Madhu Vanthi

Children Stories Drama Inspirational

5  

Madhu Vanthi

Children Stories Drama Inspirational

2K KIDS - 15

2K KIDS - 15

6 mins
357


இன்னும் ஐந்து நாள் தான்..... தங்களின் பள்ளிப்பருவ வாழ்க்கைக்கு முடிவு வந்துவிடும்.... ஐந்து தேர்வுகளை எப்படியோ முடித்தாகிவிட்டது... மீதம் ஒன்றே ஒன்று தான்...

கம்ப்யூட்டர் மேக்ஸ், கம்ப்யூட்டர் ஆர்ட்ஸ், வொகேஷனல் வகுப்புகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிந்திருக்க, இப்போது மீதம் இருப்பது, பயோ மேக்ஸ், பியூர் சைன்ஸ் மற்றும் ஹிஸ்டரி...

மேலும் இப்பொழுது பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பிர்க்கும் தேர்வு துவங்கி விட்டது... அதனால் அவர்களில் சிலரும் இன்று பள்ளிக்கு வந்திருந்தார்கள்...

அறிவியல் மாணவர்களுக்கு பயாலஜி தேர்வு மட்டும் எஞ்சி இருக்க... ஆர்ட்ஸ் மாணவர்களுக்கு வரலாறு மட்டும் இருந்தது... இவ்விரு பாடங்களுக்கும் தான் அதிக அளவு பாடங்கள் இருக்கும்... சராசரியாக முப்பது பாடம் வரை இருக்கும்... இந்த முப்பதிலும் புக் பேக் எக்ஸர்சைஸ் முப்பது முப்பது இருக்கும் என வைத்து கொள்வோமே... இவை அனைத்தையும் தெளிவாக படித்து வைத்துக் கொண்டாலும் கூட படித்த கேள்விகள் அதிகமாக வர வாய்ப்பில்லை... அப்படி பாடத்தின் உள்ளே ஊடுருவி வருமாறு அனைத்து கேள்விகளும் இருக்கும்... சரியாக சொல்ல வேண்டுமானால் இவர்கள் இந்தப் பாடங்களை தான் விழுந்து விழுந்து படிக்க வேண்டும்... அங்கு எல்லாம் விழுந்து கொண்டு தான் இருக்கிறது.. ஆனால் படிக்கிறார்களா என்றால்????... வாங்கோ போய் என்ன நடக்குதுன்னு பாப்போம்...

**********

அர்ஜுன் ரக்ஷவ் மயூ தீரா எல்லோரும் இந்த ஐந்து நாளும் மீண்டும் கிடைக்காது என்று கூறி தினமும் வர முடிவெடுத்து விட்டார்கள்.. அதுவும் ஞாயிறு ஆகிய இன்றும் கூட.. இவர்கள் நால்வரும் வருவதால் தானும் நிச்சயம். வருவேன் என கீர்த்தியும் கிளம்பி வந்து விட்டாள்... உண்மையில் அவள் அவளின் வகுப்பில் உள்ள நாட்புகளிடம் பேசுவதை விட அதிகமாக இவர்களிடம் தான் வாயடிப்பாள்... நம் பத்தாம் வகுப்பு பட்டாளத்தில் சபியும் சுஜியும் வந்து விட்டார்கள்... மதியும் ஜீனத்தும் ஹாஸ்டலில் இருக்க போர் அடிக்கிறது என வந்து விட்டார்கள்... ஹரிணியும் வந்திருந்தாள்....

அங்கே ஏழு தட்டையான கற்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க... அதன் அருகில் சபி, சுஜி, ஹரிணி, ஜீனத் நின்றிருந்தார்கள்... மற்றொரு பக்கம் ஒரு கவரில் கொஞ்சம் மண்ணை அள்ளி போட்டு கையில் கிடைத்த பேப்பர்களை சுருட்டி திணித்து., எடைக்காக சிரு கற்களையும் சேர்த்து பந்து போல் கட்டி கையில் வைத்து கொண்டு நின்றிருந்தாள் தீரா... அவளுடன் மதி கீர்த்தி மயூ நின்றிருக்க... அர்ஜுன் மற்றும் ரக்ஷவ்

மண்ட பத்திரம் என ஓரமாக ஒதுங்கி பாதுகாப்பாக நின்று கொண்டார்கள்.

அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கற்களை குறிபார்த்து தன் கையில் இருக்கும் கவர் பந்தால் தீரா ஒரே போடு போட.... அந்த ஏழு கற்களும் சிதறிய வேகத்தில் தீராவின் அணி மொத்தமும் சிதறி ஓட துவங்க.. கற்களுக்கு பாதுகாப்பாக இருந்த நாள்வரும் தீரா எறிந்த பந்தை எடுத்து கொண்டு எதிரணியை துரத்த தொடங்கினார்கள்... இடையில் கற்களை களைத்தவர்கள் மீண்டும் அதை அடுக்கி வைத்து விடாமல் ஜாக்கிரதையாகவும் இருந்தார்கள்...

ஒன்னும் இல்ல பா... செவன் சாட் விளையாடுராங்க.... இன்னைக்கு மட்டும் இல்ல.... சேந்தாப்புல ரெண்டு நாள் லீவ் இருந்தா கூட இது தா நடக்குது.. நாளைக்கு எக்ஸாம் இருந்தா இன்னைக்கு நைட்டு தா புக்க திறப்பாங்க... இல்ல.. தேடுவாங்க.... அது வர விளையாட்டு தா.... ஏன்னு கேட்டா மைன்ட் ரிலாக்ஸ்ஸாம்... இதுல இடையிடையே உருண்டு விழுரதும் உண்டு....

இப்படி தான் அந்த ஐந்து நாளும் ஓடியது... ஆனால் அவ்வப்பொழுது பொறுப்பாக அமர்ந்து படிப்பதும் உண்டு.. பாஸ் ஆக வேண்டும் அல்லவா... வேண்டாம் என்றாலும் எப்படியோ இந்த ஐந்து நாளும் ஓடி விட்டது... இன்று பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு...

கடைசியாக ஸ்கூலில் எழுத போகும் கடைசி பரிட்ச்சை... கடைசியாக ஸ்கூல் எக்ஸாம் ஹாலுக்கு செல்லும் தருணம்... கடைசியாக ஹால் டிக்கெட்டில் சைன் போடும் தருணம்... கடைசியாக கிளாஸ் பெஞ்ச்சில் அமரும் தருணம்... அதிலும் சிலருக்கு அதிஷ்தடதின் அதிஷ்த்தமாக அவரின் இடத்திலேயே அமர்ந்து இறுதி தேர்வை எழுத கொடுத்து வைத்திருந்த தருணம்.. என ஒவ்வொரு நோடிகளையும் நொடி மாறாமல் நினைவடுக்கில் ஏற்றி கொண்டே இருந்தார்கள் .... ஃபேர்வெல் நடக்கும் போது கூட இவ்வளவு வருந்தியிருக்கவில்லை.... ஆனால் இப்பொழுது அவ்வளவு ஏக்கம்... இன்னும் கொஞ்ச நாள் இங்கு வருவதற்கு வாய்ப்பு கிடைக்காதா என்று...

மூன்று மணி நேரம்.... அருமையாக தங்கள் தேர்வை வெற்றிகரமாக முடித்து விட்டு... மனதில் உள்ள மொத்த பாரத்தையும் விடுவித்து விட்டு., இப்பொழுது முழுவதும் பிரிவின் வேதனையை சுமந்து வெளியே வந்தார்கள் நம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள்...

மார்ச் 19... இன்று தான் இவர்களின் உண்மையான ஃபேர்வெல் போல இருந்தது... அவர்களுக்கு இப்போதே வீட்டிற்கு செல்ல மனமே இல்லை.. அதனால் ஒரு முடிவெடுத்தார்... இன்று மாலை வரை இங்கேயே இருக்க...

பரிட்ச்சை முடித்த கையுடன் பத்தாம் வகுப்பு நட்புகளையும் கீர்தியையும் தங்கள் வகுப்பிற்கு அழைத்து வந்து விட்டார்கள்... மதியம் அனைவருக்கும் அர்ஜுன், நவீன் மற்றும் ரக்ஷவ் மேலும் சில நட்புகளை அழைத்து கொண்டு சென்று, அனைவருக்கும் பிரியாணி வாங்கி வந்தார்கள்.... அன்று மதியம் சரியான வேட்டை... பின் சுற்றி சுற்றி சுற்றி செல்ஃபி தான்... ஒரு நட்பையும் விடவில்லை... மேலும் பள்ளியில் உள்ள ஒரு இடத்தையும் விடவில்லை... அனைத்து மூளை முடுக்கையும் மொபைலில் படம் பிடித்து கொண்டார்கள்... இன்று இறுதி நாள் என்பதால் தைரியமாக மொபைலை எடுத்து வந்து.. காலையில் அதை கீர்த்தியின் பொறுப்பில் விட்டு சென்று.. இப்போது அதன் மெமரி ஃபுல் ஆகும் வறையில் சுற்றி வளைத்து படம் பிடித்த விட்டார்கள்...

மதியம் பன்னிரெண்டரைக்கு முடிந்த பரிட்ச்சை... இப்பொழுது மணி மூன்றரை... இப்போது தான் இங்கு இருந்தது போதும் வீட்டிற்கு கிளம்பலாம் என முடிவெடுத்தார்கள்... "எல்லாரும் ஒரு நிமிஷம் இருங்க.. கேக் ஆடார் பன்னிருக்கோம்... அத வெட்டிட்டு போகலாம் என அனைவரையும் பிடித்த அர்ஜுன் நிறுத்தி விட்டான்., கால் மணிநேரத்தில் அந்த கேக்கும் வந்தது... அதை நவீன் தான் பிரித்தான்., பிரித்தவன் கண்கள் ஆனந்த அதிர்ச்சியில் மின்ன.. சில நொடியிலேயே கலங்கி விட்டது..

"டேய்.. என்ன டா இது... லாஸ்ட் டேக்கு கேக் வெட்டுவீங்கன்னு பத்தா.... இப்டி..." என கூறி பச்சபிள்ளை போல் அழுக..., அர்ஜுன் ரக்ஷவ் அவனுக்கு இரு புறமும் நின்று அவன் தோளில் கை போட்டு கொண்டு, "நீ சொல்லலன்னா எங்களுக்கு தெரியாதா டா... ஹாப்பி பர்த்டே மச்சான்... ", என கொரசாக காதுக்குள் கத்தினார்கள்..., அந்த கேக்கில் ஹாப்பி பொறந்த டே நவீன் மச்சி...

என இருந்தது... அதை பார்த்த நவீனுக்கு மீண்டும் ஆனந்த கண்ணீர் குதித்து வர.. "டேய்.. நா இதுவர கேக்கலாம் வெட்டுனதே இல்ல டா...", என கண்கலங்க... "அய்யோ அண்ணா... அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல... நீங்க அந்த கத்திய புடிச்சு சும்மா கேக் மேல மட்டும் வைங்க.. மறு செகண்ட்டே அது காணாம போய்ரும்...", என தான் கூறியதை மெய்யாக்க ஆயத்தமாகி நின்றாள் மதி... அதை கண்டு அனைவரும் வாய்விட்டு சிரித்து விட்டார்கள்...

அப்போது பள்ளி முடிந்ததற்கான மணி அடிக்க... ஜீனத்தின் கண்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேற போகும் மகிழ்ச்சியில் மின்னியது... விறுவிறுவென ஒரு பெஞ்ச்சில் ஏறி.. ரைட்டிங் டெஸ்க் மீது ஏறி..., "அட்டேஷன்", என கத்தி விட்டு நின்றாள்... ஆபிஸ் ரூம் மைக்கில் ஒரு ஓசை ஒலிக்க துவங்கியது..

அது ஒன்னும் இல்ல பா.. இங்க பெல் ஆட்டோமெடிக்... டைம் செட் பண்ணி வச்சா தானா அடிக்கும்... சண்டே கூட... ஈவ்னிங் லாஸ்ட் பெல் அடிச்சதும் தேசிய கீதம் ஆட்டோமேட்டிக்கா ஓடும்.. இப்போ நம்ம ஜீனத் கூட அத தா பாட போரா...

ஜீனத் வேகமாக மேஜை மேல் ஏறுவதை பார்த்ததுமே அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை யூகித்த மதி அவள் பாடும் முன்பே வாய்விட்டு சிரிக்க தொடங்கினாள்... அவளை அமைவரும் குழப்பத்தில் பார்த்த நொடி.. ஜீனத் பாட துவங்கினாள்... தேசிய கீதத்தை...

ஜனங்களின் மனங்களில்

பசி பஞ்சம் பட்டினி

பாருங்க இதுதான் இந்தியா...

பஞ்சாப் பசிக்குது

போடுங்க புரோட்டா

தாளிச்ச தக்காளி குருமா

வெந்தயக் குழம்பா வெங்காய வடை ஊத்தப்பம் இருந்தா கொடையா..

தயிர்வடை.. மசால்வடை.. தோசை..

ரவா லட்டு மேல் எனக்கு ஆசை...

ஜாங்கிரி தந்தாலும் சரி தான்..

ஜனங்களின் மனங்களில்

பசி பஞ்சம் பட்டினி

பாருங்கள் இது தான் இந்தியா...

காபி ..... காபி.... காபி....

சுட சுட சுட காபி...

மாணவர்கள் பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம்

என பாடிவிட்டு கீழே இறங்கி நின்றாள் ஜீனத்... இதனை கேட்டு மற்ற அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினார்கள்...

இந்த பாடலை, ஒரு முறையாவது மைக்கில் ஓடும்போதே அனைவர் முன்னிலையிலும் பாட வேண்டும் என ஜீனத்திர்க்கு ரொம்ப நாளாக ஆசை.. அது இன்று தான் நிறைவேறியது...

மூன்று மணிக்கு கிளம்ப தயாரானவர்கள்... இப்பொழுது மணி நாலரை... இதை கூறியே சுஜி அனைவரையும் கீழே அழைத்தாள்... நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து அனைவரும் கீழே வந்தார்கள்... ஆனால் இன்னும் கேட்டை தாண்டவில்லை... கிரவுண்டில் சிக்கி கொண்டது அவர்களின் மனம்... பீட்டி ஹவர்ஸ்லாம் எவ்ளோ ஜாலியா இருக்கும்ல... என மதி உருக்கமாக கேட்க... ஆமா'ம்பா., "ஸ்போர்ட்ஸ் டேக்கு எவ்ளோ ஜாலியா வாலிபால் விளையாண்டோம்... என சபி ஒரு பக்கம் உருக்கமாக பேச... அம்மாடி தங்கங்களா... இப்போ ஃபீல் பன்ன வேண்டியது எங்க டர்ன்., நீங்க அடுத்த ரெண்டு வருஷமும் இங்க தா இருக்க போறீங்க...", என அவர்களின் கவனத்தை களைத்தாள் தீரா... "ஹ்ம்ம் போ தீராக்கா... நாங்களும் இனி ஒரு ரெண்டு மாசத்துக்கு இங்க வர போறது இல்லல... நாங்களும் ஃபீல் பண்ணுவோம்... என சுஜி கூற.. அப்போது தான் அவளுக்கு ஓன்று நியாபகம் வந்தது.., "ஓ மை காட்... மை செல்ல குட்டிய எப்டி நா மறந்தேன்.... என கூறி.. வேகமாக பேக்கை கழற்றி வைத்துவிட்டு ஒரு மரத்தை நோக்கி ஓடினாள்..

அந்த மரம் தான் அந்த செல்ல குட்டி... அது அவள் நட்டு வைத்த மரம்.. சுஜி அம்மரத்தை பிடிக்கவும் தான் மற்றவர்களுக்கு தத்தம் செல்ல குட்டி நினைவிற்கு வந்தது... ஆளுக்கு ஒரு மரத்தை பிடித்து கொண்டு அதனிடம் பேசி முடித்து பை பை சொல்லி விட்டு வர.. மணி இப்போது ஐந்து இருபது...

இதற்கு மேல் இவர்களை விட்டாள் சரிபட்டு வராது என அனைவரையும் பிடித்து இழுத்து கொண்டு தான் சென்றார்கள் நவீன் அர்ஜுன் மற்றும் ரக்ஷவ்.. இதில் எங்க டா என் தங்கச்சி இன்னும் வீட்டுக்கு வரல என நம் புது போலீஸ் கூட பள்ளிக்கு பறந்து வந்தாகிவிட்டது...

அனைவருமே வாயிலை விட்டு கனத்த மனதுட்ன் வெளியேறினார்கள்... சாலையை கடந்து சென்றாலும் பார்வை அந்த வாயிலை ஏக்கமாய் தீண்டி வர... முழுமையாக திறந்திருந்த அந்த வாயில் கதவு, "உங்களுக்காக என்றும் நான் திறந்திருப்பேன் என சொல்லாமல் சொல்லியது...

இவர்கள் விளையாடி மகிழ்ந்த அந்த வகுப்பறைகளில்...

அன்று இருந்த குரலோசை

இன்று எங்கோ.....

வட்டமடித்து வந்த காற்று

வாரிக்கொண்டு போக

மீழாத மர்ம்மாய்

சில கேள்விக்கான விடைகள்

நீங்காமல் நினைவில்

தினம் தினம் .....

ஏங்கினேன் அந்த நாட்களை

எண்ணி- ,என்னை மறந்தேன்

தொலைத்தேன்,- நினைவுகளின்

ஆழ்கடலில்...

கறைந்தேன்- வண்ண நினைவில்

மீண்டும் ஒருமுறை உன்னை

காணத் துடிக்கும் என்னை,

நீங்கி செல்லாதே.....

என் நினைவே..

முதுமையிலும்....



பள்ளி பருவ நினைவை தேடி வாடும் ஒவ்வொரு மனதிற்கும் இந்த கதை சமர்ப்பணம்.. 🥰🥰


முற்றும்... ❣️



Rate this content
Log in