நிலவின் தோழி கனி

Romance Tragedy Fantasy

4  

நிலவின் தோழி கனி

Romance Tragedy Fantasy

உன்னை நேசிக்கிறேன் எப்பொழுதும்

உன்னை நேசிக்கிறேன் எப்பொழுதும்

10 mins
233


சென்னை இரயில் நிலையம்.....


பரபரப்பான சென்னை நகரத்தில் ஞாயிறு என்பதால் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.  


சென்னையின் மத்திய ரயில் நிலையத்தில் மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல மகிழ்ச்சியாக இருந்தனர்‌.


ஒரு மழலையின் கையில் பிஸ்கட்டை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் தன் தாயின் கரம் பிடித்து வந்துக் கொண்டிருந்தாள்.


மும்பை எக்ஸ்பிரஸ்...


மும்பைக்கு செல்லும் ரயிலில் ஏறினர். அங்கு ஒரு பெண்ணின் பக்கத்தில் இடம் இருந்தது.


அந்த குழந்தையின் தாய் அவளிடம், "எக்ஸ்க்யூஸ் மீ நான் இங்கு உட்காரலாமா??" என்றாள்.


ஆனால், அவளோ தன்னை மறந்த நிலையில் கண்ணில் கண்ணீரும் மனதில் வலியும் சுமந்து ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளுக்கு எதுவும் கேட்கவில்லை.


அந்தக் குட்டி வாண்டு, " ஆன்ட்டி ஆன்ட்டி" என்று அந்தப் பெண்ணின் தோளைப் பிடித்து உளுக்கினாள்.


அப்போது தான் தன்னிலை உணர்ந்து, " என்னடா குட்டி வேணும்" என்றாள்.


"நான் இங்கு உட்காரலாமா?" என்றால் மறுபடியும் அந்த குழந்தையின் தாய்.


"நீங்க உட்காருங்க அக்கா" என்றால் அந்த பெண்.


"ஆன்ட்டி என் பேரு மதிலா இது என் மம்மி" என்று சொன்னால் குட்டி வாண்டு மதிலா.


அவளுக்கு மதி என்ற பெயரை கேட்டதும் இன்னும் அதிகமாய் உள்ளம் கொதித்தது. கண்ணில் வந்த கண்ணீரை வெளிவிடாமல் இமையின் உள்ளே அடக்கிக் கொண்டாள்.


"ஹாய் மா நான் அனு. என் பொண்ணு மதிலா பெரிய வாயாடி மா பேசிக்கிட்டே இருப்பாள். உன் பெயர் என்ன??" என்றாள் அனு.


"என் பெ..ய.ர் பிர.. பிரதிக்ஷா (prathiksha)"


"என்னமா உன் பெயரை சொல்லவா இவ்வளவு தயக்கம்.. ஆமாம் நீ எங்கே போகணும்"


"அப்படி எல்லம் இல்லை அக்கா.. நான் வந்து மும்பை போகனும்"


"ஓ சரி பிரதிக்ஷா நானும் அங்கே தான் போக வேண்டும்" என்று அனு சொல்லி விட்டு தன் குழந்தையை கவனிக்க தொடங்கினாள்.


பிறகு, அனு எதுவும் பிரதிக்ஷாவிடம் கேட்கவில்லை.


பிரதிக்ஷாவின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.


அவளின் மனதில் காதல், கோபம், பாசம், வெறுப்பு என்று இப்படி பலதரப்பட்ட உணர்வுகள் அலை அலையாய் பொங்கிக் எழுந்து கொண்டிருந்தது.


அவளின் உயிருக்கு உயிரான மதியழகன் அவளுக்கு துரோகம் இழைத்திருப்பான் என்று அவளால் துளியும் நினைக்க முடியவில்லை. ஏனெனில், மதிக்கு அவள் என்றால் உயிர்.


ஆனால், மதியழகன் இன்று வரை அவளுக்கு ஒரு ஃபோனோ, மெசேஜோ, இல்லை கடிதமோ என்று எதையும் பண்ணவில்லை.


தன் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த தாலியை எடுத்து பார்த்தாள் பிரதிக்ஷா.


மூன்று வருடங்களுக்கு முன்பு, மதியழகன் அவள் கழுத்தில் கட்டிச் சென்றது. 


அதை தன் கைகளால் பிடித்து கொண்டு அப்படியே டிரெயின் ஜன்னலில் சாய்ந்து கண்களை மூடினாள் பிரதிக்ஷா.


அவளின் எண்ணங்கள் நான்கு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.


பிரதிக்ஷா அப்பா அம்மா என்று யாருமில்லாத அனாதை. ஒரு ஆசிரமத்தில் தான் வளர்ந்து வந்தாள். பார்க்க மாநிறத்தில் கண்ணுக்கு லட்சணமாய் அழகாய் தான் இருப்பாள். தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு சிறிய கம்பெனியில் வேலை பார்க்கிறாள். இப்போது அவள் மகளிர் விடுதியில் தான் தங்கி இருக்கிறாள்.


அவள் கம்பெனி ப்ராஜெக்ட் விஷயமாய் தான் மதியழகனை முதன்முதலில் சந்திக்கக்கூடிய சூழல் உண்டானது. அதில் மலர்ந்தது தான் இவர்களின் காதல்.


மதியழகனை பற்றி சொல்ல வேண்டுமானால்... அவனும் யாரும் இல்லாத அனாதை தான். மிகவும் கெட்டிக்காரன். கற்பூர புத்தி தான் மதியழகனுக்கு. அவனின் லட்சியமே மும்பையின் புகழ்பெற்ற **** கம்பெனியில் வேலை செய்ய வேண்டும் என்பதே. அதற்கான முயற்சிகளை தான் அவனின் ஒவ்வொரு செயலிலும் காட்டி வருகிறான்.


அவனின் லட்சியத்தையே மறக்க வைத்து காதல் என்னும் உணர்வில் அவனுக்குள் நுழைந்தவளே பிரதிக்ஷா. மதியழகனின் மனதில் ஆணி அடித்தாற்போல் அமர்ந்து விட்டாள் பிரதிக்ஷா.


அவர்கள் காதல் அழகாய் மலர்ந்து ஒரு வருடங்கள் நிறைவடைந்தது.


இந்த நிலையில் தான் அவனின் இத்தனை வருட உழைப்பின் காரணமாய் அவன் இலட்சியமாக நினைத்திருந்த கம்பெனியில் அவனுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.


அப்போது தான் அவனுக்கு வினையே தொடங்கியது.


ஒன்று வேலை.... இரண்டு பிரதிக்ஷா.... 


இது இரண்டில் ஒன்றை தான் தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலை.


அவன் மும்பை கம்பெனியில் மூன்று வருட காண்ட்ராக்டில் அங்கேயே தங்கி வேலை பார்க்க வேண்டும். 


அப்படி இல்லை என்றால் அவன் ஆசைப்பட்ட வேலையிலிருந்து பின்வாங்கி பிரதிக்ஷாவை மணமுடிக்க வேண்டும்.


அந்த முக்கியமான முடிவில் தான் குழம்பி குழம்பி மண்டையை பிய்த்துக் கொண்டான் மதியழகன்.


ஏனென்றால், அவனுக்கு இரண்டும் இரண்டு கண்கள் போல...... 


பின்னர்,,,,,


ஒரு முடிவுக்கு வந்தவனாக.... பிரதிக்ஷாவின் மகளிர் விடுதிக்குச் சென்றான்.


பிரதிக்ஷா மதியை அந்த நேரத்தில் கண்டதும் அவள் பதறி, " மதி என்னடா ஆச்சு.. இந்த நேரத்தில் என்னை பார்க்கனும்னு சொல்லி இருக்க.. ஏதாச்சும் பிராப்ளமா... வாயை திறந்து சொல்லேன் மதி என்னையே பார்த்துக்கிட்டு இருக்க.... இதுக்கா மதி இங்க வந்த"


"பிரதி நாம் நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா?????"


பிரதிக்ஷா அதிர்ச்சியாகி, "மதி என்ன விளையாடுறியா இந்த மாதிரி கேவலமா பிராங்க் பண்ற வேலை எல்லாம் வைத்துக்காத மதி" என்று கோபமாக சொன்னாள்.


"உன் விஷயத்துல நான் பிராங்க் பண்ணுவேன்னு நினைக்குறியா டி ஐம் சிரியஸ் பிரதி என்னை புரிஞ்சுக்கோ..."


"உனக்கு அப்படி என்ன சிரியஸ் ஹான்... உன் இலட்சியம் என்ன.. உனக்குப் பிடித்த மும்பை கம்பெனியில் ஜாயின் பண்ணனும் தான அப்புறம் தானே மத்த எல்லாமும் உனக்கு"


"அந்த இலட்சியம் தான் இப்போ என் ப்ராப்ளம் பிரதி நான் ஆசைப்பட்ட ஜாப் ஆப்புர்ச்சுனிட்டி கிடைத்திருக்கு"


"டேய் மதி இது சந்தோஷமான விஷயம் டா நீ என்ன இப்படி மூஞ்சிய தூக்கி வைத்திருக்க"


"எனக்கு மூணு வருஷம் காண்ட்ராக்ட்ல போகணும் பிரதி. அங்கேயே மூணு வருஷம் தங்கி வர்க் பண்ணனும் என்னால உன்ன விட்டுட்டு இருக்க முடியாது. என் வேலையையும் விட்டுக் கொடுக்க முடியாது பிரதி. அதுக்குத்தான் நாம நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம். நான் உன்னை என் மனைவியா தான் விட்டுட்டு போவேன் பிரதி"


"எதுக்கு மதி இப்படி அடம் பிடிக்குற"


"பிகாஸ் ஐ லவ் யூ பிரதி"


பிரதிக்ஷாவிற்கு மதியழகனின் மனநிலையை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.


ஆனால், திருமணம் நடந்தபின் அவனை விட்டு பிரதிக்ஷாவால் பிரிந்து இருக்க முடியாது என்று நினைக்கிறாள்.


பிறகு, அவனின் நிலையை யோசித்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.


மதியழகனின் நண்பர்களாலும் பிரதிக்ஷாவின் நண்பர்களாலும் சிவன் கோவிலில் வைத்து இவர்களின் திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்தது.


மதியழகன் பிரதிக்ஷாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு நெற்றியிலும் மாங்கல்யத்திலும் குங்குமம் வைத்து தன்னவள் ஆக்கிக் கொண்டான்.


இரண்டு நாள் கழித்து....


மதியழகன் மும்பைக்கு செல்ல ஆயத்தமானான்.


பிரதிக்ஷா அவனை கட்டியணைத்து அழுதுக் கொண்டு இருந்தாள்.


"மதி எனக்கு டெய்லி ஃபோன் பண்ணுடா... டூ டேஸ் ஒன்ஸ் ஆச்சும் வீடியோ கால் பண்ணு மதி... உடம்பை நல்லா பாத்துக்கோ மதி.. கரெக்ட் டைம்கு சரியா சாப்பிடு... வேலை வேலைன்னு வேலையை கட்டிக்கிட்டு அழுகாத புரியுதா" மதியழகனை அணைத்துக் கொண்டே பேசினாள் பிரதிக்ஷா.


"இப்படி இருக்குற மாதிரியே என் பொண்டாட்டியை அங்க கட்டிக்க முடியாதே பிரதி.... அதான் என் வேலையை கட்டிக்குறேன்..." அவளை பார்த்து கண்ணடித்து கொண்டே சொன்னான் மதியழகன்.


"இப்படி சொல்ல ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டாள் பிரதி.


"சரி பிரதி செல்லம் நீ ஒழுங்கா சாப்பிடு... சும்மா என்னையே நினைத்து உன்னை கஷ்டப் படுத்திக்காத... நான் ஃபோன் எல்லாம் பண்றனோ இல்லையோ... என் நினைப்பு எப்பவும் என் பொண்டாட்டி பிரதி மேல தான் இருக்கும்.. இந்த பிரதி எப்பவும் மதிக்கு தான் சொந்தம் புரிஞ்சுதா..."


"அதேபோல இந்த சுமார் மூஞ்சி மதி எனக்கு மட்டும் தான்.. எவளாவது உன்னை வளைத்து போட நினைத்தா கொன்னுடுவேன் என்ன பத்தி உனக்கே தெரியும்ல" என்று அவனை எச்சரித்து அனுப்பினால் பிரதிக்ஷா.


பின்னர்,,,


மதியழகனும் மும்பைக்குச் சென்று விட்டான்.


"சாரி பிரதி, இந்த மூணு வருஷம் உன்னை என்னால கான்டக்ட் கூட பண்ணவே முடியாது. இந்த கம்பெனியின் ரூல்ஸ் அப்படி.. எனக்கு நீயும் வேணும் என் வேலையும் வேணும். அதற்கு உன்னை இப்படி கஷ்டப் படுத்திட்டு போறேன். என்னை மன்னிச்சுடு டி பிரதி. எனக்கு உன் மேல இருக்குற காதல் மட்டும் குறையாது. ஐ லவ் யூ மிஸஸ். பிரதிக்ஷா மதியழகன்" என்று நினைத்து விட்டு பிரிக்கும் மும்பை வந்துவிட்டதாக தகவல் சொல்லி கொஞ்சம் நேரம் பேசிவிட்டு பின்னர் தன் சிம்மை கழட்டி எறிந்துவிட்டான்.


இங்கு பிரதிக்ஷா அவனின் அழைப்புகள் எதுவும் வராததால் பதறிப்போய் மதிக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு நினைத்து அவளின் ஒவ்வொரு நாளும் நரகமாய் செல்கிறது....


"பிரதிக்ஷா.. பிரதிக்ஷா.." என்று அவளை தட்டி எழுப்பினாள் அனு.


தன் எண்ணங்களில் மூழ்கி போய் அப்படியே தூங்கியும் போய்விட்டாள் போல பிரதிக்ஷா.


இரவு வேளையும் வந்துவிட்டது...


அப்பொழுது தான் கண் விழித்த பிரதிக்ஷா, "என்னை கூப்பிட்டீங்களா அக்கா.. சாரி தூங்கிட்டேன் போல எதுக்கு அக்கா கூப்பிட்டீங்க.."


"உன்னை சாப்பிடச் சொல்ல தான் கூப்பிட்டேன் . நீ அப்போ தூங்குன மா இப்போ நைட்டே ஆகிடுச்சு அதான் மா உன்னை எழுப்பினேன் தப்பா எடுத்துக்காதே" என்றாள் அனு.


"அக்கா தப்பா எல்லாம் நினைக்கலை.. எனக்கு பசி இல்லை அக்கா எதும் வேண்டாம்" என்றாள் பிரதிக்ஷா.


அதற்கு அனுவோ தன் சாப்பாட்டையே அவளுக்கும் கொடுத்து வற்புறுத்தி சாப்பிட வைத்தால்.. முதலில் தயங்கி பின் பிரதிக்ஷாவும் சாப்பிட்டாள். அனு தன் குழந்தையை தூங்க வைத்தால் பின்னர் பிரதிக்ஷாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா பிரதிக்ஷா"


"ம்ம் ஆகிடுச்சு அக்கா"


"பிரதிக்ஷா நீ மும்பையில எங்கம்மா போகணும்"


ஒரு நிமிடம் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கி பின் அவளே, "மும்பையில் இருக்கிற **** கம்பெனிக்கு போகணும் அக்கா" 


அனு உற்சாகமாகி, "ஹேய், நீயும் அங்கதான் போறியா. உன் ஹஸ்பெண்ட் அவார்டு வாங்க போறாரா பிரதிக்ஷா அதை பார்க்கத்தான் நீயும் போறியா மா. நானும் அங்க தான் போகணும் பிரதிக்ஷா"


அவள் குழப்பத்தில் தலையை ஆமாம் இல்லை என்று நாலாப்பக்கமும் ஆட்டினாள்.


அனு சிரித்துவிட்டு, "எதுக்கு இப்படி தலைய தலைய ஆட்டிட்டு இருக்க"


"ஒன்றுமில்லை அக்கா"


"என் ஹஸ்பெண்ட் அந்த கம்பெனியில் தான் ஐந்து வருடமாக வேலை பார்க்குறாரு.. எனக்கு அவரு அங்கே வேலை பார்ப்பது பிடிக்கவே இல்லை "


பிரதிக்ஷா குழப்பமாக, "ஏன் அக்கா"


"நான் ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கும் போது தான் அவருக்கு அதுல வேலை கிடைத்தது பிரதிக்ஷா.. அப்போ போனவர் தான் என் குழந்தை பிறந்தது கூட அவருக்கு தெரிவிக்க முடியலை.. எந்த ஒரு கண்டாக்டும் இல்லை.... தகவலும் இல்லை.... என் பொண்ணை வைச்சிட்டு அவரை நினைச்சிட்டு அப்படியே ரொம்ப கஷ்டமா போச்சுமா... மூன்று வருடம் கழித்து தான் அவர் எங்களை பார்க்கவே வந்தாரு பிரதிக்ஷா"


தன்னிலையை நினைத்து பிரதிக்ஷாவும் வருந்தினாள். இப்பொழுது அவளுக்கு மதியின் நிலை என்னவாக இருக்கும் என்று தான் நினைக்க தோன்றியது.


"ஏன் அக்கா அப்படி ஒரு ஃபோன் பண்ண கூடவா முடியாது" அவளின் கண்கள் கலங்கியது மதியை நினைத்து.


"பிரதிக்ஷா நீ ஏன் அழற என்னாச்சு மா"


பிரதிக்ஷாவிற்கு அதற்கு மேல் முடியாமல் மொத்தத்தையும் அனுவிடம் சொல்லிவிட்டாள்.


பிரதிக்ஷாவின் மன எண்ணத்தை புரிந்து கொண்ட அனு, "இங்க பாரு பிரதிக்ஷா நீ சொல்றதை வைத்து பார்க்கும் போது உன் ஹஸ்பெண்ட் உன்னை ரொம்பவே லவ் பண்றாருன்னு மட்டும் தான் தெரியுது... என்னையே உதாரணத்திற்கு வச்சிக்கோ எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் அரேஞ்ச் மேரேஜ் தான். கல்யாணம் ஆகி பத்து மாசத்துல விட்டுட்டு போனாரு... அப்ப நான் ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தேன். அவரே என்னை தேடி வரலையா பிரதிக்ஷா உன்ன உன் ஹஸ்பெண்ட் லவ் பண்ணி இருக்காரு.. அவரு போகுறதுக்கு முன்னாடி உன்ன அப்படியே விட்டுட்டு போயிடாம உனக்கு தாலி கட்டி அவரோட மனைவி என்ற அடையாளத்துடன் தான் உன்ன விட்டு அங்க போயிருக்காரு உன் ஹஸ்பெண்ட்.... அந்த கம்பெனியே ஒரு கிறுக்கு பிடித்த கம்பெனி போல ரூல்ஸாம் ரூல்ஸ் மண்ணாங்கட்டி ரூல்ஸ்.... ஆனால், இந்த மாதிரி கம்பெனிகளில் தான் வேலை செய்யணும்னு தவமாய் தவம் கிடக்கிறார்கள். எப்பதான் திருந்த போறாங்கன்னு தெரியலை" என்று அனு பிரதிக்ஷாவிற்கு முடிந்த அளவு ஆறுதல் சொன்னாள்.


பிரதிக்ஷா யோசிக்க ஆரம்பித்தாள். அனுவும் அவள் யோசிக்கட்டும் என்று அவளைத் தனிமையில் விட்டு இவள் தூங்கி விட்டாள்.


பிரதிக்ஷா அவனின் நிலையிலிருந்து யோசிக்க ஆரம்பித்தாள்....


மதியின் காதலை, பாசத்தை, அவள் மேல் காட்டிய அக்கறையை, மதி கடைசியாக பேசிச் சென்ற வார்த்தைகளை என்று அனைத்தையும் நினைத்துப் பார்த்தால் பிரதிக்ஷா.


அடுத்த நாள் மாலை.......


டிரெயின் மும்பைக்கு வந்து சேர்ந்தது.


பிரதிக்ஷா, அனு, அனுவின் குழந்தை மதிலா மூவரும் டாக்சியை பிடித்து ***** கம்பெனியின் அவார்டு வழங்கும் பார்ட்டி ஹாலிற்கு சென்றனர்.


அனு தான் அவள் கணவன் இந்திரஜித் அனுப்பிய இன்விடேஷனை காண்பித்து பிரதிக்ஷாவையும் உள்ளே கூட்டிச் சென்றாள்.


அங்கே அவார்ட் கொடுக்கும் விழா தொடங்கியிருந்தது.


அப்போது தான் பிரதிக்ஷாவிற்கு அந்த அநௌன்ஸ்மெண்ட் (announcement) காதில் விழுந்தது.


ஒரு பெண்மணி தூய ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள், "Our company's best employee of the year goes to Mr. P. MADHIAZHAGAN.... please come to on the stage madhiazhagan"


இதை கேட்டதும் அனுவை முன்னாள் அனுப்பி விட்டு அங்கிருந்த தூணுக்கு பின்னாடி சென்று மறைவாய் நின்று கொண்டாள் பிரதிக்ஷா.


மறைவாய் நின்று மதியை பார்த்துக்கொண்டிருந்தாள் பிரதிக்ஷா.


மதியழகன் கம்பீரமாய் கோட் சூட் அணிந்து மேடையேறி கொண்டிருந்தான். ஆனால், அவன் முன்பைவிட சற்று இளைத்திருந்தான்.

எப்போதும் மதியிடம் இருக்கும் வசிகர சிரிப்பு அவனிடம் காணாமல் போயிருந்தது. கடனே என்று இதழ் பிரிக்காமல் சிரித்து வைத்தான் மதியழகன்.


மதியழகன் மேலே ஏறிச்சென்று அந்த அவார்டை பெற்றுக் கொண்டான்.


அந்த பெண்மணி, "tell us something madhiazhagan"


அதற்கு மதியழகன் தலையசைத்து விட்டு மைக்கை வாங்கினான்.


"Thank you so much for giving this award.. இங்க இருக்கிற முக்கால்வாசி பேருக்கு தமிழ் தெரியும். சோ நான் என் தாய் மொழியிலேயே பேசட்டுமா உங்களுக்கு ஓகே வா" என்று அனைவரிடமும் கேட்டான் மதியழகன்.


எல்லோரும் ஓகே என்று கத்தினார்..


மதியழகன் இதழ் பிரிக்காமல் நகைத்துவிட்டு, "என்னோட இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் சத்தியமா நான் கிடையாது... என்னோட மனைவி பிரதிக்ஷா தான் காரணம்.... கல்யாணம் பண்ணி இரண்டு நாளில் இங்கே வந்து வேலையில் சேர்ந்தேன் மூணு வருஷம் ஆச்சு இன்னும் என் பிரதிகிட்ட ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனக்கு பிரதின்னா உயிரு அவள் மட்டும் தான் என் சொந்தம்... என் அப்பா அம்மா எல்லாமே அவள்தான்.. இருந்தும் அவளை தனியா விட்டுட்டு எனக்கு பிடிச்ச வேலை தான் முக்கியம்னு இங்க வந்துட்டேன்.... நானே நினைத்தாலும் திரும்பி அவளிடம் போக முடியல.... நான் எடுத்த முடிவை மாற்ற முடியாதே.... இங்கேதானே கம்பல்சரி இருந்தாகணும்... இந்த அவார்டை வாங்க காரணம் என் பிரதி தான் அவள் மட்டும்தான்... அவளோட தியாகத்தில் கிடைத்த பரிசுதான் இந்த அவார்டு... என்னால இதுக்கு மேல அவளை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது.... என் பிரதிக்ஷாவிற்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கேன்... என் பிரதியின் புருஷன் தான் அவள் கிப்ட்... இந்த வேலையை நான் என் பிரதிக்காக ரிசைன் பண்ணிட்டேன்.... சீக்கிரம் உன்னை தேடி வரேன் பொண்டாட்டி ஐ லவ் யூ பிரதி..." என்று சொன்னான் அவனையும் மீறி கண்கள் கலங்கியது.


பிரதிக்ஷாவால் அதற்குமேல் முடியவில்லை.... "மதி ஐ லவ் யூ" என்று அவளால் முடிந்த அளவிற்கு கத்தி அழுதாள்.


எல்லாரும் திரும்பி பிரிதிக்ஷாவை தான் பார்த்தனர்.


அதைக்கண்ட மதிக்கு இது கனவா? இல்லை நனவா? என்றே விளங்கவில்லை அதிர்ச்சியில் அங்கேயே நின்றான் மதியழகன்.


பிரதிக்ஷா ஓடிச்சென்று மதியை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள். அப்போது தான் சுய நினைவிற்கு வந்தான் மதியழகன்.


"பிரதி நீ எப்படி டி இங்க வந்த"


"என்னிடம் பேசாதே மதி"


மதி சிரித்துவிட்டு, "பொண்டாட்டி இது ஸ்டேஜ் டி எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க நாம சென்னை போய் எல்லாத்தையும் பாத்துக்கலாம்" என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான் மதியழகன்.


அவனிடமிருந்து விலகி அவனை முறைத்துக் கொண்டே ஸ்டேஜ் விட்டு இறங்கினாள் பிரதிக்ஷா.


மதியழகன் மைக்கில், "எல்லாருக்கும் பாய் பிரண்ட்ஸ் நான் என் பொண்டாட்டியை சமாதானம் செய்யப் போயே ஆகணும்" என்று சிரித்துக்கொண்டே ஓடினான்.


அப்போது அவனுக்காக பாட்டை போட்டனர் மதியழகனின் நண்பர்கள்.


என் சண்டகாரி நீதான்...

என் சண்டகோழி நீதான்.... 

சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்....


எஹ்... என்னை தாண்டி போறவளே....

ஓரக்கண்ணால் ஒரு பார்வை 

பார்‌த்து‌ என்ன கொன்ன....


சரியா நடந்தாலும்.....

தானாவே சறுக்குறேன்....

என்னடி என்ன பண்ண....


ஏதோ மாறுதே....

போதை ஏறுதே..... 

உன்ன பார்கையில...


ஏதோ ஆகுதே.....

எல்லாம் சேருதே.....

கொஞ்சம் சிரிக்கையில....


என்ன தாண்டி போனா....

கண்ண காட்டி போனா......

என்ன தாண்டி போனா.....

கண்ண காட்டி போகும்போதே....

என்ன அவ கொண்டு போனா.....


வெளியில் உள்ள வராண்டாவில் நின்று இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் பிரதிக்ஷா.


"இவளை இப்படி எல்லாம் விட்டா சமாதானம் ஆகமாட்டா இவகிட்ட நம்ம ஸ்டைலை காட்டினால் தான் அடங்குவாள்" என்று நினைத்து மதியழகன் பிரதிக்ஷாவின் இடுப்பில் கைவைத்து அவளை அலேக்காக தூக்கினான்.


பிரதிக்ஷா அவனின் பிடியில் இருந்து திமிரிக் கொண்டே, "மதி விடுடா எதுக்கு இப்படிலாம் பண்ற... இப்பதான் உன் கண்ணுக்கு நான் தெரிகிறனா டா... என்ன விட்டு போனல்ல" என்று அவன் நெஞ்சிலேயே சாய்ந்துக் கொண்டு அழுதாள்.


மதியழகன் அவனுக்கென்று கொடுக்கப்பட்ட அறைக்கு சென்று கதவை தாழிட்டு அவளை இறக்கி விட்டான்.


பிரதி தன் உடைகளை சரி செய்து கொண்டு மீண்டும் அவனை முறைத்தாள்.


மதி தன் காதுகளில் கையை வைத்துக்கொண்டு, "பிரதி செல்லம் நான் உன்னை விட்டு போய் இருக்கக் கூடாது டி என்னை மன்னித்துவிடு பிரதி..." என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னான்.


பிரதிக்ஷா அவன்கிட்டே வந்தாள். அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். திடீரென்று மதியின் கன்னத்தில் மாறி மாறி அடித்தாள் தொடர்ந்து... பின், அவனையே கட்டிப்பிடித்து அழுதாள்.


மதியும் அவளின் அடியை எல்லாம் வாங்கிக்கொண்டு அவளுக்கு ஆதரவாய் தலையில் கைவைத்து வருடிக் கொடுத்தான்.


"மதி ஏன்டா இப்படி என்னை தவிக்க விட்டு போன... உன்கிட்ட இருந்து எந்த தகவலும் வராமல் உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு நினைத்து நினைத்து பைத்தியக்காரியாவே மாறிட்டேன் மதி. என்ன டாஷ்க்கு (dash ku) என் கழுத்துல தாலி கட்டுன அப்புறம் ஏன் அம்போன்னு என்னை விட்டுட்டு போன சொல்லுடா வாய் திறந்து பேசு மதி..." என்று அவன் அணைப்பில் இருந்து கொண்டு பேசினாள் பிரதிக்ஷா.


"அதுக்கு தான் டி சாரி பொண்டாட்டி.... இப்போ நம்ம வாழ்க்கையை புதுசாக தொடங்கலாம் பிரதி"


"எப்ப நீ தாலி கட்டிட்டு போய் மூணு வருஷம் கழிச்சா மதி புதுசா வாழலாம்னு சொல்ற அப்போ உனக்கு என்னை விட உனக்கு பிடிச்ச வேலை தான் முக்கியமா போச்சா"


"இப்ப கூட உனக்காக தான் பிரதி என் வேலையை விட்டேன் எனக்கு நீதான்டி முக்கியம் என்னை புரிஞ்சுக்கோ"


"சும்மா சும்மா இப்படியே பேசி என்னை மயக்கப் பார்க்காதே மதி... நான் உன் மேல கோவமா இருக்கேன்... மூணு வருஷம் டா... ஒரு நாள் இல்ல இரண்டு நாள் இல்ல மதி... ஒரு ஃபோன் இல்ல... ஒரு மெசேஜ் இல்ல.. ஒரு கன்றாவியும் இல்ல.. "


"ஐயோ இவளை கன்வின்ஸ் பண்ணவே முடியலையே மதி... மானம் முக்கியமா!! பொண்டாட்டி முக்கியமா!! பேசாம உன் பொண்டாட்டி காலில் விழுந்து சரண்டர் ஆகிடு... அதுதான் முடிவுடா மதி... பிரதி என்னை போட்டு தள்ளநாளும் தள்ளிடுவாள் கிராதகி என் செல்ல ராட்சசி...." என்று மனதில் நினைத்து கொண்டான் மதி.


தன் அணைப்பில் இருந்த பிரதிக்ஷாவை தள்ளி நிறுத்தி அவளைப் பார்த்துக்கொண்டே சட்டென்று அவள் கால்களில் விழுந்து விட்டான் மதியழகன்.


அவள் கால்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, "பிரதி என்னால உன்ன விட்டு இருக்க முடியாத டி பொண்டாட்டி என்னை மன்னித்துவிடு என் தெய்வமே.... உன்னைவிட்டு இதற்கு மேல நான் எங்கேயும் போகமாட்டேன் பிரதி... சத்தியமா டி.. உன் புருஷன் பாவமில்ல கொஞ்சம் கருணை காட்டேன் பிரதி.... என் அழகு தேவதையே... என் காதல் மனைவியே... என் குழந்தையின் அம்மாவே..... சீக்கிரம் வாடி உன்ன நான் அம்மா ஆக்குறேன்... பிரதி செல்லம்..."


அவனின் செய்கை பிரதிக்ஷாவிற்கு சிரிப்புதான் வந்தது. சிரிப்பை அடக்கிக்கொண்டு, " மதி காலை விடுடா எனக்கு கூச்சமா இருக்கு"


"இல்லை எனக்கு மன்னித்து எனக்கு பழம் விடு அப்பதான் விடுவேன்"


வேறு வழியில்லாமல், "சரி மன்னிச்சிட்டேன் எழுந்து தொலைடா பன்னி"


பிரதியை கட்டி அணைத்துக் கொண்டு "ஐ லவ் யூ பொண்டாட்டி" என்று அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தான் மதியழகன்.


"போடா என்ன தவிக்க விட்டு போனல உனக்கு ஒரு வருஷத்துக்கு ஃபர்ஸ்ட் நைட் கிடையாது பிரம்மச்சாரியாவே இரு"


அவனின் மறு கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு, "அப்படிலாம் சொல்லக்கூடாது டி பொண்டாட்டி" என்று பிரதிஷாவின் அணைப்பை இறுக்கினான் மதியழகன்.


இனி இருவருக்குள்ளும் எந்த ஊடலும் இருக்காது... இனி எப்போதும் கூடல் மட்டும் தான் அவர்களுக்கு...


____முற்றும்____



Rate this content
Log in

Similar tamil story from Romance