மஞ்சள்
மஞ்சள்


அம்மா! எனக்கு பள்ளியில் கொலு பண்டிகை! அதனால் மஞ்சள் வண்ண உடை உடுத்தி மஞ்சள் பொடி எடுத்து வரவேண்டும் என ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மஞ்சள் வண்ண உடை வேண்டும்..... என்னிடம் கோவிலில் கொடுத்த புடவைதான் உள்ளது. அதை வேண்டுமானால் டெய்லரிடம் கொடுத்து உனக்கு பேண்ட் ,சட்டை தைக்க சொல்கிறேன். மஞ்சள் வயலில் விளைந்த மஞ்சளை எல்லாம் விற்று விட்டேன். தொட்டியில் கிடப்பனவற்றை எடுத்து காய வைத்து அரைத்து எடுத்து செல்! என்னால் அவ்வளவுதான் செய்ய இயலும்....அனாதைப் பையன் என்றுதானே என்னிடம் அலட்சியம் காட்டுகிறாய் அம்மா! அதற்கு நீ தத்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை....உனது மஞ்சள் கயிறைக் காக்கும் பொருட்டு என்னைத் தத்தெடுத்தாய்....இன்று சிக்கனமாக இருக்க வழி சொல்கிறாய்...சொத்து எல்லாம் காட்டித்தானே என்னைத் தத்தெடுத்தாய்......இப்ப இந்த மாதிரி செய்தால் உன்னை விட்டு விலகி விடுவேன். என் நண்பன் சைக்கிள்கடை வைத்திருக்கிறான்.....வேலை தருவான். விமல்...ரொம்ப பேசாதே! ......நான் உன்னைத் தத்தெடுத்தபோதே சொல்லி விட்டேன். சொத்துக்காக என்னுடன் வருகிறாய் என்றால் வராதே என்று...அதை ந
ீ காப்பாளரிடம் அப்போதே சொல்லியிருக்கவேண்டும்....எனது பள்ளியில் உன்னைக் கேலி செய்கிறார்கள். நான் அனாதை என்றுதான் நீ இவ்வாறு நடக்கிறாய் என்று ஏற்றி விடுகிறார்கள்....மஞ்சுளாவிற்கு அப்போதுதான் தனது தவறு புரிந்தது. பெரிய பள்ளியில் சேர்ந்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு எனப் புரிந்தது. விமல்....நான் இன்று உனது பள்ளிக்கு வருகிறேன். நமது வீட்டுப் பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளியில் உன்னைச் சேர்க்கிறேன். என்னால் ஃபீஸ் கட்ட இயலவில்லை.கொலு வைக்கிறது எதற்குன்னு உங்க ஆசிரியர் சொல்லலையா?
மௌனமாக பள்ளி பையைத் தூக்கியபடி நீங்கள் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டக்கூடாதுன்னுதான் இப்படி தவறாகப் பேசினேன் என முணுமுணுத்தபடி கதவைத் திறந்தபடி வெளியேறினான் விமல். இந்த பெயர்,இந்த உடலில் ஓடுகிற இரத்தம் எல்லாம் நீங்க தந்ததுதானே அம்மா! என்று கத்தவேண்டும்போல இருந்தது அவனுக்கு. ஆனால் தனது பாசத்தை அவன் வெளிக்காட்டவில்லை. தெரு முக்கில் பிள்ளையாரிடம் வழக்கம்போல பேச வேகமாக ஓடத் தொடங்கிய அவனை மஞ்சுளா விசித்திரமாகப் பார்த்தாள்.