Shakthi Shri K B

Children Stories Drama Fantasy

5  

Shakthi Shri K B

Children Stories Drama Fantasy

சிறந்த படம்

சிறந்த படம்

2 mins
485


அன்று மிகுந்த குளிர் காற்று வீசிக்கொண்டே இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை நேரம் ராமு மற்றும் சோமு இருவருமே தங்கள் வீட்டின் வாசலில் இருந்து அவர்களின் தந்தைக்காக காத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் அம்மா ," பசங்களா உள்ளே வாருங்கள் இருவரும் பாலை பருகுவீர்" என்றார்.

"அம்மா, நாங்கள் வருகிறோம். ஆனால் அப்பா எப்போது வீடு திரும்புவார் இன்று?" என்று அவர்களின் அம்மாவை வின்னாவினர் சகோதரர்கள். "ம்ம், வருவார் இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவார்" என்றாள் சுதா.

சுதாவிற்கு தன் இரண்டு மகன்கள் மேல் அளவுக்கு மிஞ்சிய பாசம் உண்டு. இருவரையும் நான்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எப்போதும் உண்டு. தன் குடும்பமே அவளின் உலகம். அவளின் கணவர் கோபி தன் மனைவி சுதா மாற்றும் பிள்ளைகள் ராமு சோமு இவர்கள் மீது அளவில்லா அன்பை வைத்துள்ளார்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அன்று இரவு தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்படும் திரைப்படத்தை காண ஆவலுடன் இருந்தனர் ராமுவும் சோமுவும். அவர்கள் அப்பா வரும் வரை வாசலிலே இருப்பதும் அவர்களின் வழக்கம்.

கடும் குளிர் என்பதால் அவர்கள் வீட்டின் தொலைக்காட்சி பெட்டியின் சமிக்ஞை சரியாக இல்லை. அதனால் இவர்கள் எப்படி திரைப்படம் பார்க்க போகிறார்கள் என்ற கவலை சுதாவின் மனதில் ஒரு புறம் ஓட இன்னொரு புறம் தன் கணவன் இன்னும் வீடு திரும்பாதது மறு புறம் ஒரு கவலையாக இருந்தது.

நேரம் மெல்ல நரகந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தான் அந்த புதிய திரைப்படம் தொலைக்காட்சியில் திரையிட போகிறார்கள். ஆனால் அப்பா இன்னும் வீடு வரவில்லை. அனைவரின் முகத்த்தில் ஒரு வித பயம் மற்றும் கவலை எழுந்தது.

இருவரும் குளிர் காரணமாக வீட்டின் உள்ளே வந்து கதவை மூடினர். சற்று நேரம் கழிந்தது, வீடே நிசப்த்தமாக இருந்தது. திடீர் என்ன வீட்டின் அழைப்பு மணி அதன் ஓசை வந்தது. விறு விறுவேனே ஓடி வந்து சகோதரர்கள் இருவருமே கதவை திறந்தனர். வந்தது அவர்களின் தந்தை கோபி. மகிழ்ச்சியில் குடும்பமே ஒன்று கூடியது.

அப்பா வந்தபின் அந்த தொலைக்காட்சி பெட்டியை சோமு இயக்கினான் ஆனால் அது ஒரு நிகழ்ச்சியையும் ஒளி பரப்பவில்லை. கரணம் அன்று இருந்து கடும் குளிர். சற்று நேரம் கழித்து குளிரும் குறைந்தது அதே சமயம் தொலைக்காட்சியில் படமும் வந்தது. அளவற்ற மகிழ்ச்சி இரு சகோதரகள் முகத்தில். அப்போது அவர்களின் அம்மா சுதா கூறினாள், "இது என்ன ஆச்சரியம், சற்று நேரத்திற்கு முன் நம் வீட்டில் நிகழ்ந்ததே அது தானே சிறந்த படம். அப்பாவின் வருகைக்கு காத்து இருந்த பிள்ளைகள், அவர்களின் சகோதர பாசம், மற்றும் அன்னை ஆனா என்னுடை மனமும் அதன் கவலைகளும். இவற்றை மிஞ்சுமா உங்களின் இந்த திரைப்படம்?" என்ற கேள்வியை கேட்டாள். 

அப்பா மகன்கள் மூவருமே சிரித்து கூறினார்,"நீ, இப்போது பேசியதே சிறந்த வசனம். ஆமாம் ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் ஒரு மிக அழகிய உருக்கமான படம் போன்ற அனுபவம் உள்ளது அதை உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்", என்றனர். இதை கேட்ட சுதாவிற்கு ஆனந்தம் முகத்தில் துள்ளி குதித்தது.



Rate this content
Log in