Arivazhagan Subbarayan

Thriller

5.0  

Arivazhagan Subbarayan

Thriller

யாரிவன்...!

யாரிவன்...!

5 mins
1.8K



   அசோக் பஸ் ஸ்டாப்பிலிருந்து தன் வீட்டிற்கு வருவதற்குள் தொப்பலாக நனைந்து விட்டிருந்தான், நரேஷ். இந்நேரம் வீட்டிற்கு வந்திருப்பான். இருவரும் வெவ்வேறு ஐ டி கம்பெனிகளில் வேலை பார்க்கிறார்கள். ஒரே வீட்டை வாடகை்கு எடுத்து ஷேர் செய்து தங்கியிருக்கிறார்கள். 


   காலங் பெல்லை அழுத்தியதும் கவைத் திறந்ந நரேஷ்,"என்னடா, இப்பதான் வறியா?"

  "லாஸ்ட் மினிட்ல மேனேஜர் கொஞ்சம் வேலைனு இழுத்து விட்டுட்டார்டா. அதான் லேட்"


  "உன்னோட டின்னர் டைனிங் டேபிள் மேல இருக்கு, எடுத்துக்க"

  "நீ குக் பண்ணினயா?", ஆச்சரியப்பட்டான் அசோக்.


  "அடப்போடா. எனக்கு வேலை முடியறதக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும். ஸ்விகி தான். உனக்கும் சேர்த்து வாங்கிட்டேன்",என்ற நரேஷ் தன் ரூமிற்குள் நுழைந்து லேப்டாப்பிற்குள் தலையைக் கவிழ்த்துக் கொணாடான்.


  "சரி, சரி" என்ற அசோக் பாத்ரூமிற்குள் நுழைந்தான். சூடான வெந்நீர்க் குளியலில் புத்துணர்வு பெற்று வெளியே வந்தான். டைனிங் டேபிளின் மீதிருந்த வெஜ் ஃபிரைட் ரைஸை ஒரே மூச்சில் உள்ளே தள்ளி விட்டு, ஒரு கோக்கில் தாகம் தணித்துக் கொண்டான்.


தன்னுடைய மொபைலில் மணி பார்த்தான். பத்து இருபது. ஸ்டீஃபன் கிங்கின் லிஸிஸ் ஸ்டோரியைக் கையில் எடுத்துக் கொண்டு படுக்கையில் கவிழ்ந்தான். ஒரு அரைமணி நேரம் படித்திருப்பான். கண்களைத் தூக்கம் அழுத்தியது. பக்கத்து ரூமில் நரேஷூம் தூங்கியிருப்பான் போல. லைட் ஆஃப் ஆகியிருந்தது. 


   கட்டிலின் அருகே இருந்த சுவிட்சை ஆஃப் செய்யப் போனவன், ஹாலில் இருந்த ஜன்னல் கதவு படார் என்று காற்றில் அடித்த சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்தான். வெளியே பேய்மழை அடித்துக் கொண்டிருந்தது. ஊங்ஷ்...ஊங்ஷ் எனக் காற்று வீசிய சத்தத்தில் சின்ன பயத்தை முதுகெலும்பின் மேற்பரப்பில் உணர்ந்தான் அசோக்.


காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மரங்கள் அசைவது ஒரு அமானுஷ்ய சூழ்நிலைக்கு இவனைத் தள்ளியது. திடீரென எங்கிருந்தோ ஒரு ஓநாய் ஊளையடும் சத்தம் கேட்டது. இந்தச் சத்தம் எதையும் காதில் வாங்காமல் நரேஷ் நிம்மதியாகத் தூங்குகிறான் போலும். அவன் அறைக்கதவைத் திறக்கவேயில்லை. 


   ஓநாயின் ஊளைச்சத்தம், திடீரென வீட்டின் பின்புறமிருந்து வருவதுபோல் தோன்றியது. அவ்வளவு கொடூரமான ஊளைச்சத்தம். பயம் அசோக்கின் முதுகுத்தண்டில் சில்லிட்டுப் பரவியது. நெற்றியில் வியர்த்தது. இதயம் படபடவென குதிரையின் ஓட்டத்தில் இயங்கியது. ஜன்னலை இறுக்கமாகச் சாத்திவிட்டு, அறைக்கதவையும் நன்றாகப் பூட்டி விட்டு படுக்கையில் சாய்ந்தான். எப்படியோ உறங்கிப் போனான்.


   அடுத்தநாள் காலை எட்டு மணிக்கு நரேஷ் ரூம் கதவைப் படபடவெனத் தட்டினான்.

  "டேய் அசோக் எழுந்திருடா. ஆஃபீஸ் போகலையா"

   சரியான தூக்கமில்லாததால், கண்களைக் கசக்கிக் கொண்டே கதவைத் திறந்த அசோக்,"மணி என்ன?" என்றான்.

  "எட்டுடா. நீ கிளம்பல?"


  "சாரிடா. சரியாத் தூங்கல. பத்து நிமிஷத்துல கௌம்பிடுவேன். ஆமா, ராத்திரில உனக்கு எதாவது சத்தம் கேட்டுதா?"

  "நான் கண்ண மூடினா டெட் பாடிதான் காலைல விழிப்பு வர்ற வரைக்கும். ஏன், உனக்கு ஏதாவது சத்தம் கேட்டுதா?"

  "ஆமான்டா, ஓநாய் ஊளையிடுற சத்தம். வீட்டுக்குப் பின்னாடியே கேட்டுது"

   "வீட்டுக்குப் பின்னாடி கொஞ்ச தூரத்தில ஃபாரஸ்ட் இருக்கில்ல. அங்கிருந்து ஏதாவது வந்துட்டுப் போயிருக்கும். சரி, சீக்கிரம் கௌம்பு வெயிட் பண்றேன்"

       

        ***************

    

    அசோக் ஆஃபீஸில், தன்னுடைய சீட்டில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, கீ போடில் எதையோ டைப் செய்து கொண்டிருந்தவன், ஏதோ நினைத்துக் கொண்டவனாய், நிமிர்ந்து பார்க்க, ஆஃபீஸ் முழுவதும் யாருமில்லை. எல்லோரும் எங்கே சென்றார்கள்? நினைத்துக் கொண்டிருக்கும் போதே, சுற்றியுள்ள மற்ற கம்ப்யூட்டர்கள் ஒவ்வொன்றும் மரங்களாக மாறத் தொடங்கியிருந்தன.


இது எப்படி சாத்தியம்? அவன் மூளை இயங்க மறுத்தது. இதோ, அவன் முன் இருந்த கம்ப்யூட்டரும் ஒரு மரமாய் மாற, திடீரென அவனைச் சுற்றி ஒரு காடு. எங்கோ தூரத்தில் ஒரு ஓநாயின் ஊளைச்சத்தம்.


பயம் உடம்பின் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் உடுருவி மயிர்கூசசெறிய வைத்தது. முன் நெற்றியிலும் கழுத்தின் பின் புறத்திலும் வியர்வைச் சுரப்பிகள் உற்பத்தியை வேகவேகமாகத் தொடங்கியது. நாக்கு உலர்ந்து வாயின் மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. ஓநாயின் ஊளைச் சத்தம் இப்போது மிக மிக அருகில் அவனுக்குப் பின்னால் கேட்க, உறைந்து போய் சடாரெனத் திரும்பினான்.


எதிரே கண்களில் வெறியோடு ஒரு ஓநாய். அசோக்கின் மூளை ஆபத்தை உணர்ந்து, ஃபைட் ஆர் ஃபிளைட் செய்தியை நியூரான்களுக்கு அனுப்ப, உடல் ஃபிளைட் மோடுக்குத் தாவ, அட்ரீனல் சுரப்பிகள் ஹார்மோன்களை இரத்த ஓட்டத்தில் கன்னா பின்னாவென்று கலந்து விட, பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓடினான், ஓடினான், ஓடிக்கொண்டேயிருந்தான்.


அதே ஓநாயும் வெறியோடு துரத்தி இவன் மேல் பாய, எதிரே இருந்த பள்ளத்தாக்கை கவனியாது, வேக வேகமாக கீழே, கீழே, கீழே.....

  திடுக்கிட்டுக் கண்விழித்தான் அசோக். மை காட்! இது வெறும் கனவுதான். கண்ட கனவின் வீரியத்தால் உடம்பு வேர்வையில் நனைந்து அவனது நைட் டிரஸ் உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்தது. இதயம் நெஞ்சுக்கூடிலிருந்து தாவி வெளியே குதித்து விடுவது போல் துடியாயாத் துடித்தது.


அருகே டீபாயின் மீது வைக்கப்பட்டிருந்த டம்ளரில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடித்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். இன்று இரவும் உறக்கம் போயிற்று. மை காட்! ஏனிந்த பயங்கரக் கனவு? ஆனால், நேற்றிரவு கேட்ட ஓநாயின் ஊளைச்சத்தம் நிஜம். அந்தச் சத்தம் பயத்தில் உறைய வைத்தாலும், மனதில் எதையோ கிளறுவது போல், எதையோ தூண்டுவது போல், எதையோ உணர்த்துவது போல் தெரிந்ததே? பிரமையா?


   இன்றும் மழை காற்றோடு சேர்ந்து பூமியைத் துவம்சம் செய்வது நன்றாகக் கேட்டது. எங்கோ ஓர் மரக்கிளை முறிந்து விழுந்தது. மீணடும் திடீரென உடம்பை உறைய வைக்கும் ஊளைச்சத்தம் வீடடின் பின்புறம் கேட்டது. மனமும் உடலும் பயத்தின் ஆதிக்கத்தில் இருந்தாலும், எதற்கோ கட்டுண்டவன் போல, பெட்டிலிருந்து எழுந்து வெளியே வந்தான்.


வீட்டின் கதவைத் திறந்தவுடன் சரேலென ஈரக்காற்று முகத்தில் அறைந்தது. அருகில் உள்ள ட்ரான்ஸ்ஃபார்மரில் இருந்து டிட்டுரும் என்று சத்தம். கரண்ட் கட். மையிருட்டு. கையிலிருந்த செல்ௐபோனிலிருந்து ஔியைப் பாயச்ச, எதிரே கரு கருவென கொடூரமாக ஆத்திரத்துடன் ஒரு ஓநாய். பயத்தில் ஒரு நிமிடம் உறைந்து போனான். ஊஊஊஊஊஊஊஊ வென அது ஊளையிட இவனுள்ளே பயம் மரத்துப் போயிருந்து. ஆச்சரியம்! அது இவனை ஒன்றும் செய்யவில்லை.


"உன்னுடைய இடத்தை விட்டுவிட்டு இங்கு என்ன செய்கிறாய்?" யாரோ காதருகில் பேசுவது அசோக்கிற்குத் துல்லியமாகக் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமில்லை. யார் பேசியது? அந்த ஒநாய் இவனைப் பார்த்துச் சிரிப்பது போல் தோன்றியது. 

  "நான்தான் பேசுகிறேன்" என்றது. 

  ஆ...ஓநாயா பேசுவது? குழம்பினான். பயந்தான். ஆச்சரியத்தில் உறைந்தான்.

  "நிஜமாகவா?"

  "நான் பேசுவது உனக்கு மட்டும்தான் கேட்கும்"

  "ஏன்?"

  "ஏனென்றால், நீயும் எங்கள் இனம். நீயும் ஒரு ஓநாய்!"


  "என்ன, நானும் ஒரு ஒநாயா?"

  "ஆமாம். அதனால்தான் உன்னை ஒன்றும் செய்யவில்லை!"

  "ஓகோ! ஆனால், என் உருவம் மனித வடிவத்தில் இருக்கிறதே! எப்படி?"

  "உருவம் மாறலாம். மனதளவில் நீ ஓநாய்தான்!"

   அசோக் செய்வதறியாது திகைத்தான். 


  "என்ன திகைக்கிறாய். என்னைப்போல் நான்கு கால்களில் நில் பார்க்கலாம்"

  அசோக் அவனையே அறியாமல் அது சொல்வதைக் கேட்டான். ஓநாய் போலவே தரையில் மண்டியிட்டான். 

  "இப்போது, தலையை மேல் நோக்கி நிமிர்த்தி ஊளையிடு. ஊஊஊஊஊஊஊஊஊஊ"

  அந்த ஓநாய் சொன்னது போலவே தலையை மேல் நோக்கி நிமிர்த்தினான். 

   "ஊஊஊஊஊஊக்க்க்.....ஊஊஊஊக்க்க்" சரியாக வரவில்லை. இருமினான். ஆனால், மனதுள்ளே ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதியை உணர்ந்தான்.

   "ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ" இந்தமுறை சரியாக வந்தது. 

  "சரி, புறப்படு என்னுடன்!"

  "எங்கே?"

  "காட்டுக்குள் தான். அங்கே தானே நமக்கு உணவு கிடைக்கும்! என்னைப் பின் தொடர்ந்து வா"


   ஓநாயைத் தொடர்ந்து, அசோக் நாலுகால் பாய்ச்சலில் தாவி ஓடினான். இது அவனுக்குப் புதிதாக இருந்தது. ஆனால், மகிழ்வாகவும் இருந்தது. அவனுடைய உடல் முழுதும் சுற்றியுள்ள புதர்களின் முட்செடிகள் பட்டுக் கிழித்தன. எதையும் பொருட்படுத்தாமல் இன்பமான வெறியுடன் ஓநாயாய்த் தொடர்ந்து ஓட ஓட ஓட....

      

        ***************


   அடுத்தநாள் காலை ஏழு மணியளவில் நரேஷ், அசோக்கின் அறைக்கதவைத் தட்டினான்.

   "என்னடா?",என்று கண்களில் தூக்கம் விலகாமல் எழுந்து வந்த அசோக்கைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான் நரேஷ்.

   "என்னடா இது, உடம்பெல்லாம் ஒரே காயம்? பைக்ல போய் எங்கியாவது விழுந்தியா?"

  "ஒரு நிமிடம் இரு. குளிச்சிட்டு வந்து விளக்கமாய்ச் சொல்றேன்.


   பத்து நிமிடம் கழித்து வந்தான்.

  "என்னடா, சொல்லு?"

  "நரேஷ், நான் சொன்னால் நீ நம்ப மாட்டே!"

   "பரவால்ல, சொல்லு நம்பறேன்"

   "நான் கொஞ்சம் கொஞ்சமா ஓநாயாய் மாறிக்கிட்டு வரேன் நரேஷ்!", என்றான் சீரியஸாக.


   குடித்துக் கொண்டிருந்த காஃபியால் புரையேறும் அளவுக்கு வாய்விட்டுச் சிரித்தான் நரேஷ்.

   "பாத்தியா, நீ நம்பலை!"

   "எதாவது கனவு கண்டியா?"

  "இல்லை. நிஜம். என் உடம்பில காயங்களைப் பாத்தியில்ல. அது நேற்று இரவு நான் நாலுகால் பாய்ச்சலில் காட்டுக்குள் ஓடிய போது ஏற்பட்டது!"

  இதைக் கேட்டதும் கொஞ்சம் சீரியஸானான் நரேஷ்.


  "என்னடா சொல்றே?"

  நேற்று இரவு நடந்தது முழுவதையும் சொன்னான் அசோக்.

  'இவன் என்ன உளறுகிறானா அல்லது உண்மையைத்தான் சொல்கிறானா?' அதிர்ச்சியில் உறைந்தான் நரேஷ்.

  "நான் இனிமேல் காட்டிற்குள் சென்று ஓநாயாகவே வாழ்ந்து விடலாம் என நினைக்கிறேன். அதுதான் எனக்கு சந்தோஷம்!"


  "என்னடா உளர்றே?"

   "இல்லை, உண்மையத்தான் சொல்றேன். இன்னும் சில நாட்களில் நான் கமப்ளீட்டா ஓநாயாகவே மாறி விடுவேன்!"

   இதைக் கேட்டதும் ஒரு முடிவுக்கு வந்தான் நரேஷ்.

   "சரி, நீ காட்டுக்கே போ. ஆனால்,அதற்கு முன் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டை கன்ஸல்ட் பண்ணிவிட்டுப் போகலாம்"


  "என்னை என்ன பைத்தியம்னு சொல்றியா?"

  "நான் அப்டிச் சொல்லலை. ஒரே ஒரு கன்சல்டேஷன் மட்டும். அதுக்கப்புறம் நானே உன்னைக் காட்டில் விட்டு விடுகிறேன்"

  "சரி, உனக்காக வருகிறேன்"


         *************


    சைக்கியாட்ரிஸ்ட், டாக்டர் பார்த்தசாரதியின் அறையில் இருவரும். டாக்டருக்கு அறுபது வயதிற்கு மேல் இருக்கும். தலையில் அனைத்து முடிகளும் வெண்மை நிறத்தில் மினனியது. ஃபிரேம்லெஸ் மூக்குக் கண்ணாடியின் பின்புறம் தெரிந்த கண்களில் தீட்சண்யம் தெரிந்தது. நரேஷ் சொல்வதைப் பெறுமையாகக் கேட்டார். 

  "இதற்கு முன்னால் இதே மாதிரி இவர் நடந்திருக்கிறாரா?"

  "இல்லை டாக்டர். இதுதான் முதல் தடவை!"


  "அசோக், நீங்க என்ன சொல்றீங்க?"

  "நான் ஓநாய்தான் டாக்டர், பாருங்க", உடனே தரையில் மண்டியிட்டுக் கத்தினான்.

  "ஊஊஊஊஊஊஊஊஊ"

  "ஓகே. நீங்க ஓநாய்தான் ஒத்துக்கிறேன். காட்டுல போய் இருக்கறதுக்கு உடம்புல தெம்பு வேணுமில்லையா? அதனால, சிஸ்டர் உங்களுக்கு ஒரு ஊசி போடுவாங்க. போட்டவுடன் காட்டுக்குள்ள போகலாம். சரியா?"


  ஓநாய் போலவே தலையாட்டினான் அசோக். நர்ஸ் வந்து tranquillizer இன்ஜெக்சன் போட்ட பதினைந்து நிமிடத்தில் உறங்கிப் போனான்.

  "டாக்டர், என்ன ப்ராப்ளம்?"


  "அசோக்கிற்கு இருப்பது schizophrenia என்னும் மன வியாதி. தன்னை ஓநாயாகவே 

கருதுவது ஒரு வகையான இல்யூஷன். இதை clinical lycanthropy என்று சொல்வோம். கிரேக்க நாட்டுப் பழங்கதைகளில் வருமே அது மாதிரி!"


  "இதை சரி செய்து விட முடியுமா, டாக்டர்?"

   "கண்டிப்பாக! ஹிப்னோ தெரபி, சைக்கோ அனாலிஸிஸ் இருக்கு. அப்புறம் மாடர்ன் antipsychotic drugs நிறைய இருக்கு. டோன்ட் வொர்ரி! இவர் இங்க அட்மிஷன்ல இருக்கட்டும்"

  "ஓ.கே. டாக்டர். தேங்க்யூ!"

  வெளியில் வந்த நரேஷின் மனம் லேசானது. மொபைல் எடுத்து அசோக்கின் பெற்றோர்களுக்கு கால் செய்தான்.

             

  


   


    



Rate this content
Log in

Similar tamil story from Thriller