புறப்படுவாயா
புறப்படுவாயா


ஆட்டோகாரனா இருக்கறது எவ்வளவு வசதியா இருக்குன்னு பார்த்தியா? வீட்டுக்கு வந்தா நிம்மதியா சோறு சாப்பிடுறேன். நீ வேலைக்குப் போய்ட்டா தட்டும் நானும்தான் பேசிக்கணும் என்றான் பாலு. நீ எதுக்கு இப்ப வேலைக்கு போகணும்னு சொல்றே? பொண்ணு படிக்க வேண்டாமா?
எட்டுதான் படிக்க வச்சே! இப்ப வீட்டுக்கு பேப்பர் வாங்கறதைக்கூட நிறுத்திட்டே! ஓசி பேப்பர் படிக்கறதையும் வேண்டாம்னு சொல்றே! என்றாள் சுப்பி.
உன் பெண் பேப்பர் படிச்சா கெட்டுப்போய்டுவா!
என்னடா நீ லூசு மாதிரி பேசுறே! இந்த காலத்துல போய் இதெல்லாம் பேசுகிறாயே!
அயலின்னு ஒரு படம் பார்த்தாயா? ஆமாம்....பார்த்தேன். இப்ப என்ன அதுக்கு? அந்த பெண் வயதுக்கு வந்ததை மறைத்து படிப்பதற்காகப் பொய் சொல்லியிருக்கிறாள். பெண் படிப்பு என்பது நம்ம நாட்டைப் பொறுத்தவரை அவளைப் பாதுகாக்கும் கவசம். கற்பையும், கல்வியையும் பாதுகாத்து அவள் போற்றி வாழ்கிற
ாள். ஆனால் சில இடங்களில் பணிக்காக பெண் தனது சுய மரியாதை போன்றவற்றை வெளிநாடு போல இழக்க வேண்டியுள்ளது. நானே ஆட்டோகாரன். எனக்குத் தெரியாததா.........நியுசிலாந்து மற்றும் சில நாடுகளில் பெண் தனது கல்விக்காக தனது கன்னித்தன்மையே ஏலம் போட்டு விற்கிறாள். அதனைப் பார்த்த இந்திய மக்களும் மாறத் தொடங்கி விட்டனர். இந்த சினிமாகாரனுங்க அந்த மாதிரி வாழ்வதால் தான் தப்பு ஏற்படுகிறது. அதான்! என் பொண்ணை நல்லஇடமாக கட்டிக்கொடுத்து விடுவேன். போய்யா! நீயும் உன் கருத்தும். பெண்ணுக்கு அவளது கற்பை எப்படி காப்பாற்றணும்னு தெரியும். மயிலாப்பூர் டைம்ஸ் நம்ம வீட்டுக்கு மட்டும் போடலையேன்னு கேட்டதற்கு நீதான் போடக்கூடாதுன்னு சொன்னியாம்.....என் மகளுக்கு பேப்பர் வாங்கிக் கொடுப்பேன். நீ புறப்படுவாயா...எனக்கு நாலு முழம் மல்லி,ஒரு பட்டு வாங்கிட்டு வர்ற அளவு சேர்த்து வைக்க இப்ப போனாத்தான் வருவே! என்றபடி சுப்பி சமையலறை நோக்கி நடந்தாள்.