எப்ப விடியும்
எப்ப விடியும்
காலை நேரத்தில் பக்கத்து வீட்டு ரேடியோ காலை நேரத்து இனிய எஃப்எம்மை இயக்கி வைத்துக் கொண்டிருந்தது. இனிமையான காலைப் பொழுதுக்கு இந்த ரேடியோ ஒண்ணு போதும்மா! என்றாள் ஆண்டாள். உனக்கு வேணும்னா ஒண்ணு வாங்கித்தரட்டுமா? என்றாள் பாட்டி. வேண்டாம்.....மருத்துவப்படிப்பிற்காக படித்துக்கொண்டிருக்கிறேன். வெளிநாட்டில் எல்லாம் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் சேர்த்துக் கொள்கிறார்கள். நம்ம நாட்டிலும் எப்ப பாட்டி வரும்? இது வரும்னு நீ இருக்காதே! போராடி ஜெயித்த வரலாறுகள் மிகவும் குறைவு.....அவரவர் சாப்பிடத்தான் வருகிறார்கள். இறுதிவரை நன்றாகப் படி! ஆண்டவன் கண் திறப்பார் என்றார் பாட்டி.