Rajini Benjamin

Others

4.3  

Rajini Benjamin

Others

மருகாதே மனமே

மருகாதே மனமே

6 mins
352


ஏண்டி வந்ததிலிருந்து உம்முன்னு இருக்க,


அங்கேயே தங்கி படிக்கிற ஹாஸ்டல் வசதி இருந்ததால் தானே உன்னை அங்க சேர்த்தோம். இப்ப என்னடி ஆச்சு அங்க வேணாம்னு சொல்ற,


அம்மாவின் இந்த கேள்விகளுக்கு அங்கே நடக்கும் பிரச்சனையை எப்படி சொல்றது என்ற யோசனையில், நான்கு தூண்கள் அமைந்த முற்றத்தில் சுவரை ஒட்டி இருக்கும் சிகப்பு நிற திண்ணையில் சாய்ந்தமர்ந்து காஃபி சாப்பிட்டு கொண்டிருந்தாள் அர்ச்சனா.


ஏண்டி உன் அண்ணன் வந்து கேட்டா என்ன சொல்ல,என்று மீண்டும் அவளை துளைக்க,


ம்மா... கொஞ்சம் நேரம் பேசாம இருங்க எனக்கே அதை எப்படி சொல்றதுன்னு யோசனையில் இருக்கேன் நீ வேற மாறன் அண்ணாவை சொல்லி இன்னும் கொழப்பாத ம்மா... என்றாள் எரிச்சல் தேங்கிய குரலில்.


இது என்னடி யம்மா என்கிட்ட கூட சொல்ல முடியாத விசயம் ன்னு தயங்கற, அப்படி என்ன கஷ்டம் அங்க உனக்கு.



சட்டென்று எழுந்தவள் சமையலறைக்குள் சென்று சிங்கில் காஃபி கப்பை போட்டுவிட்டு.


சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தாள்.


அவள் தாய் மாதவி, என்னவோ உற்ற தோழி போல் தான் தன் மகளிடம் பேசி அவளின் தேவைகளை நிறைவு செய்வார்.


ஆனால் அர்சனா இயல்பிலேயே எல்லோரிடமும் ஒதுக்கம் காட்டுபவள், அம்மாவிடம் கூட எது குறித்தும் வெளிப்படையாக பேச மாட்டாள்.


எந்த ஒரு விசயத்தையும் நதியாவிடம் இயல்பாக பேசி பகிர்ந்து கொள்வது போல் அவளுக்கு தன் அம்மாவிடம் நெருங்கி பேச முடியவில்லை.


ஒரு வேளை சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்ததால் கூட இருக்கலாம்.


ஆனால் அவளிடம் கூட இப்போது இருக்கும் தன் பிரச்சனையை தானே சென்று பேச தயக்கமாக இருந்தது அவளுக்கு.


கொஞ்சம் நேரம் கழித்து சரி அண்ணி இங்க வரும் போது சொல்லிக்கலாம் என்று நினைத்தவள்.



கிச்சனிலிருந்து வெளியே வர அவள் கையில் இருந்த சாம்சங் அலறியது.


என்னோடு நீ இருந்தால்...என்ற பாடல்.


மொத இந்த ரிங் டோனை மாத்தனும் என்று நினைத்தவள் கைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தாள்.


கல்லூரி மாணவிகள் விடுதி அறை நண்பி பவித்ரா தான் அவளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு இருந்தாள்.


என்னடி உனக்கு வெக்கம் மானம் சூடு சொரனை இதெல்லாம் கொஞ்சம் கூட கிடையாதா?


உனக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது?


இல்ல டீ ப்ளீஸ் இனி அது போல எல்லாம் பேசல டீ யார்கிட்டையும் சொல்லிடாத என்றாள் உண்மையான வருத்தத்தில்.


ச்சீ...போனை வை, இனி இது போல் என்கிட்ட பேச முயற்சிக்காத நான் வேற காலேஜ் சேர போறேன் என்றாள் தீர்மானமாக.


இல்ல அச்சு என்று அவள் ஏதோ சொல்ல வருவதை கூட காதில் வாங்காமல் போனை கட் செய்தாள்,


அந்த நேரம் பார்த்து நதியா வந்தாள் அத்தை என்று அழைத்து கொண்டு.


இரண்டு வீடு தள்ளி தான் அவள் வீடு,


அர்ச்சனா, மாறன் இவர்களின் மாமன் மகள்.



நதியா இப்போது தான் சிவில் சர்வீஸ் கமிஷன் பரீட்சை முடித்துவிட்டு ரிசல்டுக்காக வெய்டீங்.



மாறன் ஆறு மாதத்திற்கு முன் தான் ஐபிஎஸ் வேலையில் இங்கு சொந்த ஊரிலேயே பணி கிடைக்க மகிழ்சியாக வந்து சேர்ந்தான்.


தந்தை தவறிவிட்டார்,எனவே அம்மாவும், தங்கை அர்சனாவையும் தன் பொறுப்பு என அவர்களை அக்கறையுடன் பார்த்து கொண்டான்.


கொஞ்சம் முன் கோபி சட்டென்று கடும் சொற்களும், சில நேரம் கை நீட்டியும் விடுவான்


தங்கை என்பவள் மகள் போன்று என்பதில் பாசமும் சிறிது கண்டிப்பும் இருக்கும்.


ஆனால் அர்சனா எதிலும் சோம்பேறி, எல்லாவற்றிலும் நாசுக்கு பார்ப்பாள்.பேச்சிலும் மற்றவர்களிடம் அதையே எதிர்பார்ப்பாள்.


ஆள் சற்று மாநிறம் என்றாலும் முகம் களை மிக்கவள்,


இப்படியானவளுக்கு தான் வந்தது சோதனை பணிரெண்டாம் இறுதியாண்டு தேர்வில் கிடைத்த என்னூத்தி சில்லறை மதிப்பெண்கள் எடுத்ததில் எதாவது ஒரு டிகிரி இருந்தால் போதும் பிறகு வேலை கிடைக்கும் எதாவது கோர்ஸ் படித்து கொள்ளலாம் என பெரியவர்கள் சொல்ல தலையாட்டினாள்,



அந்த டி. பி .எஸ்

நல்ல காலேஜ் மா என் நண்பனின் பையன் கூட அங்க தான் படிக்கிறான் பிளஸ் டூல வீக் ஸ்டூடண்டா இருந்தவன், இப்ப அரியரே இல்லாம பாஸ் ஆகிறான். அப்படி ஒரு தரமான காலேஜ், மக்கு பசங்களையும் தேத்தி விட்டுடு வாங்க.என்று அவளின் ஒரே தாய்மாமாவான சத்யமூர்த்தி சொல்ல.


அப்ப நான் என்ன மக்கு ஸ்டுடண்டா இந்த மாமா எப்பவும் இப்படி பொடி வச்சு தான் பேசுவாங்க.என்று மனதில் நினைத்தாலும்.


சரி மாமா என்று பவ்யமாக தலையை ஆட்டி தான் அங்கு சென்று சேர்ந்தாள் அர்சனா.


ஆனால்,



என்ன அச்சு ஒரு மாதிரி இருக்க, ஏதும் பாய் பிரண்ட் மேட்டரா? என்று கேட்டு கொண்டு அவள் பக்கத்தில் வந்த நதியா,


குறுகுறுவென அவளை பார்க்க,


ம்ச்சே, அதெல்லாம் ஒன்றுமில்லை என்றாள்.


பின்ன?என்ன ஆச்சு.




எனக்கு மூட் சரியில்லை, ரூம்புக்கு போறேன். நதியா எப்படியும் தன் பின்னால் வருவாள் என்று தெரியும் அவளுக்கு, அதனால் அறையை பார்த்து திரும்ப .


நில்லு டி வந்ததிலிருந்து ரெண்டு வாரமா இப்படி தான் இருக்காமா நீயாவது என்னன்னு கேளு என்று அங்கு வந்த மாதவி காஃபி தம்ளரை நதியா விடம் தந்து அவளுக்கு கண்ணால் சாடை காட்ட.



நான் பாத்துக்கிறேன் என்று அவளும் சைகையாலே பதில் தந்துவிட்டு, வா...அச்சு நாம மாடிக்கு போகலாம் என்று அவளை அழைத்து கொண்டு மாடி ஏற.


மாடிக்கு செல்ல வீட்டின் வெளி புறத்தில் படிகள் அமைந்திருந்தது,


படிகளை ஒட்டி நடப்பட்ட கொடி மல்லி மாடி வரை ஏற்றப்பட்டு இருந்ததால் அதிலிருந்து பரிக்காமல் விட்ட ஒன்றிரண்டு பூக்கள் அப்போதுதான் மொட்டவிழ்ந்து அங்கு ஒரு ரம்யமான மணத்தை பரப்பி கொண்டு இருந்தது.


கையிலிருந்த காஃபியை சுவைத்தவள் நுரையீரல் வரை சுவாசத்தை இழுத்துவிட்டு ப்பா...இந்த பூக்கு தான் எவ்ளோ வாசம் என்று மாடியின் தடுப்பு சுவரில் அமர்ந்தாள் நதியா.


அவள் பக்கத்திலேயே உட்கார்ந்த அர்சணா கையிலிருந்த கைப்பேசியில் எதையோ வேண்டா வெறுப்பாக தட்டிக்கொண்டு இருந்தாள்.


காஃபி யின் கடைசி சொட்டு வரை முழுவதுமாக தொண்டையில் இறக்கிவிட்டு நாவில் அதன் சுவையை ரசித்தபடி ம்ம்.‌‌...இப்ப சொல்லு என்ன உன் பிரச்சினை என்று கேட்டாள் நதியா.


அது அது வந்து , என் காலேஜில்

என்று துவங்கியவள்.

முழுவதும் சொல்ல துவங்கினாள்.




நான் காலேஜ் சேர்ந்து ரெண்டு நாளிளேயே கோமதி ரேவதி பவித்ரா நல்ல பிரண்ட்ஸ் ஆகிட்டோம்,


நல்ல விஷயம் தானே,


ம்ம்... நல்லா தான் போயிட்டு இருந்தது.


அதுல பவியும் கோமதியும் பிசிக்ஸ் பாட பிரிவில்.


நானும் ரேவதியும் தான் பி.சி.ஏ பிரிவு எல்லாரும் ஒரே ஹாஸ்டல் தான் என்று சற்று தயங்கி நிறுத்த,


சரி, இதில் என்ன பிரச்சினை?


நானும், பவியும் ஒரே ரூம்


அதேபோல், இரெண்டு பேருக்கு ஒரு ரூம்ன்னு பிரிச்சு தந்தாங்க ஹாஸ்டல்ல.



அது வரைக்கும் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தது.


ஆனா, ரேவதிக்கும்,கோமதிக்கும் வேற வேற ரூம் மெட்.


அது தான்.‌


இந்த ஹாஸ்டல் அவ்வளவா சரியால்ல . என்று சற்று தயங்கினாள்.



ம்ம்...சொல்லு

அமைதியாக அவள் முகத்தை பார்த்தாள் நதியா.


அர்சனாவுய் தன்னை ஒருவாறு சரி செய்து கொண்டு.


அது தான் அங்க எல்லா பொண்ணுங்களும் இல்ல ஒருசில பொண்ணுங்க ஒரு மாரி படம் எல்லாம் பாக்குறாங்க,



அதுவும் எல்லாரும் கேள்ஸ் என்றதால் சிலர், அந்த மாதிரி எல்லாம் நடந்துக்குறாங்க.


சரி இந்த பிரச்சனையை உங்க காலேஜ் பிரிண்சிபால் கிட்ட கம்ளேண்ட் பண்ட வேண்டியது தானே?


இல்ல எவிடன்ஸ் இல்லாம கம்ளேண்ட் பண்ட முடியாது.


அதுவும் பிரின்சியோட சொந்தகார பெண் கூட இது போல...என்று தலையை கவிழ்த்து கொள்ள, அவள் வேரேதோ மறைப்பதாக தோன்றியது நதியாவுக்கு.


உனக்கு இது போல் எதாவது பிரச்சனை வந்ததா, என்று நேரிடையாக அவள் முகத்தை பார்த்து கேட்டாள் நதியா.


கண்கள் கலங்க ம்ம்.‌என்று தலையாட்டிவிட்டு. அவள் மடியில் முகத்தைமூடி சிறிது அழுதவள்.


ஆமா, என் கூட தங்கியிருக்காளே பவித்ரா.



அவள் ஹாஸ்டல் வந்ததும் எப்பவும் போனில். ஏதேதோ படங்களை பாத்துட்டு இருப்பா,


லீவுக்கு ஊருக்கு வரதுக்கு ரெண்டு நாள் மின்ன அன்னைக்கு ராத்திரி.


அவ திடீர்னு என்னை கட்டிபிடித்து முத்தம் குடுத்தா.


நாங்க சாதாரனமா அப்படி எல்லாம் செய்வதில்லை.


எதாவது சந்தோஷமான விசயமா இருந்தா? யாருக்காவது பிறந்த நாள் கொண்டாட்டம்.


போட்டிகளில் பரிசு வாங்குறது இது போல நேரத்தில் தான் கட்டிபிடித்து வாழ்த்து சொல்வோம்.


ஆனால். அன்னிக்கு பவியின் நடவடிக்கை ரொம்பவே வித்யாசமா இருந்தது.


கஷ்டப்பட்டு அவளை பிடித்து தள்ளி கன்னத்தில் ஒரு அடி கொடுத்த பின்னர் தான் அவள் தன்நிலைக்கே வந்தா.


அன்னைக்கு என்ன நடந்ததுன்னா....


என்ன டி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி பண்ற?,


இல்ல அச்சு இதெல்லாம் ஒன்றும் தப்பில்ல,


வா...இங்க பாறேன், என் மொபைல்ல வர படங்கள் பாரு அப்புறம் நீயே இது போல் இருக்கலாம்ன்னு சொல்வ,


என்னது மொபைல்ல அது போல படமா? இவ்வளவு நாளாக நீ..இது தான் பாத்திட்டு இருந்தியா?

போடி தூரமா. நான் அந்த மாதிரி பொண்ணெல்லாம் இல்ல என் அண்ணன் ஒரு போலீஸ் ஆபிசர் அவர் தங்கை நான் எப்படி இருப்பேன் என்கிட்டையே இப்படி பேசுறியா.


போடி போலீஸ் அண்ணன் இருந்தா தப்பே பண்ணமாட்டாங்களா?


நம்ம ஹாஸ்டல் பொண்ணுங்கள போய் பாரு பாதி பேர் இப்படி தான் இருக்காங்க.


இப்படி பேசாத டீ..


ஏய் போய் அங்க படு இல்லைன்னா நான் வார்டனை கூப்பிடுவேன்.


இரு என் அண்ணாவை வர சொல்றேன்.


இப்படி சொன்னதும் கொஞ்சம் முகம் மாறி அமைதியாயிட்டா.


அதுக்கப்புறம் நானும் மறுநாள் ஒரு வேகத்தில் அண்ணனுக்கு போன் செய்தேன் ஆனா ஏனோ அவரிடம் இது பத்தி பேச முடியலை அண்ணி.


சரி இப்ப என்ன செய்ய போற.


நான் அந்த காலேஜிக்கு இனி போக மாட்டேன்.


சற்று நேர அமைதிக்கு பின்.



ம்ம்...இங்க பாரு அச்சு. இப்ப அந்த காலேஜில் இருந்து வெளிய வந்து வேற காலேஜில் இடம் கிடைப்பது கஷ்டம். அதிலும் அங்கேயும் எல்லாம் சரியா இருக்கும் எந்த பிரச்சனையும் வராது ன்னு எதிர்ப்பார்க்க முடியாது.



நமக்கு பிடிக்காத விஷயத்திலிருந்து ஒதுங்கி வரது தான் இதுக்கு ஒரேவழி.



அப்போ இது போல பிரச்சனையை சகிச்சிட்டே இருக்கனுமா? இல்ல அவங்க எதிர்ப்பார்க்கிற மாதிரி மாறனுமா? இப்படி கேட்ட அச்சுவின் கோபம் பார்த்து,



இல்ல டா... நான் சொல்வது இதை தவிர்த்துவேற ஆல்டர் நேட்டிவ் செய்யலாம்ன்னு சொல்றேன்.



அப்படி ன்னா என்னா?




ம்ம்..‌நீ ஹாஸ்டல்ல இருந்தா தானே இப்படி பிரச்சினை.



அதனால் அத்தையை கொஞ்சம் நாள் உன்னை பாத்துக்க அங்க ஒரு வீடு எடுத்து தங்கினா?,



நீ வீட்டிலிருந்து காலேஜ் போய்ட்டு வரலாம்.



முகத்தில் சட்டென்று ஒரு மகிழ்ச்சி கீற்று, தோன்றி மின்னலென மறைந்தது அர்சனாவின் முகத்தில்.


ஏன் என்ன ஆச்சு அச்சு?


அதில்லை அண்ணி இப்படி நம்ம பிரச்சனை மட்டும் பாத்துட்டு ஒதுங்கி போயிட்டா? என்னை போல் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கை இது போல் சூழ்நிலையில் மாட்டிகிட்டு வெளியவர முடியாம தவிப்பாங்க? என்றாள் கவலை தோய்ந்த முகத்துடன்.



ம்ம்... என்ன பண்றது அச்சு நம்ம சமூக அமைப்பு அது மாதிரி இருக்கப்ப என்ன செய்ய முடியும்?



பண்பாடு கலாசாரம் சார்ந்தது தான் நம் இந்தியா. ஆனா வெளிநாட்டு மோகத்தில் எது தேவை எது தேவையில்லை என்பதை அவரவர் தானே தீர்மானிக்க முடியும்.



என்ன தான் சட்டம் நீதி நேர்மை ன்னு நாம யோசிச்சாலும் சமூகத்தில் இருப்பவங்க எல்லாரையும் மாத்தமுடியாது கண்ணம்மா..



சரி வா நேரமாச்சு கீழ போகலாம் என்று சொல்லிய படி எழுந்தவளை.



அண்ணி அம்மா கிட்ட இந்த பிரச்சனையை அப்படியே சொல்லாதிங்க பயந்துடுவாங்க.



அப்புறம் என் படிப்பு கூட தடையாகிடும் என்றாள் கவலையாக.



ச்சே எனக்கு தெரியாதா என் அத்தையை பற்றி



வா.‌..கவலைய விடு. நான் அத்தை கிட்ட பக்குவமா சொல்லி ஏற்பாடு பண்றேன்.



என்று அதோடு அந்த விஷயத்தை மாற்ற எண்ணி,


இருவரும் வேறு டாப்பிக், பற்றி பேசியபடி வந்தாலும்,


நதியா,நாம எழுதின சிவில் சர்விஸில் பாசாகி, மாறன் மாமாவை போல் ஐ.பி.எஸ் தான் ஆகனும் இது போல் சமூகத்தில் வளரும் கண்ணுக்கு தெரியாத நோயை போக்க வழி பண்ணனும்.



எல்லாரும் தெரிஞ்சு இதில் விழுவதில்லை இப்ப இருக்க வசதி அதிகபடி விசயங்கள் தெரிவது எளிதாகிவிட்டதால்.



நம் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் மறந்து ஆர்வ கோளாறில் தான் படிக்கும் பருவத்திலேயே மாறிடுறாங்க.



எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கறது போல இதுவும் ஒன்று, என நினைத்து கொண்டாள் மனதில்.


பேசிக்கொண்டே கீழே வந்தவர்களின் சிரிப்பொலி கேட்டு மாதவியும் சிறு புன்னகை கொண்டார்.


முற்றும்.




Rate this content
Log in