KANNAN NATRAJAN

Classics Others Children

4  

KANNAN NATRAJAN

Classics Others Children

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?

1 min
396


பறவைகள் கீச்!கீச்சென காலை வேளையில் சப்தமிட்டன. காலைவேளையில் கிளிகள் கொஞ்சும் சப்தமே ஆனந்தமாக இருக்கும் பூஜாவிற்கு இந்த சப்தம் ஏனோ கலக்கத்தைக் கொடுத்தது. நேற்று மரம் வளர்க்கும் கந்தன் 400 மரக்கன்றுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தான். ஏக்கர் கணக்கில் அப்பா வாங்கிக் கொடுத்திருந்த பூமி இருக்கிறதே! அதை வளர்க்கலாம் என நினைத்துத்தான் வாங்கினாள். அப்பாவும்,அம்மாவும் புற்று ஆநாயினால் இறந்தது முதற்கொண்டு அவள் இந்த பணியில் இருந்தாள். நல்ல கொய்யாவும், சப்போட்டாவும்,நெல்லியும்,மாதுளையும் இருந்திருந்தால் பெற்றோர் இருந்திருப்பார்களே என்ற எண்ணம் தோன்றியது. தனது வேப்பமரத்தின் அடியில் போய் அமர்ந்தாள். நான் ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்லையே என வேப்பமரம் அழ ஆரம்பித்தது. பூஜா திடுக்கிட்டு வேப்ப மரத்தின் அருகில் சென்றாள். வேப்பமரமே ஏன் அழுகிறாய்? யாரது? நான் அழுவது உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் கடவுளிடம் சென்று அதற்கான கருவி ஒன்று கண்டுபிடித்திருக்கிறேன். அதனால் எனக்குத் தெரியும்....சொல்! ஏன் அழுகிறாய்? நீங்கள் எங்கள் இனத்தை வளர்க்க பாடுபடுகிறீர்கள்? உங்கள் சகோதரனோ இந்த இடத்தை விற்க ஏற்பாடு செய்து விட்டார். இன்று வியாழக்கிழமை. கொலுவிற்கு கொண்டைக்கடலை பயன்படுத்தினீர்கள்....நாளைக்கு வெள்ளி..பச்சை வளர்க்க பச்சைப்பயிறு வைப்பீர்கள். ஆனால் நாங்கள் பச்சையாக இருக்கமாட்டோம். எங்கள் கைகள்,கால்கள் வெட்டப்பட்டு துண்டு துண்டாக அறுக்கப்பட்டு விரல்கள் காய்ந்த சருகுகளாக வீழ்த்தப்பட்டிருப்போம். வாள் கொண்டு என்னை அறுக்கப்போவதை நினைத்து மனம் அழுகிறது. நான் ஏன் பிறந்தேன்? எதற்காக நீர் ஊற்றி வளர்த்தீர்கள்..... உங்களுக்கு நல்லது செய்ததைத் தவிர நான் என்ன கெடுதல் செய்தேன்.....என விடாமல் வேப்பமரம் அழ ஆரம்பித்தது. இரு!இரு! அழாதே! என்ற குரல் சத்தமாக ஒலித்தது. வானில் இருந்து ஒரு குரல் கேட்கவும் பூஜா திரும்பிப்பார்த்தாள். யார் அது? அப்துல்கலாம் ஐயாவா! தன் கண்களை அவளால் நம்ப முடியவில்லை.......வேப்ப மரமே! நீ அழாதே! கூப்பிடுங்கள் அந்த நீதிபதிகளை! நான் சொன்னால் யார் கேட்காமல் போவார்கள் என பார்க்கிறேன்.....எல்லா மரங்களும் அப்துல்கலாமை நன்றியுடன் பார்த்தன. துளசி மாடத்தின் அருகில் பூத்திருந்த காக்கணப்பூ இலேசாக அசைந்து கலாமிற்கு நன்றி செலுத்தியதை பூஜா மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். 



Rate this content
Log in

Similar tamil story from Classics