இவன் தமிழன்

Comedy Drama drama comedy others

5.0  

இவன் தமிழன்

Comedy Drama drama comedy others

பரிட்சை

பரிட்சை

2 mins
2.7K


காலை 10.00 மணி.

முழுபரிட்சை மணி அடித்தது.கண்ணை மூடிக்கொண்டு உலகில் இருக்கும் அத்தனை கடவுள்களையும் வேண்டிக்கொண்டேன்."சரஸ்வதி நமஸ்துப்யம் " கூறினால் மறந்ததும் கண் முன்னே வந்து நிற்கும் என்று எனக்கு நம்பிக்கை. மூன்று முறை கூறினேன்.கண் முன் என் புத்தகமே வந்தது.நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஒரு பெரு மூச்சு விட்டு அமர்ந்தேன்.


ஆசிரியர் கையில் இரு பெரும் பேப்பர் கட்டுடன் உள்ளே நுழைந்தார்.ஒன்று எழுதா விடைத்தாள்.மற்றொன்று வினாத்தாள் என்று உலகரியும்.ஒரு பெஞ்சில் ஒருவர் மட்டும் அமர விடைத்தாள்களை முதலில் கொடுத்தார்.விறுவிறுவென்று மார்ஜின் போட்டு பெயர் எழுதி ,தேதியும் எழுதி வைத்தேன்.அடுத்து வினாத்தாள்களை கொடுத்தார். ஒரு முறை வினாத்தாளை தொட்டும் கும்பிட்டேன்.


மொத்தமே 5 வினாக்கள்.ஒரு வினாவிற்கு 20 மதிப்பெண்கள் என்று மொத்தம் 100 மதிப்பெண்கள்.வினாத்தாளும் ஒரு பக்கம் மட்டுமே அச்சடிக்கப் பட்டிருந்தது.


பேனா மூடியை திறந்து வினாத்தாள்களை பார்க்க தொடங்கினேன்.


Question 1.

Answer தெரியல!!!


Question 2.

Answer தெரியல!!!


Question 3.

Answer தெரியல!!!


Question 4.

Answer தெரியல!!!


Question 5.

Answer தெரியல!!!


அய்யயோ!!ஒரு கேள்விக்கு கூட விடை தெரியலையா!!சுத்தம்!! உலகமே என் அடிவயிற்றில் புகுந்து உருண்டது போன்ற பீதி.வினாத்தாளை மறுபக்கம் பார்க்கலாம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை என் விடைத்தாளைப் போலவே.


நகம் கடித்தேன்.தலை முடி சுற்றினேன்.வெளியே சென்றுகொண்டிருந்த என் லேப் அட்டெண்டரை பார்த்தேன்."மாட்டினியா" என்பது போல பார்த்துவிட்டுச் சென்றான்.கண் மூடி சிந்தித்தேன்."பாட்ஷா" படம் கண் முன்னே சென்றது!அடேய்!!எந்த நேரத்துல!!!


என் ஆசிரியரின் கண்களைத் தவிர அனைத்து இடங்களுக்கும் என் கண்கள் சென்றது.

பக்கத்தில் பெஞ்சில் இருந்த என் நண்பனைக் கண்டேன். வெறித்தனமாக எழுத்திக்கொண்டிருந்தான்.கேள்வியோட தலைப்பு மட்டும் போட்டு நமக்கு தெரிஞ்சத எழுத்துவோம்னு பார்த்தா,'இப்பிடி எழுதி தானே ஹிந்தி பரிட்சைல பெயில் ஆனன்னு' எங்க ஹிந்தி ஜி திட்டினது ஞாபகத்துக்கு வந்துச்சு.


இப்படியே பரிட்சை ஆரம்பித்து அரைமணி நேரம் ஆனதால் தைரியமாக எழுந்து,மெதுவாக ஆசிரியர் காதில் "சார், டாய்லெட்" என்றேன்."போய் தொ ல" என்பது போல் பார்க்க ,தெறித்து ஓடினேன்.


செய்வதறியாமல் பரிட்சை அறைக்கு திரும்பிச் செல்ல ,ஒரு ஓரமாய் தாள்கள் சிதரிக்கிடந்தன.என்னவா இருக்கும் என்று கையில் எடுத்துப் பார்த்தால் ஆச்சர்யம்!!பரிட்சையில் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அழகாய் விடைகளுடன் இருந்தன.


ஆண்டவா!!காப்பாத்திட்டான்யா!! என்று மனதில் ஒரு சாதித்த வெறியுடன் சட்டைக்குள் சிறிதும் கசங்காமல் விடைத்தாள்களை வைத்துக்கொண்டு என் இடம் சென்று அமர்ந்தேன்.


ஒரு வழியாய் விடைத்தாள்களை எடுத்து நான் எழுதியது போல அடுக்கி வைத்து ஒரு முறை என் நண்பனைப் பார்த்து ஏளனமாய் "இன்னுமா எழுதுற " என்று சிரித்தேன்.


ஆசிரியர் குடுத்த நூலை வைத்து அனைத்து பேப்பர்களையும் கட்டிவிட்டு சரிபார்த்து தயாராக வைத்தேன்.வரிசையாக பேப்பர்களை வாங்கிக்கொண்டு வந்த ஆசிரியர் என் அருகிலும் வந்தார்.மிகுந்த பெருமையுடன் என் விடைத்தாளை நீட்டினேன்.


புன்முறுவலுடன் என் விடைத்தாளை வாங்கிய ஆசிரியரின் முகம் ,பல்வாள் தேவன் மாட்டை அடக்க போகும்பொழுது மாறுவது போல மாறியது. என் காதுகளை புடித்தார்."அய்யோ சார்" என்றேன் வலி தாங்க முடியாமல்.


"என்னடா இது!!! இன்னிக்கி தேதி 04/10/2020 னு எழுதிருக்க "என்று விட்டார் ஒரு அடி கண்ணத்துல.


"என்னது 2020ஆஆ"... என்று கதி கலங்கி கத்திக்கொண்டே எழுந்தேன்.அருகில் தூங்கிக்கொண்டிருந்த என் மகள் "அப்பா!! எதுகுப்பா கத்துற " என்று என் கன்னத்தில் அவள் அடித்து எழுப்பினாள்.


ச்சீ...பள்ளி முடித்து 15 வருடங்கள் மேல் ஆகி, ஏழு கழுதை வயசானலும் பரிட்சை பத்தின கனவு வந்தா எவ்ளோ பீதியா இருக்கு ...!!!


Rate this content
Log in

Similar tamil story from Comedy