வல்லன் (Vallan)

Romance

4.2  

வல்லன் (Vallan)

Romance

காதலர் தினம்

காதலர் தினம்

3 mins
2.0K


      அன்று என்னவோ எனக்கு மட்டும் திருவிழா போல தெரிந்தது. முதல் நாள் இரவு தூக்கம் பிடிக்காமல் கட்டிலில் புரண்டு புரண்டு தளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். நாளை எதை உடுத்துவது, காலையிலே எழுந்தவுடன் என்ன பண்ணுவது, அவளை எப்படி கூப்பிடுவது? என்ன பேசுவது? எங்கே வரவழைக்கலாம் ? எப்படி சொல்வது? என‌ பெரிய பட்டிமண்டபமே மூளைக்குள் நடந்தது. எப்படியோ ஒரு வழியாக தூங்கிவிட்டேன். காலை 7 மணிக்கு அலாரம் அடித்தது, மெல்ல போனை தேடி எடுத்து அலாரத்தை அனைத்துவிட்டு எழுந்தேன். காலைக் கடன்களை முடித்துவிட்டு, பல் துலக்க கண்ணாடி முன் போய் நின்றேன், என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை. முகத்தில் அவ்வளவு ப்ரைட்னஸ். எல்லாம் அவள் செய்த மாயம் தான். நெருங்கிய தோழி தான் அவள் எனக்கு, இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு படபடப்பு. நட்பாக பார்த்த கோணம் மாறி காதலாக பார்க்கும் போது எதோ ஒரு திக்கு தெரியாத உணர்வு, அதுவும் ஒரு தனி சுகம் தான். அவளை பார்க், பீச் எல்லாம் கூப்பிடவில்லை, பெசன்ட் நகர் பீச்சில் இருக்கும் அஷ்டலட்சுமி கோவிலுக்குத் தான் வர சொன்னேன். கோவிலின் அமைதியான சூழல், அதை கலைக்கும் கடல் அலைகளின் இனிமையான சப்தம், ரம்யமான இடம். காதலை சொல்ல சரியாக இருக்கும் என்று தான் அங்கு வரவழைக்க முடிவு செய்தேன்.

          நானும் கிளம்பிட்டேன். அவளுக்கு ஒரு கால் பண்ணி சொல்லிட்டு பைக்க எடுத்துட்டு அவ வீட்டுக்கு போனேன். அப்போ தான்‌ தலை குளிச்சுட்டு வந்து ஈர முடிய உலர்த்திட்டு இருந்தா. அந்த முடில இருந்து அப்படியே நீர்த்துளிகள் சொட்டுவதை பார்த்தால்! அம்மம்மா. அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. சரி சீக்கிரம் கிளம்புடி எப்போ சொன்னேன் என்று கொஞ்சம் சீண்டினேன்.

உனக்கு என்னடா உள்ள போனா உடனே வெளிய வந்துடுவ, நா தலை தேச்சு குளிச்சு எடுக்குறத்துக்குள்ள படற பாடு அப்பப்பா, அதொல்லாம் பொண்ணுங்களுக்கு தான் புரியும். சரி சரி ஓவரா சீன் போடாம ஒரு 5 நிமிஷம் வெயிட் பண்ணு வந்துடறேனு சொல்லிட்டு போனா. அதுக்குள்ள வருங்கால மாமி பில்டர் காஃபி போட்டு எடுத்துட்டு வந்துட்டாங்க. டேய் வருண் இந்தா காஃபி சாப்பிடு அதுக்குள்ள அவ வந்துடுவா என்று சொல்ல நானும் பொறுமையா குடிச்சு முடிச்சேன். மாமிக்கு என் மேல ஒரு டவுட் தான் இருந்தாலும் வெளிய காட்டிக்கல. ஆனா அவங்களுக்கு ஓகே போலத்தான் தெரியுது, அவ என்ன சொல்ல போறானு தான் தெரியல. வதனா என்னடி பண்ணற? வருண் எவ்வளவு நேரம் காத்திட்டு இருக்கான் சீக்கிரம் வா என்று மாமி ஒரு சத்தம் வைக்க இதோ வந்துட்டேன் ம்மா ன்னு அழகா பச்சை கலர்ல ஒரு சுடி, அதுக்கு கான்ட்ராஸ்ட்டா வெள்ளை கலர் துப்பட்டா, என் கண்ணே பட்டுடுச்சு.

      போயிட்டு வரோம் ஆன்ட்டி ன்னு ( மாமி ) சொல்லிட்டு கிளம்பினோம். மாமி சிரிச்சுட்டே ஆல் தி பொஸ்ட் டா வருண் ன்னு சொல்ல நான் ஷாக் ஆயிட்டேன் , இருந்தாலும் அப்படியே சமாளிச்சுட்டு ஒரு வழியா கிளம்பியாச்சு.

       வதனா வீட்டுல இருந்து அரை மணி நேரத்துல கோவிலுக்கு வந்துட்டோம். பைக்ல வரும்போது உனக்கு எதுக்கு டா அம்மா ஆல் தி பெஸ்ட் சொன்னாங்க னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டா. இருடி கோவிலுக்கு போனவுடனே சொல்றேன்னு சமாளிச்சு அழைச்சுட்டு வாரத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

        பைக்க நிறுத்திட்டு ரெண்டு பேரும் கோவிலுக்குள்ளே போனோம். சாமிய நல்லா வேண்டிக்கிட்டேன், அவ எனக்கு ஓகே சொல்லனும்னு, ஆனா என்ன நடக்க போகுதுன்னு மனசு படபடத்துட்டே இருந்துச்சு. அவளை அப்படியே கடல் இருக்க பக்கம், இதமான காற்று வீசும் இடத்துக்கு அழைச்சுட்டு வந்தேன்.

       " வதனா நீ எப்பவும் என் கூடவே இருப்பயா? " என்று கேட்டு அவள் நெற்றியில் குங்குமம் வைத்தேன். அவள் கண்களில் குளமாய் நிரம்பி இருந்தது கண்ணீர். இப்படி அழுதா என்ன அர்த்தம், இருப்பயானு சொல்லு என்றேன். கண்களை துடைத்துக் கொண்டு, கொஞ்சம் முகத்தில் பொய்க் கோபம் காட்டி உன்னை நான் கொடுமை படுத்தாம வேறவளுக்கு விட்டு கொடுத்துடுவேனா ன்னு செல்ல சண்டை பிடித்து, இதுக்கு தான் அம்மா ஆல் தி பெஸ்ட் சொன்னாங்களா, இரு வீட்டுக்கு போயி ரெண்டு பேருக்கும் கச்சேரி வச்சுக்கறேன்னு சொல்லி சிரிச்சுட்டு, கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்து கிளம்பனோம்.

         ஒரு வழியா சொல்லியாச்சு, இப்ப தான் மனசு நிம்மதியா, அமைதியா இருக்கு.

         நான் சொல்லீட்டேன் , ஆனால் எத்தனை பேர் சொல்லாமலே மனசுக்குள்ளயே ஆழமா அவங்க காதலை புதைச்சிருப்பாங்க, புதைச்சுட்டு இருப்பாங்க, புதைப்பாங்க.

         வெற்றியோ தோல்வியோ வெளிப்படையா சொல்லிடுங்க.

 

எல்லாருக்கும் ஆல் தி பெஸ்ட்.Rate this content
Log in

Similar tamil story from Romance