Salma Amjath Khan

Romance

2.0  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 36

நீயே என் ஜீவனடி 36

3 mins
516


"அரவிந்த் கண்ணா என்ன ஆச்சு... ஏன் இன்னும் எந்திரிக்கல. பள்ளிக்கூடத்துக்கு போக வேண்டாமா ... எழுந்திரிங்க...." என அவன் தோள் தொட அவன் உடல் கொதித்துக்கொண்டு இருப்பதை உணர்ந்தவள்,


" அரவிந்த் கண்ணா, என்ன ஆச்சு உங்க உடம்புக்கு? இவ்ளோ காய்ச்சல் அடிக்குது." என கேட்க, அவனிடமிருந்து பதில் ஏதுமில்லை.


"எப்படி காய்ச்சல் எடுக்காம இருக்கும். இவன் என்ன பண்ணி வச்சிருக்கான்னு பாரு." என அவன் சட்டையை கலட்ட மகாலட்சுமி அதிர்ந்தாள்.


"அரவிந்த் என்ன இது." என அவன் நெஞ்சை தடவ,


"ஸ்ஆஆஆ... வலிக்குது அத்தை. தொடாதீங்க." என கூற,


" என்ன பண்ணி வச்சிருக்க நீ" என கோவமா கேட்க,


" நான் என்ன பண்ணினேன்."


" இதெல்லாம் எப்போ நடந்தது." என கோபமாக கேட்க 


"நேத்து பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வந்தேனா.... அப்போ பாண்டி மாமா அந்த பக்கம் ஒரு பாட்டிக்கு காசு குடுக்குற த பார்த்தேன்."


"ஓய் பாண்டி மாமா, இங்கே என்ன பண்ணுறீங்க. கற்பகம் அத்த உங்கள தேடி கிட்டு இருக்கு. ஆமாம் யார் இந்த பாட்டி..." என கேட்க


"வா அரவிந்த். என் பொண்டாட்டி கற்பகம் பேர பச்சை குத்தி கிட்டு இருந்தேன் இந்த பாட்டிகிட்ட. இதோ கிளம்பிட்டேன்."


" நீங்க ஏன் உங்க பொண்டாட்டி பேர பச்சை குத்திரீங்க."


"அது வா ராசா அத நான் சொல்லுதேன். அம்மா பேரு அப்பா பேரு மனசுக்கு புடிச்சவங்க பேரு பொண்டாட்டி பேரு இதெல்லாம் பச்சை குத்துகிட்டா அவங்க நம்ம கூட எப்பவும் இருக்குற மாதிரியே இருக்கும். அவங்க கூட இருக்குற நம்ம உறவும் வலிமையா இருக்கும். அதனாலதான் எல்லாரும் இந்த பாட்டிகிட்ட பச்சை குத்திக்கிறாங்க."


"அப்போ எனக்கும் பச்சைகுத்திய விடுறீங்களா"


"குத்தலாம். ஆனா நீ சின்ன பையனா இருக்கியே. இது ரொம்ப வலிக்கும்."


"அதெல்லாம் வலிக்காது. நீங்க சும்மா குத்து விடுங்க."


"சரி. உட்காரு ராசா. எங்க குத்த கைலயா நெஞ்சிலயா"


"எனக்கு நெஞ்சிலேயே குத்தி விடுங்க பாட்டிமா"


"சரிய்யா... என்னன்னு குத்த"


"ஆனந்தி"


குச்சியை கையில் எடுத்த பாட்டி ஆனந்தியின் பெயரை அரவிந்தன் நெஞ்சில் குத்தி விட்டு கொண்டே,

"ஏய்யா உனக்கு வலிக்கலயா?"


"கொஞ்சோன்டு வலிக்குது." என இரு விரலை மட்டும் குறுக்கி காட்ட, சிரித்துக்கொண்டே,


" உனக்கு அம்மா நா ரொம்ப பிடிக்குமா. இவ்வளவு ஆசையா பச்சக்குத்துற..."


" ஐயோ பாட்டி.இது அம்மா பேரு இல்லை. என் பொண்டாட்டி பேரு. அழகா குத்தி விடுங்க. அப்பதான் என் பொண்டாட்டிக்கு ரொம்ப பிடிக்கும்."


"என்னய்யா சொல்ற...." என பச்சை குத்துவதை நிறுத்து விட்டு அவன் முகம் காண,


"ஏன் என்னாச்சு பாட்டி..."


"இந்த வயசு பொண்டாட்டின்னு சொல்ற. உன்ன நம்பி நான் பச்சைநிற குத்திவிட ஆரம்பிச்சுட்டேன். உங்க வீட்டில திட்ட போறாங்களே."


"அதெல்லாம் யாரும் திட்ட மாட்டாங்க. என் பொண்டாட்டி பேர பச்சை குத்துனத கேட்டா சந்தோசம்தான் படுவாங்க.


என் அத்தையும் மாமாவும் தான் எனக்கு சொன்னாங்க அவங்க பொண்ணா எனக்கு கல்யாணம் கட்டி தருவாங்களாம் நான் வளந்ததுக்கு அப்புறம்."


"அத்த பொண்ணு அவ்வளவு அழகாக. என்ன பண்ற உன் அத்தை பொண்ணு?"


"அத்த பொண்ணு என் அத்த வயத்துல இருக்கா..."


"என்னலே சொல்ற. பிறக்காத பிள்ளைவாலே பொண்டாட்டி ன்னு சொல்லிட்டு பச்சைக்குத்துற...."


" இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறந்துரும். என் அத்தைக்கு கைல வளையலும் போடப் போறாங்களாம். இன்னும் கொஞ்ச நாள்ல என் பொண்டாட்டி என்ன பாக்க வந்துருவா..."


" ஒருவேளை ஆண் குழந்தை பிறந்தா"


"என் மாமா சொன்னாரு உனக்காக உன் ஆனந்தி தான் பிறப்பான்னு."


" முகத்தை கூட பார்க்காத பிள்ளைக்காக இப்படி உருகுறியேல.கண்டிப்பா பெண் குழந்தை தான் பிறக்கும். நீ உன் ஆனந்தியுடன் நல்லா இருக்கணும்." என ஆசீர்வதித்தார் பாட்டி.


"இருந்தாலும் நீ பேரெல்லாம் குத்தி இருக்கக்கூடாது அரவிந்த். பாரு சுரம் வந்துருச்சு."


"சரி விடு சுமி. அவன் சின்ன பையன் விளையாட்டுத்தனமா பண்ணி இருப்பான்."


"அவனுக்கு விளையாட்டுத்தனமாக இல்ல. அவ என் பொண்ணு மேல உசுரையே வச்சிருக்கான்." என அவள் வயிற்றை நிறைமாத வயிற்றை தடவிக்கொண்டே சிவனேசன் ஐ பார்த்தாள்.


"டேய் ஏண்டா இப்படி குட்டி போன போட்ட பூனை ஆட்டம் நிலத்தை அளந்து விட்டு இருக்கா"


"இன்னைக்கு தந்தி போடுறேன் சொன்னவன் இன்னும் போடலையே அதான் குழப்பமா இருக்கு."


"ஏண்டா திடீர்னு எப்படி குழம்புற. எதுவும் ஆயிருக்காது."


" இல்லடா நான் ஒரு நாள் இல்லனாலும் அம்மா என்ன பார்க்காம இருக்காது. நான் இங்க வந்து ஒன்பது மாசம் ஆகப்போகுது. பொங்கலுக்கும் என்னால போக முடியல. இப்போ தீபாவளி வருது. அதுக்கு கூட கிழவி பரவாயில்லப்பா நீ வேலைய பாரு என்று சொல்லுது.


வேலைய முடிக்க முடிக்க மேற்கொண்டு வேலய நடராஜன் மாமா கொடுத்துக்கிட்டே இருக்காரு. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. "


"அதான் ஊர்ல என்ன நடக்குதுன்னு பாக்க ஆள அனுப்பி இருக்கேல கொஞ்சம் பொறுடா."


'தந்தி' என சத்தம் கேட்க முரளிதரன் வெளியே சென்று தந்தியை வாங்கி வந்து சிவபெருமானிடம் கொடுத்தான்.


அதை வாங்கி படித்தவனின் கண்கள் சிவந்தன. கோபத்தில் தந்தியை கிழித்துப் போட்டு அவன் கையை முறுக்கி அங்கிருந்த பொருட்களை எல்லாம் சிதறடித்தான்.


நண்பனின் திடீர் கோபத்திற்கு காரணம் புரியாமல் இப்பொழுது அவனை அடக்குவதே சிறந்தது என அவனை பிடித்து அமர வைத்தான்.


"டேய் என்னடா ஆச்சு? ஏன் எல்லாத்தையும் வெறி பிடிச்ச மாதிரி உடைக்கிற?"


"நான் நினைச்சேன் டா. என்னடா யாருமே மகா பத்தி கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க. என் மகாக்கு வளைகாப்பு வச்சிருக்காங்க.


எவ்ளோ தைரியம் என் கிட்டே மறச்சு இருப்பாங்க. திட்டம் போட்டு தான் இங்க அனுப்பியிருக்காங்க நினைக்கிறேன். 


இந்த திட்டத்துல யார் யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியல. கண்டிப்பா என் அம்மாவும் நடராஜனும் கண்டிப்பா இருப்பாங்க."


"என்னடா சொல்ற மகா மாசமா இருக்க"


"எவ்வளவு தைரியம் இருந்தா அந்த சிவனேசன் தொட்டு இருப்பான். அவன சும்மா விடமாட்டேன்."


"டேய் என்னடா பண்ண போற"


"என் மஹா எனக்கு மட்டும் தான் டா. நான் யாருக்கும் என் மஹாவ விட்டுக் கொடுக்க மாட்டேன்."


" சரி வா நாம போகலாம்."


"இப்ப போய் என்ன பண்ண போறே."


"அப்போ எப்போ போவ...."


" நான் என் மகாவ பார்க்கும்போது அவ இன்னொருத்தனுக்கு சொந்தமா இருக்க மாட்டா..."


"என்னடா சொல்ல வர..."


என முரளிதரன் கேட்க அவனுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான்.



Rate this content
Log in

Similar tamil story from Romance