Shakthi Shri K B

Children Stories Drama Classics

3.4  

Shakthi Shri K B

Children Stories Drama Classics

கோடை கால மாற்றம்

கோடை கால மாற்றம்

2 mins
352


"கிருஷ்ணா, கண்ணன், இருவருமே எங்கே உள்ளிர், "என கேட்டு கொண்டே  அடுப்படியில் இருந்து வாசலுக்கு வந்தாள் லீலா. "அம்மா, நாங்கள் இருவருமே இங்கே தானே விளையாடி கொண்டே இருக்கிறோம்," என்றனர் சகோதரகர்கள்.

"சரி,சரி இருவருமே சிக்கிரம் வாருங்கல், நாம் அனைவரு‌ம் இன்று புறப்பட வேண்டும், விரைந்து செல்லுங்கள்." என்றபடியே விரைந்து சென்றாள் லீலா வீட்டிற்குள்.

லீலாவிற்கு மனதில் எண்ணற்ற மகிழ்ச்சி. ஆம், அவர்கள் இன்று பயணிப்பது அவளின் அம்மாவின் வீட்டிற்க்கு. வருடத்தில் ஒரு முறை மட்டுமே அவளின் அம்மாவை காண செல்ல முடியும். அதுவும் கோடை வெய்யில் காலத்தில் ம‌ட்டுமே.

பிள்ளைகளின் கோடை விடுமுறையில் குடும்பமாக அவர்கள் செல்லுவது லீலாவின் அம்மா வீடு. கிருஷ்ணா மற்றும் கண்ணனின் பாட்டி வீடு ஒரு அழகிய பழைமையான வீடு. அங்கு அன்பும் நிறைய சந்தோஷம் நிலைத்திருக்கும் எப்போதும். 

அந்த வீடு ஒரு உயர்ந்த பாரையின் மேல் அமைத்திருக்கும். வெயில் காலத்திலும் அங்கு விடிகாலையில் பறவையின் இனிமையான கீதம் கேட்கும். சூரியன் உதிக்கும் முன் அழகிய வானில் பணி விலகும் காட்சி அதை வெறும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. அப்படி ஒரு இடம். ஆம் லீலா வின் amma வீடு இருபது நிலகரி மலையில். 

லீலாவின் கணவர் மணி மேன்பொருள் நிபுணர் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு பின் சென்னை மாநகரில் வாழ்ந்து வந்தனர். வருடத்திற்கு ஒருமுறை நிலகரி செல்வது அவர்கள் வழக்கம். கோடை காலம் ம‌ட்டுமே அவர்கள் அங்கு செல்வர்.

வருடத்தில் எந்த காலம் வந்தாலும் ஒரு முறை ம‌ட்டுமே வரும் இந்த கோடை காலத்தை எதிர்பார்த்து வாழ்வது லீலாவின் சுபாவம்.

அன்றும் அப்படிதான் அவர்கள் அனைவரு‌ம் நிலகரி செல்ல தயாராக இருந்தனர். ஆனால், அன்று அவர்களுக்கு பேரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், கோடை காலத்தில், காலநிலை மாற்றத்தின் காரணமாக மிக பெரிய கனமழை நிலகரியில் இந்த ஆண்டு. அதன் விளைவு எண்ணி பார்க்கமுடியாத திடிரென்று நில சரிவு. இவை அனைத்தின் காரணமாக அங்கே செல்லும் அனைத்து வாகனங்களும் ரத்து செய்யப்பட்டது. 

இந்த செய்தி வந்ததும் லீலா மனம் அவளின் அம்மா அப்பாவை எண்ணியது. உடனே தன் அலைபேசியில் அவர்களை அழைத்து அவர்களின் நலனை கேட்டு அறிந்தாள். சற்று உயிர் வந்தது அவளுக்கு. என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டே இருந்தாள் லீலா. அவளின் கணவர் மணி, "லீலா வருந்தாதே, அத்தையும் மாமாவும் இப்போது அரசின் பாதுகாப்பு விடுதியில் பாதுகாப்பாக உள்ளனர். மழை நிறைவு பெற்றவுடன் அவர்கள் இருவரையும் நாம் இங்கு அழைத்து வரலாம், நீ கவலை இன்றி இருக்க வேண்டும்".என்றார்.

இதை கேட்ட லீலா சற்று ஆறுதல் பெற்றால். ஒரு வாரம் சென்றது. மழை நின்று இயல்பு நிலைக்கு திரும்பியது நிலகரி ஊர். லீலாவின் அம்மா அப்பா இருவரும் சென்னைக்கு வந்தனர். லீலா அவர்களை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியில் புன்னகைத்தாள்.

அவளின் அந்த புன்னகைக்கு எந்த காலமும் இடாகாது. கண்ணன், "அட, இந்த வருடம் கோடை கால விடுமுறையை பாட்டி வீட்டில் கொண்டாட முடியாமல் போனது," என்ற கூறினான். அதற்கு அவனின் தாத்தா, "ஏன் முடியது?, நாம் இங்கேயே நம் கோடை கால நாட்களை மிக சிறப்பாக கொண்டாடலாம். 

உங்கள் பாட்டி அனைத்து பலகாரங்களை இங்கேயே செய்வார். நானும் உங்களுடன் மட்டை பந்து, கால் பந்து என அனைத்து பந்துகளை விளையாடுவேன். உங்கள் அம்மா எங்களுடன் தன் முழு நேரமும் இருப்பாள் இதை விட வேறு என்ன வேண்டும் இந்த வருட கோடை கால விடுமுறையை கொண்டாட," என்றார்.

அங்கு இருந்த அனைவரின் மனதில் மகிழ்ச்சி ஓடியதை பார்த்த தாத்தா கூறினார். இந்த மகிழ்ச்சிக்கு இணை வேறு எந்த காலமும் இல்லை என்று கூறினார். அனைவரு‌ம் கோடை கால வெயில் போல பிரகாசமாக ஜோலித்தனர்.

 



Rate this content
Log in