நன்றி ஒருவருக்கு
நன்றி ஒருவருக்கு


நீ பசுபதி பையன்தானே!
ஆமாம்! நீங்க யாருன்னு தெரியலையே!
என்னப்பா! இங்கே வந்து நிற்கிறே? மழை வேற ரொம்ப பெய்யுது!
அங்கிள்! நீங்க அன்னைக்கு கார் ரிப்பேர் ஆகி திண்டிவனம் போற தெருவில் நின்னீங்களே! இரவு பன்னிரண்டு மணி இருக்கும்ல!
சரியா சொன்னே தம்பி! அன்னைக்கு கோடிக்கணக்குல வியாபாரத்திற்கு பணம் வண்டியில் இருந்தது. அன்னைக்கு நீங்க வண்டியைச் சரி பண்ற ஆளைக் கூட்டிட்டு வரலைன்னா இன்னைக்கு நான் இந்த அளவு இருக்க முடியாது. ஆறு மாதம் இருக்கும் இல்லையா!
அங்கிள்! அப்பாவும்,நானும் திருச்செந்தூர் வந்தோம். வர்ற வழியில் வண்டியை ஸ்ரீவைகுண்டத்துல நிறுத்திட்டாங்க! அதனால் நடந்துடலாம்னு பார்த்தோம்.
என்ன தம்பி நீங்க! என் மகிழுந்தில் (காரில்) ஏறுங்க! என் தொழிற்சாலை இங்கேதான் இருக்கு! அதில் தங்கி இருங்க! வேணுங்கிறதை சாப்பிட்டுக்கலாம்..சமைக்க ஆள் இருக்காங்க! மழை விட்ட பிறகு போகலாம்....
அங்கிள்! நாங்க சென்னைக்கே வேலை தேடித்தான் போகிறோம்....
நீங்க வேலை தருவதாக இருந்தால் இங்கேயே இருக்கிறோம்...
என்ன படித்திருக்கிறாய்?
நான்காம் வகுப்பு...அப்பாவிடம் வசதி கிடையாது. அப்பாவிற்கு நான் சொந்த மகன் இல்லை. பத்தாம் வகுப்பு மாணவி படிக்கும்போது அவர் கிராமத்தில் தெரியாமல் பன்னிரண்
டாம் வகுப்பு மாணவன் கொடுத்த உணவை உண்டிருக்கிறாள். அந்த பையன் நாலைந்து பேரோடு சேர்ந்து அந்த பெண்ணை வேட்டையாடியதால் நான் பிறந்ததாக அப்பா சொல்வார்.
உன் அம்மா என்ன ஆனார்?
எனது தந்தை யாரென்றே எனக்குத் தெரியாது....அம்மாவை எனது பாட்டி உணவில் விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தார்கள். ஆனால் என் அம்மா தப்பித்து சென்று விட்டதாகச் சொல்வார்கள்.....
அறையின் திரை மறைவில் இருந்த துணி அசைந்தது.
எனது தம்பி பையனும் அதில் இருந்தான்.... அவனை என் தம்பி உள்ளேயே சேர்க்கலை!
அது யாரு! திரை மறைவில்..........!?
உனது பிறப்பிற்கு காரணமானவள்.....
ஒரு நிமிடம் அவன் மௌனமானான்.
அங்கிள்! எனக்கு வேலையும்,அப்பாவும் மட்டும் போதும்.
சமையல் வேலை தர்றேன்...
அது போதும் அங்கிள் எனக்கு..ஔவையார் மூதுரை பாட்டில் சொன்னதை இன்னைக்கு நான் அனுபவிக்கிறேன்.
தென்னைமரம் பலன் கருதாமல் செய்வது குறித்துதானே!
ஆமாம் அங்கிள்!
உனது சமையல் அறை அங்கு இருக்கிறது. உனது தாயும் அங்குதான் வேலை செய்கிறார்கள். பிடித்தால் அம்மா என்று கூப்பிடு! இல்லையென்றால் அக்கா என்று கூப்பிடு! அரிதாரம் பூசும் பெரும்பாலானவரின் வாழ்க்கையும் இப்படித்தான்! என்று பூடகமாகச் சிரித்தார்......