Shakthi Shri K B

Abstract Drama Classics

4  

Shakthi Shri K B

Abstract Drama Classics

ஒரு உயர்ந்த உறவு

ஒரு உயர்ந்த உறவு

2 mins
346


"அவள் என்றுமே என் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறாள். என்ன என் மனம் எதையோ யோசிக்கிறது. " என்று கூறியவாரு வந்தாள் ஹேமலதா. 

என்ன எதையோ யோசிக்கீராய் போல என்று அவளின் கணவர் சுந்தரம் கேட்டார்.

ஒன்றும் இல்லை என் சிறுவயது தோழி வாணி என் நினைவில் அடிக்கடி வருகிறாள். அது தான் என்னக்கு ஒன்றும் புரியவில்லை. மனமும் படபடவென துடிக்கிறது.

என்ன செய்வது என்று புரியவில்லை, என்றால் ஹேமலதா.

அவள் கணவர் சுந்தரம், " விடு ஹேமலதா, இப்போது நமக்கு நிறைய வேலை உள்ளது. வா, சீக்கரம் மாப்பிள்ளை வீட்டார் வர போகிறார்கள். " என்றார்.

இதோ வருகிறேன் என்ற சொல்லிக் கொண்டே சென்றால்.

மணி 10, இன்னும் அரைமணி நேரத்தில் நல்ல சுப முகூர்த்தம் பிறக்க போகுது, எல்லோரும் வேலைகளை விரைந்து செய்யுங்கள், என்றார் ஹேமலதாவின் மாமனார். 

அந்த ஒரு நொடி அனைவரு‌ம் விரைந்து செயல் பட தொடங்கினர்.

அருண், வருண் இருவரும் தங்கள் அக்கா அருணா தயாரா என்ற கேட்டு கொண்டே வந்தார்கள். இணை பிரியா இரட்டை சகோதார்கள்.இந்த இரட்டை சகோதார்கள் முன் பிறந்த அன்பு மகள் அருணா அவளை தான் அன்று பெண் பார்க்க வருகிறார்கள். ஹேமலதாவிற்கு முப்பது வருடங்களுக்கு முன் நடைபெற்ற பெண் பார்க்கும் நிகழ்வு நினைவுக்கு வந்தது. அன்று தான் ஹேமலதாவும் அவள் தோழி வாணியும் ஒன்றாக பேசியது. அந்த பெண் பார்க்கும் naal அவர்களின் இருவது இணை பிரியா நட்பை பிரித்த நாள். திருமணம் முடிந்தவுடனே ஹேமலதா அவளின் மாமனார் மாமியார்வுடன் மதுரைக்கு வந்துவிட்டாள் , அவள் கணவர் சுந்தரம் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

நட்பை பிரிந்து தன் கவலையை பகிர கூட யாரும் இல்லாத நாட்கள் அவை. அப்போது எல்லா வேலைகளையும் முடிந்துவிட்டது, தன் பழைய நினைவுகளில் இருபால் ஹேமலதா.

சிறு வயதில் ஹேமலதா, வாணி அவர்கள் இருவரும் சுட்டி தானமாக விளையாடுவது, ஒன்றாக கோவிலுக்கு காலையில் செல்வது, பள்ளி கூடம் செல்வது, அங்கு அங்காடியில் 10 பைசா ஏலாந்த வடை வாங்கி சாப்பிடுவது , என பல பசுமையான நினைவுகள் ஹேமலதா மனதில் இருக்கும். ஐந்து வருடங்கள் முடிந்த பின் சுந்தரம் சிங்கப்பூரில் இருந்து வந்தார். அவர் சொல்லி தான் ஹேமலதாவிற்கு தெரிந்தது வாணிக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்து விட்டது என்று.

ஒரு வருடம் கழித்து ஹேமலதாவிற்கும் சுந்தரத்திறகு பிறந்த குழந்தை அருணா. இன்று அவளுக்கு தான் பெண் பார்க்கும் நாள். தன் மனதின் எண்ணங்கள் அனைத்தையும் ஒரு புன்னகையில் அடக்கி அவள் மாமனார் சொன்னாதை எண்ணி விரைந்து அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பூ பழங்கள் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். 10:30 மணி ஆனது, விரைந்து நான்கு பெரிய ஊர்தியில்  வந்தனர் மாப்பிள்ளை வீட்டார். அனைவரையும் அன்புடன் வரவேற்று வந்தார்கள் ஹேமலதாவின் குடும்பம்.

வந்த மாப்பிள்ளை வீட்டாரில் ஒருவர் மட்டும் ஹேமலதா அருகில் வந்து, "நீங்கள், நீ, ஹேமலதா தானே? என்னை நினைவில் வைத்திருக்கிறாய என்று கேட்டார்." நீங்கள் வாணி தானே என்றால் ஹேமலதா. இரு தோழிகளும் கண்ணில் ஆனந்த கண்ணீர்வுடன் அனைத்து கொண்டனர். இதை பார்த்து அனைவரு‌ம் வியந்தார். மாப்பிள்ளையும் மணமகளும் சிறுது நேரம் தான் பேசி கொண்டார்கள் ஆனால் அவர்கள் இருவரின் அம்மாக்கள் பல மணி நேரம் பேசி கொண்டார்கள். அன்று ஒரு பெண் பார்க்கும் தருணம் பிரித்தது இரு இன்று அவர்கள் பிள்ளைகளின் பெண் பார்க்கும் நாளில் மீண்டும் இணைந்தனர். அவர்கள் இரு பிள்ளைகளும் இந்த திருமணம் வேண்டாம் என்ற போதும். இரு குடும்பமும் அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து இருந்தனர். தங்கள் பிள்ளைகள் திருமண உறவில் இணையவில்லை என்ற போதும் மீண்டும் இணைந்த தோழிகள் தங்கள் நட்பை வாழ்வின் இறுதிவரை தொடர்ந்தனர். சொந்தம் என்ற உறவு இல்லை என்ற போதும் அவர்களின் நட்பு என்னும் உயரிய உறவு ஆண்டுகள் கடைந்து இருக்கும். நட்பு என்றுமே சிறந்தது, உயர்ந்தது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract