Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

இதயத்தில் ஓர் இசை...!(பாகம் 9)

இதயத்தில் ஓர் இசை...!(பாகம் 9)

5 mins
205பாகம் 9


வினிதா சரியாகக் காலை ஆறு மணிக்குக் கண் விழித்தாள். தான் இரவு தங்கியிருந்து மஞ்சுவின் வீடு என்று ஞாபகம் வந்தது. தன் கடற்கரையோர கிராமத்து வீடாக இருந்தால் இந்நேரம் எழுந்தவுடன், காலையில் கடற்கரையோரம் ஒரு வாக் போயிருக்கலாம். காலைத் தென்றல் காதலன் போல் தன்னைத் தழுவியிருக்கும் என்ற நினைப்பு வந்ததும் உடனடியாகத் தன் வீட்டை மிஸ் பண்ணுவதாக உணர்ந்தாள். அருண் தன்னைத் திருமணம் செய்து கொண்டபின் தன்னுடைய வீட்டில் வசிக்க முடியாது என்று நினைக்கும் போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், இவ்வளவு நாட்கள் இல்லாமல், திடீரென கடவுள் தனக்கு ஒரு வாழ்க்கையை அருண் மூலம் ஏற்படுத்தித் தந்து இருப்பதை அவள் இழக்க விரும்பவில்லை.


திடீரென அவள் மனதில் ஒரு எண்ணம் தோன்றி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. நன்றாகப் பேசும் எல்லா ஆண்களும் உண்மையில் நல்லவர்கள்தானா? அருணைப் பற்றி அவளது உள்ளுணர்வு நல்ல விதமாகவே அவளுக்கு உணர்த்தினாலும் அவளது மனதின் ஒரு ஓரத்தில் ஒரு சிறிய பயம் இருக்கத்தான் செய்கிறது. பழகுவதற்கு நல்லவர்களாக தெரிந்தாலும் அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனை ஏதாவது இருக்குமா என்று எப்படி தெரிந்து கொள்வது? அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், அவளது அம்மா ஒரு சைக்காலஜிஸ்ட் ஆக இருப்பதால், அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே, அது பிரச்சனை இல்லை. ஆனால், இன்று மேட்ச் முடிந்தவுடன், அருணுடைய பெற்றோர்களை மீட் பண்ணிய பிறகு, தன்னுடைய கடந்த கால வாழ்க்கையையும் அருணிடம் சொல்லிய பிறகு, அருண் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தால், தான் என்ன பதில் சொல்ல வேண்டும்? அதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா? அவளுடைய அம்மா, சில வருடங்கள் முன்பு, தன்னுடைய கிளையன்ட் களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுத்துக்கொண்டிருந்த சமயம் இவள் அம்மாவிடம் கேட்ட கேள்விகள் இவளது ஞாபகத்திற்கு வந்தது. அதற்கு அம்மாவின் பதில்களும் நன்றாக ஞாபகத்திற்கு வந்தது. 


"ஒரு மனிதன் மேலோட்டமாக நன்றாக பேசி பழகினாலும், அவனுக்கு உளவியல் ரீதியாக ஏதேனும் பிரச்சனை உண்டா, இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? என்ற ஒரு கிளையன்டின் கேள்விக்கு அம்மாவின் பதிலை ஆவலுடன் ஒருமுறை எதிர்பார்த்தாள்.


அதற்கு இவளுடைய அம்மா சொன்ன பதில் இன்னும் பசுமரத்தாணி போல் இவளது மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. 


"மேலோட்டமாகப் பார்த்தால், எல்லா மனிதர்களும் நன்றாகத்தான் பேசுவார்கள். பழகுவார்கள். ஆனால் அவர்கள் பேசும் மொழியில் இருந்தும் அவர்களுடைய பாடி லாங்குவேஜில் இருந்தும் அவர்களை உளவியல் ரீதியாக எளிதில் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக வாலிப வயதில் இருக்கும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடம் சரியாக முதன்முதலில் பேச வராது. ஒரு தயக்கம் வரும். தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் மென்று முழுங்கு வான். இது பரிணாம நியதி. ஏனென்றால் பரிணாம நியதிப்படி ஒரு பெண்தான் தனக்குரிய ஆணைத் தேர்ந்தெடுப்பாள். பெண்களுக்கு நன்றாக பேச வரும். ஆனால், ஆண்களுக்கு பேச வராது. பெண்களை மையமாக வைத்துதான் உலகமே இயங்குகிறது. பெண்கள் தான் தன் கருவில் சுமந்து உலகத்தின் மனிதர்களை உருவாக்குகிறார்கள். ஆதலால் பெண்களுக்குத்தான் உலகத்தில் முன்னுரிமை! இதுதான் பரினாம நியதி. இடையில் தோன்றிய ஆண்கள் மேலாதிக்கவாதிகள் இந்த நியதியை மாற்றிவிட்டார்கள். இது சொன்னால் ஆண்களுடைய மூளைக்கு புரியாது. ஏனென்றால் அவர்களுடைய நரம்புகளின் டிசைன் அப்படி. எனவே, ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் முதன் முதலில் சரளமாக பேசினால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவனுக்கு அந்தப் பெண்ணிடம் ஏதோ காரியம் ஆக வேண்டி இருக்கிறது என்று அர்த்தம். அது உடல் ரீதியாக இருக்கலாம் அல்லது பொருள் ரீதியாக இருக்கலாம். ஏதோ தனது ஒரு தேவையை பூர்த்தி செய்ய பிரயத்தனப் படுகிறான் என்று பொருள். இதற்கும் சில விதிவிலக்குகள் உண்டு. வயது மூத்தவர்கள் மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பிரபலமானவர்கள் போன்றவர்களுக்கு பெண்களிடம் சிரமமில்லாமல் பெரிதாகப் பேச வரும். அதற்காக அவர்களைத் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே சமயத்தில் அவர்களின் உள்நோக்கத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குச் சில காலம் அவர்களுடன் பழகி பார்த்தால் தான் தெரியும். அவ்வாறு பழகும்போது எப்பொழுதாவது அவர்களின் உள்மன வேட்கையை அவர்களுடைய பாடி லாங்குவேஜில் வெளிப்படுத்துவார்கள். அதை நுணுக்கமாகப் புரிந்து கொள்ள ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். அருணுடைய பாடி லாங்குவேஜில் இருந்து அவளால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அருண் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறான். நன்றாக பழகுகிறான். நன்றாகப் பேசுகிறான். அவன் பிரபலமானன். அதனால் தன்னுடைய மனம் அவன்பால் ஏற்கப்படுகிறதா? இல்லை இது உண்மையிலேயே உண்மையான காதலா? அருணுடன் தனியறையில் இருந்த போதும் அவன் எல்லை மீறவில்லை. அதனால் அவன் நல்லவன் தான். ஆனால் நல்லவனாக இருப்பது மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமா? அவனுக்கு உளவியல் ரீதியாக வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், இவளுடைய வாழ்க்கை என்னாவது?   இதனால் அவனை நம்பலாமா? ஆனால் இவளுடைய உள்ளுணர்வு அருணுக்கு சாதகமாகவே பேசியது. ஆனால், இவள் இப்போது மனதிற்கு மட்டும் வேலை கொடுக்காமல் மூளைக்கும் வேலை கொடுக்கக்கூடிய கட்டாயம். இவள் ஒரு பதிலை நாளை அருண் இவளிடம் கேட்கும் போது கண்டிப்பாக சொல்லி ஆகவேண்டும். அதனால் அம்மாவிடம் மீண்டும் பேசலாமா என்று யோசித்தாள். அம்மா அதே கிளையண்டிற்கு மேலும் பதில் சொல்வது எவ்வளவு தான் ஞாபகத்திற்கு வந்தது.


"ஒரு சாதாரண, தன்னுடைய தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், பிறரையும் எண்ணிப் பார்க்கும் மனிதன் இயல்பாக இருப்பான். அவனுடைய கருத்துக்களை நம் மேல் திணிக்க மாட்டான். மற்றவரைப் பற்றி அதிகமாக குறை சொல்ல மாட்டான். தனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரைப் பற்றி அதிகமாகச் சொல்லாமல் ஓரிரு வார்த்தைகளில் உணர்த்தி விடுவான். அடிக்கடி வேலையை மாற்ற மாட்டான். அதற்காக அதிக சம்பளத்தில் வேறு ஒரு இடத்தில் வேலை கிடைத்தாலும், 

அதே பழைய வேலையையே செய்து கொண்டிருக்க மாட்டான்.

ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வேலையை விட்டு வேலை தாவ மாட்டான். குடி சிகரெட் போன்ற பழக்கங்கள் அவனுக்கு கண்டிப்பாக இருக்காது. பிறருடைய எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பான். ஆனால் அதற்காக அவன் அவர்களுக்கு அடிமையாகி விடமாட்டான். எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக வாழ்வின் போக்கில் எடுத்துக் கொண்டு வாழ பழகி இருப்பான். அடிக்கடி கோபம் கொள்ளமாட்டான். கோபம் ஒரு வியாதி. பொதுவாக தனக்கு ஏற்படும் விளைவுகளுக்கு தன்னுடைய செயல்களே காரணம் என்று உறுதியாக நம்புவான். ஆண்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். அவர்கள் எப்போதும் லாஜிக்கலாக தின்க் பண்ணவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு நாளையும் தங்களது நினைவில் வைத்திருப்பார்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு இருக்கமாட்டார்கள் அவர்களுடைய பிரைன் டிசைன் அப்படி. இதுதான் ஆண்களுடைய இயல்பு. ஒரு ஆண் தேவை இல்லாமல் தனக்குப் பிரியமானவளுடைய பிறந்த நாளையோ அல்லது மற்ற முக்கியத்துவம் வாய்ந்த நாட்களையோ மனதில் வைத்திருந்தால், எண்ணங்களில் நினைத்திருந்தால், ஞாபகம் வைத்திருந்தால் அவன் சரியில்லை என்று லேசாக உணரலாம். அவன், அவளிடம் ஏதோ ஆதாயம் தேடுகிறான் என்று பொருள் கொள்ளலாம். எதையும் நினைவில் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் அந்த ஆண் இயல்பாக இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் சில விதிவிலக்குகள் உண்டு. அதனால் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு செய்து கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரிடமும் அவர்களுடன் பழகும் போது ஏற்படும் மிக நுணுக்கமான உணர்வுகளினால் அல்லது முகபாவங்களினால் அல்லது உடல் மொழியினால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். இதற்குப் பெண்கள் எளிதாக உணர்ச்சிவசப்படாமல் லாஜிக்கலாக பண்ணும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் பெண்களுடைய உணர்வுகள் அவர்களுடைய லாஜிக்கல் ஃப்ரைனை ஹைஜாக் செய்துவிடும் அபாயம் உண்டு. 


"ஆண்களுக்கு சரி. பெண்களுக்கே சில பேருக்கு உளவியல் ரீதியான பிரச்சனை உண்டு என்பது எப்படி அறிந்து கொள்வது?" இந்தக் கேள்வியை இவளே இவள் அம்மாவிடம் கேட்டாள்.


"ரொம்ப அதிகமாகப் பேசக்கூடிய பெண்களும், ரொம்ப குறைவாக பேசக்கூடிய பெண்களும், மிகவும் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எமோசன் காட்டும் பெண்களும் கவனிக்கப்படக் கூடியவர்கள். பிறரைப் பற்றி அதிகமாக குறை பேசும் பெண்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். பெண்கள் பொதுவாக ஹவுஸ்வைஃப் ஆக இருப்பதால், அவர்கள் வெளி உலகத்தை தன் கணவரது மூலமே அறிந்திருப்பதால், தன் கணவரிடம் தான் எதிர்பார்த்த அன்பு கிடைக்காமல் இருந்தால், அவருடைய மனம் இயற்கையிலேயே மற்றொரு இடத்தில் தனக்குத் தேவையான அன்பை எதிர்பார்க்கும். அதை அறிந்த சில சுயநல ஆண்கள், அவர்களிடம் போலியான அன்பை வெளிக்காட்டி தனக்குத் தேவையானதை சாமர்த்தியமாகப் பெற்றுக்கொள்வார்கள். இந்த இடத்திலும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவையெல்லாம் மனநலம் நன்றாக இருக்கும் ஆண்களும் பெண்களுமே வெளிப்படுத்துவார்கள். இதற்கு காரணம் சுயநலம் மட்டுமே. பிறரது நலத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். உளவியல் ரீதியாக அதிகமான பிரச்சனை உள்ளவர்களுக்கு அவர்கள் சொல்வதிலும் செயல்படுவதிலும் நிறைய வித்தியாசங்கள் தெரியும். அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அவர்கள் பேச்சில் ஒரு கோர்வை இருக்காது. ஒரு ஏற்ற இறக்கம் இருக்காது. ஒரு சப்ஜெக்ட்டை விட்டு இன்னொரு சப்ஜெக்டுக்கு எளிதில் தாவுவார்கள்! அவர்களின் உணர்வுகளிலும் வித்தியாசம் இருக்கும். வருத்தப்பட வேண்டிய இடங்களில் வருத்தப்படாமலும், சந்தோசப்பட வேண்டிய இடங்களில் சந்தோஷப் படாமலும் இருப்பார்கள். அவர்களின் உணர்வுகள் ஃபிளாட் ஆக இருக்கும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் எல்லாவற்றிலும் எதிர் விளக்குகள் உண்டு. இவையெல்லாம் ஒரு பொதுவான விதிகள் எனக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவர் மனதிலும் வித்தியாசமானது. ஒவ்வொருவர் வாழ்க்கையும் வித்தியாசமானது. எனவே அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப தக்கவாறு பழகிப் பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டும். எண்ணங்கள் ஒரு முறை அவளை உலல அதைப் பொருட்படுத்தாது காலைக்கடன்களை முடித்துவிட்டு அவள் மேட்ச் பார்க்க தயாரானாள். இரவில் தூங்கிய நல்ல தூக்கம் அவளுக்கு ஒரு விதமான சுறுசுறுப்பைத்தந்தது. மேட்ச் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது என்பதால் அவள் ஸ்டேடியத்திற்கு உடனடியாக கிளம்ப ஆயத்தமானாள். ஸ்டேடியத்தில் என்ன நடக்கப்போகிறது என்று அவளுக்கு புரியாது. தெரியாது. அவள் அறியமாட்டாள். ஆனால் மாற்றங்கள் நிறைந்தது தானே வாழ்க்கை. எனவே அவரளுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றங்களுக்காக அவள் ஆவலுடன் காத்திருந்தாள். மேட்ச் ஒன்பது மணிக்குத்தானே!

அதற்கு நிறைய நேரம் இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் இன்னும் நிறையச் சிந்திக்கலாம்-  

                -தொடரும்
         

              Rate this content
Log in

Similar tamil story from Romance