STORYMIRROR

Dr.Padmini Kumar

Drama

3  

Dr.Padmini Kumar

Drama

சிரோ மணி (ஓரங்க நகைச்சுவை நாடகம்)

சிரோ மணி (ஓரங்க நகைச்சுவை நாடகம்)

2 mins
144

சிரோமணி

( ஓரங்க நகைச்சுவை நாடகம்)

 காட்சி நடைபெறும் இடம்: பத்மினியின் வீடு. பத்மினி நாற்காலியில் அமர்ந்து  மேஜையின் மேல் டைரியில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கின்றாள். காற்றில் ஆர். கே. லட்சுமணனின் கார்ட்டூன் சித்திரம் பொதுஜனம் கையில் ஒரு நியூஸ் பேப்பருடன் தோன்றுகிறது. பத்மினி ஆச்சரியத்துடன் பார்க்கிறாள்.

 பொதுஜனம்: 'மண்ணின் சிரோமணி' அப்படின்னா....?

பத்மினி: சிரோமணி என்றால் தலையில் அணியப்படும் நகையில், கிரீடம் போன்று, பதிக்கப்படும் மிக உயர்ந்த நவரத்தினம் போன்ற மணி ஆகும். இந்த பூமி மண்ணில் கிடைத்த உயர்ந்த மணி. நியூஸ் பார்த்தீர்களா! (பெருமிதத்துடன் கேட்கிறாள்) 

பொ.ஜ: பார்த்தேன்... நீயோ பொம்பள.. உனக்கு ஏன் இந்த பட்டம் எல்லாம் ? புரியலையே...

பத்மினி: நான் ஒரு எழுத்தாளர்.

பொ.ஜ.: என்னது...! எழுத்தாளரா...! எழுத்தாளர்னா என்னன்னு தெரியுமா உனக்கு ? கல்கி, சாண்டில்யன், அகிலன், ஜெயகாந்தன், சுஜாதா இவங்களைத்தான் எழுத்தாளர் என்பார்கள். இவர்களைக் கேள்விப்பட்டிருக்கியா ?

பத்மினி: ஆமாம். கேள்விப்பட்டிருக்கேன். அவர்கள் எழுதியவைகளைப் படித்திருக்கிறேன். அவர்களெல்லாம் மலை; நான் சிறு கூழாங்கல்.

பொ.ஜ.:கூழாங்கல்லுக்கு  ஏன் பட்டுக் குஞ்சம்? 

 பத்மினி: நான் ஹிந்தியில் பத்து கவிதைகள் எழுதினேன்.

பொ.ஜ.: எது ...இந்த.... பூ மணக்கும்; முள் குத்தும்... என்று எழுதுவார்களே அதானே ?

( பத்மினி தன் கவிதைகளைப் படிக்கக் கொடுக்கிறாள்.)

 பார்த்தாயா ...பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பெண் புலவர் என்பதை நிரூபித்து விட்டாயே... நட்சத்திரங்களை கட்டி மாலையணிந்து  கொள்ள ஆசை என்று எழுதினால் வேறு எப்படி சொல்வதாம் ?

பத்மினி: என் சொந்த அனுபவங்களை சிறுகதைகளாக எழுதி சிறந்த கதை என சர்டிபிகேட் வாங்கி இருக்கிறேன்.

 பொ.ஜ.: சர்டிபிகேட் ....இந்த காலத்தில் தான் ஆ...ஊ...ன்னாலே  சர்டிபிகேட் கொடுத்து விடுகிறார்களே!

பத்மினி: தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்கில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கின்றேன்.

பொ.ஜ.: அட, நீ என்ன மேரி கியூரி அம்மையாரின் பரம்பரை என்ற நினைப்பா அல்லது சுனிதா வில்லியம்ஸ்க்கு தூரத்து சொந்தம் என்று நினைப்பா ? ஆய்வு கட்டுரையாம்.. எத்தனை ...ஒன்றா, இரண்டா ?

பத்மினி: கிட்டத்தட்ட 15 கட்டுரைகளுக்கு மேல் எழுதி பல புத்தகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

 பொ.ஜ.: என்னமோ.... இரு இரு.... நியூஸ் பேப்பரை பேப்பரை முழுவதும் படிக்கின்றார். சித்த வைத்திய சிரோமணி டாக்டர் செல்வராஜ் சேலம் வருகிறார். தொடர்பு கொள்ள வேண்டிய....( பேப்பரை தூக்கி எறிந்து விட்டு)

" எஸ்கேப் ....."எனக் கூறியபடி காற்றில் மறைந்து விட்டார்.

 பத்மினி ஒன்றும் புரியாமல் திகைத்தவாறு அமர்ந்துவிட்டாள்.

 காட்சி முடிவடைந்தது

 சுபம்


Rate this content
Log in

Similar tamil story from Drama