கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம்
கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம்


பாப்பா! அம்மா இன்னைக்கு வேலைக்குப் போறேன். நீ கேட்ட இனிப்பு வாங்கிட்டு வர்றேன். அது பெயர் என்ன?
தூத்பேடான்னு சுப்ரியா சொன்னா! அவ அப்பா கடை வச்சிருக்கார். அதனால் இண்டர்வெல் அப்ப தினமும் சாப்பிடுகிறாள். எனக்கு கொஞ்சமா தந்தா....
ஆனந்திக்கு ஃப்ரீலான்சரில் பணி. வேலைக்குப் போனால் சம்பளம். அன்று பிரபல பத்திரிகை நடத்தும் சமையல் போட்டியில் பணி. வந்தால் ஆயிரம் பணம். சாப்பாடு, இனிப்பு ஒரு கிலோ. வீடு தேடி வந்தார்கள் என ஒத்துக்கொண்டாள். கணவன் கொரானாவில் இறந்த 3 வருடங்களில் நகையை விற்று செலவைச் சரிக்கட்டினாள். ஒரு டிகிரியும் படித்து முடித்திருந்தாள். பிள்ளையும் 5 வந்து விட்டாள். அண்ணாநகரைக் கார் தாண்டும்போது இரண்டு கைகள் சிலையைப் பார்த்தாள். அப்பாவும்,அவளும் கைகோர்த்து சிரித்தபடி அந்த சாலையில் நடந்து ஜிஆர்டி சென்றது மனதை அழுத்தியது. கண்ணில் கண்ணீர் முட்டியது. மேக்கப் கலைந்து விடுமே என கண்ணீரை அடக்கினாள். கார் கொளத்தூரை அடைந்தது. பெரிய கல்யாண மண்டபத்தில் சமையல்போட்டி என விளம்பரம் போட்டிருந்த பலகையின் அருகில் கார் நின்றது. ந
ீங்கதானே ஆனந்தி! மேக்கப் இன்னமும் நல்லா போட்டிருக்கணும். போய் முகத்தைத் துடைங்க! என ஒருவன் பதறினான். பிரபல தொலைக்காட்சியிலிருந்து வந்திருப்பதாகவும் கூறினான். அவசரமாக மேக்கப்பைப் போட்டு முடித்தாள். வரிசையாக போட்டிகள் சென்று கொண்டிருந்தன. இனிப்பு பெட்டியிலுள்ள இனிப்பைக் கண்ணை மூடியபடி சாப்பிட்டுப் பார்த்து சரியான பெயர் சொன்னால் தேர்ந்து எடுக்கப் படுவர்..ஆனந்தி! நீ போய் கண்ணை மூடு! என்றான் வினோதன். சார்! அந்த இனிப்பு பெட்டியின் மேல் வெளிநாட்டு முகவரி இருக்கிறது. ஆங்கிலத்திலும் இருக்கிறதே! கவனிக்கவில்லையா என்றாள். நீ ரொம்ப படிச்சிருக்கேன்னு கர்வப்படாதே! சொன்னதைச் செய்..என அதிகாரம் செய்தான். மேடையின் கீழே அமர்ந்திருத்தவள் இதைக் கவனித்தாள். போட்டி முடிவடைந்ததும் ஆனந்தியை அந்தப் பெண் கீழே வரச் சொன்னாள். ஒரு விசிட்டிங்கார்டையும்,பெட்டி நிறைய தூத்பேடாவையும் அவளிடம் நீட்டி மறுநாள் பணிக்கு வரச் சொல்லி 30000 சம்பளம் என்றாள். நீ அந்த ஆளிடம் பேசிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. கற்றவருக்கு எங்கு சென்றாலும் சிறப்புதானம்மா என்றாள். விநோதன் மௌனமாக நின்றான்.