Shakthi Shri K B

Abstract Drama Classics

3.5  

Shakthi Shri K B

Abstract Drama Classics

ஒரு நாள் வானவில்

ஒரு நாள் வானவில்

2 mins
280


எப்போதும் வனிதாவிற்கும் அவள் அக்காவுக்கும் ஒரே சண்டை தான். அவர்கள் இருவரையும் சமாதானம் செய்வதே அவர்களின் அம்மா அமுதாவின் ஒரு பெரிய வேலை.

வசந்தி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறாள். வனிதா இரண்டாம் வருடம் கல்லுரி படிப்பை பயில்கிறாள். அக்காவும் தங்கையும் வானவிலின் ஏழு வண்ணங்கள் போல இருப்பார்கள். ஆனால் இருவரும் ஒரே இடத்தில் இருந்தாலும் அவர்கள் எண்ணங்கள் வேறு, விருப்பங்கள் வேறு.

இவர்கள் இருவரையும் சிறு வயது முதல் அவர்கள் அம்மா அன்பாக வளர்த்துவந்தால். எனினும் இருவரும் எப்போதும் சண்டை போடு கொண்டே இருப்பார்கள். 

வசந்தி சிந்தையில் நீல நிறம் போன்றவள். எப்போதும் ஒரே போல அனைவரிடம் அன்பு காட்டுவாள்.வேலையும் படு சுட்டி. எப்போதும் அக்காவும் தங்கையும் யார் அம்மாவின் அதிக அன்பை பெறுவது என்பதில் போட்டி போட்டுக்கொண்டே இருப்பார்கள்.


வனிதாவின் கோவம் சிகப்பு நிறம் போன்றது. எப்போது கோவம் அடைத்தாள் அங்கு இருக்கும் அன்னைவரையும் தன் வார்த்தைகளால் பந்தாடுவாள். இப்படி நாட்கள் சென்றுகொண்டே இருந்தது.

வசந்தி, வனிதாவின் அப்பா ஒரு நாள் அமுதாவிடம், " அமுதா, நம் மூத்தமகள் வசந்திக்கு திருமண வயது வந்துவிட்டது . என் நண்பரின் மகன் குமாருக்கும் நம் வசந்திக்கு திருமண நிச்சயம் செய்யலாம் என நானும் என் நண்பன் பிரபுவும் முடிவெடுத் துல்லோம், நீ என்ன கூறுகிறாய்". உங்கள் முடிவு நல்ல முடிவு. எதுக்கும் நம் வசந்தியை கேட்கலாம் என்றாள்.

வசந்தியும் சம்மதம் கூறினாள். அப்போது வீட்டிற்கு வந்த வனிதாவுக்கு இது பெரும் அதிர்ச்சி. அவள் மனதில் ஒரே குழப்பம். இப்போ அக்காவிற்கு திருமணம் முடிந்தால் அவள் வேறு வீட்டிற்கு சென்றுவிடுவாள். நம்முடன் யார் சண்டை போடுவார், யார் நம்முடன் இந்த அறையில் இருப்பார், என ஓராயிரம் கேள்விகள் ஓட. ஒரே கருப்பு நிறம் போல ஆனது அவளின் எண்ணம். அதில் வெளிச்சம் கொண்டுவர வானவில் ஒன்று இல்லை.

சற்றே மௌனம் காத்தால், வனிதாவின் இந்த அமைதியை கண்டு அவள் அம்மா,"மகளே,வனிதா, என்ன, இன்று ஒரே மௌனமகா இருக்கிறாய், வீடே வெள்ளை நிற அமைதி பூங்கா போல இருக்கிறது என்றார்".

ஒன்றும் இல்லை அம்மா என்று பதில் கூறினாள் வனிதா.


ஒரு வாரம் ஆனது இன்று வசந்தியின் நிச்சயதார்த்தம் நாள். இந்த ஒரு வாரத்தில் வனிதாவும் வசந்தியும் ஒருவரிடம் ஒருவர் பேசவேயில்லை. அன்று நிச்சயம் நாள் மட்டும் அல்ல ஹோலி பண்டிகை கூடத்தான்.

வசந்தியின் நிச்சயம் சிறப்பாக முடித்தது. உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரம் வந்து வாழ்த்து சொல்லி சென்றனர். அன்று இரவு கார்மேகம் வானில் சுழல மேகம் கருமையாக மிக அழகாக தோன்றியது. அப்போது வசந்தி தன் தங்கை வனிதாவை பார்த்து," வனிதா, நீ ஏன் என்னுடன் பேசாமல் இருக்கிறாய், நீ என்னுடன் பேசினால் தான் என்னக்கு பிடிக்கும் இப்படி நீ இருந்தால் என் மனம் மிகவும் வருந்துகிறது", என்றாள்.


அப்போது தான் வனிதாவுக்கு தன் அக்கா அவள் மீது வைத்திருந்த அன்பு புரிந்தது. ஓருநிமிடம் தாமதிக்காமல் , "அக்கா உன்னை எனக்கும் பிடிக்கும் ஆனால் அம்மா உன்னை தான் அதிக அன்பாக பாத்துகிறார் என்று எண்ணி உன் மீது என்னக்கு சிறிய வருத்தம் அவ்வளவு தான்", என்றாள். உடனே இரு சகோதரிகளும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். அந்த ஹோலி பண்டிகை முதல் அவர்கள் இருவரும் பல வண்ண வானவில் போல இருந்தாலும் ஒரு வானவில் போல வாழ தொடங்கினர். வாழ்க்கை ஹோலி பண்டிகை போல வண்ணமயமாக மாறியது அந்த இரு சகோதரிகளுக்கு.



Rate this content
Log in

Similar tamil story from Abstract