Saravanan P

Abstract Drama Fantasy

4.9  

Saravanan P

Abstract Drama Fantasy

சிலந்தி மனிதன்:ஒரு வாரம்

சிலந்தி மனிதன்:ஒரு வாரம்

4 mins
480


மார்வல் இன் ஸ்பைடர் மேன் வைத்து நான் எழுதிய கதை.


"சக்திகள் நமக்கிட்ட அதிகமாக,நம்மளோட பொறுப்புகள் அதிகமாகும்".


நான் தான் சொல்றேன்ல நேத்து எனக்கு படிக்கிற வேலை நிறைய இருந்துச்சு அதுனால என்னால ஸ்கிரிப்ட் எழுத முடியல புரிஞ்சிக்க ஹேய்லி என ஜோ கோபத்துடன் பேசிக் கொண்டிருந்தான்.


நீ இதை முன்னாடிய சொல்லி இருக்கலாமே? நான் பண்ணிருப்பேனே என ஹேய்லி சொல்லி சண்டையை போட்டு கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தனர்.


அப்பொழுது அவர்களுக்கு மேல் சென்ற ஸ்பைடர் மேன் லவ் பண்ணறவங்க சின்ன விஷயத்தை அவ்வளவு ஈசியா விட மாட்டாங்க போல? என நினைத்து கொண்டு ஒரு பில்டிங்கில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தான்.


அந்த வீட்டில் தாத்தா ஒருவர் சமைத்ததை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.


வா ஸ்பைடி என அவர் கூப்பிட,ஸ்பைடர் மேன் சமர்சால்ட் அடித்து காட்ட,அந்த தாத்தா சிரித்து கொண்டே அவள் கிட்ட சொன்னியா என கேட்க,ஸ்பைடர் மேன் இல்லை என சொல்ல அந்த தாத்தா "நம்ம மனசை புரிஞ்சிக்கிட்டு அன்பு காட்டி எதுவுமே நம்ம கிட்ட இருந்து எதிர்பார்க்காம இருக்க ஒருத்தர் நம்மளுக்கு வேண்டும்,அது காதலியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்",எனக்கும் ஒருத்தி இருந்தா என சொல்ல ஆரம்பித்தார்.


சொல்லி விட்டு, என்ன கிப்ட் அவளுக்கு வாங்க தந்து காதலை சொல்ல போற? என தாத்தா கேட்க,யோசிக்கனும் சொல்லி விட்டு 

 அங்கு சுவரில் இருந்த கடிகாரத்தில் டைம் பார்க்க மணி 08:47 என இருக்க வேகமாக தாத்தாவிடம் விடைபெற்றே அங்கிருந்து கல்லூரி சென்றான்.


அங்கு சென்று உடை மாற்றி கொண்டு வகுப்பறை நோக்கி சென்ற பீட்டர் மேரி ஜெனை கண்டு தடுமாறினான்.


ஆனால் பேச தயங்கி கொண்டு பீட்டர் தனது வகுப்பு நோக்கி செல்ல அதை உணர்ந்த மேரி ஜென் திரும்பி ஒருமுறை பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்து தனது நண்பர்களிடம் பேசினாள்.


பீட்டர் வகுப்பு வாசலில் நின்று பேராசிரியர் லாயட் இடம் அனுமதி கேட்க அவர் டைம் என்ன பீட்டர்? என கேட்க பீட்டர் முழிக்க மாணவர்கள் சிரித்தனர்.


லாயட் அவரது வாட்சில் டைம் பார்த்து 09:15 பீட்டர்,பாதி வகுப்புக்கு நீ வரவே இல்லை,உன் மார்க்கும் ரொம்ப குறைவா இருக்கு,இன்னைக்கு மதியம் உனக்கு ஆசிரியர்கள் கூட மீட்டிங் இருக்கு என சொல்லி அவனை உள்ளே வர சொன்னார்.


பீட்டர் முன் அமர்ந்திருந்த ஜோ எனக்கு எவ்வளோ பிரச்சனை,நானே கிளாஸ் வரேன் உனக்கு என்ன டா? என திரும்பி கேட்க பீட்டர் அமைதியாக அமர்ந்து இருந்தான்.


அன்று மதியம் ஆசிரியர் மீட்டிங்கில் பீட்டர் இடம் அனைத்து ஆசிரியர்களும் மார்க்,வகுப்பு வருகை பற்றி பேசி விட்டு அவனது ஸ்காலர்ஷிப் இதனால் பாதிக்கப்பட கூடும் என்பதால் அடுத்து நடக்க உள்ள தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மார்க்கை பூஸ்ட் செய்யவும்,அவன் சமர்பிக்காமல் இருந்த பிராஜக்ட் ஒன்றையும் ஒரு வாரத்தில் செய்ய சொல்ல பீட்டர் செய்வேன் என கூறினான்.


அன்று நிறைய யோசனைகளுடன் வீடு வந்த பீட்டர்,மே வீடு சுத்தம் செய்து கொண்டிருப்பதை கண்டு மே என கூறி கொண்டே நீங்க எதுக்கு இதலாம் செய்றீங்க? நான் காலேஜ் போயிட்டு வந்து பண்றேன்னு சொன்னேன்ல என கேட்டான்.


பாவம் பீட்டர்,களைச்சு போய் வந்திருக்க டீ போடவா? என கேட்க,ஒன்னும் வேணாம் ஆன்ட் மே என சொல்ல,பீட்டர் நான் வேலைக்கு போகட்டுமா? என ஆன்ட் மே கேட்டனர்.


பீட்டர் இருவருக்கும் டீ போட்டு எடுத்து கொண்டு வந்து அவர்கிளடம் கொடுத்து விட்டு திடீர்னு ஏன் ஆன்டி? என கேட்டான்.


வீட்லயே தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு,நான் அந்த கடைக்கு போய் டெய்லரிங் பண்ண கொஞ்சும் நல்லா இருக்கும் என சொல்ல பீட்டர் டீ கப்பினுள் பார்க்க அதில் பென் அவரின் முகம் தெரிந்தது,அவர் சிரித்தது,குடும்பமாக அவர்கள் மகிழ்ந்தது,கடைசியில் அவன் கண் முன் அவர் இறந்து கிடந்தது,அவன் தடுக்காமல் விட்ட திருடன் முகம் என மாறி மாறி தெரிய சிறிது நேரம் குழம்பி இருந்தான்.


சரிங்க ஆன்ட் மே நான் என் ரூம் போறேன் என சொல்லி விட்டு மாடிக்கு சென்று ரூமை சாற்றி கொண்டு அழுது கொண்டே "5 வருசம் ஆச்சு அங்கிள்,இது எல்லாம் நடந்து,ஆனால் என்னால உங்க இழப்பை ஏத்துக்க முடியல,என்னால ஆன்ட்டி கஷ்டபடுறாங்க" என அழுது கொண்டே படுக்கையில் சாய்ந்தான்.



தினமும் தான் படிக்க வேண்டிய பாடங்களை ஆடியோவாக மாற்றி பிளேயர் ஒன்றில் போட்டு ஹெட் சேட் மாற்றி எடுத்து கொண்டு ஸ்பைடர் மேனாக நகரத்தில் நடக்கும் தவறுகள் மற்றும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஆரம்பித்தான்.


அங்கு சந்து ஒன்றில் அமர்ந்து போதை விற்கும் ஒருவனை பிடித்து சுவருடன் வலை பின்னிவிட்டு போதை மருந்துகளை போலீஸ் காரில் பின் சீட்டில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த போலீஸின் கார் கதலை தட்டி சார் கோரியர் என சொல்லிவிட்டு வேகமாக அடுத்து பிராஜக்ட் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.



வோர்க் ரீமைன்டர் என்ற ஒரு செயலியை உருவாக்க அன்று மாலை வீடு சென்றவுடன் வேலைகளை ஆரம்பித்தான்.


மற்ற செயலிகளை விட தனிப்பட்டு இருக்க இது நமது ஹெல்ட்,பணம் கையிருப்பு,நாம் செல்லும் இடத்தை வைத்து அங்கு நாம் செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகப்படுத்தவும்,நாம் இருக்கும் இடத்தில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அறியும் வகையில் செய்ய ஆரம்பித்தான்.


பிறகு ஆன்ட் மேவை அவர்கள் இடத்தில் வேலை முடிந்தவுடன்‌ சென்று வீடு வரை உடன் வந்தான்.


எக்ஸாமுக்கு ஒரு நாள் முன்பு,


படித்து கொண்டு இருந்த பீட்டர் அன்று ஆன்ட் மேவின் கடன் மற்றும் மேரி ஜெனின் கிப்ட் என யோசித்து கொண்டு ஸ்பைடர் மேன் டிரஸ் போட்டு கொண்டு நகர்வலம் சென்றான்.


அங்கு ஒரு ஏடிஎம் பணம் செலுத்தும் டீமின் வண்டியை மறித்து திருடி வந்த ஒரு கும்பலை துரத்தி கொண்டு போலீஸும் வேகமாக சாலையில் ஒட்டி வந்தனர்.


சில பேர் அதில் மாட்டி அடிபட்டு விழுந்தனர்.


ஸ்பைடர் மேன் வழியில் உள்ளவர்களை விலக்கி விட்டு அந்த கும்பலின் காரில் மீது குதித்தான்.


அதிர்வை உணர்ந்த காரின் உள்ளே இருந்த கும்பலில் ஒருவன்,காரின் உள் இருந்து மேல் நோக்கி ஒரு வித்தியாசமான துப்பாக்கியால் சுட்டான்.


அதை உணர்ந்த ஸ்பைடர் மேன் அப்படியே சம்மர்சால்ட் அடித்து மீண்டும் காரின் மேல் வந்து இறங்கினான்.


பின்பு காரின் முன்பு குதித்த ஸ்பைடர் மேன் தனது கைகளால் தடுத்து நிறுத்த முயல கும்பல் காரின் வேகத்தை உயர்த்த உயர்த்த,ஸ்பைடர் மேன் கத்தி கொண்டே அந்த காரின் முன்பகுதியை தரையில் அழுத்த டையர் வெடித்து கார் மேல் எழும்பி மீண்டும் தரையில் வந்து அடித்தது.


காருக்குள் இருந்த வெளியே வந்து விழுந்த பேக்கில் இருந்து இரண்டு கட்டு பணம் வெளியே வந்ததது.


அதை பார்த்த ஸ்பைடர் மேன் ஒரு கணம் பார்த்து விட்டு அந்த பணத்தை எடுத்து அதே பேக்கில் போட்டு போலீஸிடம் தந்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.


அன்று வீட்டிற்கு வந்த பீட்டர் தூங்கினான்.


அடுத்த நாள், எக்ஸாம்கள் ஆரம்பிக்க பீட்டர் அதற்கு அன்று காலை படிக்காத பாடங்களை படித்து விட்டு சென்றான்.


எக்ஸாம்ஸ் நன்றாக அந்த வாரம் எழுதி விட்டு,கடைசி எக்ஸாமின் போது தனது பிராஜக்டை சமர்பித்து விட்டு தனது வேலைகளை முடித்தான் பீட்டர்.


அந்த வார இறுதியில் மேரி ஜெனை சந்திக்க முடிவு செய்து ஒரு‌ பரிசை செய்ய முடிவெடுத்தான்.


அடுத்த நாள்,மேரி ஜெனை சந்தித்து பேசி விட்டு ஒரு சிறிய ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்றான்.


அங்கு சாப்பாடு ஆர்டர் செய்து விட்டு, தனது பையில் இருந்து ஒரு கவரை எடுத்து மேரி ஜெனிடம் தர அதை வாங்கி ஆர்வமாக பிரித்து உள்ளே இருந்து எடுத்த பேப்பரில் ஒரு கோலேஜை பார்த்த அவள் மகிழ்ச்சியாகி சிரித்தாள்.


இதை பார்த்த பீட்டர் அடுத்து காதலை சொல்ல வாய் திறந்து விட்டு தயங்கினான்.


அதை கவனித்த மேரி ஜென் அவனது ஒரு கையை எடுத்து தனது இரு கைகளாலும் பிடித்து முத்தமிட்டாள்.


பீட்டர் முகத்தில் சிறிய வெக்கத்துடன் அவளை பார்த்தபடி அமர்ந்து இருக்க சார் என வெயிடர் குரல் கேட்டு இருவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.






Rate this content
Log in

Similar tamil story from Abstract