காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்
காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்


பாளம்பாளமாக ஆனி மாதத்து வெயில் உச்சந்தலையைப் பிளந்தது. நாலுமணிநேரம் வேலை வாங்குகிறான். சம்பளம் கேட்டால் சோறு போட்டு அனுப்பிட்டான். கேட்டால் ஏரி வேலையில இன்னமும் பணம் வரலைன்னு சொல்றான். அவன் மட்டும் காரில் வருகிறான். 5 ஸ்டார் ஓட்டலில் தயிர்சாதம் உருளை பொரியலுடன் தின்கிறான். அதுவும் இரண்டு வெயிட்டருக்கு 200 பணம் டிப்ஸ் வேற....... என சட்டை போடாத பாட்டியிடம் அலுத்துக்கொண்டாள் பார்கவி. எதுக்கு இந்தமாதிரி பயலுவ மத்தியில் வேலைக்கு வந்தே தாயி.......பிறகு வயித்துப்பாட்டுக்கு என்ன செய்ய.....வயசுப் புள்ளையா இருக்கேன்னு தினமும் 300 தர்றேன்...வர்றியான்னு கூப்புடறான்.....கேவலம் என் வீட்டு வயித்து ஜீவன் 4 கழுவிக்கிறதுக்காக இவன் கூப்பிட்டவுடன் போறதுக்கு நான் என்ன நடிகையா?.....அடியேய்! நடிகைகள் எல்லாரும் சேர்ந்து சண்டைக்கு வந்துடப் போறாங்க! போ! பாட்டி! உலகறிந்த ரகசியம்தான் இது! கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் ரன் எடுத்து வந்தவுளுங்க கதைதான் தெரியாதா என்ன? நம்ம ஊரு நர்சு அங்கேதான் வேலை பார்க்கிறாள். நாளைக்கு நீயும் வேலை பார்க்க வெளியே வந்தால் உன்
னையும் அந்தமாதிரிதான் பேசுவாங்க! காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்.....அதுக்கு பயந்தால் வேலை ஆகாது. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து பெண்கள் நிலை இதுதான். இன்னமும் அப்படித்தான் பேசுவாங்க....நீங்க வச்ச நாவல்பழ மரங்களும், மாமரங்களும் தெருவோரங்களில் வளர்ந்து பழம் தந்து எல்லோருக்கும் பசியைத் தீர்க்க உதவிட்டு இருக்கு....அப்படியே வாதா மரங்களும் பூ தள்ள ஆரம்பிச்சிருக்கு......இப்ப இன்னைக்கு அவர் பணம் தரலைன்னா உதிர்ந்து கிடக்கிற நாவல்பழங்களும்,மாம்பழங்களும்,சப்போட்டாக்களும் என் குடும்ப பசி தீர போதும். அரசு கொடுத்த மிக்சியில் ஜூஸ் போட்டா பொண்ணு குடிச்சிடுவா! நீ கொடுத்த மண் கப் இருக்கம்மா! வரட்டா...என்று கிளம்பிய பார்கவியை சிரிப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தாள் பாட்டி. ஹூம்! நம்ம காலத்துல இப்படி தைரியமா இருந்திருந்தால் எப்படியோ வாழ்ந்திருக்கலாம் என முணுமுணுத்தபடி சப்போட்டா நாற்றுகளையும்,நாவல்பழ நாற்றுகளையும்,பலா நாற்றுகளையும் தெருவோரங்களில் நட்டு வைக்க எடுத்துச் சென்றாள். அவள் செல்வதை வேடிக்கை பார்த்தபடி தலைகுனிந்தார் கார்க்காரர்.மழை தூறலாக ஆரம்பிக்கலாமா என யோசித்தது