STORYMIRROR

Radha Radha

Fantasy

4  

Radha Radha

Fantasy

பெண்மை இனிதல்ல

பெண்மை இனிதல்ல

1 min
15

பல நாள் கழித்து இருவரும் ஒரு முழு இரவில் ஒன்றாக உறங்குகின்றனர்... முன்னர் கணவன் மனைவியாய் உறங்கியவர்கள் இன்று அப்பா அம்மாவாக தன் 1 மாத மகளோடு உறங்குகின்றனர்.... பிள்ளையை உறங்க வைத்து விட்டு தன் ஆசை கணவனின் மேல் கை போட்டு உறங்க சென்றாள்....மனைவின் கையில் சின்ன முத்தம் இட்டு முதுகை காட்டிய படி திரும்பி படுத்தார் கணவர்.... திரும்பிய கணவர் தன் பக்கம் திரும்புவார்... தன் மீது கை போட்டு உறங்குவார்... என்று எதிர் பார்த்து எதிர் பார்த்து இரவு முடிந்தே போனது.... விடியற்காலையில் கணவர் மனைவிக்கு இடையில் தலையணை இருந்தது.... தலையணை இறுக அணைத்து கொண்டு இரவு முழுக்க தூங்கினாள் அந்த பெண்....


Rate this content
Log in

Similar tamil story from Fantasy