Rajini Benjamin

Drama

3.7  

Rajini Benjamin

Drama

தொன்மை நினைவுகள்

தொன்மை நினைவுகள்

1 min
161


அன்று காலை தன் மகன் சீனுவுடன் கொஞ்சியபடி படுக்கை அறையிலிருந்து துக்கி கொண்டு வெளியே வந்தான் ராம்குமார்.

ஹாலில் தன் தந்தை பழைய நினைவுகளின் வலிகள் சுமந்த முகத்துடன் அமர்ந்து இருப்பதை பார்த்து. அப்பா என்ன பா... ஏன் ? இப்படி உட்கார்ந்து இருக்கீங்க வாக்கிங் பேகலையா? ராமும் குரலில் சற்று வருத்தத்துடன் கேட்டான்.

குழந்தை சீனு தாத்தாவை கண்டவுடன் அவரிடம் தாவியது. பேரன் சீனுவை துக்கி கொஞ்ச தொடங்கியதில் தன் நினைவுகளில் இருந்து வெளி வந்த மூர்த்தி. ராம்குமார்ரை பார்த்து ஒன்னும் இல்ல பா... பழைய நினைப்புதான் டீ.வி நியூஸ் ல்... வந்த இடங்களை பார்ததும் என் அப்பாவை நெனச்சேன் .

அந்த காலத்துல உன் தாத்தா எவ்லோ பெரிய ஆள் தெரியுமா? திரு. ரங்கசாமி என்றாலே ஊரில் தெரியாத ஆட்கலே இல்ல அப்படி ஒரு செல்வாக்கு அவர் பெயருக்கு.

அப்ப அவர் வியாபாரம் செய்துட்டு இருந்தார் ஶ்ரீ லங்கா வரைக்கும் தொழில் விரித்தி செய்தார் . 1964 இதே டிசம்பர் 23 ஆம் தேதி தான் தனுஷ் கோடி வியாபார விஷயமா ரயில்ல போனார்.

அப்போ ஏற்பட்ட சூறாவளி புயல்ல அந்த இடமே அழிக்க பட்டது. ஆயிர கணக்கில் ஊயிர் பலி ஆச்சு .உன் தாத்தா போன இரயிலும் புயலால் கடலில் மூழ்கி .அதுல பயணம் செய்த எல்லாருமே உயிர் இழந்தாங்க . 

அந்த விஷயம் கேட்டவுடனே அம்மா அத்தான் உன் பாட்டி ஊயிர் விட்டுடாங்க. அதுக்கு அப்புறம் சொந்தங்களின் சூழ்ச்சியால் சொத்துக்கள் பறிபோனது. 

நான் உன் சித்தப்பா , அத்தைகள் எல்லாரும் ரெம்ப கஷ்டபட்டோம். தாய்,தந்தை இல்லாத அநாதையா வளர்ந்தோம்.

இதை அனைத்தும் கேட்ட ராம்குமார் தன் தந்தையின் துக்கம் நிறைந்த தொன்மை நினைவுகளை கேட்டு எத்தனை கனமானது அந்த இழப்புகள்.

நான் எத்தனை அதிஷ்டம் செய்து இருக்கிறேன். என் தந்தை ஐம்பத்து நான்கு வயது காலமும் என்னுடன் இருக்கிறார் என்று கடவுளுக்கு நன்றி கூறினான் ராம்குமார்.

முற்றும்.


Rate this content
Log in

Similar tamil story from Drama