STORYMIRROR

Erode Su. Si

Drama Fantasy Children

4  

Erode Su. Si

Drama Fantasy Children

மரங்களின் ராணி - ஈரோடு சு. சி

மரங்களின் ராணி - ஈரோடு சு. சி

3 mins
0

மரங்களின் ராணி!!

              ஈரோடு - சு. சி


      அந்தத் தெருவிலேயே இவர்களது வீடு தான் சிறியது..! சிறியது என்றால் இக்காலத்து ஓட்டுவீடு என்பதல்ல..! அந்த காலத்து "ஓலைக்குடிசை" அது..! கூரையின் மேல் போட்டிருக்கும் ஓலையின் ஓட்டை வழியேதான் தினமும் வைகறைப் பொழுதில் அந்த சூரியன் அஸ்தமனம் ஆவான்.!வெறும் "பத்துக்கு பத்து அடி "பரப்பளவு கொண்டதுதான் அவர்களது குடிசையின் மொத்த அளவே!!  "தோளின் மேல் நரம்பு புடைத்து வருவது போல்" அந்நிலத்தில் மண்ணை மீறிய படியே 'கூர் கூரான' கற்கள் பாதங்களைப் பிளந்தெடுக்கும்..! அச்சிறு இடத்திலும் கூட இந்த சிறுமி "ராணி.., மரம்,  செடிகள் நடவேண்டும் என்று ஆசைப்பட்டாள்!!


       வீட்டிற்கு ஒரே பெண் பிள்ளையாய் போனதால் "ராணி" ஆகிவிட்டாள்!! 


 "வறுமையிலும் கூட வளமான கற்பனை உடையவர்" தான் இந்த காளிதாசன்.. முத்தாயம்மாளும், அதேபோலத்தான்..


     பக்கத்தில் இருக்கும் பண்ணையார் தோட்டத்தில் இருவரும்.. பூக்கள் பறிக்கும் தொழிலுக்குச் செல்கிறார்கள்..  ஒரு படி பூவிற்கு பத்து ரூபாய் கிடைக்கும்.. காலை ஆறு மணிக்கு பழையசோறு குடித்துவிட்டு… வேலைக்குச் செல்வார்கள்.. ஏழு மணியளவில் வேலை தொடங்கி   மதியம் இரண்டு மணி வரை பூப்பறிப்பார்கள்..


     தங்களது ஒரே பெண் பிள்ளையை  வீட்டிலே விடும் வருத்தத்தினால்..  கோடி ரூபாய் கொடுத்தாலும் கூட அவர்கள் மதியம் இரண்டு மணிக்கு மேல் பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்வதில்லை..


    அதேபோல் இதுவரை மணி ஆறு தாண்டிய பிறகு ஒரு நாளும் வேலைக்கு போனதும் இல்லை!!


    தங்களுக்கு இருக்கும் ஒரே மகளுக்காக இருவரும் சொத்துபத்து சேர்த்து வைக்கவில்லை..  இருப்பினும் தன் மகளைத்தான் மிகப்பெரிய சொத்தாக வளர்த்து வருகிறார்கள்!!.. வாழ்க்கை நடத்துகிறார்கள்..


     ராணி வறுமையில் பிறந்தாலும், மூன்று வேலையும் உண்டு கொள்ள கஞ்சி இல்லாது போனாலும்,அணிவதற்கு கிழிந்த பாவாடை தாவணி இரண்டைத் தவிர வேறு மாற்று உடைகள் வாங்கக் கொள்ள காசு இல்லாத சூழலிலும், இல்லாததைப் பற்றி எல்லாம் கடுகளவும் கூட கவலைப் பட்டுக் கொள்ள மாட்டாள்..!


    "படிப்பில் கெட்டிக்காரி "


     "போன வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்"  மாநிலத்திலேயே "முதலிடம்" பிடித்தவள்..,  கோப்பையும் வாங்கியவள்!!  அதனால்., அவளுக்கு வறுமை எல்லாம் வெறும் பள்ளிக்கூட கணக்காகத் தான் தெரிகிறது!!


      ராணியின் உடைய கனவெல்லாம் ல்லாம் ஒன்றுதான்..!  ஊர்முழுக்க "மரம் நட்டு" என்றும் குறையாத "ஆக்சிஜனை"  மக்கள் சுவாசிக்க வேண்டும் என்பதே..!


     எல்லாருடைய கனவிலும்    ஒரு பின்னணி அமையும்!! அதுபோல் இவளுடைய கனவிலும்  ஒரு பின்னணி இருக்கிறது!!


அதுதான் அந்த "சாயப்பட்டறை"..


      "ஊரின் முற்றத்தில் அமைந்திருக்கும் சாயப்பட்டறையானது கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக இயங்கி வருகிறதாம்..!

அந்த பட்டறையில் நீண்டு ஓங்கிய இரும்பு குழாய் வழியாக நச்சுக்காற்று வானை துளைத்துக் கொண்டு, காற்றுடன் கலங்கியவாறு எட்டு திசைகளிலும் வீசிக்கொண்டு இருக்கிறதாம்!!"


     இந்த நச்சுக் காற்றின் விளைவு..

தன் வீதியில் இருக்கும் முப்பது வயது நிரம்பிய மக்கள் மரணமிடுவதுதான்..

இதைப் பார்க்கும் ராணிக்கு எப்படி மனம் பொறுத்துக் கொண்டிருக்கும்!! 


     அன்று ஒரு நாள் மதிய வெயிலின் புளுக்கத்தினால்.. இரவெல்லாம் தூக்கம் வரவில்லையென .. நிலா முற்றுகையிட்ட நேரம் வெளியில் மண் தடத்தில் நடந்து கொண்டவாரே..   "தி ஏர் வாசிங் "என்ற புத்தகத்தை கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள்!! ..


     அதில் அடைப்புக்குறிக்குள் போட்டு இருந்த சில வரிகள் அவன் செய்யப்போகும் நன்மைக்கு  நல்லதொரு வழிகாட்டியாக

அமைந்திருந்தது!!


    "மரங்கள் நடுவது மூலமே  நல்ல காற்றை நாம் உற்பத்தி செய்யமுடியும்!!.. நச்சுக்காற்றை  அளிக்குமொரு உந்து சக்தியும் அதுதான்!! "


என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளே அவளின்  மரம் நடும் கனவிற்கு முதல் படியாக அமைந்தது!!


    எப்படியோ இந்த நச்சுக் காற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக

தனக்கு கிடைத்த வழியை எண்ணி

பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள் ராணி!!


     ஊர் மக்கள் எப்பொழுதும் நலத்துடன் இருக்கணும், இன்பமுடனும், சேமத்துடன் வாழவேண்டும் என்பதுதான் இந்த பெரிய மனுசியின் நோக்கம்..!!


     வழி கிடைத்த மகிழ்ச்சியில் இரவெல்லாம் தூங்காத கண்கள்.. காலை எழுந்தவுடன்

முதல் வேலையாய்.,  வீட்டின் முன்னே புழுதி அடைந்த மண்ணிலும் கூட ஒரு நெல்லியச் செடி நட்டு வைத்தாள். !!   செடி நட்டிய மகிழ்ச்சியில் உள்ளம் குளிர்ந்து.. "வாளை மீனாய் "அங்கும் இங்கும் துள்ளி குதித்தாள்!!


     இந்த விஜயத்தை ஊர் மக்களிடம் சொல்லியாக வேண்டும் என்று.. ஊர் மக்களுக்கும் இந்தச் சங்கதிகளை சொல்லி வீட்டிற்கு ஒரு வேப்ப மரத்தை "சந்தனமரமாய் எண்ணி "நட்டு வைத்தாள் ராணி…!!


    இவள் செய்த இந்த ஆச்சரிய காரியத்தை கண்டு ஒவ்வொருவரும் அவர்களின் ஆட்சேபனையை கூறினார்கள்!!


    உயிர் ஜீவனை விதைக்கும் இவளை மனதுக்குள் பூஜித்தார்கள ஊர் மக்கள்!!

அவள் வீட்டிற்கு மட்டுமல்ல ஊருக்கே ராணி ஆகிப் போனாள்!!


    காளிதாசனுக்கும்,முத்தம்மாளுக்கும் சமூகத்தின் மேல் இவ்வளவு பற்று கொண்டவளாய் உள்ள தம் மகளை எண்ணி எண்ணி பெரிதும் "பாக்கியமடைந்து" போனார்கள்!! அவளுக்கு கன்னத்தில் எத்தனையோ முத்தப் பரிசுகளும் கிடைத்தது!!


    மக்களுக்கு நோய் என்றால் அதை தீர்க்கும் ஒரு மருந்து காற்று!! காற்றுக்கு ஒரு நோய் உண்டாகும் பொழுது அது எப்படி மக்களின் உயிரைக் காக்கும் மருந்தாய் அமையும் "? என்று எண்ணினாள்!!


   வாழ்க்கைப்பயணத்தில் ஓடும் இடமெல்லாம் "ஒரு மரம் நட்டு"  வைத்துக் கொண்டே வந்த

இந்த மடந்தைதான் மரங்களின் ராணி!!




Rate this content
Log in

Similar tamil story from Drama