Shakthi Shri K B

Abstract Drama Classics

5  

Shakthi Shri K B

Abstract Drama Classics

பொக்கிஷ புத்தகம்

பொக்கிஷ புத்தகம்

3 mins
458


"அனிதா, எதை இப்படி தேடிக்கொண்டிருக்கிறாய்?", என்ற அம்மாவின் குரல் கேட்டது. அனிதா பதில் கூற தொடங்கினாள். அம்மா நான் என்னது பழைய பொக்கிஷம் ஒன்றை இங்கே விட்டு சென்றேன், இப்போது அதை தான் தேடுகிறேன் என்றாள். 

அனிதாவின் அப்பா பாலு கடைக்கு சென்று திரும்பி இருந்தார். "அனிதா, என்னமா நீ ஐந்து வருடங்களுக்கு பின் இப்போது தான் இந்தியா வந்திருக்கிறாய். சற்று ஓய்வு எடுத்துக்கொள், மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளாம்." என்றார். என்னதான் மனம் அந்த பொக்கிஷத்தை தேட எண்ணினாலும் அப்பா சொன்ன சொல்லுக்காக அறையை விட்டு வந்தாள். அம்மா செய்து வைத்திருந்த உணவை உண்டு உறங்க சென்றாள் அனிதா.

மறுநாள் காலை பொழுது அவள் அம்மா செய்து கொண்டிருக்கும் பொங்கல்,சாம்பார் வாசனை அனிதாவை சமையல் அறைக்கு இழுத்தது. "அம்மா, உன் கை வண்ணம் கை வண்ணமே, என்ன ஒரு சுவை நீ செய்யும் சாம்பாருக்கு. ஐந்து வருடங்கள் காத்திருந்தேன் இதை உண்ண", என்றாள் அனிதா. " சரி சரி, நீ தயாராகி வா நாம் அனைவரும் ஒன்றாக காலை உணவை உண்ணலாம். திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் ஆஸ்திரேலியா சென்றாய், வேலை திருமண வாழ்க்கை என பல பொறுப்புகளை சுமந்து இப்போது தான் வந்துள்ளாய் எங்களை காண." என்றார் அனிதாவின் அம்மா.

காலை உண்ணவுக்கு பின் தன் கணவன் குமார் அலைபேசியில் காணொலி வாயிலாக கண்டு பேசியபடி அமர்த்தாள் ஊஞ்சலில். கணவனுடன் பேசி முடிந்தபின் பழ சாறை அவள் அம்மா கொண்டுவந்து கொடுத்தார் அதை வாங்கி கையில் வைத்தபடியே தனது சிறு வயது நினைவுகளை எண்ணி பார்க்க தொடங்கினாள்அனிதா.

சிறு வயது முதலே ஒரு பேராசிரியர் ஆகவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு உண்டு. காரணம் அவள் தந்தை பாலு ஒரு பேராசிரியர் தான். அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவள் வீட்டில் அவள் பாட்டி, அம்மா,அப்பா என்ற உறவுகள் மட்டுமே நிரந்திரமாக இருந்தனர். மற்ற உறவினர்கள் எல்லாம் எப்போது ஒரு முறை தான் வருவார்கள். அந்த இளம் வயதில் அவள் பாட்டி தான் அவளின் உலகம். பல வித ஜடை அலங்காரம் செய்து அவளை அன்போடு தினமும் வளர்த்தது அவள் பாட்டி. வருடங்கள் பல சென்றதால் இன்று அவள் பாட்டி அவர்களின் நினைவில் மட்டுமே உள்ளார். அவரின் நினைவில் இருந்த அனிதாவை அவள் அம்மா ,"ஏய் , அனிதா, இன்னுமா பழ சாராய் அருந்தவில்லை. முதலில் அதை பருக, உன்னக்காக இல்லாவிட்டாலும் உன் வயிற்றில் வளரும் பிள்ளைக்காக. முதல் மூன்று மாதங்களில் குழந்தையின் வளரச்சிக்கு நிறைய சத்து தேவை."

அனிதாவும் மட மடவென பருகிவிட்டு அவள் பாட்டியின் அறைக்கு சென்றாள். "அனிதா, இப்போது ஏன் பாட்டியின் அறைக்கு செல்கிறாய், நேற்றும் இப்படி தானே செய்தாய், அப்பா வருவதற்கு முன் சற்று ஓய்வு எடுத்துக்கொள்," என்றார். அம்மா நான் இன்னும் அந்த பொக்கிஷத்தை தேட வேண்டும் சற்று நேரத்தில் வருகிறேன் என்று கூரிய வாரு அறைக்குள் சென்றாள்.

இரண்டு மணி நேரம் தேடிக்கொண்டே இருந்தாள் ஆனால் பயனில்லை. அவள் அப்பா பாலு வந்தார், "என்னமா அனிதா எதை தேடுகிறாய்?" என கேட்டார். பதில் கூறாமல் மிக கவனமாக தேடிக்கொண்டே இருந்தாள் அவள். "அன்பு மகளே ,அனிதா, நீ தேடுவது இந்த புத்தகம் தானே என் கூறி ஒரு புத்தகத்தை காண்பித்தார்." அவ்வளவு மகிழ்ச்சி அனிதாவின் முகத்தில் தோன்றியது.

"அப்பா இதை தான் நான் தேடிக்கொண்டே இருந்தேன், இந்த புத்தகம் எப்படி உங்களிடம் வந்தது ?" என கேட்டாள். அனிதாவின் அப்பா பேசினார், "மகளே , நீ நேற்று தேடிக்கொண்டிருந்த பொது கவனித்தேன் உன் பாட்டியின் புகைப்படத்தை நீ பார்த்துக்கொண்டே தான் தேடினாய். அப்படி என்றாள் உனக்கும் என் அம்மாவுக்கும் தொடர்புடைய ஒரு பொருளை தான் நீ தேடுகிறாய் என்பது புரிந்தது. என் நினைவுக்கு வந்தது இந்த புகைப்பட புத்தகம். உன்னை சிறு வயதில் அவர் பல விதமாக அலங்காரம் செய்வார் நான் அதை படம் எடுத்து இந்த புகைப்பட புத்தகம் செய்தேன். ஒவ்வொரு பாகங்களில் அந்த அலங்காரமும் அதை செய்ய உன் அம்மாவும், பாட்டியும் மேற்கொண்ட மெனக்கெடல் அனைத்தையும் விரிவித்து எழுதி இருப்பேன். நீ பெரியவளாகி மேற் படிப்பிற்கும் அல்லது திருமணத்திற்கு பின் வேறு வீட்டுக்கு சென்ற பின் உன் நினைவுகளில் என் மனதை அற்ற, இந்த புத்தகத்தை நான் எழுதினேன்" என்றார்.

ஆமாம் அப்பா, இப்போது நான் ஒரு தாயக போகும் தருணத்தில் தான் உணர்தேன் இந்த வேகமான உலகில் என் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டேன். இப்போது என் சிறு வயது புகைப்படங்களை பார்த்து என் மகிழ்ச்சியை திரும்ப கொண்டுவந்தால் கருவில் இருக்கும் என் பிள்ளையும் மிக மகிழ்ச்சியாக பிறக்கும், அத்துடன் நானும் என் பிள்ளையை நீங்களும் அம்மாவும் பாட்டியும் என்னை பார்த்து வளர்த்தது போல என் பிள்ளையையும் வளர்க்க போகிறேன்" என்றாள் அனிதா.

"மிக்க மகிழ்ச்சி, உன் பொக்கிஷ புத்தகம் கிடைத்து விட்டதா, சரி, இருவரும் வாருங்கள் மதிய உணவை உண்ணலாம்" என்றார் அனிதாவின் அம்மா. மகிழ்ச்சியில் அனிதாவின் முகமும் மனமும் மலரந்தது.



Rate this content
Log in

Similar tamil story from Abstract