா என்றாள் பிரியம் தான்... வகுப்பிக்கு வந்த 15 நிமிடம் இனியாவிடம் எதையாவது பேசி விடுவாள்.... இனியாவிர்க்கும் ரமணி மிஸ் தினமும் மறக்காம நம்மிடம் பேசிவிடுவார் என்று மகிழ்ச்சி....


ஆனால் இன்று வழத்திருக்கு மாறாக ரமணி மிஸ் இனியாவிடம் பேச வில்லை.... காரணம் தான் நமக்கு தெரியும் தானே... ஆமாம்... விஜி தான்...


ரமணி மிஸ் .... இங்க பாருங்க... என்றாள் இனியா...


என்ன ஆச்சி மிஸ்...


இல்ல ஒன்னும் இல்ல இனியா... நீ போர்டு ல இருக்கறத நோட் ல சரியா எழுது என்றாள்.ஸ்... 


இனியா முகம் வாடியது....


இனியாவின் முகம் மாறியதை பார்த்த ரமணிக்கு கஷ்டமாக இருந்தது...


ரமணி...இனியா அருகில் வந்து அவள் தோல் மீது கை வைத்து I'm sorry... நான் வேற ஒரு டென்ஷன் ல இருந்தேன் அதான்....


என்ன ஆச்சி மிஸ்... எதாவது பிரச்சனையா... நான் எதாவது.....


அதலாம் ஒன்னும் இல்ல.... நான் பாத்துக்குறேன்....


எல்லாம் சரி ஆயிடும் நீங்க டென்ஷன் ஆகாதிங்க என்று குழந்தை குரலில் சொன்னாள் இனியா...


உண்மை தான் இனியா ஒரு குழந்தை தான்...



(தொடரும்)



Rate this content
Log in

Similar tamil story from Drama