கேரட் கேசரி
கேரட் கேசரி
அம்மா! நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?
வேண்டாம்! நீ படித்து பெரியவனாக ஆன பிறகு எங்களை நினைத்தால் போதும். உங்க கணவருடைய பிறந்தநாள் தெரியுமா?
அதெல்லாம் உனக்கு அவசியம் கிடையாது. உன் தந்தை வாங்கிக் கொடுத்த பூமியை எங்க பெயர் காப்பாத்தறமாதிரி கட்டிக் காப்பாத்திக்கோ!
நினைவுகள் அப்புவிற்கு கடலலைகளாக ஓடின.
வாடிக் கிடந்த மல்லிகைச் செடிகளுக்கும், பூத்திருந்த ரோஜாச் செடிகளுக்கும் தண்ணீர் விட்டார். இன்னைக்கு கேரட் கேசரி செய்து தர்றியா?
ஏன் திடீரென கேட்கிறீர்கள்?
இன்று என் தந்தைக்குப் பிறந்தநாள்.
ஆபிஸ் போக வேண்டாமா?
நீ செய்து கொடு....நான் வாழ்ந்த காலத்தில் எனது தந்தையுடன் அமர
்ந்து பேச நேரமில்லை. பொருள் சம்பாதிக்க ஓடிய ஓட்டத்தில் அவருடன் பேச வேண்டிய காலங்களை மறந்துவிட்டேன். எடுத்து சொல்ல ஆசிரியரில்லை. இப்ப என்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் 25 இலிருந்து 30 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களுக்கு எடுத்துச் செல்கிறேன். ஏன் என்று கேட்டபார்கள்?
அப்போது அவர்களும் தந்தை பிறந்த நாளைக் கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? பெற்ற தாய் பத்துமாதம் வயிற்றில் சுமந்து வாய்க்கு ருசியாக சமைப்பாள். காலம் பூராவும் நம்மை நல்வழிப்படுத்த நம் அருகிலேயே திட்டிக் கொண்டே வாழும் உன்னத உருவம்தான் தந்தை.
இது நல்ல யோசனையாக இருக்கே! எனக்கும் ஒரு டப்பா கொடுங்க! எனக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்றபடி நகர்ந்தாள் மீனலோசனி.