anuradha nazeer

Children Stories Drama

4.2  

anuradha nazeer

Children Stories Drama

தாத்தா

தாத்தா

2 mins
1.0K#ஐந்தாம்வகுப்பு 

#பொதுத்தேர்வு எழுதும்

ஒரு பத்து வயதுக் குழந்தையின் பரிதாபம்....


அன்புள்ள பழனிச்சாமி தாத்தாவுக்கு,


நீங்க நல்லா இருக்கீங்களா? இங்க நானும் எங்க அப்பா, அம்மாவும் நல்லா இருக்கோம்...உங்க பேரக்குழந்தைங்க எல்லாம் சுகமா இருக்காங்களா? அவிங்கலாம் எந்த ஸ்கூல்ல படிக்காங்க? நான் இங்க கிராமத்துல அஞ்சாப்பு படிக்குறேன்...என்னோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் கொஞ்சம் படிச்ச விவசாயக் கூலிங்க...நானாவது நாலு எழுத்துப் படிக்கட்டும்ன்னு எங்க அய்யா என்ன ஸ்கூல்ல சேத்தாங்க...நானும் கஷ்டப்பட்டு படிக்கிறேன்...


எங்க கூட எங்க தாத்தாவும் இருக்காரு....அவரு சொன்னாரு.....காமராசர்ன்னு ஒரு மகராசன் இருந்தான்.....அவரு 

கிராமம்கிராமமா பள்ளிக்கூடம் தொறந்து, மத்தியானம் சோறும் போட்டு படிக்கவும் வச்சாரு...இல்லைன்னா நாமெல்லாம் மழைக்குகூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கியிருக்க மாட்டோமாம்.....அப்புறம் வந்த வள்ளல் எம்ஜிஆர் ஆட்சியில...சத்துணவு போட்டு ஏழை பாளைங்களயெல்லாம் படிக்க வச்சாராம்....ஆமா எங்க தாத்தாவே சொன்னாரு...அப்புறம் ஆட்சிக்கு வந்த கலைஞர் அய்யா, முட்டை, பாலு....இலவச மேற்கல்வி எல்லாம் கொடுத்து தமிழ்நாட்டை டாப்புக்கு கொண்டு போயிட்டாராம்...


எங்க அப்பாகூட சொன்னாரு உங்க புரட்சி தலைவி அம்மா ஆட்சியில, அவிங்க ஏழைங்களோட கல்வியில ரொம்ப கவனமா இருந்தாங்களாம்....சைக்கிள், புது யூனிபார்ம், மடிக்கணினி ...இப்புடி நிறைய பண்ணாங்களாம்......என்னங்க பிரயோசனம்?


இப்போ உங்க ஆட்சியில அஞ்சாங்கிளாசுலேயே அரசுத்துறை தேர்வுன்னு எங்க டீச்சர் சார் சொல்றாங்க...இதுக்கு ஜாதிச்சான்றிதழ் வாங்குறதுக்கு எங்கப்பாரு ஒரு மாசமா தாலுகா ஆபீசுக்கு நடையா நடக்குறாரு? இதுல எனக்கு ஆதார் கார்டு வேற எடுக்கணும்...நீங்களே சொல்லுங்க பழனிச்சாமித் தாத்தா....அஞ்சாம் கிளாசுக்கெல்லாம் அரசுத்துறை தேர்வு ரொம்ப அவசியமா?


அன்னைக்குக்கூட டிவி ல பார்த்தேன் ....ஆபிரகாம் லிங்கன்னு உங்களால் எழுத்துக்கூட்டிக்கூட படிக்க முடியல்ல....அண்ணல் அம்பேத்கர் தூக்கில் தொங்கினார்ன்னு நீங்க படிச்ச அப்போ ...எங்க வீட்ல நாங்க எல்லோரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்....உங்களுக்கும் அந்தக்காலத்துல அஞ்சாங் கிளாசுல ஒரு பரீட்சை வச்சுருந்தால், தமிழகத்து இவ்வளவு ஒரு கெட்டிக்காரன் முதலமைச்சர் கிடைச்சிருச்சு மாட்டார்!!!!! பாவி பழனிச்சாமி ஆட்சியில....ஏழைங்களோட படிப்பையே பாழாக்கிட்டான்னு எதிர்காலத்தில உங்களுக்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும்..


திருமணம் முடித்து மனைவியோடு வாழ்ந்து குழந்தை பெற்றவருக்கு தான் தெரியும் பிஞ்சு குழந்தைகளின் வலி

 பொண்டாட்டி பிள்ளை இல்லாதவரின் பேச்சை எல்லாம் கேட்காதிங்க


இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல....இந்தப் பொதுத் தேர்வு இப்போதைக்கு வேண்டாம்....மீண்டும் நீங்க தேர்தல்ல ஜெயிச்சு

 வந்தா பாத்துக்கலாம்... இன்னொன்னு, ரொம்ப நாளா சொல்லணும்ன்னு நினைச்சேன்....கம்ப ராமாயணத்தை எழுதுனது சேக்கிழார் இல்ல ..கம்பர்..


இப்படிக்கு,

அஞ்சாங்க்ளாஸ் ஸ்டூடன்ட்

ரோஷ்னிRate this content
Log in