Shakthi Shri K B

Drama Classics Inspirational

5  

Shakthi Shri K B

Drama Classics Inspirational

வசந்த கால வாழ்க்கை

வசந்த கால வாழ்க்கை

3 mins
450


என் வாழ்வின் மிக முக்கியமான நாள். அதிகாலை துயில் எழுந்து என்னக்கு மிகவும் பிடித்த தேநீர் பருகியவாரே மாடி படி எரி சென்றக் கொண்டே இருந்தேன். அப்போது வித்யா என்னை பார்த்து "தீபன், நீ ஏன் மாடிக்கு இப்போது போகிராய், உன்னக்கு நேரம் என்ன என்று தெரியுமா. இன்னும் ஐந்து மணி நேரத்தில் உன்னக்கு விமான பயணம் உள்ளது ",என்றால்.


அதை கேட்டவுடன் என்னக்கு பல அயிரம் சிந்தனைகள் மனதில் தோன்ற தொடங்கியது. சரி என் செய்வது இப்போது கிளம்பினால் தான் என் பயணம் சீராக இருக்கும்.


உடனே என் மனைவி வித்யா செய்திருந்த காலை உணவை உண்டு, புறப்பட காத்திருந்தேன். 

என் பிள்ளைகள் கவிதா அவளின் கணவர் பாலா மற்றும் என் மகன் கதிர், மருமகள் சீதா என என் குடும்ப உறவுகள் அனைவரு‌ம் வந்திருந்தனர்.


என் மொத்த குடும்பத்தை கண்ட பின் என் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. நானும் என் குடும்பத்தினரும் விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.


நானும் என் பயணத்திற்கு தயார், இன்னும் சில நிமிடங்களில் விமானம் வானில் பறக்க போகிறது. எனது அருகில் இருந்த நபர்," ஐயா நீங்கள் அந்த சிறந்த கணித மேதை என்று பட்டம் வாங்கிய திரு. தீபன் அவர்கள் தானே", என்ற கேட்டார். நானும், "ஆம், அது நான் தான் ", என் கூறினேன். என் மனைவி வித்யாவிற்கு எவ்வளவு மகிழ்ச்சி, பெருமை, அது அவளின் முகத்தில் தெரிகிறது. என்னை யாராவது அடையாளம் கண்டால் அவள் மனம் மகிழ்ச்சியில் மின்னும்.


விமானம் விண்ணில் மிதக்க தொடங்கியது. நானும் என் பழைய நினைவுகளில் என்னை தேட தொடங்கினேன். 

ஆம் இந்தியாவில் பிறந்த, இங்கேயே தமிழ் நாட்டில் வளர்ந்தேன். எங்கள் ஊர் திருச்சிராப்பள்ளி மாவட்டதில் உள்ள ஒரு சிறிய ஊர். நானும் என் குடும்பமும் அங்கு மிக அன்பாக வாழ்ந்துக்கொண்டு இ இருந்தோம். தினமும் காலையில் என் அன்னை அவளின் அன்பு கலந்த கஞ்சி கொடுப்பாள், அதன் சுவை இன்றும் என் நாவில் சுவையை தூண்டுகிறது.


பள்ளிக்கூடம் சென்று நண்பர்களுடன் படிப்பது, விளையாடுவது போன்ற நல்ல நினைவுகள் இன்னும் என் நெஞ்சில் அப்படியே உள்ளது.


மாலை நேரத்தில் என் விட்டில் நண்பர்களுடன் விளையாட்டு மற்றும் போட்டிகள் மிக வேடிக்கையாக இருக்கும். அப்படி சென்ற எனது வாழ்வில் வந்த இடி என் தந்தையின் மரணம்.


குடும்பத்தின் மூத்த பிள்ளை என்ற காரணத்தால் அனைத்து பாரம் விழுந்தது என் தலையில்.

சிறு வயது mudhal என்னக்கு தெரிந்தது என் ஊர், ஊர் மக்கள், என் நாடு மற்றும் என் நாட்டில் வாழும் மக்கள். அதுவும் என் தந்தை தான் பல முறை நம் நாட்டின் பெருமைகளை மற்றும் அருமை இவை அனைத்தையும் என்னக்கு எடுத்துரைத்தவர்.

 சிறு வயது முதல் என் தந்தையின் சொல் படி, நான் பிறந்த நாட்பிற்கு புகழை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வைத்திருந்தேன்.


அன்று என் தந்தை இயற்கை அடைந்தார் என்ற செய்தி ஒரு புறம, மறு புறம் என் குடும்பத்தை எப்படி மேலே கொண்டு செல்வது. ஒன்றுமே புரியாமல் இருந்தேன்.


அப்போது என் உறவினர் ஒருவரின் ஆலோசனை படி நானும் பள்ளிக்கூடம் படிப்பு முடிந்த பின் வெளிநாட்டில் வேலை பார்க்க வந்தேன். இங்கு வந்த பின்தான் என்னது நாட்டின் பெருமைகளை உணர்ந்தேன்.


இங்கு என்னக்கு சமைத்து கொடுக்க என் அன்பு அம்மா அருகில் இல்லை. என் நண்பர்கள் யாருமே இங்கு இல்லை, என் கவலைகளை கேட்க செவிகள் இங்கு இல்லை. அது மட்டுமா என் நாட்டில் என்னக்கு இருந்த பல சுதந்திரம் இங்கு என்னக்கு கிடைக்காது. 

உண்ணும் உணவு, பருகும் நீர், உடன் இருக்கும் நபர்கள் என அனைவருமே இங்கு வேறாக இருந்தனர். என்றும் என் மனம் என் நாட்டை பற்றியும் என் அழகிய ஊர் பற்றியும் எண்ணுவது தான் அதிகம்.


என்ன தான் முப்பது வருடங்கள் அனாலும், என்னக்கு இ‌ங்கே ஒரு அழகிய குடும்பம் இருந்தாலும், என் மனம் தினமும் எண்ணுவது என் நாட்டின் நான் வாழ்ந்த நினைவுகளை.


விமானம் தரை தொட்ட நொடி என் மனதில் அயிரம் மகிழ்ச்சி எண்ணங்கள். இந்த நாட்டை விட்டு வேலைக்காக ஆஸ்ட்ரேலியா அயல் நாடு செல்லும் போது என்னிடம் இருந்தது என் தாய் நாட்டின் பெயர் பதித்த பயண சீட்டு mattrum கடவுச்சீட்டு.


ஆனால் இன்று என் அயராத உழைப்பால் ஒரு பெரிய கணித மேதை என்ற பட்டம் வென்று என் சொந்த நாட்டிக்கு பெருமை சேர்த்து திரும்ப வந்துள்ளேன் இங்கே என் மனைவி வித்யாவுடன் எங்கள் கடைசி காலம் வசந்த கால வாழ்க்கையை வாழ. 

இங்கு பிறந்து, இங்கு வளர்ந்து, வேறு எங்கோ சென்று வாழ்வில் முன்னேறுவது என்பது ஒரு பெரிய சவால். ஆனால் அதில் வென்று மீண்டும் ஒரு இடத்திற்கு சென்று நிம்மதியாக வாழ எண்ணினால் அது நிச்சயமாக எனது நாடு, என் தாய் நாடாக தான் இருக்கும். வாழும் பூமி சொர்க்கம் என்றால் அது நிச்சயமாக தன் சொந்த ஊராக தான் இருக்கும், இப்படி எண்ணியபடி தீபன் தன் மனைவி வித்யாவுடன் தன் சொந்த ஊருக்கு வாடக ஊர்தி‌யி‌ல் பயணித்தான்.


 


Rate this content
Log in

Similar tamil story from Drama