Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

இதயத்தில் ஓர் இசை...!(பாகம்10)

இதயத்தில் ஓர் இசை...!(பாகம்10)

6 mins
324சென்னை. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். காலை மணி பத்து. விஐபி கேலரியில் இருந்து வினிதா பார்த்துக்கொண்டிருந்தாள். மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கும் ஒரே ஆரவாரக் கூச்சல்கள். அந்த நேரத்திலேயே சுடச்சுட சாண்ட்விச்களையும்  காஃபியையும் சுறுசுறுப்பாக விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒருபக்கம் மேளதாளத்துடன் ஒரு கூட்டம் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. நிறைய பேர் இந்தியன் டீமின் டி-ஷர்ட் அணிந்திருந்தனர். ஒரு சைடில் பலர் தங்களுடைய முகத்திற்கு இந்திய மூவர்ணக் கொடியின் வர்ணம் அடித்து இருந்தார்கள். ஒரு ஆரவாரமான சுற்றுச்சூழலில்   இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் ஒன் டே கிரிக்கெட் மேட்ச்!


இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாசில் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். இந்திய கேப்டன் அசோக் மல்ஹோத்ரா பில்டிங்கை அரேஞ்ச் பண்ணிக் கொண்டிருந்தார். அருண் தேர்ட் மேன் பொஷிசனில் இருந்து இவளைப் பார்த்துக் கையசைத்தான். இவளும் மிக்க மகிழ்ச்சியுடன் அருணை பார்த்துக் கையசைத்தாள். அம்பயர் பவுலரைப் பார்த்துக் கையசைக்க, முதல் ஓவரின் முதல் பந்தை பாஸ்ட் பவுலர் அணில் அகர்வால் வீசினான். நல்ல லெங்த்திலும், லைனிலும் வீசப்பட்ட பந்து. இங்கிலாந்து ஓப்பனர் ஜானி பேர்ஸ்டோ விற்கு ஒரு யார்க்கர். அதை அழகாக டிஃபன்ஸ் ஆடினான். பந்தை மிட் விக்கெட்டில் ஃபீல்டர் கலெக்ட் செய்து பவுலருக்கு அனுப்ப, அடுத்த பந்தை அணில் அவுட் ஸைட் த ஆஃப் ஸ்டம்ப் போட அதை பேர்ஸ்டோ லைட்டாக தெர்ட் மேனுக்குத் திருப்பி விட்டு ஒரு ரன் எடுத்தான். அடுத்த பந்து டொமினிக் பெஸ்ஸிற்கு. அதுவும் நல்ல லெங்த்தில் பிட்ச் ஆன பந்துதான். ஆனால் அது ஸ்ட்ரைட் ட்ரைவ் செய்யப்பட்டு பவுண்ட்ரிக்கு விரட்டப்பட்டது. கேலரியில் ஒருபக்கம் ஆரவார கூச்சல்களும் ஒருபக்கம் அதிர்ச்சிக் கூச்சல்களும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்தின.


முதல் 5 ஓவர்களில் எந்த விக்கெட்டும் விழாமல் இங்கிலாந்து 40 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் கேப்டன், பந்தை லெக் ஸ்பின்னர் முகேஷ் இடம் கொடுத்து அருண் உடைய பில்டிங் பொசிஷனை ஷார்ட் லெக்கிற்கு மாற்றினார். ஆறாவது ஓவரின் முதல் பந்து. நல்ல லெங்த்தில் பிட்ச் ஆகி லெக் ஸைட் டர்ன் ஆக, பேர்ஸ்டோ அதை சிக்ஸர் அடிக்க முற்பட அது சரியாக பேட்டின் எட்ஜில் பட்டு அருணின் கைகளில் தஞ்சம் அடைந்தது. பவுலர் கத்திக்கொண்டே ஓடி வந்து அருணை தூக்கி சுற்றினான். மைதானம் முழுவதும் ஒரே சந்தோஷக் கூச்சல். இங்கிலாந்து 50 ஓவர்களின் முடிவில் 266 ரன்கள் எடுத்தது.  


மதிய உணவு இடைவேளையின் போது, வினிதா அங்கேயே ஒரு சாம்பார் சாதம் வாங்கி சாப்பிட்டுவிட்டு, ஒரு ஆரஞ்சு ஜுஸையும் பருகிவிட்டு அருளின் ஆட்டத்தைப் பார்க்க ரெடியானாள். மேட்ச் முடிந்ததும் அருண் அவளை நேராக தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியிருந்தான். அவன் வீட்டிற்குச் செல்லும் வழியில் இவளுடைய கடந்த காலத்தைப் பற்றி அவனுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். திடீரென்று மறுபடியும் மைதானத்தில் ஏற்பட்ட கூச்சல் அவள் சிந்தனைகளைக் கலைத்தது. இந்தியன் டீமின் ஓபனர்ஸ் அருணும் வினய் சர்மாவும் மைதானத்திற்குள் வந்துகொண்டிருந்தனர்.


முதல் ஓவர். பாஸ்ட் பவுலர் பென் ஸ்டோக்ஸின் முதல் பந்து. அருணை நோக்கி வீசப்பட்டது. ஷார்ட் ஆஃப் த லெங்த் பிட்ச் ஆனது. அதை தன்னுடைய பேட்டில் நன்றாக வாங்கி இழுத்து ஸ்ட்ரைட் ஆகஒரு சிக்சர் அடித்தான். மைதானத்தில் ஒரே வெறிக் கூச்சல். மேளதாளங்களின் ஆரவாரம். அருண் இவளை பார்ப்பதை வினிதா உணர்ந்தாள். இவளும் மகிழ்ச்சியுடன் அவனை நோக்கி கையசைத்தாள். ஷர்மாவும் அருணும் பிட்சின் மையத்தில் வந்து தங்கள் முஷ்டிகளை தட்டிக்கொண்டபின் திரும்ப அவர்கள் இடத்திற்கு சென்றார்கள். அடுத்து வந்த பந்தை மிட் ஆஃப் திசையில் திருப்பி விட்டு ஒரு ரன் எடுத்தான். மூன்றாவது பந்து வினய் சர்மாவிற்கு. துல்லியமான யார்க்கர். பந்து பேட்டிற்கும், கால் காப்பிற்கும் இடையே புகுந்து மிடில் ஸ்டம்பை தூக்கி அடித்தது. ஓ மை காட்! முதல் பந்திலேயே ஷர்மா கிளீன் போல்ட்! மைதானம் முழுவதும் அதிர்ச்சியில் மூழ்க சர்மா தொங்கிய முகத்துடன் பெவிலியன் திரும்பினான். அடுத்து வந்த கேப்டனும் அருணும் முதல் 10 ஓவர்களில் 60 ரன் சேர்த்தார்கள். பதினோராவது ஓவரில் எதிர்பாராதவிதமாக கேப்டன் எல்பிடபிள்யூ ஆகிவிட நான்காவதாக கேசவ் மேத்தா களம் இறங்கினான். 


20வது ஓவரில் அருண் 50 ரன்களை தொட்டபோது வினிதாவை பார்த்து ஒரு பிளையிங் கிஸ் கொடுத்தான். கேமராக்கள் மொத்தமும் இவள் பக்கம் திரும்பியது. கமென்டேட்டர்கள், இந்த அழகான பெண் யார் என்று குழம்பிப் போய் இருக்க, திடீரென்று மேத்தாவும் அவுட்டானான். அதற்குப்பின் வந்த அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக 49வது ஓவர் முடிவில் அருண் செஞ்சுரி அடித்தான். இன்னும் ஒரே ஓவர். இந்தியா ஜெயிக்க இன்னும் 36 ரன்கள் தேவை. இதுவரை ஒன் டே மேட்சில் யாரும் முப்பத்தாறு ரன்களை ஒரே ஓவரில் எடுத்தது கிடையாது. அருண் தான் அந்தக் கடைசி ஓவரை விளையாடப் போகிறான். 9 விக்கெட்டுகள் விழுந்து விட்டன. மைதானம் முழுவதும் ஒரே டென்ஷன். அருணிடம் நிறைய எதிர்பார்ப்புகள் கூடியிருந்தது. கேப்டன் டென்ஷனாக பெவிலியனில் நின்றுகொண்டிருந்தார். 


கடைசி ஓவர். முதல் பந்து. பென் ஸ்டோக்ஸ் தான் வீசினான். யார்க்கர்தான். ஆனால் முன்னே இறங்கிவந்து அதை ஃபுல் டாஸாக வாங்கி ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சாத்து சாத்தினான். ஆஆஆ அது சிக்ஸர். மைதானம் சந்தோச கூச்சல் போட்டது. பெவிலியனில் கேப்டன் நின்றுகொண்டே கை தட்டினார்.

கமெண்ட்ரியில் சஞ்சய் 'வாட் எ பிரில்லியன்ட் ஷாட்!' என்று கத்தினார்.


அடுத்த பந்து. பென் ஸ்டோக்ஸ் இந்த முறை அவுட் சைடு த ஆஃப் ஸ்டம்ப் போட, மிட் ஆஃப் திசையில் தூக்க, ஓ மை காட், மீண்டும் ஒரு சிக்ஸர்! அணில் அகர்வால் எதிர்ப்புறம் இருந்து ஓடிவந்து அருணை கட்டிப் பிடித்து தூக்கி கொண்டான். கமெண்டரியில் சஞ்சய் உடன் சேர்ந்து ஸ்மித்தும் 'வாட் ஏன் எக்ஸ்ட்ராடினரி ஷாட்!' என்று தொண்டை கிழிய கத்தினார்கள். 


மூன்றாவது பந்து. இது தயக்கத்துடன் வீசப்பட்டதால் வைடாக வந்தது. அதை இரண்டடி தூரம் தன்னுடைய வலது புறம் நகர்ந்து மீண்டும் மிட் ஆஃப் திசையில் விளாசினான். நம்பவே முடியவில்லை மீண்டும் ஒரு சிக்ஸ்! மைதானத்தில் இருந்த அத்தனை பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சிக் கூச்சலிட்டார்கள். வினிதாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம். அவளும் தன்னையறியாமலேயே சந்தோசத்தில் கூச்சலிட்டாள். 


நான்காவது பந்து. பென் ஸ்டோக்ஸ் இந்த முறை பந்துவீச்சின் வேகத்தை குறைத்தான். பந்து லேசாக லெக் சைடில் திரும்பியது. அருண் தன்னுடைய இடது பக்கம் சிறிது நகர்ந்து அதே மிட் ஆன் திசையில் தூக்கினான். ஆனால் பந்து எல்லைக் கோட்டுக்கு உள்ளேயே விழுந்து எல்லைக்கோட்டை கடந்தது. இந்த முறை 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பார்வையாளர்களிடையே ஒரு ஏக்கமான பெருமூச்சின் சத்தம் எழுந்தது. இந்தியா தோற்று விடும் என்றே அனைவரும் நினைத்துவிட்டார்கள். இந்தச் சமயம் ஆம்பியரின் கை சைடில் நீண்டது. ஓ மை காட்! இட்ஸ் எ நோ பால்! மீண்டும் மைதானத்தில் சந்தோசக் கூச்சல்!


மீண்டும் நான்காவது பந்து. இந்த முறை பந்து நன்றாகவே லெக் சைடில் வைடாகப் போனது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை அருண். இடப்பக்கம் நகர்ந்து பேட்டைத் திருப்பி பாயிண்ட் திசையில் மீண்டும் ஒரு சிக்ஸ். அருண் அவனுடைய பெஸ்டில் இருந்தான். என்னவென்றே தெரியவில்லை. பந்து பிட்ச் ஆகும் இடத்தை அவனால் முன்னாலேயே யூகிக்க முடிகிறது. அவன் ஒருவிதமான மிகச் சந்தோஷமான தியான நிலையில் இருந்தான். மைதானத்தின் ஆரவார கூச்சல்களோ கமெண்டரி சொல்பவர்களின் பாராட்டுக்களோ அவன் காதில் விழவில்லை. அவனுக்கு இந்த உலகத்தில் இப்பொழுது பந்து மட்டுமே கண்களுக்குத் தெரிந்தது.


5வது பந்து. இந்த முறை பென் ஸ்டோக்ஸ் ஒரு பவுன்சர் வீசினான். அது அருணின் தலைக்கு மேலே இரண்டு அடி உயரத்தில் பறந்தது. விட்டிருந்தால் அது தானாகவே 4 ரன்களை கொடுத்திருக்கும். ஆனால் அருண் அதை விடவில்லை. ஒரு அடி ஜம்ப் பண்ணி விக்கெட் கீப்பருக்கு பின்னால் அதை தூக்கி விட்டான். மீண்டும் ஒரு சிக்ஸ்! பெவிலியனில் அனைத்துப் பிளேயர் களும் ஆனந்தக் கும்மாளமிட்டார்கள். கமெண்டரியில் சஞ்சய் 'ஹீ ரியலி ஜம்ப்ட்' என்று நம்ப முடியாமல் கத்தினார். மைதானம் முழுவதும் ஒரே கூச்சல். சந்தோசம். பார்வையாளர்களே தங்களுக்குள் கைகுலுக்கிக் கொண்டார்கள். வினிதா சந்தோசத்தில் குதித்தாள். இன்னும் இரண்டு ரன்கள் இருந்தால் போதும் இந்தியா வெற்றி பெற்று விடும்.


ஆறாவது பந்து. இந்த முறை பந்து நல்ல லெங்த்தில் நேராக வர அதை ஸ்ட்ரைட்டாக ஒரு விளாசு விளாசினான். ஓ மை காட்! மறுபடியும் ஒரு சிக்சர். அடித்து முடித்தவுடன் வினிதாவைப் பார்த்து மீண்டும் ஒரு பிளையிங் கிஸ். வினிதா கொஞ்சம் வெட்கப்பட்டாள். இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. அருண் ஒரே ஓவரில் 40 ரன்கள் எடுத்து உலக சாதனை! கமெண்ட்ரியில் சஞ்சயும், ஸ்மித்தும் கதறினார்கள்.  மைதானம் முழுவதும் ஒரே வெற்றிக்கொண்டாட்டம். அணில் அகர்வால் ஓடிவந்து அவனை கட்டிப் பிடித்து தூக்கி சுற்றினான். பெவிலியனில் இந்திய வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டார்கள். பென் ஸ்டோக்ஸும் ஜோ ரூட்டும் அருணுடன் கைகுலுக்கி தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.   


ஆட்டத்திற்கு பிறகான கொண்டாட்டங்கள் முடிந்தபிறகு, அருண் தன்னுடைய பரிசுகளைப் பெற்றுக் கொண்டு, தன்னுடைய கருத்துகளை சொல்லிவிட்டு, பெவிலியன் திரும்பி கேப்டனிடம் விடைபெற்று விட்டு வந்து, வினிதாவை தன்னுடைய காரில்  ஏற்றிக் கொண்டு வடபழனியில் இருக்கும் தன்னுடைய வீட்டை நோக்கி காரை செலுத்தினான். 


"உங்களுடைய ஆட்டம் இன்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது" வினிதா மகிழ்ச்சியுடன் சொன்னாள்.


"ஒரு அழகான பெண் என் அருகில் இருக்கும் போது நானும் மெய்சிலிர்த்துப் போகிறேன்" அருணும் அவளைப் பார்த்துக் குறும்புடன் சொன்னான்.


"நீங்கள்தான் வசீகரமாகப் பேசுவதில் வல்லவர் ஆயிற்றே! உங்களைப் பேச்சில் வெல்ல முடியுமா" என்றாள் இவளும் குறும்புடன்.


"என்னுடைய வினிதா பேசவே வேண்டியதில்லை. அவளுடைய அழகான கண்களும் புன்னகையுமே ஆயிரம் கவிதைகள் சொல்லும்!"


"நீங்கள் கிரிக்கெட்டை விட்டு விட்டு ஒரு கவிஞராக ஆகியிருந்தாலும் மிகவும் பிரபலமாகி இருப்பீர்கள்!" புன்னகையும் வெட்கமும் வினிதாவின் முகத்தை மேலும் அழகூட்டின.


"உனக்கு நான் கவிஞனாக வேண்டும் என்று ஆசை இருந்தால் அந்த ஆசையை நிறைவேற்றுவது என் பொறுப்பு" என்று காதலுடன் கூறினான் அருண்.


"உங்களுக்கு எது பிடிக்குமோ அதையே செய்யுங்கள் அதுதான் எனக்கும் சந்தோஷம்" வினிதா முகம் மலரச் சொன்னாள். அவளுடைய மனதில் அருணின் மேல் அளவுகடந்த காதலும் ஆசையும் நிரம்பியிருந்தது. இந்தத் தருணத்தில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி இவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற ஒரு தயக்கமும் இருந்தது. இப்போது விட்டால் எப்பொழுதுமே சொல்ல முடியாது என்ற ஒரு கவலையும் இருந்தது. எனவே இப்பொழுதே சொல்லிவிடுவது என்ற ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.


"அருண், உங்களுக்கு என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்" என்றாள் சிறிது டென்ஷனாக.


"எனக்கும் தான் ஒரு கடந்த காலம் இருக்கிறது" என்றான் அவன் கூலாக.


"இருந்தாலும் நான் உங்களிடமிருந்து எதையும் மறைக்க கூடாது என்பதற்காக நான் சொல்லியே ஆகவேண்டும்"வினிதா பிடிவாதமாகக் கூறினாள்.


"வினிதா கடந்த காலத்தில் நம் இருவருக்குமே ஒரு வாழ்க்கை இருந்திருக்கிறது. அந்த வாழ்க்கையைப் பற்றி நாம் ஏன் மீண்டும் பேச வேண்டும்? நாம் ஒரு புது வாழ்க்கையைத் துவங்கலாமே? கடந்து போன வாழ்க்கையை நினைத்து ஏன் கஷ்டப்பட வேண்டும்?"


"நம்முடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களை இருவருமே இப்பொழுதே பரிமாறிக் கொண்டால் பின்னால் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வராது அல்லவா?"வினிதா கூற 


"நமக்குள் உண்மையான காதல் இருக்கும் பட்சத்தில் நம்முடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய நினைவுகள் நம் இருவருக்கும் தேவை இல்லாதது என நினைக்கிறவன் நான். உனக்கு என்னிடம் உன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும் என்றால் தாராளமாகச் சொல். உனக்கும் என்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நானும் கண்டிப்பாகச் சொல்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். உன்னுடைய கடந்த கால வாழ்க்கை எதுவாக இருந்தாலும் அது உன் மீது உள்ள என்னுடைய காதலை கண்டிப்பாகப் பாதிக்காது" என்று அருண் உறுதியாகக் கூறினான்.


அருண் அவ்வாறு கூறினாலும் இவள் தீரனுடன் சட்டம் படிக்கும்போது ஏற்பட்ட காதலைப் பற்றியும், தன்னுடைய சட்டப்படிப்பை முதல் வருடத்திலேயே விட்டுவிட்டு வந்து அவனுடன் அந்த மீனவர்கள் கிராமத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தியதையும் அதன்பிறகு அவள் வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி முடித்தாள். அருணும், பூஜாவின் ஆடம்பரச் செலவுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றியும், அதனால் பூஜா விற்கும் அவனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றியும் அதிகமாக மிகைப்படுத்தாமல் நடந்தவற்றை நடந்தபடியே சொன்னான்.


"இப்பொழுது திருப்தியா வினிதா?" அருண் கேட்கவும், அவளுடைய கன்னத்தில் தன் மென்மையான இதழ்களை ஒற்றி எடுத்தாள் வினிதா. அந்த இதமான முத்தத்தின் ஸ்பரிசத்தில் அருண் கிறங்கிப் போனான். அவனுடைய இதயத்தில் மின்சாரம் பாய்ந்தது. அவனுடைய ரத்த ஓட்டத்தில் மின்னல் ஓடியது. 


"இப்படி செய்தால் நான் எப்படி கார் ஓட்டுவது?" பொய்யான கோபத்துடன் அருண் கூற, மீண்டும் ஒரு முறை தன்னுடைய இதழ்களை அவனுடைய கன்னத்தில் பதித்தாள் வினிதா. மீண்டும் ஒரு மின்னல் தாக்கத்திற்கு ஆளான அருண், வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு, அவளுடைய இதழோடு இதழ் வைத்துக் கொடுத்த ஒரு ஆழமான முத்தத்தில் அவர்கள் இருவரும் தங்களை மறந்தார்கள். சற்று நேரம் கழித்து இருவரும் சுதாரித்துக்கொண்டு தங்கள் இதழ்களை விடுவித்துக் கொண்டார்கள். அருண் ஒரு மௌனமான மகிழ்ச்சியுடன் தன் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான். அவனுடைய வீட்டில் பல ஆச்சரியங்கள் காத்திருப்பது வினிதாவிற்கு தெரியாது.

                 -தொடரும்                 


                              


    Rate this content
Log in

Similar tamil story from Romance