Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

தாய் மண்ணே வணக்கம் (பாகம் 9)

தாய் மண்ணே வணக்கம் (பாகம் 9)

2 mins
408


வேலை கேட்டுப் போனான்; ஆனால் பாடங்கள், ஐடியாக்கள், மறைமுக கிண்டல்கள், என வாங்கிக் கொண்டு திரும்பினான்.மேலும் ஒவ்வொரு முறை திரும்பும் போதும் மேஜை மேல் உள்ள நியூஸ் பேப்பரை படிக்கத் தோன்றும். நியூஸ் பேப்பரில் பரபரப்பாக பற்றி எரியும் அன்றைய பிரச்சனைகள் பற்றிய தலைப்புச் செய்திகள்.... தலையங்கம்... அல்லது சிறப்பு அறிக்கைகள்.... அவற்றின் சுருக்கம் இது... "நம் நாட்டின் கெட்ட நேரம் இதுதான். இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து, படித்து, உயர்ந்த தொழில்நுட்ப சென்டர்களால் மேதையான மாணவன் தன் நாட்டில் வாழ விரும்புவதில்லை. உயர் தொழில்நுட்ப வைத்திய அணுகுமுறைகள் கொண்ட சிறந்த மையங்களில் இவர்கள் நுழைவதற்குக் காரணமே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இவர்களின் அட்மிஷன் உறுதியாக்கப்படும் என்பதற்காகவே. நம் நாட்டின் வளர்ச்சி, வளம்   போன்றவைகளை நம் நாட்டின் இளைஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்." இத்தகைய செய்திகளைப் படிக்க ஆசைப்பட்டாலும் படிக்காமல் நிறுத்தி விட்டான். அம்மாவையும், அக்காவையும் கவலைப்பட வைத்துவிட்டதை நினைத்து வெட்கப்பட்டான். தான் செய்துவிட்ட தவறுக்கு பிராயசித்தமாக 'அமர்க்களம்' படத்தில் அஜித் பாடும் பாடலை பாடியபடி உட்கார்ந்தான்- "தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்; எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்;

 துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்;

 தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன். இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை... இதிலே எதுவும் நடக்கவில்லை..."

"ஐடியா!.. கொஞ்சம் முயற்சி செய்தால் இஸ்ரோவில் வாய்ப்பு கிடைக்கலாம்.....

இல்லையா... அம்மா! அதாவது... விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும் என் பெயரை பதித்து விட்டு வருவேன்... விண்வெளியில் காலனி அமைத்து,மக்கள் வாழ ஆரம்பித்தபின், அங்கே வாழும் குழந்தைகளின் நோய் சிகிச்சைக்காக என் சேவை தேவைப்படலாம்... இல்லையா...?" "நிச்சயமாக,தம்பி!.. நீ விண்வெளியில் உட்கார்ந்து கொண்டு இங்கே பிரதம மந்திரியிடம் ஃபோனில் பேசலாம். பிரதம மந்திரி சொல்லலாம்,

" எங்களுக்கு உன்னால் கவுரவம் கிடைத்திருக்கிறது, கண்ணா! நீ பாரத தேசத்தின் கண்ணாக விளங்கும் கண்ணன்!..ஹா..ஹா..ஹா... ஆனால் ஒரு விஷயம்... விண்வெளியில் உன் சேவையைத் தொடங்குவதற்கு முன் இங்கே அனைத்து தலையங்கம் எழுதும் எடிட்டர்களின் மேல் புகார் செய்ய வேண்டும். யாரெல்லாம் பாரதத்தின் இளைஞர்களைப் பற்றி தப்புத்தப்பாக செய்திகள் எழுதுகிறார்களோ..." "நிச்சயமாக.. தண்டனை கிடைக்க செய்வது அவசியம்."

"ஆயுள் தண்டனை ?... இல்லை.. தூக்கு! என்ன, தம்பி!"

மல்லிகா சூழ்நிலையை இலகுவாக மாற்றும் முயற்சியில் தன் கற்பனையை விவரிக்க ஆரம்பித்தாள் .

"ஆமாம் மல்லிக்கா... கோர்ட், கேஸ் என்று அலையும் சாக்கில் நான் ஆயுள் பூராவும் நம் வீட்டுக்குள்ளேயே காலத்தை கழிக்கலாம்... இல்லையா..."

 இப்படியே அக்காவும் தம்பியும் கிண்டல்களும் கேலியுமாக சூழ்நிலையைப் பரிகாசித்து அதில் மூழ்கி கவலையை மாற்ற நினைத்தனர்.

 ஒரு சமயம் கண்ணன் நினைத்தான்,"மல்லிக்கா என் ஆராய்ச்சி கட்டுரை மெலிதாக இருப்பதாகச் சொன்னாய் அல்லவா! ஆனால்.. இப்பொழுது.. நான் பாரதத்தின் வைத்திய மையங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் எழுதினால் அது எவ்வளவு மோட்டாவான புத்தகமாக மாறும் என்பதை நீயும் பார்க்கத்தான் போகிறாய்.. அம்மா, இந்த வருடத்தின் சிறந்த விற்பனை புத்தகமாக அதுதான் இருக்கும்..." கண்ணனும் தன் நகைச்சுவை உணர்வை எவ்வளவுதான் வெளிப்படுத்த முயற்சி செய்தாலும் அதிலும் தோற்றுப் போய்க் கொண்டிருந்தான். "போஸ்ட்மேன்" வாசலில் போஸ்ட்மேன் வருவது கடலில் தன் கைகள் போன்ற உறுப்புகளை நீட்டி தன் இறையைப் பிடிக்க வரும் ஆக்டோபஸ் மீன் போலத் தெரிகிறான். மேலும் ஒரு "வருந்துகிறோம்" கடிதமோ...

      _தொடரும்....


Rate this content
Log in

Similar tamil story from Classics