நிலவின் தோழி கனி

Drama Romance Fantasy

4.5  

நிலவின் தோழி கனி

Drama Romance Fantasy

என் கண்ணானவனே

என் கண்ணானவனே

12 mins
354


என் கண்ணானவனே.....


கன்னியாகுமரி...


அழகிய காலை பொழுது.... சூரியன் தன் பொன்னிற கதிர்களால் புதிதாய் பிறந்த குழந்தை போல் பரந்து விரிந்த கடலின் அடியில் இருந்து எட்டி எட்டிப் பார்த்து இப்புவி உலகிற்கு வந்தது. 


"அம்மா எல்லாம் ரெடியா எனக்கு டைம் ஆச்சுமா சீக்கிரம் அண்ணா நீங்க ரெடியா கிளம்பிட்டியா இல்லையா 😡" என்றாள் மிருதுளா.


"பாப்பா எதுக்கு இவ்வளவு அலப்பறை பண்ற நீ தானமா காலேஜ்க்கு போற நாங்க இல்லையே" என்றான் மிருதுளாவின் அண்ணன் சுரேஷ்.


"அண்ணா பயமா இருக்கு" அவள் தைரியமாக காட்டிக்கொள்ள முயற்சித்தாலும் குரல் தழுதழுத்தது.


"மிருது குட்டி உன்னை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் கண்ணு" என்று தன் பிள்ளைக்கு ஆறுதல் சொன்னார் மங்கை.


மிருதுளா இப்போது தான் பொறியியல் கல்லுரியில் முதல் வருடம் சேர போகிறாள். இதற்கு முன் கொஞ்சம் அவளை பற்றி பார்ப்போம்.


மிருதுவிற்கு கண்கள் தெரியாது. சிறுவயதில் அவளின் கண்களின் நரம்பு மண்டலத்தில் பிரச்சினை ஏற்பட்டு கண் பார்வை போய்விட்டது. கண்களை மாற்றி அறுவை சிகிச்சை செய்தால் தான் பார்வை தெரியும் அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினர்.

ஆனால் அப்போதைய குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமடைந்து இருந்ததால் எதையும் சரி செய்ய இயலவில்லை.

பின்னர், மிருதுளாவின் தந்தையின் இழப்பு என்று அவளின் வாழ்க்கை கண்களுக்கு காட்சிகள் இல்லாமலே சென்று விட்டது.


மிருதுளா படிப்பில் கெட்டிக்காரி. பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவி. ஆசிரியர்களின் செல்லமான மாணவி. இப்போது என்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறாள்.


மிருதுளாவை பார்ப்பவர்களுக்கு அவளுக்கு கண்கள் தெரியாது என்று சொல்லவே முடியாது அவளின் கூர்மையான கத்தி போன்ற கருவிழிகள் அப்படி. மிருதுளா ஐந்தடி உயரத்தில் கோதுமை நிறத்தில் அளவான நாசி கிள்ளி கொஞ்ச தூண்டும் புசுபுசுவென ஆப்பிள் கன்னங்கள் பட்டு போன்ற சிவந்த இதழ்கள் இடை வரை நீண்ட அடர்த்தியான கூந்தல் என்று செதுக்கி வைத்த சிலை போல் இருப்பாள்.


மிருதுளாவின் அழகை பார்த்து நிறைய பேர் சுத்தியிருக்கிறார்கள். ஆனால், அவளுக்கு கண்கள் தெரியாதுன்னு தெரிந்ததும் யாரும் வரமாட்டார்கள்.


மிருதுளா எங்கே போனாலும் அவள் அண்ணன் சுரேஷ் தான் கூட்டிச் செல்வான். அப்படி இல்லை என்றால் அவளின் உயிர்த்தோழி சிந்துஜா உடன் செல்வாள்.


மிருதுளாவை எப்படியோ சமாதானம் செய்து விட்டு அவளின் அண்ணனே முதல் நாள் கல்லூரிக்கு கூட்டிச் சென்றான்.


மிருதுக்காக கல்லூரி வாசலில் சிந்து காத்துக் கொண்டு இருந்தாள்.


மிருதுவை கண்டதும் புன்னகைத்து கையசைத்த சிந்து சுரேஷிடம் சென்று, "என்ன அண்ணா உங்க பாசமலர் இன்னைக்கு ஒப்பாரி வைத்திளா" என்று மிருதுவை முறைத்து கொண்டே சொன்னாள்.


"பாப்பா ஒன்னும் ஒப்பாரி எல்லாம் வைக்கலை சிந்து கொஞ்சமா பாப்பா பயந்துட்டா அதான் அவளை உற்சாகப்படுத்தி கூட்டிட்டு வந்தேன்" என்றான் சிரித்து கொண்டே....


சிந்து, "மேய்க்குறது எருமை இதுல பெருமை வேறயா அண்ணா உங்களுக்கு உங்களால் தான் அவள் தைரியமாக இருக்கவே மாட்டேன்குறா"


"விடுமா பாப்பா சின்ன பொண்ணு தான"


"எப்படியோ போங்க அண்ணா நீங்களும் திருந்த மாட்டீங்க உங்க பாசமலரும் திருந்தமாட்டா சரி டைம் ஆச்சி அண்ணா நாங்க கிளம்புறோம்"


"சரிமா பாய் பாப்பா அண்ணா போய்ட்டு வரேன் டா"


"ம்ம் சரி அண்ணா டாட்டா"


"உங்கள் பாசமலரு இப்ப கேஜி படிக்குற பாப்பா கட்டிப்பிடித்து அழுகுங்க ரெண்டு பேரும்" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் சிந்து.


"வாலு என்னையும் பாப்பாவையும் கிண்டல் பன்றியா"


"மிருது வாடி நாம போகலாம் உன் அண்ணன் மொக்கை போட்டுட்டே இருப்பாரு"


சுரேஷும் சிரித்துக்கொண்டே இவர்களிடம் இருந்து விடைப்பெற்றான்.


மிருதுவும் சிந்துவும் சிரித்துப் பேசிக் கொண்டே கல்லூரியில் சென்று தங்களின் வகுப்பறையை தேடி கொண்டிருந்தனர்.


அப்போது தான் மிருதுளாவை பார்க்கிறான் தீபக்தேவ்.


ஆறாடிக்கும் சற்று கூடுதலான உயரம். வெள்ளை நிறத்தில், எப்போதும் காற்றில் ஆடும் கேசம், கூர்மையான நாசி, அளவாய் சிரிக்கும் இதழ்கள், பாதி முகத்தை மறைத்துள்ள டிரிம் செய்யப்பட்ட தாடி என்று பெண்களை வசிகரிக்கும் அழகில் உலா வருபவன் தீபக்தேவ்.


தேவ் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மெக்கானிகல் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். ரொம்ப நல்ல பிள்ளை.. வீட்டிற்கு மூத்தப்பிள்ளை.. அம்மாவின் செல்லப்பிள்ளை.. கல்லூரியின் மாணவத் தலைவன்.. எல்லாரிடமும் இயல்பாக பழகக்கூடியவன்.. பெண்கள் எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும்.. ஆனால் இவனோ எந்த பெண்ணையும் பார்த்தது இல்லை.. தேவை இருந்தால் மட்டுமே ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான் அவ்வளவு தான்..


ஆனால், இப்போது மிருதுளாவை பார்த்தப் பின் அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் தீபக்தேவ்.


தேவ் தலையில் கொட்டினான் அவனின் நண்பன் நித்தின் .


"அந்த பொண்ணு போய் ரொம்ப நேரம் ஆச்சி டா தேவ் நீயாடா இது...‌ அதும் ஒரு பொண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப்பது...‌ நீ ரோபோன்னுல நான் நினைத்தேன்"


தேவ் சிரித்துக் கொண்டே, "தெரியலை நித்தின் பட் ரொம்ப பிடிச்சிருக்கு அந்த குட்டிமாவ"


"என்னது குட்டிமா வா? " என்று வாயை பிளந்தான் நித்தின்.


"எதுக்கு இப்படி... வாய க்ளோஸ் பண்ணுடா எனக்கு காதல் மேல இதுவரை நம்பிக்கை இருந்தது இல்லை.. பட் குட்டிமாவை பார்த்ததும் இவள் தான் என் வாழ்க்கைன்னு மனசில் பதிஞ்சி போயிடுச்சு என்னமோ பண்ணிட்டா டா உனக்கு இது முட்டாள்தனமான தோனும் பட் எனக்கு அப்படி இல்லடா"


"தேவ் ஆர் யூ சிரியஸ்?"


"ஆமா அவளை பார்த்து ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது தான் ஆனால் எனக்கு என்னமோ ரொம்ப நாள் பழக்கப்பட்ட மாதிரி ஒரு உள்ளுணர்வு" என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்னான் தேவ்...


"ஒன்னும் இல்லை டா அவள் உனக்கு கிடைப்பாள் முதலில் அவளை பற்றி விசாரி தேவ்"


"ம்ம் செய்யலாம் நித்தின் பொறுமையா மேபி அவள் முதல் வருடமா இருக்கலாம்" என்று ஒரு பெருமுச்சி விட்டான் தீபக்தேவ்.


மிருதுளாவின் அன்றாட வாழ்க்கை எப்போதும் போல சென்று கொண்டிருந்தது.


தீபக்தேவ் தினமும் அவளை பார்ப்பான்... தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருப்பான்... அவளிடம் பேசலாம் என்று நினைப்பான்.. ஆனால் எப்போதும் கூடவே சிந்து இருப்பாள்.. அதனால் எல்லாம் சொதப்பி விடும்.


ஒரு நாள் சிந்து நேரமாக வீட்டிற்கு சென்றுவிட்டதால் மிருதுவின் அண்ணன் சுரேஷ் வரும்வரை காத்துக் கொண்டிருந்தாள் மிருதுளா. 


இதுதான் சமயமென்று தீபக் அவளிடம் பேசலாம் என்று போகிறான்.


"ஹலோ மிருதுளா" என்று அவளை கூப்பிட்டான் தேவ்.


அவள் நின்ற இடத்திலிருந்தே "யார் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்" என்று பதற்றமாக கேட்கிறாள்.


அப்போதுதான் தெரிகிறது அவனுக்கு மிருதுளாவிற்கு கண்கள் தெரியாது என்று...


தீபக்தேவ் அவளிடம் எதுவும் பேசாமல் சென்று விடுகிறான்.


சுரேஷ் வந்ததும் அவளும் தன் வீட்டிற்குச் சென்று விடுகிறாள்.


இங்கே தீபக்தேவ் விற்கு தூக்கமே வரவில்லை. ரொம்பவே டிஸ்டர்ப்பா இருந்தான். அவன் கண் முன்னே மிருதுளாவின் முகம் தான் வந்தது. அவன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை. அவனால் படிப்பிலும் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.


குழப்பமான மன நிலையிலேயே தீபக்தேவின் வாழ்க்கையில் இரண்டு மாதங்கள் உருண்டோடியது.......


பிறகு,,,,,,


ஒரு நாள் எப்படியோ ஒரு தெளிவான முடிவுக்கு வந்தவனாய் கல்லூரிக்குச் செல்கிறான் தீபக்தேவ்.


அன்னைக்கென்று பார்த்து சிந்துஜா கல்லூரிக்கு வராததால் தானும் வகுப்பிற்கு செல்ல விருப்பம் இல்லாததால் வகுப்பிற்கு போகாமல் தன் வகுப்புத் தோழி உதவியோடு கேன்டீனில் சென்று அமர்ந்தாள் மிருதுளா.


கேன்டீனில்ல் அவ்வளவாகக் கூட்டமில்லை ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.


இதுதான் அவளிடம் பேச சரியான நேரம் என்று அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான் தேவ்.


மிருதுளாவின் பக்கத்தில் திடீரென்று யாரோ அமர்வதை உணர்ந்து பயந்தாள்.


பயத்தில் வார்த்தை வராமல்," யா.. யார் நீங்..க எது..க்கு இ...இங்கே உட்..கார்..ந்தீங்க" என்றவளுக்கு கண்கள் கலங்கியது.


அதை மனம் நொந்து பார்த்த தேவ், "ஹலோ ஹலோ ஒரு நிமிஷம் பொறுமையா இருங்க பயப்படாதீங்க ப்ளீஸ் தயவுசெய்து பயப்படாதீங்க மிருதுளா நானும் இந்த கல்லூரி தான். மாணவர் தலைவனும் கூட மா ஸோ பி கூல்" என்று அவளை சமாதானப் படுத்த முயற்சித்தான்.


அவளும் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு தண்ணீரை குடித்து சிறிது நிதானப்படுத்திக் கொள்கிறாள்.


பிறகு...


தேவ் பேசத் தொடங்கினான்.....


"ஹாய் மிருதுளா என் பெயர் தீபக்தேவ். மூன்றாம் ஆண்டு படிக்கிறேன் மா இப்ப கல்லூரி மாணவத் தலைவனாக இருக்கிறேன்" என்று நிறுத்தினான்.


மிருதுளா குழப்பமாக, " சரி இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க"


தேவ் அவளின் குழந்தை தனத்தை ரசித்துக் கொண்டே, "குட்டிமா உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட நான் சொல்லுவேன்டா மா நேரடியாகவே சொல்லிடுறேன் குட்டிமா ஐ லவ் யூ மிருதுளா "


மிருதுளா விற்கு ஒரு நிமிடம் ஒன்றும் விளங்கவில்லை. ஷாக் ஆகிவிட்டாள்.


அவளுக்கு பயமும் கோபமும் ஒருங்கே சேர்ந்து வந்தது. தன்னை திடப்படுத்தி கொண்டு தைரியம் வரவழைத்து பேசத் தொடங்கினாள் மிருதுளா.


"ஹலோ ஹலோ.. வெயிட் வெயிட்.. நீங்க என்ன சொல்றீங்க என்னை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு ஹான்...."


"கண்ணு தெரியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் குட்டிமா சாரிடா மா இப்படி சொன்னதில் உன் மனசு கஷ்டப்பட்டு இருந்தால்"


"தெரியுதுல அப்பறம் எதுக்கு காதல் கீதல்ன்னு சொல்லிட்டு பண்றீங்க"


"ஒரு நிமிஷம் குட்டிமா"


"மொதல்ல இந்த குட்டிமான்னு சொல்றதை நிறுத்துங்க"


தேவ் லேசாக சிரித்து,"சரி ஓகே மிஸ். மிருதுளா ரவிந்தர்... உங்களுக்கு கண் தெரியாதுன்னா லவ் பண்ண கூடாதா? ஏன் உனக்கு ஒரு அழகான மனசு இருக்குல அப்பறம் என்ன வேணும் கண்ணால காண்கிற காட்சிகளை விட மனதால் காட்டும் அன்பை நினைத்து சந்தோஷப்படுவது எவ்வளவோ இருக்கு"


"பீளிஸ், ஜஸ்ட் ஸ்டாப் இட்... எனக்கு எந்த லவ்வும் தேவையில்லை கன்றாவியான கல்யாணமும் வேண்டாம்.....

எனக்கு என் அம்மா அண்ணா மட்டும் போதும்"


அவன் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக "மிருதுளா ஏன் கண் இல்லாதவங்க காதலோ கல்யாணமோ பண்ண கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா? அம்மாவும் அண்ணனும் எத்தனை நாள் இருப்பாங்க சொல்லுங்க மிஸ். மிருதுளா ரவிந்தர்"


"போதும் நிறுத்துங்க.... இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்" என்று சொல்லிட்டு கோபமாக தட்டுத்தடுமாறி சென்று விடுகிறாள் மிருதுளா.


தேவ்வும் அவள் செல்லவதையே வேதனையோடு பார்த்துக் கொண்டு இருந்தான்.


மிருதுளா இதை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை ஆனால் சிந்துஜாவிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டாள்.


சிந்துவோ தேவ்வின் நற்குணங்களை பற்றி எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறாள். அதனால் தன் தோழியின் வாழ்க்கைக்கு தீபக்தேவ் சரியானன் என்று தான் எண்ணினாள். ஆகையால் தேவ்விற்கு ஆதரவாக இருந்தாள் சிந்து. ஆனால் மிருதுவோ அவளுக்கு பிடி கொடுக்கவே இல்லை.


தீபக்தேவ்வும் மிருதுளாவின் மனசை எப்படியாவது மாற்ற முயற்சி எடுத்து கொண்டே இருந்தான்.


இப்படியே ஒரு வருடங்கள் ஓடிட......


கல்லூரி தேர்வுகள் முடிந்து விடுமுறையும் வந்தது. தீபக்தேவ் தன் சொந்த ஊர் நாகர்கோவில் சென்று விட்டான்.


ஆனால், இங்கு மிருதுளாவின் மனமோ அவளிடம் இல்லாமல் அவளை உருகி உருகி காதலித்த தேவ் இடம் தஞ்சம் கொண்டிருந்தது.


இவ்வளவு நாள் அவன் காலேஜில் இருந்தபோது இல்லாத நினைப்பு....


மிருதுளாவை விட்டு அவன் கொஞ்சம் விலகியதும்(ஊருக்கு சென்றது) அவனின் நினைப்பு இவளை முழுவதுமாய் ஆக்கிரமித்தது.


அப்போது தான் மிருதுளாவே புரிந்துக் கொண்டாள்.... தீபக்தேவ் மீது தனக்கும் காதல் உள்ளதென்று....


மிருதுளா அவளை ஏதோ புதிதாக உணர்ந்தாள்..... அவளுக்கு இப்போதே தேவ்விடம் பேச வேண்டும் போல தோன்றியது.... அவளே அவளை திட்டிக் கொண்டிருந்தாள்.... 


தேவ் அவளிடம் பேச வருவது... சிந்து அவனுக்காக சப்போட் செய்வது... இவள் அவனை திட்டி முறைப்பது.... என்று இதை எல்லாம் எண்ணி நகைத்து கொண்டிருந்தாள் மிருதுளா.


அவள் தனியாக சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்த அவளின் தாய் மங்கை... சுரேஷை கூப்பிட்டார்.


"என்னடா ஆச்சு என் புள்ளைக்கு இப்படி தனியா சிரித்துக் கொண்டு இருக்கா 🙄 டேய் ராசா என் தங்கத்தை எந்த காத்து கருப்பு அண்டுச்சின்னு தெரியலை வாடா அவளை சாமியார் கிட்ட கூட்டிட்டு போகலாமா?? " என்று கவலைப் பட்ட தாயிடம் 


சுரேஷ் சிரித்துக் கொண்டே, "அம்மா நம்ம பாப்பாக்கு ஒன்னும் இல்லமா எதாச்சும் ஜோக் நினைத்து சிரித்திருப்பாள் நீங்க உங்க வேலையை பாருங்க மா"


"என்னமோ போடா அவள் இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை கொஞ்சம் நாளா தான் அவள் புதுசு புதுசா பண்றாள்" என்று சுரேஷிடம் புலம்பிக் கொண்டே சென்றுவிட்டார்.


சிந்து மூலமாக தன் பாப்பா யாரை நினைத்து சிரித்து கொண்டிருக்கிறாள் என்று அறிந்த சுரேஷ் "என்றும் தன் தங்கை சந்தோஷமாக வாழனும்" என்றெண்ணி சென்று விடுகிறான்.


மிருதுளா மொட்டை மாடியில் தனியாக தீபக்தேவ்வைப் பற்றி நினைத்து கொண்டிருக்க....


அப்போது அவளுக்கு தேவ் குட்டிமா என்று கூப்பிடுவது போலவே தோன்றுகிறது.... தன் தலையில் மெல்லமாய் தட்டி பிரமைன்னு நினைத்து சிரிக்கிறாள் மிருதுளா...


ஆனால், மறுபடியும் அவளுக்கு குட்டிமா என்ற அழைப்பு கேட்டது... 


தேவ்... தேவ்... என்று இருமுறை அழைக்கிறாள். ஆனால் எந்த ஒரு சத்தமும் இல்லை.... அவளின் முகம் சோகமாக மாறிவிடுகிறது.


அவள் தனியாக தான் இருக்கிறாள் என்று நினைத்து தேவ்வை திட்டிக்கொண்டு இருந்தாள் மிருதுளா.


"அய்யோ இந்த தேவ் பையன் இருந்தவரைக்கும் மட்டும் அவன் நினைப்பே இல்லாமல் இருந்தான் ஆனா இப்போ என் மண்டைக்குள்ள அவன் மட்டும் தான் இருக்கிறான்.. அவகிட்ட இப்பவே பேசணும் போல இருக்கு... நான் அவனை எவ்வளவு திட்டி இருப்பேன் ஆனால் தேவ் ஒரு சின்ன கோபம் கூட பட்டதில்லை நான் எதை சொன்னாலும் சிரிச்சிக்கிட்டே இருப்பான்... என் மேல கிறுக்கு எதாச்சும் புடிச்சி இருக்கா... நான் என்ன அவ்வளவு அழகானவளா? எனக்கு கண்ணு கூட தெரியாது இருந்தும் என்னை காதலிக்கிறானே!!! என்னோட தேவ் இப்பல்லாம் என்ன ரொம்ப தொல்லை பண்றான்... "


"குட்டிமா நான் எங்கே உன்னை தொல்லை பண்ண நீதான் என்னை ஒரு வருடமாக கிறுக்குப் பிடித்து அலைய வைக்கிற குட்டிமா"


ஆம்..... தீபக்தேவ் அவள் வீட்டு மொட்டை மாடியில் தான் இவ்வளவு நேரம் நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இல்லை இல்லை அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.


ஆனால், மிருதுளாவோ இதையும் பிரமை என நினைத்துக் கொள்கிறாள். மொட்டை மாடியில் இருந்து வீட்டிற்கு செல்ல மெதுவாக நடந்து போகிறாள்.


"குட்டிமா உன்னோட தேவ் தான் வந்திருக்கேன் என் குட்டிமா தேடி அவளோட வீட்டுக்கு" அவனின் இழல் பிரியாமல் சிரித்துக்கொண்டே காதலோடு அவளிடம் சொல்கிறான் தீபக்தேவ்.


மிருதுளா அதிர்ச்சியாகி, "நீங்களா"


"எஸ் நானேதான்... உன்னோட தேவ் தான்... குட்டிமா"


"எ.. எப்போ வந்தீங்க நான்... சொ..ன்ன..தெல்லாம் கேட்...டு..ட்டீங்..?களா என்...ன? " என்று திக்கி திணறி சொல்லிக் கொண்டிருந்தால் மிருதுளா.


"ஆமா குட்டிமா என்னை பிடித்து இருக்குன்னு சொல்ல வேண்டியது தானே.... இப்போ கூட சொல்ல கூடாதா குட்டிமா என் காதலை????"


மிருதுளா எதையுமே சொல்லவில்லை... சிறிது நேரம் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான் தேவ். 


அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததால், "சரி குட்டிமா நீ எதையும் சொல்ல வேண்டாம் உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம் புரியுதா நீயும் என்னை காதலிக்குறன்னு தெரிஞ்சிக்கிட்டேன் எனக்கு இதுவே போதும் தீபக்தேவ் உன் வாழ்க்கையில் இருந்தாலும் இல்லாட்டியும் நீ எப்பவும் சந்தோஷமா தான் இருக்கணும் புரியுதா... இந்த தீபக்தேவ் மனசுல எப்பவும் மிருதுளாக்கு மட்டும்தான் இடம்...‌ லவ் யு குட்டிமா.... நான் போறேன் குட்டிமா பை....."


மிருதுளா அவனுக்கு எதுவும் சொல்லாததற்கு காரணம் இன்னும் இரு மாதத்தில் தீபக்தேவ்வின் பிறந்தநாள் வருவதால் அன்று சொல்லலாம் என்று திட்டம் தீட்டி இருந்தாள்.


அவன் சொன்னதை எல்லாம் எண்ணி எண்ணி நினைத்துக்கொண்டே அவளின் காதல் உலகில் தீபக்தேவ்வின் நினைவோடு வாழ்ந்து கொண்டிருந்தாள் மிருதுளா.


கல்லூரி திறக்கும் நாளும் வந்தது.....


மிருதுளா கல்லூரிக்கு வந்ததும் முதல் வேலையாக சிந்துவின் உதவியோடு தீபக்கை தேடிக்கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தீபக்தேவ் எங்கு தேடியும் இல்லை. அவன் கல்லூரிக்கும் வரவில்லை ஹாஸ்டலுக்கும் வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால் மிருதுளா மிகவும் சோர்ந்து காணப்பட்டால் அவளின் முகத்தில் உற்சாகமே இல்லை அவனின் நினைவு மட்டுமே முழுதாய் ஆக்கிரமித்து இருந்தது.


அதே சமயத்தில்......


மிருதுளாவின் தாயும் அண்ணனும் அவளுக்காக கடினப்பட்டு உழைத்து பணத்தை சேர்த்தனர்.இத்தனை வருடங்களாக மிருதுளாவின் சிகிச்சைக்காக சேர்த்து வைத்த பணம் இப்போது போதுமான அளவு இருந்தது. 


சுரேஷுக்கு தெரிந்த நண்பர் மூலம் கண் மருத்துவரை அணுகி அவளுக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாமா என்று விசாரித்து அதற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தது.


"அவளுக்கு சரியான கண் டோனர் கிடைத்தால் அதை மாற்றி அறுவை சிகிச்சை செய்யலாம் அப்படி செய்தால் மிருதுளாவிற்கு நிச்சயம் கண் பார்வை தெரியும்" என்று உறுதியளித்து கண் மருத்துவர் கூறினார்.


அதுவரை மிருதுளா மருத்துவமனையிலேயே தங்கி தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால்.


ஒரு வாரத்திற்கு பிறகு.....


மிருதுளாவின் அண்ணன் சுரேஷுக்கும், தாய் மங்கைக்கும் அவளுக்கு பொருந்தக்கூடிய கண்கள் கிடைத்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் நடந்தன.


மிருதுளாவிற்கு இந்த அறுவை சிகிச்சையில் பயம் இருந்தாலும்... எல்லோரையும் பார்க்க போகிறோம்.... அதுவும் அவளின் தேவ்வை பார்க்கும் ஆர்வத்தில் இருந்தால்...


மிருதுளாவிற்கு கண்கள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்து முடிந்தது.


ஒரு மாதம் அவள் மருத்துவமனையில் தான் இருந்தாள். 


மருத்துவர்கள் அவளின் கண் கட்டை அவிழ்த்து எல்லாம் சரியாக உள்ளதா என்று சரிபார்த்தனர். பின்னர், அவள் கண்களை மெதுவாக திறக்க சொன்னார்கள்.


மிருதுளாவும் அது போல செய்தாள். முதலில் வெளிச்சத்தில் அவளுக்கு கண்கள் கூசியது. பிறகு, மங்கலான தெரிந்து அப்புறம் அவளால் நன்றாக காண முடிந்தது. 


பின்னர், அவளுக்கு உற்ற அறிவுரைகள் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


ஒரு மாதத்திற்கு பிறகு....


"அம்மா பிளீஸ் நான் நல்லா தான் இருக்கேன் கல்லூரிக்கும் கிளம்பிட்டேன்... மறுபடியும் ஆரம்பிக்காத அம்மா" என்று மங்கையின் கன்னத்தை பிடித்து கிள்ளினாள் மிருதுளா.


"ரொம்ப செல்லம் குடுத்து நாங்களே கெடுத்துட்டோம் தங்கம் சொல் பேச்சை கேட்க மாட்ற"


அவள் அண்ணனிடம் சென்று முகத்தை தூங்கி வைத்து கொண்டு, "பாரு அண்ணா மங்கம்மா திட்டுறாங்க"


"உன் நல்லதுக்கு தான பாப்பா அம்மா சொல்றாங்க இப்ப நீ காலேஜ் போய்தான் ஆகனுமா பாப்பா" என்றான் சுரேஷ் கெஞ்சுதலாக..


"ஆமாம் போய்தான் ஆகனும்" என்று பிடிவாதமாக இருந்தாள் மிருதுளா.


அடம்பிடித்து கல்லுாரிக்கும் வந்துவிட்டால். என்றும் போல் அன்றும் காத்துக் கொண்டு இருந்தாள் சிந்து.


கல்லூரிக்கு சென்றதும் மிருதுவின் கண்கள் முதலில் தேடியது அவளின் தீபக்தேவ்வை தான். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிந்துவிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்லி விட்டாள்.


சிந்துவை வகுப்பிற்கு அனுப்பிவிட்டு மிருதுளா கேன்டீனிற்கு சென்றாள்.


தேவ் முதலில் அவளிடம் காதல் சொன்ன இடத்தில் சென்று அமர்ந்தாள். அவளையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. 


அப்போது தான் நித்தின்(தீபக்தேவ் நண்பன்) மிருதுளாவை பார்த்தான்.


"மிருதுளா நீ எப்போமா காலேஜ் வந்த எதுக்கு இப்பவே காலேஜ் வந்தமா"


"அண்ணா யாரு நீங்க எனக்கு தெரியலையே அண்ணா நீங்க யாருன்னு" என்று குழம்பி போய் அவனிடம் கேட்டாள்.


"நான் தீபக்தேவ் ப்ரெண்ட் மா"


அந்த நொடி அவள் முகத்தில் ஆயிரம் விளக்குகள் எரிந்து பிரகாசிப்பது போல் ஒளிர்ந்து நித்தினிடம் துள்ளி குதித்து கேட்டால் "அண்ணா நீங்க தேவ் நண்பனா எங்க அண்ணா அவரு நான் எல்லா இடத்திலும் தேடிட்டேன் ஆனால் அவரு எங்கேயும் இல்லை அவரைப் பற்றி எதாவது தெரியுமா? தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன் இல்லாட்டி அவரோட வீட்டு முகவரி இருக்குதா இருந்தால் தாங்க நான் போய் அவரை பார்த்துக்கிறேன் ப்ளீஸ் அண்ணா" என்று உற்சாகத்துடன் ஆரம்பித்து அவனைக் காணாது தவித்த கவலையில் முடித்தாள் மிருதுளா.


"என் கூட வரியா மிருதுளா நீயும் எனக்கு ஒரு தங்கச்சி போலதான் உன்னை கூட்டிட்டு போகவா"


"சரி அண்ணா வாங்க போகலாம் எனக்கு அவரைப் பார்த்தே ஆகணும்" என்று பட்டென கூறினாள் மிருதுளா.


நித்தினின் காரிலேயே மிருதுளாவை நாகர்கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான்.


மிருதுளாவிற்கு ஏதோ தப்பாக நடப்பது போலவே தோன்றுகிறது.


ஒரு பெரிய வீட்டின் முன்பு வீட்டின் நித்தினின் கார் நிற்கிறது.


"வா மிருதுளா உள்ள போகலாம்" என்று அவளை அழைத்து சென்றான் நித்தின்.


ஏனோ மிருதுளாவின் இதயம் படபடவென்று அடித்து கொண்டது.


அந்த பெரிய வீட்டின் ஹாலில் நுழைந்ததும் அங்கு நான்கு அடி உயரத்தில் இருந்த ஒரு ஃபோட்டோவிற்கு மாலையிட்டு இருந்தது. அதில் கோட் சூட் அணிந்து அழகாய் சிரித்துக் கொண்டு இருந்தான் தீபக்தேவ்.


மிருதுளா அந்த புகைப்படத்தை தான் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு கண்கள் தானாகவே கலங்கியது. ஏதோ ஒரு வலி அவளை உயிர் வரை சென்று வதைத்தது.


நித்தின் அந்த படத்தை காட்டி ஒரு பெருமூச்சு விட்டு, "நீ தேடி வந்த உன்னோட தேவ் மிருதுளா" என்று சொன்னது தான் அங்கேயே தரையில் அமர்ந்து விட்டாள் மிருதுளா.


அவள் கத்தி கதறவில்லை. ஆனால் அவளின் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருந்தது.


அப்போது அங்கு வந்த தேவ்வின் தாய் காமாட்சி மிருதுளாவை கண்டதும் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு, "மிருதுளா இப்படி இருக்காத மா உன் சந்தோஷம் தான் என் பையனோட சந்தோஷம்ன்னு எப்பவும் சொல்லுவான் மிருதுளா.... உன்ன சந்தோஷமா வைத்துக்க தான் தீபக் ஆசைப்பட்டான்... என் பையன் நினைப்பு எப்பவும் உன் மேல தான் மா....‌ எப்பவும் உன் கூட தான் இருப்பான்னு சொல்லுவான் ஆனால் இப்ப....." அதற்கு மேல் அவருக்கு பேச நா எழவில்லை.


"அதுக்கு ஏன் அத்தை என்ன விட்டு போகனும் அவரை பார்க்க நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா அத்தை. ஆனால்,உங்க பை.. " அவளால் அதற்கு மேல் ஒன்றும் முடியவில்லை துக்கத்தில் தொண்டை அடைத்தது.


காமாட்சிக்கும் அவரின் மகனின் இழப்பை தாங்க முடியாமல் அவரும் அழுதுவிட்டார்.


தன் அம்மா அழும் சத்தத்தை கேட்டு மாடியில் இருந்து தர்ஷினியும் வர்ஷினியும் ஒடி வந்தனர்.


தாயும் மிருதுளாவும் அழுவதைப் பார்த்து அவர்களும் அழுதனர். நித்தினும் இவர்களை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவனும் நண்பனின் நினைவில் மூழ்கி விட்டான்.


பிறகு, தேவ்வின் தந்தை விஷ்வாநாதன் வந்தார். பின்னர், மிருதுளா பார்த்ததும் அவளை அழைத்து அவளின் கண்களை துடைத்து விட்டு, "மிருதுளா நீ அழக்கூடாது மா எப்பவும் சிரித்து கொண்டே தான் இருக்கனும் ஏன்னா அவன் உனக்குள்ள தான் இருக்கான்.... உன்னோட கண் கொண்டு தான் இன்னுமும் அவன் இந்த உலகத்தை பார்க்கிறான் மிருதுளா"


அப்போது தான் அவளுக்கே உரைத்தது இப்போது அவள் காணும் கண்கள் தேவ்வின் கண்கள் என்று.....


நேராக அவன் தாய் காமாட்சியிடம் சென்று, "அத்தை ஏன் எப்படி அத்தை அவர் இறந்தார்" என்று சுருதியே இல்லாத குரலில் கேட்டால் மிருதுளா.


காமாட்சி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மிருதுளாவிடம் பேச ஆரம்பித்தார்.


"உன் நினைப்பாவே இருக்கிறது என்று உன்னை பார்க்க கன்னியாகுமரி செல்வதாக எங்களிடம் கூறிச் சென்றான் மா... உன்னை பார்த்துட்டு உன்னிடம் பேசுனது எல்லாம் சந்தோஷமா சொல்லிட்டே வந்தான்...... அப்போ.... அப்போதான்.... மா... வர வழியில அவனுக்கு லாரி மோதி ஆக்சிடன்ட் ஆயிடுச்சு அந்த மயக்கத்திலும் அவன் கடைசியாக சொன்ன வார்த்தை குட்டிமா.. குட்டிமான்னு தானாம்.... அவன் அந்த நிலையிலும் அவன் கூட ஹாஸ்பிடல் வந்த ஒருத்தர்கிட்ட என் கண்ணு குட்டிமாக்கு கொடுக்க சொல்லுங்க நான் இருக்க மாட்டேன்னு சொன்னானாம்‌..... அவனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணவரு சொன்னாரு அவனை ஹாஸ்பிடலில் ஒரு மாதம் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.... அப்புறம் அவனோட மூளைக்கு போகிற நரம்புகள் எல்லாம் செயல் இழந்து போயிடுச்சு... இனி என் தீபக்‌... பிழைக்கவே.... மாட்டான்னு டாக்டர்ஸ் எல்லாம் சொல்லிட்டாங்க..... அப்புறம் அவனோட ஆர்கன்ஸ் எல்லாம் டோனேட் பண்ணிட்டோம் மிருதுளா.... என் பிள்ளையோட கடைசி ஆசையை நாங்க நிறைவேற்றிட்டோமா அவன் கண்களை உனக்கு பொருத்திட்டோம்" என்று தன் செல்ல மகன் தீபக்கின் நினைவில் மூழ்கி போனார் காமாட்சி.


மிருதுளா எதையுமே சொல்லாமல் உயிரற்ற ஜடமாய் சென்று நித்தினின் காரில் சென்று அமர்ந்தாள். யாரும் மிருதுளாவை தடுக்கவில்லை. நித்தினும் அவர்களிடம் இருந்து விடைபெற்று மிருதுளாவை அவள் வீட்டில் விட்டுச் சென்றான்.


மூன்று வருடங்களுக்கு பிறகு.......


மிருதுளா தன் கல்லூரி படிப்பை முடித்து விட்டாள். இப்போது அவள் ஒரு பெரிய டிராலியை எடுத்துக் கொண்டு தன்னவனின் பிறந்த வீட்டிற்கு வந்தாள்.


அவளை பார்த்து காமாட்சி, "மிருதுளா எப்படி மா இருக்க"


"அத்தை நான் உங்க மருமகள் தான?? உங்க பிள்ளை என் கழுத்தில் தாலி கட்டவில்லை என்றாலும் மனசு அளவில் நான் அவரோட பொண்டாட்டி தான...." அவள் கண்களில் குளம் போல் தேங்கி நின்றது கண்ணீர்.


அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... மிருதுளாவை அணைத்துக் கொண்டு உள்ளே கூட்டிச் சென்றார்.


அவள் வீட்டிலிருந்து போராடி தேவ் வீட்டிற்கு வந்துவிட்டாள் மிருதுளா. தேவ்வின் பெற்றோர்களும் அவளை மருமகளாக ஏற்றுக்கொண்டனர்.


பின்னர்,,,,,,,


அவள் தன் அடையாளத்தை மிஸ். மிருதுளா ரவிந்தரிலிருந்து மிஸஸ். மிருதுளா தீபக்தேவ் ஆக மாற்றிக்கொண்டாள்.


தற்போது தீபக்தேவ் பெயரில் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து ஆதரவற்றோர்களுக்கு ஆசிரமம் நடத்தி வருகிறாள்.


அந்த ஆசிரமத்தில் மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று வந்தது. அந்தக் குழந்தையை பார்த்ததும் மிருதுளாவிற்கு ரொம்ப பிடித்து விட்டது. 


அதனால் அந்த குழந்தையை தாய் என்று மிருதுளாவின் பெயரையும் தந்தை என்று தீபக்தேவ் பெயரையும் கொடுத்து தத்தெடுத்துக் கொண்டாள்.


அந்த குழந்தைக்கு தர்ஷன் தேவ் என்று பெயர்ச்சூட்டி தன் குழந்தையாகவே வளர்த்துக் கொண்டாள் மிருதுளா.


தேவ் குடும்பத்தை தன் குடும்பமாய் நினைத்து மூத்த மருமகளாக இருந்து அவர்களை அரவணைத்து வருகிறாள் மிருதுளா.


தீபக்தேவ் காதலின் நினைவோடும் தர்ஷன்தேவ் மழலைச் சிரிப்பாலும் குடும்பத்தையும் கவனித்து வாழ்ந்து வருகிறாள் மிருதுளா. 


தேவ் மேல் வைத்த காதலும் தர்ஷன் மேல் வைத்த தாய்மையின் பாசத்தாலும் இதுவரை உயிர்ப்புடன் ஜிவித்துக் கொண்டு இருக்கிறாள் மிருதுளா...


அவளின் தேவ் இந்த உலகத்தை விட்டுச் சென்றாலும்... அவள் மனதில் இன்றளவும் உயிரோடு தான் வாழ்ந்து (அவளின் மனதோடு காதலித்து) கொண்டிருக்கிறான்.


____ முற்றும்____



Rate this content
Log in

Similar tamil story from Drama