Dr.Padmini Kumar

Tragedy

4  

Dr.Padmini Kumar

Tragedy

தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 6)

தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 6)

3 mins
375


கற்பகம் தன் ஏழு வயது சிரஞ்சீவியை கூட்டிக்கொண்டு தினமும் டெஸ்ட் ,ரிப்போர்ட், ஹாஸ்பிடல்,மருந்துகள் என அலைந்து கொண்டிருந்தாள். அவள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் தன் நிலையைச்சொல்லி கவலைப்பட்டபோதே கண்ணனின் வேலை ஆரம்பமாயிற்று. சிரஞ்சீவி சில சமயங்களில் ஓரிரு நாட்களில் சரியாகிவிடுவான். ஆனால் மறுபடியும் காய்ச்சல் வந்து வீக்காக படுத்து விடுவான். அவனை அதிகப்படியாக மருந்து சாப்பிடச் சொன்னால் எரிச்சல் அடைய ஆரம்பித்து விடுவான்.வரும் தினங்களில் குழந்தையின் காய்ச்சலுக்கு உரிய தீர்வைக் கண்டு அவனைக் காப்பாற்ற முடியாமல் செய்து விடுமோ இது! வீட்டில் அனைவரும் கற்பகத்திடம் சிரஞ்சீவியை அழைத்துக்கொண்டு டாக்டர் கண்ணனுடன் படித்த மாணவர்கள் இருக்கும் மருத்துவ கல்லூரிக்குச் சென்று டெஸ்ட் செய்யச் சொன்னார்கள். நோய் என்றால் நிச்சயம் சரி செய்வார்கள்... இல்லாவிட்டால் அவனோடு உன் வாழ்க்கையிலும் சிக்கல்தானே"

 மறுநாளே சிரஞ்சீவியை நன்கு குளிப்பாட்டி ,டிரஸ் போட்டு, தலைவாரி, சிங்காரித்து ஹாஸ்பிடலுக்கு கற்பகம் அழைத்துப் போனாள்.

எல்லாவிதமான டெஸ்ட்களும் எடுத்தபின் மன உளைச்சலுடன் வீட்டிற்குத் திரும்பினாள் கற்பகம். அங்கு இருக்கும் கண்ணன் சாரின் நண்பர்கள் நல்லவர்கள் தான்... ஆனால் எல்லா டாக்டர்களும் ஃபீஸ் வாங்குவதில் தான் குறியாக இருக்கிறார்கள். நோயை கண்டுபிடிக்கவில்லை; பின் எப்படி ட்ரீட்மென்ட் கொடுப்பார்கள்! பணத்தைக் கறப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். சிரஞ்சீவி நன்றாக ஆகிவிட்டால் அவனுக்கு திருப்பதியில் மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்டாள் ,கடவுள் மேல் பாரத்தைப் போட்டு. மூன்றாம் நாள் டாக்டர் கண்ணன் போய் ரிப்போர்ட்களை வாங்கிக்கொண்டு வந்தான். மிகவும் கவலையாக, விரக்தியாக, சோர்வாக வந்தவன் அமைதியாக கட்டிலில் அமர்ந்து விட்டான். ரொம்ப நேரம் கழித்து டீ கப்பை கையில் எடுத்துக்கொண்டு அம்மா அருகில் வந்து," அம்மா..., சிரஞ்சீவி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறான்... அவனது ரெண்டு கிட்னிகளும் பழுதாகிவிட்டன. இரண்டு இரண்டரை மாதங்கள் வரை தாங்குவது கூட கஷ்டம் தான்."

" என்ன....!" அம்மா அதிர்ச்சிக்கு ஆளானாள். கற்பகத்தை நினைத்துப் பார்த்தாள். ஏழையானாலும் விரதம் இருந்து,கோவில் கோவிலாக அலைந்து, பிள்ளை வரம் வேண்டி தவமான தவமிருந்து பெற்ற மகன் தீர்க்காயிசாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அவனுக்கு சிரஞ்சீவி எனப் பெயரிட்டு ஆசை ஆசையாக வளர்த்தாளே... அவன் அல்பாய்சில் போவதற்காகவா ?" கற்பகம் சந்தோஷமாக இருந்தாள். அவளுக்கு கண்ணன் டாக்டர் மீது தற்போது அளவு கடந்த நம்பிக்கை. அவர் தன் மகனை சீக்கிரத்தில் குணப்படுத்தி விடுவார் என்று.கண்ணனின் கண்காணிப்பில் சிரஞ்சீவி மிகவும் நன்றாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. உண்மை உணர்ந்த கண்ணனோ பைத்தியம் பிடித்தவன் போல் பல புத்தகங்களை எடுத்து ஆராயத் தொடங்கினான். பல டாக்டர்களிடம் ஆலோசனை செய்தான். ஆனால் மெடிக்கல் சம்பந்தப்பட்ட பலரும் அவன் நிலையைப் பார்த்து பரிகாசம் செய்தனர்."என்னப்பா நீ... உனக்குத் தெரியாதா என்ன... இரண்டு கிட்னிகளும் கெட்டுப்போய் அவன்தான் கடைசி கட்டத்தில் இருக்கிறானே... பாரதத்தின் எந்த மூலைக்குப் போனாலும் சிரஞ்சீவியை காப்பாற்ற முடியும் என்ற உறுதியை யாராலும் தர முடியாது. மேலும் நீ அவனை அமெரிக்காவிற்கு கூட்டிக்கொண்டு போக நினைத்தால் அது உன் பாடு." இனி எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்தது; இருந்தாலும் கண்ணன் இரவும் பகலும் ஏதாவது தீர்வு கிடைக்காதா என்ற நினைப்பிலேயே இருந்தான் .ஆரம்பத்தில் கற்பகத்திடம் பலவற்றையும் மறைத்தாயிற்று.அப்புறம் நன்கு யோசித்துப் பார்த்ததில் கற்பகத்திடம் இனி நிலைமையை விளக்கிச் சொல்வதுதான் நல்லது என நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் அவர்களின் கடைசி கால ஆசைகளை யாவது அவர்கள் நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு அமையும். ஏனெனில்... காலம் மிகக் குறைவாக உள்ளது...

 அம்மாவிற்கு சிரஞ்சீவி பற்றிய கவலையுடன் கண்ணனை பற்றிய கவலையும் அதிகமாயிற்று. வெளிநாட்டில் மூன்று வருடங்கள் ஆராய்ச்சிலேயே தன் வாழ்நாளை கழித்து வந்தவனுக்கு இப்போது சிரஞ்சீவியை கண்காணிப்பதிலேயே தன் நேரம் முழுவதையும் செலவிட்டுக் கொண்டிருந்தான். முன்பெல்லாம் அம்மா அவன் வெளிநாட்டிலிருந்து எப்போ வருவானோ என்று ஏங்குவாள்; ஆனால் இப்போ அவன் வீட்டிற்கு எப்போது வருவானோ என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாகிவிட்டது. தினந்தோறும் தவறாமல் கற்பகத்தின் வீட்டிற்கு போவதும், சிரஞ்சீவிக்காக மிட்டாய்கள், வண்ண, வண்ண பொம்மைகள், பலூன்கள் என வாங்கிக் கொடுத்து அம்மா- பையன் இருவரின் சோகத்தையும் மறக்கடிக்க முயல்வதுமாக, தன் வருங்காலத்தைப் பற்றிய நினைப்பையே மறந்து உலாவிக் கொண்டிருப்பதை பார்த்து அம்மா மிகவும் கவலைப்பட ஆரம்பித்தாள் . அவன் வாழ்வின் லட்சியங்கள் முழுவதுமாக முடிந்து விட்டதோ என எண்ணும் விதமாக அவன் நடவடிக்கை இருந்தது. உயர்ந்த லட்சியம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு என வாழ்ந்தவன் மனதளவில் உடைந்து போய்விட்டானோ எனத் தோன்ற ஆரம்பித்தது. ஆனால் அம்மாவின் பயம், கவலை அனைத்தையும் கண்ணன் பொய்யாக்கினான். தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, கற்பகத்தையும் தேற்றினான். அவள் மன அமைதிக்காக அவளுக்கு மெடிக்கல் காலேஜில் குழந்தைகள் வார்டில் பார்ட்- டைம் வேலை வாங்கிக் கொடுத்தான். வேலை முடிந்து வார இறுதியில் அவள் சில மணி நேரங்கள் அனாதை இல்லத்தில் செலவிடவும் ஏற்பாடு செய்து கொடுத்தான். கற்பகம் பார்த்தாள் - சோகத்தில் மூழ்கிய அம்மாக்கள், சத்து குறைவான குழந்தைகள், வலியால் துடிக்கும் நோயாளி குழந்தைகள்,... என பலப் பல கஷ்டங்களை... ஆனால் அவள் சிரஞ்சீவி சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் போய்ச் சேர்ந்தான்... கஷ்டப்படவில்லை. கண்ணன் டாக்டர் அவனுக்காக எல்லாவித சௌகரியங்களையும் செய்து கொடுத்தார் தான்.. ஆனால் வியாதி தான் குணப்படுத்த முடியாதது . இது இப்போது கற்பகத்திற்கு நன்கு புரிந்தது. கண்ணன் பதவி கிடைத்தபின் சர்ஜரி, மருத்துவம் போன்ற பிரிவுகளை விடுத்து குழந்தை மருத்துவ அறிவியல்(Pediatrics) தேர்ந்தெடுத்தான். யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படவில்லை; டாக்டர் கண்ணன் குழந்தைகளின் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களின் காரணங்கள், அதற்கான மருத்துவ முறைகள் பற்றிய சாத்திய கூறுகளில் சிறப்பு மருத்துவராக வருவார் என்பது அனைவரின் கணிப்பாக இருந்தது. தற்போது கண்ணனின் முயற்சி எல்லாம் குழந்தைகளுக்காகவே ஒரு சிறந்த ,பெரிய, எல்லா வசதிகளுடன் கூடிய மருத்துவமனை- அங்கே பெற்றோர்களும் குழந்தைகளுடன் தங்கும் வசதி - என எண்ண ஆரம்பித்தான் ."இதை எங்கே நிறுவுவது நல்லது...அம்மா ? சென்னை..? லக்னோ ?.. சண்டிகர் ?..-ஆனால் முதலில் வசதிகள் வாழ்ந்த ஆராய்ச்சி கூடமும் அதனுடன் இணைந்து இருக்க வேண்டும். பரவாயில்லை, எல்லாம் சேர்ந்து நான்கைந்து வருடங்களில் தயாராக்கி விடலாம்... இல்லையா?" வாசலில் போஸ்ட்மேன் பெல் அடித்தான். அவனிடம் இருந்து ஒரு நீளக் கவரை வாங்கிய கண்ணன் அதன் மேல் ஓரத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த இன்ஸ்டிட்யூட் பெயரைப் படித்ததுமே ஆனந்தக் கூத்தாடினான். அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு தட்டாமாலையே சுற்றினான். பாரதத்திலேயே மிகவும் கௌரவமான மருத்துவ இயல் நிறுவனத்தில் இருந்து அவனை உடன் நேர்காணலுக்காக அழைப்பு விடுத்திருந்தார்கள். கண்ணன் இன்டர்வியூக்குத் தயாரானான்...

 _தொடரும்....


Rate this content
Log in

Similar tamil story from Tragedy