STORYMIRROR

Dr.Padmini Kumar

Thriller

5  

Dr.Padmini Kumar

Thriller

மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 5

மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 5

1 min
480

                      

            அத்தியாயம் 5

       பேய் உலவும் பங்களா !

             சுதந்திர இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட மாடர்ன் பங்களா பூட்டப்பட்ட நிலையில் இன்னும் திறக்கப்படாமல் இருந்தது. இரவில் விளக்குகளின் வெளிச்சமும் இல்லை; ஆள் நடமாட்டமும் இல்லாத நிலையில் இருண்ட பங்களாவைப் பார்த்து மலைவாழ் மக்கள் வேதனைப்பட்டனர். அர்த்தராத்திரியில் ஒரு பெண்ணின் அலறல் கேட்பதாக மக்கள் பேசிக் கொண்டனர். சில நாட்களில் மேஜை, நாற்காலி நகரும் சத்தமும், சிலர் ஆங்கிலத்தில் உரையாடும் சத்தமும் கேட்பதாகக் கூறினர். அனைவரும் மாடர்ன் பங்களாவில் பேய் உலவுவதாக நம்பி அதைப் பேய் உலவும் பங்களா எனக் கூறினர்.

             மலைக் கிராமத்து முதியவர் ஒருவர் அரசு அதிகாரிகளிடம் சென்று இது பற்றிப் புகார் செய்தார். அப்போது அரசாங்கங்களின் மாற்றம், புது அதிகாரிகளை நியமிப்பது,போன்றவை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் முதியவரின் புகாரை பார்க்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டனர். ஊட்டிக்கு புது கவர்னர் பொறுப்பேற்றார். ராஜ் பவன், கலெக்டர் அலுவலகம், கலெக்டர் வீடு என்று ஒவ்வொரு பங்களாவாக பராமரிப்புக்காக ஏற்பாடுகள் தொடங்கிய வேளையில் முதியவரின் புகாரை கவர்னர் கவனித்தார்.

             அரசாங்கத்திற்கு வீடாகவோ , அலுவலகமாகவோ பயன்படுத்த முடியாத நிலையில் இருண்ட பங்களாவை முறைப்படி ஏலத்திற்கு விடுமாறு கவர்னர் ஆணை பிறப்பித்தார். பேய் உலவும் பங்களா என்பதால் மிகக் குறைவான மதிப்பில் அந்த பங்களாவை மதன்லால் என்ற ஒரு நகை வியாபாரி வாங்கினார். அவர் அந்த பங்களாவை சீரமைத்து ஒரு ஹோட்டலாக நடத்த முடிவு செய்தார்.

பேய் உலவும் பங்களா ஹோட்டலாக மாற்றம் செய்யப்பட்டதா ?

                               மர்மம் தொடரும்.........


Rate this content
Log in

Similar tamil story from Thriller