Dr.Padmini Kumar

Tragedy

4  

Dr.Padmini Kumar

Tragedy

தாய் மண்ணே வணக்கம் (பாகம் 8)

தாய் மண்ணே வணக்கம் (பாகம் 8)

2 mins
218


முதல் முயற்சி போனோடு முடிந்தது.

இரண்டாம் முயற்சி......

 இரண்டாவது சென்டரின் டைரக்டர் பேசினார், "உங்களுக்கு இங்கே நீங்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைக்காது ; எங்கள் கட்டிட அமைப்பில் நீங்கள் கேட்கும் ஆராய்ச்சி கூடமும் கிடையாது, நீங்கள் கேட்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா டாலர் போன்ற சம்பளமும் கிடைக்காது...."

 மூன்றாம் சென்டர்..... இன்டர்வியூ நடந்தது.... "நான் ஒரு விஷயம் கேட்கலாமா ? இவ்வளவு அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, ஆர்வம் கொண்டு கற்ற அறிவு, அறிவியல், ஆராய்ச்சி இவைகளை நீங்கள் ஏன் இந்த அற்பமான, கேவலமான, உதவ முடியாத நடப்பு முறை சூழ்நிலைக்குக் கொண்டு வந்தீர்கள் ? சார், நான் சொல்லுவதைக் கேளுங்கள், உங்களுக்கு உகந்த இடமாக வாஷிங்டன், பாஸ்டன், ஹார்ட்வேர் மட்டுமே இருக்க முடியும்."

" ஆனால்... நான் பாரதத்தில் வாழவே விரும்புகிறேன்." பாதை புலப்படாத உயர்ந்த கொள்கைகளோடு கண்ணன் .

"பாரதத்திலா..? எந்த நன்மைக்காக ?..

 டாக்டர் நீங்கள் எங்கே மற்றவர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போகிறீர்கள், உங்களுக்கே வைத்தியம் தேவைப்படும்போல இருக்கிறதே. அவ்வளவு கஷ்டப்பட்டு, காசு செலவழித்து,படித்த படிப்பை இந்த மண்ணுக்கா விற்கப் போகிறீர்கள் ? உங்களுக்கு இது கூட தெரியவில்லையே... அங்கே சென்றால் நீங்கள் பொன்முட்டையிடும் வாத்து ; ஆனால் இங்கே உங்களை பிரியாணி செய்து விடுவார்கள்... தாய் மண்ணில் தான் வசிப்பீர்களா....ஓ ! அப்படின்னா நீங்கள் டாக்டர் இல்லை, மேலோகத்து தேவர்களின் தேவர்கள்தான். நீங்கள் இப்படி செய்யுங்களேன், எந்த சென்டரிலிலும் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காவிட்டால் நீங்கள் ஒரு நடமாடும் ஹாஸ்பிடல் உருவாக்குங்கள் ; ஊர் ஊராக சுற்றுங்கள் ; உங்கள் லட்சியத்திற்காக மருந்து, ஆராய்ச்சி, டெஸ்ட் எல்லாமே இனாமாகச் செய்து கொடுங்கள். உண்மையான தேச சேவையாக அது இருக்கும், வெளிநாடு சென்று சம்பாதிக்கும் டாலர்களையும் அதிலே போட்டு விடலாம்..." அடுத்து சொன்ன ஐடியா, "ஓகே, நீங்க இப்படி செய்யுங்கள், கீழ் நிலை.. ஆம்... ஜூனியர் லெவலில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் லெவலுக்கு யாராலும் ஆதரவு தர முடியாது. ஆனால் எங்களால் இந்த ஆதரவைத்தான் தர முடியும்... ஜூனியர் லெவலில் சேர்ந்து கொள்கிறீர்களா?" நாலாம் சென்டர்.... "எங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை, நீங்கள் இவ்வளவு தேசபக்தியோடு இருப்பவர்கள் ஏன் வெளிநாட்டில் இருந்து டிகிரி வாங்கி இங்கே இறக்குமதி செய்கிறீர்கள்? இதே படிப்புக்கான டிகிரி இங்கேயும் இருக்கும் இல்லையா... அதைப் படித்து அந்த டிகிரியுடன் வாருங்கள், சார்." "குழந்தைகளுக்கான கிட்னி சம்பந்தப்பட்ட படிப்புக்கான வசதி இங்கே இல்லையே.." அதனால் தானே நான் அங்கே சென்று படித்தேன் இல்லாவிட்டால்... கண்ணன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்... நான் சிரஞ்சீவியைக் காப்பாற்றி இருப்பேனே என்று.

" நேரடியாக விஷயத்திற்கு வருகிறோம்.. வெளிநாட்டில் நம் நாட்டு டிகிரிக்கு அங்கீகாரம் கொடுக்காத போது நாம் மட்டும் அவர்கள் டிகிரிக்கு ஏன் அங்கீகாரம் கொடுக்க வேண்டும்?" "ஆனால் பிரச்சனை நம்முடையதுதானே... நம் குழந்தைகளின் நோய் பற்றியதுதானே..." விஷயம் எல்லை மீறிப் போக ஆரம்பித்தது. "அதை விடுங்கள், பாரதத்தில் கிட்னி நோயால் எத்தனை குழந்தைகள் எங்கே சாகிறார்கள் ?"

" எத்தனையா... அப்படின்னா... நாம் டெஸ்ட் செய்தால் தானே சொல்ல முடியும், சார். டெஸ்ட் செய்வதற்கான வசதியே இல்லையே.. உதவியற்ற நிலையில் அம்மாக்களும், நோயுற்ற குழந்தைகளும், சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் கவனித்துப் பார்த்துப் பார்த்து திரும்ப முடியாத உலகத்திற்க்கே போய்விடுகிறார்கள்- (சிரஞ்சீவியைப் போல) ஆனால் நாம் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றோம்.. இல்லையா.. சார். நான் உங்கள் நோயாளிகளை என் அதிகாரத்தில் கொண்டு வர விரும்பவில்லை, வைத்திய வசதிகள் கிடைக்காமல் வாடும் குழந்தைகளைக் காப்பாற்றுவதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை."

 வாத-விவாத தராசு மேலும் கீழுமாக அலைக்கழிக்க ஆரம்பித்தது. இறுதியில் பானையை தலையில் போட்டு உடைத்தது போல் சொன்னார்," ஐயா.. பாரதத்தின் மக்கள் தொகை அளவுக்கு அதிகமானதால் அது நிலைகுலைந்து கவலைக்கிடமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் நீங்களோ நோய்வாய்ப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் போன்றவற்றை மேம்படுத்த முன் வந்திருக்கிறீர்கள். இதைவிட நல்ல விஷயம் பசியால் இறந்துமடியும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதற்கான வழியை ஏற்பாடு செய்வது தான் .எனவே உங்களுடைய இந்த ஆராய்ச்சி,பயோடேட்டா எல்லாம் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனால் இங்கே வேலைக்காகாது. நீங்கள் எங்கிருந்து இந்த பயோடேட்டாக்களை கொண்டு வந்தீர்களோ அங்கேயே போங்கள் _"    

       -தொடரும்.....


Rate this content
Log in

Similar tamil story from Tragedy