S. Sivaneshwaran

Children Stories Drama Children

5.0  

S. Sivaneshwaran

Children Stories Drama Children

குமுறல்!!

குமுறல்!!

2 mins
517


குமுறல்..!

    சு.சிவனேஸ்வரன் 

முன்பெல்லாம் வயிற்றுவலி வந்தா எப்படியோ தாங்கிக் கொள்ளலாம்.!! ஆனா..இப்போ வர வயிற்று வலிய “ ஒரு நொடி கூட தாங்க முடியல”!!. கண்ணெல்லாம் குளமாகிப் போகுது!!

கை, கால் எல்லாம் ‘நரம்பு இழுத்து பிடிச்சுக்குது’ எல்லாம் கஷ்டகாலம்!!...என்ன செய்றது, இந்த காலத்துல “நல்ல சாப்பாடு”யாரு போடுறா?...எல்லாம் நேத்து ராத்திரி செஞ்சுட்டு குடும்பமே உட்கார்ந்து..நல்ல “மூக்கு பிடிக்கத் திண்ணுப்பாங்க “அப்புறம் ஏதோ!! கொஞ்சம் தான் மிச்சமாகும்.அதக் கூட சூடு பண்ணி வைக்கிறது இல்ல”.. அப்படியே சட்டியோட கொண்டு போயி “பிரிட்ஜ்ல “( குளிர்சாதன பெட்டி ) வெச்சுடுவாங்க “! அப்புறம் எப்படி சோறு நல்லா இருக்கும்?.. அந்த சோத்துல கெட்டுப்போகுற “வெங்காயம்,கேரட், பீன்ஸ்,தக்காளி எல்லாம் மேல அழுகிப்போய் காலன் செடியாக முளைத்து கிடக்கும்!! என்னத்த சொல்ல!! எல்லாம் “கலிகாலம் “இந்த அழுகிப் போன சோத்த சாப்பிட்டா!!.பின்னே வயிற்று வலிதானடா சோமு வரும்!! வயிற்றில் ஒரு கை வைத்தவாறு ராமு கூறினான்!!


*ராமுவும் *சோமுவும் அந்த “ஏரியா பிச்சைக்காரனுங்க “!!....


“ பிச்சைக்காரனுங்கனா “ என்ன!! அவ்வளவு கேவலமா?... நாங்களும் உயிர்தானே!! நாங்க மட்டும் என்ன “வானத்திலிருந்தா “ குதிச்சோம்னு?? ‘ஆண்டாள் ‘ மாமியோட ஒரே சண்டை!!....


அக்கம், பக்கத்துல இருக்கிற மாமி எல்லாம்.. வந்து….!!! விடுங்க மாமி!! ஊரு ஊருக்கு “வாங்கித் தின்ற பிச்சைக்கார”.. அவன்கிட்ட ‘என்ன வெட்டி பேச்சு’ வீண் சண்டை!! “அக்ரஹாரமே” பார்க்குது பாருங்கோ “கம்முனு வாங்கோ மாமி!!! மாமிய இழுத்துட்டு “ஆத்துக்குள்ள வந்துட்டாள் “லலிதா!! 


 வீட்டுக்குள்ள வந்துட்டு” ஆச்சாரம்”” ஆச்சாரம் “தொடாதவனெல்லாம்” தொட்டுட் டானே “!!!!. “பெருமாளேனு “ சொல்லிட்டு நேர கிணத்துக் கிட்ட போயிட்டு “வாரி வாரி” ஜலத்தை ஊத்தி !!முங்கி முங்கி எழுந்தாள் ஆண்டாள்!! பெருமாள் சன்னதி கிட்ட போய் நெடுங்க விழுந்துட்டாள்!! ….”திருஷ்டி பூசணிக்காய்க்கு” பொட்டு வைக்கிற மாதிரி தலையில் பெரிய பட்ட போட்டுட்டாள்!! ஆண்டாள் மாமி!!


“ லலிதா மாமி “மெல்ல மெல்ல” பூனை மாதிரி “பதுங்கி வந்து என்ன மாமி??.. என்ன ஆச்சு?.. காலையில ஏன்!! சண்டை போட்டுட்டு இருந்தீங்க??..எனக் கேட்க... லலிதா இது கலிகாலம்டி “வீட்டில் இருக்கிறவா தான் “சுடுசோறு கேப்பா!...ஆனா இப்போ ரோட்ல போற பிச்சைக்காரன் எல்லாம் “”வக்கனையா சோறு போட சொல்ராண்டி!!!...


“ இது என்ன மாமி புது கதையா இருக்கு??.. முந்தானையில மூடி பள்ளி தெரியாமல்...சிரிச்சாள் லலிதா!! 

 என் வீட்டு “”ஆத்துக்காரர் “கேட்டா கூட நான் சூடா சோறாக்கி போட மாட்டேன் டி!! அவனெல்லாம் கேக்குறான்..!!பாருடி என்னமோ கப்பல் கவிழ்ந்து விழுந்த மாதிரி அழுதுகிட்டு சொல்றாள்!!...


“” லலிதா மாமிக்கு சிரிப்ப அடக்கவே முடியல..!!


 இதை..!!வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த ராமு “”இங்க பாருங்க... நாங்க ஒன்னும்,,உங்களை தினமும்” சுட சுட ஆக்கி போடுங்க”” அப்புடின்னு சொல்லல… “சொன்னாலும் நீங்க செய்யப் போறது இல்ல “...என்னத்த கேட்டோம்!?? ராத்திரி மிச்ச மாகுற சோத்தைத்தான் “சூடு பண்ணி போடுங்கனு” சொன்னேன்!!.. இது தப்பா??.. ஏன்??.. “உங்க வீட்ல கட்டி வச்சிருக்கிற நாய்க்குக்கூட விதவிதமாக சோறு போடுறீங்களே!!”?? “ஒருநாள் பழைய சோத்தை போட்டு பாருங்க “” அது கூட திங்காது!!!... நாய்க்கு அப்படினா “”” நான் மனுஷன் எனக்கு அப்படி இருக்கும்??....


“பிச்சைக்காரன்” உனக்கு இவ்வளவு திமிரா?? உனக்கு சோறும் கிடையாது!!!... ஒன்னும் கிடைக்காது மாமியோட பாஷையில் பேசி துரத்திவிட்டாள்!!!”


 “ஒன்னும் பேசாத படி!! ராமுவும்,சோமுவும் அந்த இடத்தை விட்டு கிளம்பிடாங்க!!


 ராமு புலம்பிக்கிட்டே வரான்!!


 இவங்க போடுற” இந்த சோத்தத் திண்றதுக்கா” நாம இருக்கோம்?!!! இது “கலிகாலம்” டா சோமு “” “”நாய்க்கு இருக்கிற மரியாதை கூட நமக்கு இல்லையேடா “”!!! 


“”போனால் போகட்டும் போடா

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்.. யாரடா??? சோமுக்கு பொசுக்குன்னு வாயில் வந்துருச்சு!!!...


 “”இப்படி சண்டை போட்டே ராத்திரி ஓடிருச்சு!!


திரும்ப காலையில சரிதா மாமி வீட்டில…..சுடுசோறு வேணும்னு “.. ராமு சண்ட….. இவனும் திருந்த மாட்டான்!!! அவங்களும் திருந்த மாட்டாங்க!!!!....

என்ன பண்றது??... இது “கலியுகக்காலம் “ஆச்சேனு !!.. நெனச்சுக்கிட்டு” தலையில கைய வச்சான்!! சோமு…...


  -சு. சிவனேஸ்வரன் 



Rate this content
Log in

More tamil story from S. Sivaneshwaran