Shakthi Shri K B

Classics Inspirational Children

5  

Shakthi Shri K B

Classics Inspirational Children

பயணத்தில் ஒரு பெருமையான நினைவு

பயணத்தில் ஒரு பெருமையான நினைவு

3 mins
422


அதிக மழை பொழிந்து கொண்டே இருந்தது. இன்று மிக முக்கியமான நாள் என்பதால் ஹேமா தயாராகி கொண்டிருந்தாள். "என்ன இவ்வளவு மழை பொழிகிறது, நான் எப்படி அந்த மண்டபதிற்கு செல்வது," என்று நினைத்து கொண்டிருந்தாள் ஹேமா. ரிங்க ஒலி அவளின் அலைபேசியில் ஒலித்தது. "சரி யாராக இருக்கும் அதுவும் இன்று", என எண்ணிய படியே அலைபேசியை எடுத்தாள். 


அபி என்ற பெயரை அலைபேசி அழைப்பில் கண்டவுடனே அவளின் முகத்தில் பெரிய புன்னகை பூத்தது. "ம்ம், சொல்லுமா", என பேச துடங்கினாள். பத்து நிமிடம் கழித்து அலைபேசியை கிழே வைத்துவிட்டு புறப்பட தொடங்கினாள். ஒரே ஊதுகுழலினால் சப்தம் செய்தது ஹேமா அழைத்திருந்த வாடகை மோட்டார் வண்டி. உடனே தன் கைப்பையை எடுத்து கொண்டு வீட்டை புட்டி சென்றாள் அவள்.


வண்டியில் அமர்ந்தவாறு பழைய நினைவுகளில் மிதக்க துடங்கினாள். சில வருடங்களுக்கு முன் ஹேமா, அவளின் கணவர் பாலு மகள் அபிநயா மூவரும் ஹேமா கிளப்பிய வீட்டில் சந்தோஷமா வாழ்தனர். அப்போது அபிநயா கல்லூரியில் படித்துவந்தாள். பாலு ஒரு வங்கி மேலாளர். கணவன், மகள் இவர்கள் இருவர்தான் ஹேமாவின் உலகம். அபிநயா கல்லூரியில் நன்கு பயிலும் மாணவி, எப்போதும் அனைத்து தேர்விலும் முதல் மதிப்பெண் எடுப்பவள். பட்ட படிப்பு முடித்தவுடனே அபிக்கு கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் முடிந்தவுடனே அபியும் அவள் கணவனும் பெங்களூரு கூடிப்பெயர்ந்தநர். 


பெரிய குடும்பத்தில் மருமகளாக சென்ற அபி தன் கணவனின் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு தனக்கு கிடைத்த தொழிநுட்ப துறை பணியையும் சிறப்பாக சமாளித்து வந்தாள். வருடங்கள் ஓடின அவளுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் தன் வாழ்வில் வந்தபின் பணியை துறந்தாள். ஹேமாவுக்கு இன்றும் நினைவில் உள்ளது பாலுவும் அபியும் அதை பற்றி சண்டை போடதுபற்றி."அப்பா , நீங்கள் கூறுவது தவறு என்னால் வீட்டையும், அலுவலக பணியையும் , குழந்தைகளையும் ஒரே சமயத்தில் பார்த்துக்கொள்ள முடியாது , நான் என் பணியை ராஜினாமா செய்யப்போகிறேன்", என்ற பலத்த குரல் இன்னும் ஹேமாவின் காதில் ஒலித்து கொண்டே உள்ளது. "சரி , மாப்பிள்ளை உங்கள் முடிவும் அதுவே தான் என நான் நினைக்கிறேன், இப்போ நாங்க என்ன செய்றது, உங்களுக்கு எது சரியோ அதையே செய்யுங்கள்" என்ற பாலுவின் பதிலும் நினைவுள்ளது.


"அபி, நீ ஒரு போதும் என்னை போல இருக்க வேண்டாம், வேண்டும் என்றால் ஒரு சில வருடங்களுக்கு பின் நீ வேலைக்கு போ அப்போதுதான் அது உன்னக்கு நல்லது", என்ற தன்னுடை அறிவுரையும் நினைவுக்கு வந்தது.


இன்று.. மழை சற்று குறைய துடங்கியது, இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும், சரி நம் பழைய நினைவில் மீண்டும் செல்லலாம் என எண்ணினால்.


அபியின் குழந்தைகள் இருவரும் சற்று வளர்ந்த பின் ஒரு நாள் அபி தன் தந்தைக்கு அலைபேசியில் ஒரு செய்தியை சொன்னால். "அப்பா , அம்மாவை கூப்பிடுங்கள், அம்மா ,அப்பா, உங்கள் இருவருக்கும் ஒரு நற்செய்தி. நான் ஒரு செயலியை செய்தேன் அதை ஒரு தொழிஅதிபருக்கு காண்பித்தேன் ஒரு போட்டியில் அதில் நான் வெற்றி பெற்றேன். அத்துடன் அவர்கள் என்னக்கு அந்த செயலியை இன்னும் விரிவுபடுத்த உதவப்போகிறார்கள், நானும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டேன். இனி நான் திரும்பவும் பண்ணிக்கு செல்ல போகிறேன் ஆனால் இம்முறை என் சொந்த நிறுவனத்திற்கு." என்றால். அவ்வளவுதான் பாலுவும் ஹேமாவும் இன்ப வெள்ளத்தில் திகைத்து போனார்கள். "ஆஹ்ஹா, இது தான் எங்களுக்கு மகிழ்ச்சி, ஒரு பெண்ணுக்கு குடும்பம் எவ்வளவு முக்கியமோ அது போல அவளின் கல்வி,கல்விக்கேற்ற உத்தியோகமும் மிக முக்கியம் இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில். அதனால் தான் அபியின் பெற்றோர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


அன்று முதல் தன் இரு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைத்தாள் அபி, ஒரு சிறந்த அன்னை மட்டுமல்ல ஒரு சிறந்த ஆசிரியை அவளின் பிள்ளைகளுக்கு. கணவனையும் அனுசரித்து அவரின் மனம் அறிந்து செயல்பட்டால் ஒரு அன்பு மனைவியாக. எப்போது எல்லாம் அபியின் கணவருக்கு ஆலோசனை தேவைப்பட்டதோ அப்போது அபி அவரின் அன்பு தோழியும் தான். அவளின் மாமனார், மாமியாருக்கு அவள் ஒரு செல்ல மகள், தினமும் அவர்களை முன்பு போல அன்பாகவே கவனித்து வந்தால். காலையிலும் மாலையிலும் அவர்களுடன் இருப்பதை கவனமாக மேற்கொள்ளுவாள்.


ஒரு நாலும் தவறாமல் தன் அப்பா,அம்மாக்கு தினமும் அலைபேசியில் பார்த்து பேசுவாள். தன் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் தன் மொத்த குடும்பத்தையும் மனதில் எண்ணியே முடிவெடுப்பால். தன் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி என்ற பொதும் தன் கீழ் பணிபுரியும் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவர் போல நடத்துபவள். ஒரு சிறந்த பெண் பலருக்கும் ஒரு முன்மாதிரியான பெண் அபி.இப்படி எத்தனை பொறுப்புகள் அவளுக்கு, ஆனாலும் இன்னும் அவள் என்னுடைய செல்ல குழந்தை அன்பு மகள்தான். அவளை பார்த்து நான் வியப்படையாத நாள் ஒன்று கூட இல்லை என்ற வண்ணம் எண்ணிக்கொண்டே இருந்தால் ஹேமா.


"அம்மா, நாம் பெங்களூரு வந்து விட்டோம் இன்னும் அரை மணி நேரத்தில் அபி அக்கா வீட்டை அடைத்துவிடுவோம், நீங்கள் பாலு ஐயாவிற்கு தகவலை சொல்லுங்கள்" என்றார் ஓட்டுநர். ஹேமா இந்த செய்தியை அலைபேசியில் தன் கணவர் பாலுவிற்கு கூறினாள். 


வீடு வந்தது, "பாட்டி , வந்துட்டாங்க , தாத்தா வாங்க , நம்ம நாலு பெரும் போகலாம் மண்டபத்திற்கு, சீக்கிரம் வாங்க", என்றான் குகன் அபியின் மூத்தமகன். "அண்ணா, வண்டி எண்டுகோ, நாம் எல்லோரும் போகணும் மண்டபத்திற்கு இன்னைக்கு எங்கள் அம்மாவிற்கு விருது கூடுக்கிறங்க இந்த ஆண்டின் சிறந்த பெண் தொழிலதிபர் என்ற விருது அது", என பெருமையுடன் கூறினாள் கவிதா, அபியின் மகள்.

இப்படி அன்னவரிடமும் அன்பு பெற்ற அபி தன் வாழ்நாளில் இன்னும் செய்ய நிறைய பணிகள் உள்ளன, இன்னும் பல பொறுப்பு தொப்பிகளை அணிய வேண்டியிருக்கும் என எண்ணியபடியே வண்டியில் பயணித்தாள் ஹேமா.

 



Rate this content
Log in

Similar tamil story from Classics