இவன் தமிழன்

Comedy Horror

4  

இவன் தமிழன்

Comedy Horror

தரமான ஆண் பேய்கள் வேண்டும்!

தரமான ஆண் பேய்கள் வேண்டும்!

2 mins
2.1K



'The Grudge ' எனும் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த பேய் படம். அதில்வரும் பேய்களிலேயே பெண் பேய்களை விட என்னை மிகவும் கவர்ந்த, பீதிக்குள்ளாக்கிய பேய் அந்த சிறுவன் தான்.அதற்கு ஒரு காரணம் உண்டு.


 இப்படத்தைப் பார்த்துவிட்டு அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். அன்று மதியம் அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் பரிசுப்பொருள் ஒன்று வாங்குவதற்குச் சென்றேன். கடையில் எவருமிலர் . சரி, சிறிது நேரம் பொறுத்து பார்ப்போமென்று நின்றுகொண்டிருந்த பொழுது திடீரென்று 'என்னன்னா வேணும் ?' என்று ஒரு சிறுவனின் குரல்.


திரும்பிப் பார்த்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.முந்தைய இரவு பார்த்த படத்தின் அச்சிறுவன் பேயின் சாயலை அப்படியே உரித்துவைத்திருந்தான் அந்த கடைக்கார தம்பி.ஒரே ஒரு வித்யாசம் தான்.படத்தில் அந்த சிறுவன் பேய் வெள்ளைவெளேரென்று இருக்கும்.இந்த சிறுவன் மாநிறமாக இருந்தான்.வைத்த கண் எடுக்காமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு,' மியாவ்' என்று அப்படத்தில் வருவது மாதிரியே ஒரு பூனை கத்த பீதியானேன்.அச்சிறுவனிடம் அனுமதி கேட்டு அவனை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டும் வந்தேன். அந்த புகைப்படத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் .


 நம்மூர் மற்றும் ஆங்கிலேய திரைப்படங்களில் பேய் வேடங்களில் பெண்களே முன்னிலையில் உள்ளனர்.ஒரு பெண் பேய் என்றால் தலைவிரி கோலம், கொடூரமான முகம், கோரப்பற்கள் என்று தங்களுக்கென்று ஓர் அடையாளத்தைப் பதித்துவிட்டனர்.அப்படிப்பட்ட பெண் பேய்கள் சிறுமி, நடுத்தர வயது அல்லது வயது முதிர்ந்து என்று எந்த வயதிலும் நமக்கு பீதியைக் குடுக்க கூடிய அளவிற்கு அபாரமாக வளர்ந்துவிட்டனர். பேய் என்று நினைத்தாலே இவர்கள் தான் நம் மனதில் ஆழமாய் பதிந்து உள்ளனர்.


அப்படிப்பட்ட பேய் சாம்ராஜ்யத்தில் ஆண்களுக்கென்ற அடையாளம் பூஜ்ஜியம் என்றே கூறுவேன். சமீபத்தில் வந்த படங்களில் கூட ஆண் பேய்கள் பெண் பேய்களின் நீளமான முடி, கொடூரமான முகம் என்று அவர்களின் சாயல்களை காப்பி அடித்தே வருகின்றனர்.தங்களுக்கென்ற தனி அடையாளம் எதுவுமில்லை.


ஆண் பேய் என்றால் அவ்வாறு தான் இருக்கவேண்டும் என்று எந்த வித சட்டமும் இல்லையே ! 'Grudge' படத்தில் வரும் சிறுவன் எதார்த்தமாக இருப்பான்.நிதானமாக இருப்பான் .கண் கொட்டாமல் பார்ப்பான் .சற்றும் அலட்டிக்கொள்ள மாட்டான்.ஆனால் அவனைப் பார்க்கும்பொழுதோ நினைக்கும் பொழுதோ எனக்கு அடி வயிற்றில் புளியைக் கரைக்கும்.


இதனால் கூறுவது என்னவென்றால் பெண் பேய்களுக்கு முன்னால் ஆண் பேய்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. தரமான ஆண் பேய்கள் வேண்டும் . ஆண் பேய்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் . பார்க்கும்பொழுதே பீதிகொள்ள வேண்டும். பேய்களின் சாம்ராஜ்யத்தில் ஆண் பேய்களின் கொடி பறக்கவேண்டும்.இதை வளர்ந்து வரும் கதாசிரியர்கள் , இயக்குனர்கள் மனதில் கொண்டு கதாபாத்திரங்களை வடிவமைக்க வேண்டும் என்பதே என் பல நாள் ஆசை.


ஆண் பேய்கள் வாழ்க !


Rate this content
Log in

Similar tamil story from Comedy