உடற்பயிற்சி
உடற்பயிற்சி


கந்தன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். அவனது பள்ளியில் நிவிதா என்ற பெண் படித்து வருகிறாள். அவள் கராத்தே கலையில் சிறந்தவள். ஒருநாள் கந்தன் பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்ல கிளம்பினான். அவன் அரசு நடத்திய பேச்சுப் போட்டியில் 5000 ரூபாய் பரிசாகப் பெற்றதைக் கையில் வைத்திருந்தான். இதை அவனது பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கவனித்துவிட்டனர். அவனிடம் இருந்த பணத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இதை நிவிதா ஒட்டுக் கேட்டு விட்டாள். கந்தா! இன்று என்னுடன் வழித்துணைக்கு வருகிறாயா? என்றாள். உடனே கந்தனுக்கு ஒரே பெருமை. சரி நிவிதா! என்றான். நீ கராத்தே பயிற்சி செய்கிறாயா? அதெல்லாம் வேஸ்ட். என்றான். உடற்பயிற்சியாவது செய்கிறாயா? என்றாள். சாப்பிட்டு டிவி பார்ப்பதற்குத்தான் நேரம். என்றபடி வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமாகினர். வழியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இவர்களை வழி மறித்து பணத்தைப் பிடுங்கினர். செய்வதறியாது கந்தன் நின்றான். நிவிதா அவர்களுடன் கராத்தே சண்டையிட்டு பணத்தைப் பிடுங்கி கந்தனிடம் கொடுத்தாள். கந்தா! இனிமேலாவது கராத்தே போன்ற கலைகளைக் கற்று நாளும் உடற்பயிற்சி செய்! என்றாள்.
கந்தனும் மகிழ்ச்சியாக சரி குருவே! என வணங்கினான்.