Radha Radha

Drama Romance

4  

Radha Radha

Drama Romance

என் தோழி என் காதலி பாகம் 3

என் தோழி என் காதலி பாகம் 3

2 mins
343


நேரம் இரவு 2.30 மணி.... விஜி கு தண்ணீர் தாகம் எடுக்க சமையல் அறைக்கு சென்றாள்....தான் தூங்குவதற்கு முன்பு எப்போதும் தண்ணீர் பிடித்து வைப்பது வழக்கம்... இன்று மிகவும் சோர்வாக இருந்ததால் சீக்கிரம் உறங்கி விட்டாள்....


விஜி தனது அறையில் இருந்து சமையல் அறை வருவதற்கு சிறிது தயங்கினாள்.. காரணம் இருட்டு என்றாள் விஜிக்கு பயம்...


அம்மா அப்பா வை பிரிந்து சென்னையில் தங்கிய அனைத்து இரவுகளும் அவளது அறை மின் விளக்குகளால் ஜொலித்து இருக்கும்


அனைத்து அறைகளிலும் சிறிய மின் விளக்கு இரவு முழுக்க எரிந்து கொண்டிருக்கும்....


தனது அறையிலிருந்து தயங்கியபடியே விஜி சமையல் அறைக்கு சென்று தண்ணீர் பருகிவிட்டு தனது அறையை நோக்கி நடக்கும்போது சமையலறையிலிருந்து ஏதோ ஒரு பொருள் கீழே விழ அலறி கத்தினாள் விஜி


"ரமணி ரமணி எங்க இருக்கீங்க"

"ரமணி ரமணி எங்க இருக்கீங்க"


தூங்கிக்கொண்டிருந்த ரமணி பயந்து எழுந்தாள்..


என்னாச்சு... விஜி என்ன ஆச்சு...


ரமணி... ரமணி.... சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் கேட்குது...


நான் தண்ணீர் குடிக்க சமையல் அறைக்கு வந்தேன்...தண்ணி குடிச்சிட்டு போகும் போது ஏதோ சத்தம் கேட்டுச்சு எனக்கு பயமா இருக்கு ரமணி....


ரமணிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் "அதெல்லாம் ஒன்னும் இல்ல, இருங்க... நான் போய் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி நடந்தாள்..


விஜி ரமணியின் கைகளை பிடித்து "யாராவது இருக்கப் போறாங்க பார்த்து" என்றாள்...


ரமணி புன்முறுவலுடன் "ஒன்னும் இல்ல இருங்க நான் பக்கறேன்" என்றாள்..


ரமணி சமையலறையை நோக்கி நடந்தாள் "விஜி இங்க வாங்க சமையல் அறையில் எதுவும் இல்லை ஜன்னல் திறந்திருந்தது காற்றில் அசைந்து இருக்கும் நீங்க பயப்படாம போய் தூங்குங்க நான் இங்க ஹால தான இருக்கேன்" "யாரும் இங்க வர மாட்டாங்க... நீங்க போய் தூங்குங்க என்றாள்..."


விஜி தயக்கத்தோடு ரமணி நீங்க ஏன் இங்க தூங்குரீங்க....வாங்க ஒன்னாவே தூங்கலாம்...


இல்ல பரவால்ல .... விஜி... U go to Sleep.... Im comfortable என்றாள்....


இல்ல வாங்க ரமணி....


இருவரும் ஒரே அறையில் ஒன்றாக உறங்கினர்....


விடியற்காலை 7.30 மணி...


விஜி தூக்கத்திலிருந்து எழுந்தாள்


அருகில் உறங்கிக்கொண்டிருந்த ரமணி இல்லை


சமையலறையிலிருந்து சத்தம் கேட்டது ரமணி அங்குதான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள் விஜி


கல்லூரி செல்வதற்கு தயாராகி விட்டு பயிற்சிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்...


 "Happy morning Ramani...."


 "Happy morning விஜி..., How s sleep"


Ya its good...Thank u ramani...


ரமணி "இதுக்கு எல்லாம் எதுக்கு நன்றி.... சரி ரெடியா நீங்க..."


விஜி "நான் ரெடி"


ரமணி " சரி வாங்க சாப்பிட்டு போயிடலாம்"


விஜி மனதில் hy no thanks I'm not hungry என்று சொல்ல தோன்றியது... நேற்றைய இரவு என்ன நடந்தது என்று நினைவுக்கு வந்தது "வேணாம் வேணாம் முத வாட்டி சொல்லும் போதே சாப்பிட போய்விடுவோம்"


விஜி எதுவும் சொல்லாமல் சாப்பிட அமர்ந்தாள் 


ரமணிக்கு விஜியின் முகத்தை பார்த்து அவள் நினைப்பதை எண்ணி புன்முறுவல் செய்துவிட்டு இட்லியும் சாம்பாரும் வைத்தாள் பின்னர் இருவரும் சாப்பிட்டு எழுந்தனர்.....


"thank you ramani"


It's fine viji...


 "சரி காலேஜுக்கு எப்படி வரீங்க நானும் காலேஜுக்கு தான் போறேன் வாங்க ஒன்னா போயிடலாம்...." என்றாள் ரமணி


"இல்ல பரவால்ல ரமணி நான் கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கணும் நான் வாங்கிட்டு வந்துடுறேன்"


" பரவால்ல வாங்க வாங்கிட்டு ரெண்டு பேரும் ஒன்னாவே போலாம்"


" இல்ல பரவால்ல தேங்க்யூ ரமணி I will Manage"


"சரி ஓகே பத்திரமா வாங்க நான் உங்கள காட்பாடியில் இறக்கிவிடரேன்... பாத்து வாங்கிட்டு வாங்க...


"சரி ஓகே ரமணி"


" சரி ஓகே விஜி"


(ரமணி தனது வண்டியில் விஜியை காட்பாடி பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு கல்லூரிக்கு சென்றாள்")


தொடரும்...



Rate this content
Log in

Similar tamil story from Drama