அதித்தியாம் 8 - வாழ்க்கையின் உண்மை
அதித்தியாம் 8 - வாழ்க்கையின் உண்மை
வழக்கம் போல வீட்டில் இருந்து வந்த அனைப்பை எடுக்கவில்லை, விடாமல் ரிங் அடிக்க வழி இல்லாமல் அதை ஸ்வாதி எடுத்து துருவ் காதில் வைத்தாள்.
அவன் பேச முற்பட்ட போது, பதட்டமாக
"தம்பி, எங்கய்யா இருக்க, அப்பா போசுக்குனு நெஞ்ச பிடிச்சிட்டு சாஞ்சிட்டாருயா, சீக்கிரம் MDH ஹாஸ்பத்திரிக்கு வாயா!!!"
அவன் அப்படியே நினுட்டான்,
ஸ்வாதி phone வாங்கி காதில் வைக்க அவன் தங்கை, " அண்ணா, சித்தப்பா MDH hospital emergency ward !!" இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஸ்வாதி அவன வண்டயில் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் வரும் வரை துருவ் எதும் பேசவில்லை.
அவளும் அவனை எதும் கேட்கவில்லை.
எமர்ஜென்ஸி வார்டு வந்ததும் அவன் அம்மாவை அரவணைத்து ஆரத்தழுவினான். அவன் அம்மாவும், "தம்பி!!தம்பி!! நல்லா தான்யா பேசிட்டு இருந்தாரு பட்டுனு நெஞ்சு பிடிச்சிட்டு அப்படியே தரைல விழுந்துட்டாரு".
உள்ள இருந்து நர்ஸ்,"இங்க யாரு வசந்த்?" துருவ் கொஞ்சம் முன்னாடி வந்து"நான் தான் வசந்த்" என்றான்.
"உங்களை தான் பார்க்கணுமாம்.
உள்ள போங்க!"
அவன் உள்ளே சென்றதும், "கண்ணீர் மல்க, ஐயா", என்றான்.
;">அதற்கு அவர், " விடு பா, நடந்தது நடந்துடுச்சு, நீ செஞ்சிருக்க மாட்டேன்னு தெரியும் இருந்தும் ஊருக்கு அனுப்பி விட்ட பய நல்ல பேரு வாங்காம இப்படி தப்பான வழியில போயிட்டான்ற வருத்தம். வேற எதுவும் இல்லை, கடன உடன வாங்கி நல்ல ராசா மாறி வரவுனும் ன்ற எதிர்பார்ப்பு. இப்போ பாரு ரசவாவே இருக்க. கல்யாணம் பொண்ணு கூட ரொம்ப பேசுற பொலையே ? காதுவாக்குல கேட்டுச்சு, நல்லா இருந்தா சரிய்யா, சரி அப்புறம் என்ன,
எப்படி இருக்க கல்யாண மாப்பிள்ளை ?? என உரக்க சிரித்தாரு.
துருவு அவரை பார்த்து ரசித்த படி கண்ணீர் மல்க தன்னை தானே " அவ்வளவு எண்ண கோவம் உனக்கு" என்று திட்டி கொண்டான்.
எல்லாம் குணமாகி வீட்டிற்க்கு கூட்டி சென்றான்.
சுவாதி அப்பாவை நலம் விசாரிக்க வீட்டிற்க்கு வந்தாள்.
அப்போது துருவ் ஸ்வாதியிடம் தான் இத்தனை நாள் பெற்றோருடன் சண்டையிட்டு சரியாக அவர்களுடன் பேசாமல் இருந்ததையும், முட்டாள்தனமாக இத்தனை காலம் நேரம் கடந்ததையும் பற்றி கூறி அவளின் தோளில் சாய்ந்து அழ ஸ்வாதி அவனுக்கு தைரியம் சொல்லி சமாதானப்படுத்துகிறாள்.
பேசியபடி பேசிய நாளில், மங்கள வாத்தியம் முழங்க இருவீட்டாரின் சம்மதத்துடன் இரு மணம் இணையவும் துருவ் சுவாதிக்கு தாலி கட்டி கன்னத்தில் முத்தம் பதித்தான்❤️
கல்யாணம் இனிதே நடந்தேறியது !!!
கல்யாண வாழ்கை தொடரும்......