Radha Radha

Drama Romance

5  

Radha Radha

Drama Romance

என் தோழி என் காதலி பாகம் 1

என் தோழி என் காதலி பாகம் 1

3 mins
490


கல்லூரி முடித்து 10 வருடம் ஆகிறது.. அவளுக்கு என்னை நினைவு இருக்குமோ! என்னவோ!... என்ற ஐயத்தோடு சென்னை டூ வேலூர் நான் ஸ்டாப் பேருந்தின் சன்னல் ஓரம் அமர்ந்திருந்தாள் விஜி


தனது அலுவல் தொடர்பான பணிக்காக தான் பயின்ற கல்லூரிக்கு அதாவது வேலூருக்கு செல்கிறாள் விஜி


சென்னையில் உயர் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் வேலையில் இருக்கும் விஜி கல்லூரியின் கடைசி வருடம் படிக்கும் போது அந்த நிறுவனத்தில் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று கல்லூரி முடிந்த பின்பு பணியில் சேர்ந்து கொண்டாள். 


தான் பயின்ற பள்ளியின் மூலம் வேலைக்கு சென்று நல்ல வருமானம் பெற்ற போதும் கூட தான் பயின்ற கல்லூரிக்கு ஒரு நாளும் வரவில்லை....

ஆனால் தற்பொழுது கல்லூரிக்கு வருகிறாள். காரணம்... அவள் பணிபுரியும் நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்ய கல்லூரிக்கு வருகிறாள்...


இது தொடர்பாக கல்லூரியில் ஏற்கனவே முன்னனுமதி பெற்று விட்டாள்...ஆனால் பத்து நாட்கள் நடக்கும் பயிற்சிக்கு தங்குவதற்காக தனது கல்லூரி தோழியின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறாள்.. அவளது தோழியும் அதே கல்லூரியில் கணிதம் தொடர்பான பாடத்தின் ஆசிரியராகப் பணிபுரிபவள்.


காட்பாடி.... காட்பாடி.....

காட்பாடி... காட்பாடி.....

வேலூர் ......வேலூர்.....

எல்லாரும் யறங்குங்க பா...


கண்களை மூடி படுத்து இருந்த விஜியின் கண்கள் திறக்கும் போது... அவள் கண்கள் தனது தோழியின் கண்களை நேருக்கு நேராக சந்தித்தது


விஜி விஜி இறங்குங்க வேலூர் வந்துடுச்சு உங்களுக்காக தான் நான் வெயிட் பண்றேன்..... என்று தனது இருக்கைக்கு வெளியே யாரோ சொல்வது போல் இருந்தது.... 

விஜி கண்களை தேய்த்து பார்த்த போது தெரிந்தது தனது தோழி ரமணி....


ரமணி அன்பானவள் .... அனைவரிடமும் இரக்ககுணம் கொண்டவள்... என் நிறத்துக்கு நேர் எதிர்... பால் போன்ற வெள்ளை நிறம்.. அவள் மனதும் அப்படி தான்.... அடக்கமான பெண்....அவள் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.... ஏன் யாரும் பார்த்திருக வாய்ப்பும் இல்லை... அவளது மனம் பிறந்த குழந்தை மனம் போல.... தனது குடும்பம் தான் உலகம் என்று இருப்பவள்.... கடைசியாக கல்லூரி விடைபெறும் போது பார்த்தது 10 வருடம் கழித்து இன்று தான் பார்க்கிறேன்...


விஜி சீக்கிரம் வாங்க.... என்றாள் ரமணி... அப்போது தான் கனவுலகில் இருந்து நிஜ உலகிற்கும் வந்தாள் விஜி... சட்டென்று தனது தோள் பைகளை எடுத்துக்கொண்டு பேருந்தை விட்டு கீழ் இறங்கினாள்.


கல்லூரியில் அவ்வளவாக பேசியது இல்லை.. அதனால் தான் என்னவோ என்ன பேசுவது என்று தெரியவில்லை....


Hi விஜி எப்படி இருக்கீங்க.... பயணம் எல்லாம் நலம் தானே.... 


சில நேரம் மௌனத்திற்க்கு பிறகு... I'm fine... Ya its good... How are you Miss....... 


ரமணி....


Ya ya i know i know டக்குனு வரல....

How r u Ramani...


நான் நல்ல இருக்கேன்.... நேரம் ஆகுது போலாமா..... என்றாள் ரமணி....


Oooo yes...


ரமணி தனது இரு சக்கர வாகனத்தை எடுத்தாள்..


உங்க தோள் பை குடுங்க முன்னாடி வசிக்கிறேன் என்றாள் ரமணி..


No issues i will manage....


பரவால குடுங்க என்று தனது பையை வாங்கிக்கொண்டாள்..


ரமணிக்கு பின் நானும் ஏறிக்கொண்டேன்.. 


சில தூரம் பாதை எந்த வளைவும் இல்லாமல் நேராக சென்றது. அனைத்து கடைகளும் நடைபெற்று கொண்டு இருந்தது... எங்கு பார்த்தாலும் கடைகளில் வெளிச்சம்... மக்களின் கூட்டம்.... சென்னையில் எப்போதும் இப்படி தான் இருக்கும்...என்று நினைத்துக் கொண்டாள் விஜி


ஆனால் சிறிது தூரம் கடந்து சென்ற பின்பு தெருவில் யாரும் இல்லை ரமணி ஓட்டி செல்லும் வண்டியும் அதில் நாங்கள் மட்டும் இருக்கிறோம்... தெருவில் எந்த விளக்கும் இல்லை அப்போது தான் கையில் கட்டிய கடிகாரத்தை பாத்தேன். இருட்டில் நேரம் தெரியவில்லை.. சிறிது பயம் மனதில் எழ.... ரமணியின் தோள் மீது எனது இரு கைகளை வைத்து கொண்டேன்.... இன்னும் எவ்வளவு தூரம் ரமணி....


Why suddenly you speak tamil என்றாள் ரமணி...


பயத்தில் தாய் மொழி தானே வரும் என்று நினைத்த படி... அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல.... என்றேன்


கிட்ட வந்துட்டோம் என்றாள் ரமணி...


தனியான பாதையில் அனைத்து வீடுகளும் மூடிய நிலையில் இரவின் பயம் விஜியின் கைகளின் வழியாக உணர்ந்த ரமணி விஜியின் இடது கையை எடுத்து தனது இடுப்பை சுற்றி தனது கையை வைத்து பிடித்துக் கொண்டாள்....


இல்ல பரவல ரமணி....


பரவ இல்லையா அப்போ ஒக் கே என்று சொல்லிக்கொண்டு தனது கை மீது இருந்த அவள் கையை எடுத்தாள்..


அப்படிலாம் இல்ல பரவல உனக்கு balanced da இருக்கும்... என்று சொல்லி கொண்டு தனது இரு கைகளை கொண்டு ரமணியை இறுக்கி பிடித்து கொண்டாள்.... அவள் முதுகில் சாய்ந்தபடி விஜி படுத்திருந்தாள்...


ரமணியின் முகத்தில் புன்முறுவல் தெரிந்தது.... ஆனால் மனதில் ஏதோ இனம் புரியாத உணர்வு.....


விஜி விஜி எழுந்திருங்க வீடு வந்துடுச்சு.... 


வீடு வந்துடுச்சா.... Thank u thank u for drop me.... என்றாள் விஜி....


விஜி தூக்கத்துல இருந்து எழுத்திரு என்றாள் ரமணி.. இது நம்ம வீடு.... வாங்க உள்ள என்று வீட்டை திறந்தாள்...


கண்களை நன்கு தேய்த்து கொண்டு.... Yes....im sry ramani.... i just forgot....


உங்களுக்கு கொஞ்சம் இல்ல ரொம்ப நியாபகம் மறதி தான்....என்றாள் ரமணி


Hy no no i m sry...


பரவல... நேர போய் வலது புறம் உங்க அரை... இது உங்க வீடு மாதிரி... நீங்க எப்போவும் போல free ya இருக்கலாம்....ok..


Thank u ரமணி என்று சொல்லிக்கொண்டே விஜி ரமணியை இறுக்கி கட்டிக் கொண்டாள்....


ரமணியின் இதயம் துடிப்பை எந்த கருவின் உதவி இல்லாமலே எண்ணி விடலாம் போல வேகமாகவும் சத்தமாகவும் துடித்தது....


Ok ramani i will be back என்று சொல்லிவிட்டு தனது அறையை நோக்கி நடந்தாள்....


(தொடரும்)


Rate this content
Log in

Similar tamil story from Drama