Salma Amjath Khan

Romance

4.5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 34

நீயே என் ஜீவனடி 34

5 mins
328


கதவை திறந்ததும் அலங்கரித்த மல்லிகையின் மணமும் ஊதிபத்தியின் ரோஜா மணமும் உள்ளுக்குள் கிளர்ச்சியை எழ வைக்க, தயக்கத்துடன் நிமிர்ந்து அறையை நோட்டம் விட்டவளின் கண்கள் ஏனோ ஏமாற்றம் அடைந்தது.


அறையின் வெறுமையை உணர்ந்து பால் சொம்பை மேசையில் வைத்தவள்  அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்தாள்‌. 


உள்ளுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வு ஏற்பட வியர்த்து இருந்த நெற்றியை சேலை தலைப்பால் துடைத்துக் கொண்டாள். நா வரள எச்சியை விழுங்கி ஈரப்படுத்தி கொண்டாள்.


திடீரென கேட்ட கதவு திறக்கும் சத்ததில் இதயத்துடிப்பு அதிகமாக எழுந்து நின்றவள், அரவிந்தின் 'அத்தை' என்ற அழைப்பில் நிமிர்ந்து அரவிந்தை கையில் தாங்கி ஆணுக்கு இலக்கணமாய் நின்றிருந்த சிவனேசனை கண்டாள்.


"நீ அரவிந்த் இல்லாம தூங்க மாட்டேன் னு சொன்னாங்க. அதுவும் புது இடம்ல. அதான் இவனையும் கூட்டிட்டு வந்தேன்." என்றவன் அரவிந்தை கட்டிலில் இறக்கிவிட்டான்.


" அத்தை எதுக்கு இவ்வளவு பூ கொட்டி வச்சுருக்காங்க."


இதற்கு என்ன பதில் கூறுவது என தெரியாமல், "அது சும்மா நீ கேக்குறதுக்கு விளையாட"


" யாராவது பூ வச்சு விளையாடுவாங்களா?"


"அது வந்து...." என இருவரும் பேந்த பேந்த முழிக்க கரண்ட் கட் ஆனது. 


'அத்தை ' என்ற கூவலோடு பாய்ந்து மகாலட்சுமி யை கட்டிக் கொண்டான். 


"அரவிந்த் நீ இன்னுமா இருட்டுக்கு பயப்படுற "


" மாமாவ பாரு அத்த. என்னை கிண்டல் பன்றாங்க." என்றான் விசும்பலுடன்.


"மாமா சும்மா இருங்க. அவனே பயத்துல இருக்கான்."


"ஏய் அவன் ஆம்பள சிங்கம்மா. இப்படி இருட்டுக்கு பயந்தா எப்படி.நாள பின்ன என் பொண்ண வேற கட்டிக்குடுக்குறேன்னு வாக்கு கொடுத்துருக்கேன்."


"போதும் மாமா. இப்பவும் என் அரவிந்த் செல்லம் சிங்கம் தான்.நம்ம பொண்ணு நல்லா பார்த்துப்பான். என்ன இருட்டுக்கு தான் கொஞ்சம் பயப்படுவான்."


"எது... இது கொஞ்சமா... உடம்பெல்லாம் இப்படி நடுங்குது. இன்னும் கொஞ்சம் விட்டா சுரமே வந்துரும் போல..."


"அதான் தெரியுதுல. போய் கரண்ட் ஏன் போச்சுன்னு பார்த்துட்டு வாங்க மாமா."


"சரி அரவிந்தா. வாங்க மாமா உங்களை வெளிய கூட்டிட்டு போறேன்."


மகாலட்சுமியிடம் இருந்து அரவிந்தை பிரித்தெடுக்க, அவனோ


" இல்ல நான் அத்தகிட்ட தான் இருப்பேன். எனக்கு பயமா இருக்கு."


"நான் உன்னை வெளிச்சத்தில தூக்கி போறேன்." என அரவிந்தை தூக்கி கொண்டு வெளியே சென்றான்.


இந்த நேரத்தில் கூட தன்னுடைய ஆசைகளுக்கு மதிப்பளிக்கும் தன் கணவனை எண்ணி பூரித்துக் கொண்டிருக்க, வாசலில் அரவம் கேட்டு எழுந்து நின்றாள்.


"என்னாச்சு மாமா. இன்னும் ஏன் கரண்ட் வரவில்லை. அரவிந்த் எங்க." எனக் கேட்டவளை பொருட்படுத்தாமல் அருகில் நெருங்கினான்.


"இங்க என்ன பண்ற சிவபெருமான்..." என்ற நடராஜனின் குரல் அறையின் வாசலில் ஒலிக்கவும் திரும்பவும் வெளிச்சம் வரவும் சரியாக இருந்தது.


அப்பொழுது தான் வந்தது சிவனேசன் அல்ல சிவபெருமான் என உணர்ந்தவள் "அத்தான் நீங்க எங்க இங்க..." எனக்கேட்டாள்.


கையில் இருந்ததை மறைத்தவன் "அது கரண்ட் இல்லல. அதான் அண்ணாகிட்ட ஏதாவது வேணுமான்னு கேக்க வந்தேன்."


"இந்த நேரத்துல அவங்களுக்கு என்ன தேவைப்பட போகுது."


சிவபெருமான் என்ன சொல்வது என முழித்துக் கொண்டிருந்தான்.


அதை அவர் உணர்ந்தாரோ என்னவோ

" சரி நீ போ. நான் அவங்களுக்கு என்ன வேணும்னு பாத்துக்குறேன்." என அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினான்.


"மாப்பிள எங்கம்மா?" என வாசலில் நின்றிருந்த வாறே மகாலட்சுமியிடம் கேட்கவும்,


"கரண்ட் கட் ஆனத பார்க்க போயிருக்காங்க அண்ணா..." என்றாள்.


"என்னாச்சு மாமா, இந்த நேரத்துல. ஏதும் பிரச்சனையா..."என கேட்டவாறே சிவனேசன் வந்தான்.


"அதெல்லாம் ஒன்னும் இல்ல மாப்பிள. ஆமா இவன் இங்க என்ன பண்றான்." என அரவிந்தை சுட்டிக்காட்ட,


"நான் அத்தை துணைக்கு தூங்க வந்தேன் அப்பா." என


"அதெல்லாம் மாமா துணைக்கு படுத்துக்குவாங்க. நீ என்கூட வந்து அப்பாக்கு துணையா படுத்துக்கோ."


"நான் அத்தை கூட தான் படுப்பேன். நீ வேணாம் மாமா வா கூட்டிட்டு போ."


"அரவிந்தா அப்பா சொன்னா கேட்கணும். அத்த பாவமுள்ள டயர்டா இருப்பாங்கள. நீ இருந்தா தொந்தரவு பண்ணுவ."


"இல்ல நான் அத்தையை தொந்தரவு பண்ண மாட்டேன். நான் இங்கயே இருக்கேன்."


"பரவால்ல இங்கேயே இருக்கட்டும் மாமா."


"அதெல்லாம் ஒன்னும் இல்ல மாப்பிள. என்கிட்ட கொடுங்க." என அரவிந்தை அவர் வாங்கிக் கொள்ள முறைத்துக்கொண்டே நடராஜனிடம் தாவினான், அரவிந்த்.


"என்னடா தனியா வர்ற. மகாலட்சுமி எங்க?"


" நீ வேற சும்மா இருடா. நல்ல சந்தர்ப்பம். கரண்ட் ஆஃப் பண்ணா அரவிந்த் பயப்படுவான்னு எப்படியாவது மகா வெளிய வருவா. அவ எப்படி யாவது கடத்திரலாம்னு நினைச்சேன். 


ஆனா அந்த அரவிந்த் உள்ளே தான் இருந்திருப்பான் போல. இருந்தாலும் சிவனேசன் அரவிந்த வெளிய கூட்டிட்டு போனான்.


மஹா தனியாக இருந்தாள் சரி எப்படியோ மகா தனியா இருந்தா. கடத்தலாம்னு பக்கத்துல போனேன். அவ மூஞ்சில மருந்த வைக்கிறதுக்கு முன்னாடியே நடராஜன் மாமா எப்படி வந்தார்னே தெரியவில்லை.என்னை பார்த்து இங்கே என்ன பண்றன்னு கேட்கிறார்."


 என பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் நடராஜனையும் குரல் கேட்டது.


" சிவபெருமான் இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க. 


அதுவும் சரிதான் நானே உன்ன பாக்கணும் தான் இருந்தேன். நீ என்கிட்ட நம்மளோட சாகுபடியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணினா நல்லா இருக்குன்னு சொன்னியே. நான் கூட அப்படி பண்ணா நல்லா இருக்கும்னு தான் யோசிக்கிறேன். பேசாம இன்னைக்கு நைட்டு நீ கெளம்பி போய் எல்லாத்தையும் பாக்குறியா."


"மாமா பாக்கல ஆனா இன்னைக்கே எதுக்கு"


"இன்னைக்குனு இல்லப்பா ரெண்டு நாளா உன்கிட்ட சொல்லனும்னு தான் நினைச்சேன். சொல்லப்போனால் மகாலட்சுமி தான் எதுக்கு வெயிட் பண்ணனும். சிவபெருமான் அத்தான் இருக்காங்களா அவர் கண்டிப்பா நல்லா பாத்து பாரு.


தைரியமா அவர்கிட்ட போய் சொல்லுங்க. அப்படின்னு சொன்னா அதான் உன்கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன். உன்ன ரெண்டு நாளா பார்க்கவே முடியல. சரி அண்ணனோட கல்யாணத்துல வேலைகள் இருக்கும் னு விட்டுட்டேன்.


அதான் இப்ப சொல்றேன் உன்ன தவிர வேற யார் பொறுப்பா பாத்துப்பா. மகாலட்சுமி கூட அதான் சொல்லுறா."


மகாலக்ஷ்மியின் பெயரை உச்சரிக்க அதற்கு அவனும் சரி என்று தலையை ஆட்டினான்.


" சரி மாமா நான் போய் என்னன்னு பாக்குறேன்."


"இந்த இன்னைக்கு கிளம்புனாதான்  நாளைக்கு காலைல. போய் சேர முடியும். காலேல நல்ல நேரமாக இருக்கும். நீயும் வேலைய அங்க போயி ஆரம்பிச்சுடலாம். பாத்து போயிட்டு வா. போய் வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்துரு. திரும்ப நீ அலைய வேண்டாம் பாரு அதுக்கு தான் சொல்றேன். கூட வேணா உன்னோட சோக்காலிய கூட்டிட்டு போ." என்று அங்கிருந்து நகர்ந்தார்.


"டேய் என்னடா உன்ன இந்த நேரம் பார்த்து வெளியூருக்கு மெட்ராஸ் போக சொல்றாரு. நீயும் போறேன்னு சொல்ற. அப்ப மகாவை என்ன பண்றது."


"எனக்கு என்னமோ அவருக்கு என் மேல சந்தேகம் வந்திருக்கும் போல தோணுது.


"இப்போ அது பிரச்சனை இல்ல டா. அந்த நேசன் முதல் ராத்திரிக்கு அரவிந்த கூட்டிட்டு சுத்திகிட்டு இருக்கான்.


அரவிந்த் இருக்கிறவரைக்கும் அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர மாட்டாங்க. நான் எப்படியாவது இந்த வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு வந்துருவேன். நீயும் என் கூட வா. எப்படியும் ரெண்டு மூணு வாரம் ஆகும்னு நினைக்கிறேன். நீ என்கூட இருந்தா கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்." அவன் தலையசைத்தான்.


கட்டிலில் இருவரும் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர்.


" அரவிந்த் உன் கூட இல்லன்னு கவலைப்படுறியா..." என கேட்க 'இல்லை' என தலையசைத்தாள்.


ஆம் என்ற பதிலை எதிர்பார்த்து இருந்தவன், இல்லை என்ற பதிலில் சிறிது மகிழ்ச்சியை எட்டி பார்த்தாலும் அவளிடமே கேட்டேன்.


" ஏன் நீ உன்னோட அரவிந்த இல்லாம வருத்தப்படுறன்னு நெனச்சேன்." என அவளருகே சற்று நெருங்கி அமர,


" அவனுக்காக தான் நான் இங்க இருக்கேன்."என காற்று பிடுங்கிய பலூனாய் ஆனான்.


"அப்ப அவன்கிட்டயே போய்இருக்கலாம்ல." என்று கைகளை கட்டிலில் ஊன்றி அவளின் எதிர்ப்புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.


" அவனுக்காக மட்டுமில்ல. நீங்க கொடுத்த வாக்கை காப்பாத்தவும் தான்." 


" வாக்க என்ன வாக்கு."


" நீங்கதானே நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி அரவிந்த் கிட்ட நம்ம பொண்ண கல்யாணம் கட்டிதரேன்னு சொன்னீங்க." என வெட்கி தலைகுனிய, அவளின் எண்ணம் உணர்ந்தவன் அவளிடம் நிஜமாவா என்று கேட்க அவள் மீண்டும் வெட்கப்பட அவளுடைய வெட்கத்தைக் சம்மதமாக எண்ணியவன் அவளை நெருங்கினான்.


((இதுக்கு மேல இங்க இருந்தா பக்கத்துல இருக்க பழத்தாலயே நம்மள அடிப்பாங்க. நாம நடராஜர் கையிலிருந்த அரவிந்தனை என்ன ஆனான்னு பார்க்க கிளம்புவோம்.))


"ரொம்ப நன்றிப்பா."


" பரவாயில்லை அத்தை. முன்னாடியே நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அவன் மனசில் நோகாம இருந்திருக்கும்.


இவ்வளவு நாள் ஆசைய மனசுல வச்சுருந்துருக்கான். அவனாவது நம்மகிட்ட ஒரு வார்த்த முன்னாடியே சொல்லியிருந்தா பேசி பார்த்துருப்பேன்.


முடியலன்னா அவனுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைச்சு இருக்கலாம். ஆனா இப்போ மனசுல இவ்வளவு வன்மத்தை சுமந்துகிட்டு சுத்திகிட்டு இருக்கான். கொஞ்ச நாளைக்கு அவன வெளியூருக்கு அனுப்பி இருக்கேன். பார்க்கலாம் திரும்ப வரும்போது கொஞ்சம் நடந்ததை புருஞ்சுக்குற சூழ்நிலை இருக்கும்னு நினைக்கிறேன்."


"நானே உங்க கிட்ட எல்லாம் பேசி சிவனேசன் கிட்டயும் பேசி மகாலட்சுமியை சிவபெருமானுக்கே கட்டி வைக்க கேட்கலாம்னு தான்பா நெனச்சேன்.


சிவனேசன் மகாலட்சுமியும் ஒருத்தருக்கு ஒருத்தர் நேசிக்கிறாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்படிப்பா அவங்கள பிரிச்சு இவன் கூட சேர்த்து வைக்க முடியும்.


ரெண்டும் நான் பெத்த புள்ளைங்க. யாரோட சந்தோசத்தை முன்னாடி நிறுத்த முடியும்.


அதான் விதிப்படி எதுவும் நடக்கட்டும்னு விட்டுடேன். போக போக புரிஞ்சுபான்னு நினைச்சேன்.


ஆனா இவன் இப்பவும் மஹா அவளுக்கு தான் வேணும்னு என் கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கான்.


ரெண்டு நாளா வீட்டுக்கு வராம அவனுடைய சோக்காலி கூட தண்ணி அடிச்சுட்டு சுத்திக்கிட்டு இருக்கான்.


கேட்கும்போது மனசு பதறுது. இப்படியே போனா என் பையன இழந்துருவேனு  பயமா இருந்துச்சு.


ஆனா அவன் பழிவாங்குவேன் அது இதுன்னு சொல்லிட்டு திரும்பவும் மஹா பின்னாடி சுத்துறது சரியா படல.அதான் வேற வழி தெரியாம உன் கிட்ட சொன்னேன்."


"விடுங்க அத்தை. அவன் வெளியூர்ல கொஞ்சநாள் இருந்து வந்தால் எல்லாம் சரியாகிடும். நான் கிளம்புறேன்." என அவர் மடியில் இருந்த அரவிந்தை அழைத்துக்கொண்டு தன் வீடு நோக்கி நகர்ந்தார், நடராஜர்.


💖💖💖💖💖



Rate this content
Log in

Similar tamil story from Romance