தருணங்கள்
தருணங்கள்
சிரிக்காமல் சிரிக்க வைத்தாய் சில தருணம்
சிரித்து சிரித்து அழவும் வைத்தாய் பல தருணம்
கேட்காமல் அள்ளி கொடுத்தாய் சில தருணம்
கேட்டும் மறந்தாய் பல தருணம்
இளங்காற்றாய் இதமளித்தாய்
சில தருணம்
இனை இல்லா வெப்பமாய் சுட்டு எரித்தாய் பல தருணம்
இமை பொழுதும் காத்தாய் சில தருணம்
இமைக்காமலே சென்றாய் பல தருணம்
கங்கையாய் கட்டி இழுத்தாய் சில தருணம்
கானலாய் காணாமல் போனாய் பல தருணம்
துணையாய் வருவாயா ?
தொலைந்து போவாயோ ?
தெரியாமல் தவிக்கிறேன் திரும்ப திரும்ப நினைக்கிறேன் உன்னை ❤️

